Showing posts with label Pookkaran. Show all posts
Showing posts with label Pookkaran. Show all posts

Sunday, May 17, 2015

நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் பெண்-மேற்பார்வையாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்

நாடாளுமன்றத்தில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் பெண் ஒருவர் கடந்த 6 மாத காலமாக தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து புகார் அளிக்க முடியாமல் தவித்து வருவது அம்பலமாகி உள்ளது.
நாடாளுமன்ற இணைப்புக் கட்டிடத்தில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் தன்னை தனது துறை மேற்பார்வையாளர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்பதே அந்தப் பெண்ணின் புகார்.
அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை பொறுப்புணர்வுடன் 'தி இந்து' மறைக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பி.வி.ஜி. இந்தியா லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனம் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. பி.வி.ஜி. நிறுவனமே அந்தப் பெண்ணை நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது பணியமர்த்தியுள்ளது. 2013 முதல் அவர் அங்கு பணியாற்றி வருகிறார். அவர் பணியாற்றும் குறிப்பிட்ட பகுதிக்கு புதிய மேற்பார்வையாளராக கடந்த 2014-ல் ஆண் ஒருவர் வந்து சேர்ந்தார்.
அதற்குப் பின் நேர்ந்ததை அந்தப் பெண் 'தி இந்து'-விடம் விவரித்தார்.
"நான் கழிப்பறைகளை சுத்தம் செய்ய செல்லும்போதெல்லாம் அவர் என்னைப் பின் தொடர்ந்து வருவார். அநாகரிகமாக பேசுவார். நான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிடுவேன் என மிரட்டுவார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அவரது அறைக்குச் சென்றேன். கழிப்பறைகள் சுத்தம் செய்வதற்கான ரசாயனப் பொருட்கள் தீர்ந்து விட்டன. புதிதாக தருமாறு கேட்டேன். அதற்கு அந்த மேற்பார்வையாளர், "பதிலுக்கு நீ என்ன தருவாய்" என்றார்?" பதிலுக்கு கழிப்பறையை சுத்தம் செய்யும் என் கடமையை ஒழுங்காகச் செய்வேன் என்றேன். "அது தவிர நீ கொடுப்பதற்கு நிறைய இருக்கிறது" என்றார். நான் அவரை வன்மையாகக் கண்டித்தேன். இப்படி எல்லாம் பேசக் கூடாது என எச்சரித்தேன். அதற்கு அவர் என்னை பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டினார்.
மற்றொரு முறை நான் துப்புரவுப் பணி மேற்கொண்டிருந்தபோது அங்கே வந்த அந்த நபர் "நீ குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் போது உன் உடலை பார்க்க முடிகிறது" என மிகவும் ஆபாசமாக பேசினார். நான் இது குறித்து என்னுடன் வேலை செய்யும் மூத்த பெண் ஊழியரிடம் தெரிவித்தேன்" என்றார்.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு சரியாக கடந்த ஆண்டு இறுதியில், அந்த மேற்பார்வையாளர் சம்பந்தப்பட்ட பெண்ணின் நாடாளுமன்ற நுழைவுச் சீட்டை பறிமுதல் செய்துள்ளார்.
இது குறித்து டெல்லி கனோட் பிளேஸில் இருக்கும் பி.வி.ஜி. தலைமை அலுவலகத்துக்குச் சென்று புகார் தெரிவித்திருக்கிறார் அப்பெண். அதனையடுத்து, அவருக்கு மக்களவையில் துப்புரவுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தன் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தன்னை பணியிட மாற்றம் செய்தது அவருக்கு மேலும் மன உளைச்சலை அளித்திருக்கிறது. தனது உள்ளக் குமுறலை யாரிடம் சொல்வது என பரிசீலித்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக அவர் அளித்த புகார் விளைவாக அவருக்கு கிடைத்தது ஏளனப் பேச்சுகள் மட்டுமே.
ஏப்ரல் 2015-ல், பிவிஜி நிறுவனம் அந்தப் பெண்ணை அழைத்து மீண்டும் நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டிடத்தில் பணி வழங்குவதாகக் கூறினார்.
மேலும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளாரையும் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளனர்.
ஆனால், இதுநாள் வரை அந்த மேற்பார்வையாளர் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
இது தொடர்பாக 'தி இந்து' சார்பில் பிவிஜி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதற்கு பதிலளிக்க பி.வி.ஜி. நிறுவனம் மறுத்துவிட்டது.
கடைசியாக, கடந்த ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். மே 8-ல் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 509-ன் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
மக்களவை செயலகத்தில், பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழு உறுப்பினர் ஒருவரிடம், சம்பந்தப்பட்ட பெண்ணின் புகாரை ஏன் நீங்கள் ஏற்கக்கூடாது என்று கேட்டபோது, "ஒப்பந்த ஊழியர்கள் புகாரை ஏற்பதற்கு வழிவகைகள் இல்லை" என்றார்.
தொடர்ந்து 'தி இந்து' சார்பில், மக்களவை செயலகத்தின் புகார் கேட்கும் குழுவின் முன்னிலை அதிகாரி ராஷ்மி ஜெயினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவரும் உரிய பதில் அளிக்கவில்லை.
இப்பிரச்சினை தொடர்பாக கருத்து கேட்பதற்காக, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட நிறைய பேரது வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை 'தி இந்து' தொடர்பு கொண்டது. அப்போது அவர், "தனியார் நிறுவனங்களால் ஒப்பந்த அடிப்படையில் அரசு அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் பெண்கள் இது மாதிரியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால், அவர்கள் புகாரை அரசு அங்கமே கவனிக்க வேண்டும். சொல்லப்போனால் இந்த பொறுப்பு தனியார் நிறுவனத்துக்கு இல்லை, முற்றிலும் அரசிடமே இருக்கிறது" என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் 'தி இந்து'விடம் இறுதியாக கூறும்போது, "நான் என் உரிமைகளுக்காக போராட விரும்புகிறேன். என் குழந்தையைப் பராமரிக்க நான் மட்டுமே இருக்கிறேன். இந்நிலையில் என் பணிக்கு பாதுகாப்பு இல்லாமல் போனால் அது இன்னமும் சிக்கலாகும்" என்றார்.
இது குறித்து அப்பெண்ணின் வழக்கறிஞர் மோனாலிசா கூறும்போது, "பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை பரிசீலிக்கும் குழு நாடாளுமன்றத்தில் வெறும் காகிதங்களில் மட்டுமே இருக்கிறது. ஆனால், உண்மையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண் தன் வேலையை காப்பாற்றிக் கொள்ளக்கூட இங்கு வழியில்லாமல் இருக்கிறது" என்று வேதனை தெரிவித்தார்.
- தமிழில்: பாரதி ஆனந்த்


