Showing posts with label RAJINI MURUGAN-TAMIL FILM REVIEW. Show all posts
Showing posts with label RAJINI MURUGAN-TAMIL FILM REVIEW. Show all posts

Thursday, January 14, 2016

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்


ஹீரோ வோட அப்பாவும் , ஹீரோயினோட அப்பாவும் சின்ன வயசுலயே ஃபிரண்ட்ஸ்.எப்படி கலைஞர் வைகோவுக்கு அந்தக்காலத்தில் பொய்யா வாக்குறுதி கொடுத்தாரோ அந்த மாதிரி என் பொண்ணு உன் பையனுக்குத்தான்னு சொல்லி ஹீரோயினோட அப்பா ஹீரோவோட அப்பா மனசுல ஆசையை விதைக்கறாரு.ஹீரோவும் ஹீரோயினை சின்ன வய்சுல இருந்தே லவ்வறாரு.


 நாஞ்சில் சம்பத் எசகுபிசகா உளறி மாட்டின மாதிரி ஒரு சின்ன பிரச்னைல 2 குடும்பத்துக்கும் தகறாரு. அதனால சம்பந்தம் கட்.  கேப்டன் எப்படி  தூ-ன்னு துப்பி துரத்துனாலும் விடாம அவர் பின்னால சுத்தும்  நிருபர்/அரசியல் வாதி போல  ஹீரோ ஹீரோயின் வீட்டு முன்னாடியே  டீக்கடை போட்டு டேரா போடறார்.

  டீக்கடை போட்டா ஃபிகரை செட் பண்ண முடியுமா?ன்னு ஏளனமா கேட்காதீங்க. முன்னாள் டீகடை ஓனர் தான் இந்நாள்  இந்தியப்பிரதமர்.


இந்த லவ் டிராக் இடைவேளை வரை ஜாலியா காமெடியோட ஓடிட்டு இருக்கு. அதுக்குப்பின் கதையை நகர்த்தனுமே? வில்லன் எண்ட்ரி 

 எப்படி அழகிரி  கலைஞர் கிட்டே வாரிசு உரிமைப்பிரச்னை கிளப்பினாரோ அதே மாதிரி  வில்லன்  நான் தான் இந்த வீட்டின் இன்னொரு வாரிசுங்கறார். 

 சொத்து என்னாச்சு? பிரிஞ்ச குடும்பம் 1 சேர்ந்ததா? என்பதுதான் மிச்ச மீதிக்கதை




 விஷால் எப்படி தன்க்குன்னு ஒரு ஃபார்முலா வெச்சிருக்காரோ அதே போல் சிவா வும் ஒரு சக்சஸ் ஃபார்முலா வெச்சிருக்கார். விஷால் உள்ளூரில் இருந்து வேற ஊருக்குப்போய் ரவுடிகளை துவம்சம் பண்ணுவார்.சிவா உள்ளூரிலேயே  ஃபிகரை கரெக்ட் பண்ண டேரா போட்டு லோலாயம் பண்ணுவார்.


இந்தப்படம் சிவாவுக்கு முக்கியமான படம், ஏன்னா அவரோட சம்பளத்தை 20 கோடி ரேஞ்சுக்கு உயர்த்தப்போகும் படம். நடிப்புக்காக அதிகம் மெனக்கெடலை. ஆனா டான்சில் காமெடியில்   கல்லா கட்றார். ஒவ்வொரு  ஃபிரேமிலும் அவர் ஆதிக்கம் தான் 


 ஹீரோயினா  கீர்த்தி சுரேஷ். சுரேஷை கட் பண்ணிடுவோம், செல்லமா கீர்த்தி. பால்கோவாவில் ஃபில்டர் பண்ணின கோஷாப்பழ கலர் உதடு , மின்னல் வெட்டுனது போல் பார்வை கொண்ட கண்கள் , சந்தனக்கிண்ணம் போல் கன்னம்-னு ஸ்ரீ திவ்யா வுக்கு அக்கா மாதிரி இருக்கார் . செம ஃபிகர். ஒரு பாட்டுக்கு அவர் போடும் குத்தாட்டம் ம்ம்ம் வேற  லெவல் 