  • வறிய நிலையிலுள்ள பெண்களை , பணிப் பாதுகாப்போ , நிரந்தர வேலையோ , உறவினர் , குடும்பத்தார் , ஏன் கட்டிய கணவன் ஆதரவோ இல்லாத , உழைத்து மானத்தோடு வாழ விழையும் அபலைப் பெண்களை பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ துன்புறுத்துவோர் மானிடப் பிறவிகளே இல்லை . அவர்கள் கட்டாயம் வாழும் போதே நரக வேதனை அனுபவிக்கும் வகையில் தண்டிக்கப் பட வேண்டும் . இன்னும் அப்படித் துன்புறுத்துவதை அறிந்தும் கண்டும் காணாமல் இருக்கும் பொறுப்பற்ற தன்மையை சமூகமும் விட்டொழிக்க வேண்டும் . "பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம்கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா , அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா ". பாரதி தீர்க்க தரிசனத்தோடு பாடிய வரிகளை தினம் நினைவு கொள்ள வேண்டும் .
    Points
    1150
    3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       
    • சட்டம் பணம் படைத்தவர்களுக்கு கடிதோச்சி மெல்ல எரியும் கோல். ஆனால் ஏழைகளுக்கு சீரும் நாகம் பாயும் புலி எரியும் பெரு நெருப்பு இது தான் உண்மை நிலவரம்
      3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • simple .. ஒரு வேளை இந்த விஷயம் டிவி சேனல்களுக்கு போய் இருந்தால் எல்லோரும் துண்டை காணோம் துணிய காணோம் ஆகியருக்கும்.
        Points
        210
        3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • The hindu want to release his name.because you are having social responsibility.
          3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • சட்டம் யாருக்கு ......பணக்காரருக்கு
            Points
            115
            3 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • சட்டங்களை கடுமை ஆக்குங்கள் பின்பு தொட கூட யோசிப்பார்கள்
              Points
              1690
              3 days ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
              Anbu  Up Voted
              • பாலியல் சீண்டல்கள், கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டமெல்லாம் நிறைவேற்றினார்களே என்னங்க ஆச்சு அதெல்லாம்?