சூரியின் ஒன் லைனர்கள்  சிலது மொக்கையா இருந்தாலும்  வழக்கம் போல் ஆடியன்ஸ் சிரிக்கறாங்க . அதனால அவரை மன்னிச்சிடலாம்


 ராஜ்கிரணின் குணச்சித்திர நடிப்பு பக்கா


 சமுத்திரக்கனியின் வில்லன் நடிப்பு சுமார் ரகம் தான் . அவரெல்லாம் போராளி , போலீஸ் ஆஃபீசர் , வாத்தியார்  ரோல்களில் பார்த்துட்டு இது  போல் டம்மி வில்லனாய்ப்பார்க்க கஷ்டமா இருக்கு 


 பாடல்கள் 3 செம ஹிட்டு . எந்தப்பாட்டும்  போர் அடிக்கலை . என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா பாட்டு மெட்டுக்கு தியேட்டரில்  தமிழே தெரியாத மலையாளீஸ்  கூட எந்திரிச்சு நின்னு ஆட்டம் போடறாங்க. தமிழ் நாட்டில் எப்படி  இருந்திருக்கும் ?


இயக்குநர்  திரைக்கதையை மிக சாமார்த்தியமாக போர் அடிக்காமல் ஜனரஞ்சகமா நகர்த்தி இருக்கார் . பெண்கள்  ஃபேமிலியுடன் வந்து பார்க்கும் அளவு  மிக கண்ணியமான படமாக்கம்.


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

 நாளை அப்டேட்டப்படும்



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  பால்கோவா அழகி கீர்த்தி அறிமுகம் , அவருக்கு தோழியாக ஒரு ஃபிகர் அறிமுகம் 2க்கும் 70 மார்க்


2  சூரி  - ஃபாரீன்  ஃபிகர்  லவ்  சீன்


3 ராஜ்கிரண்  டெட் பாடி  டிராமா  களை கட்டும் காமெடி காட்சிகள்


4 அம்மா அம்மா பாட்டு காமெடி சிக்சர் . கொக்கரக்கோ கோழி  ஓபனிங் சாங் டான்ஸ் ஸ்டெப்ஸ்  அருமை


வசனங்கள்  பல இடங்களில்  நச் .


5 க்ளைமாக்சில்  இன்னொரு சிவா வருவதும் அது வருத்தப்படாத வாலிபர் சங்க  ஹீரோ கெட்டப் என்பதும் நல்ல கற்பனை


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   தாதா மாதிரி இருக்கும்  வில்லன் சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னை வைப்பாட்டி மகன் என ஊரெல்லாம் ஊருக்கு முன் பஞ்சாயத்தார் முன் அடிக்கடி  சொல்லி அசிங்கப்படுவாரா? அவர் தான் மிரட்டிப்பணம் பறிக்க ஆள் அடியாள் வெச்சிருக்காரே? டைரக்டா மிரட்டி வாங்கிட்டா போச்சு


2  சொத்து பத்திரமான பட்டயத்தை பாட்டியிடம் வில்லன் கேட்கும்போது தர மறுக்குது. பின்  அதை எப்படி வில்லன் கையில் விட்டுட்டு தண்ணீர் எடுக்க உள்ளே போகுது ? கிராமத்துப்பாட்டிகள்  அவ்வளவு உஷார் இல்லாதவர்களா?


3  வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட திரைக்கதையைப்பக்கத்திலேயே வைத்து இதுக்கு திரைக்கதை எழுதுனது போல் பல சீன்கள் அதே சாயலில்





சி  பி  கமெண்ட்-ரஜினி முருகன் - ஜாலிவாலிஃபேமிலி எண்ட்டர்டெய்னர்-சிவா வின் ஆல் செண்ட்டர் ஹிட் சிக்சர் - விகடன் மார்க் = 42 , ரேட்டிங் = 3 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 42



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)- ஓக்கே



 ரேட்டிங்
= 3/5


 திருவனந்தபுரம் ஸ்ரீ குமாரில் படம் பார்த்தேன்