              திமுக எம்.பி. கனிமொழி (இடது) | நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு (வலது).
              திமுக எம்.பி. கனிமொழி (இடது) | நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு (வலது).
              நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் துப்புரவு பணிப்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய புகார் தொடர்பாக, தனக்கு உரிய தகவல் அளிக்குமாறு மக்களவைச் செயலரிடம் வெங்கய்ய நாயுடு கோரியுள்ளார்.
              நாடாளுமன்ற வளாகத்தில் துப்புரவு பணியாற்றி வரும் பெண்ணை அவரது கண்காணிப்பாளர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ள சம்பவம் குறித்து நேற்று இரு அவைகளிலும் குறிப்பிடப்பட்டது.
              முன்னதாக இது குறித்த செய்தியை 'தி இந்து' (ஆங்கில நாளிதழ்- 13.05.2015 பதிப்பு) பிரத்யேகமாக பதவி செய்திருந்தது. 'தி இந்து'வுக்கு அந்தப் பெண் அளித்த பேட்டியில் தனது கண்காணிப்பாளர் தன்னை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததாகவும், இது குறித்த தனது புகார் மக்களவை உள்விவகார குழுவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். அதேபோல், தான் எந்த தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படையில் நாடாளுமன்ற வளாகத்தில் பணியமர்த்தப்பட்டாரோ அந்த நிறுவனமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார். | விரிவாக படிக்க - நாடாளுமன்றம் கேட்கத் தவறிய ஒரு பெண்ணின் அழுகுரல் |
              இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி. கனிமொழி, "நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணே தனது குறைகளுக்கு தீர்வு காண எவ்வித உதவியும் பெறமுடியவில்லை என்பது கவனிக்க வேண்டிய பிரச்சினை" என்றார்.
              கனிமொழி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் டி.என்.சீமா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். சீதாராம் யெச்சூரி துப்புரவுப் பணியாளர் செய்தி வெளியாகியிருந்த 'தி இந்து' செய்தித்தாளை உயர்த்திக்காட்டினார்.
              இப்பிரச்சினைக்கு சிறப்பு கவனம் செலுத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன், விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ் சமர்ப்பிக்க அனுமதி வழங்கினார்.
              இதேபோல், இப்பிரச்சினை மக்களவையிலும் எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. ஏ.சம்பத் பேசும்போது, "இத்தகைய சம்பவங்கள் நாடாளுமன்றத்தின் மாண்புக்கு உகந்தது அல்ல" என்றார்.
              இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "நாடாளுமன்ற பணியாற்றும் துப்புரவு பணியாளர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய புகார் தொடர்பாக மக்களவை செயலர் தகவல் அளிக்க வேண்டும்" என்றார்.
              • Prabhakar Shenoy  
                வடிவேல் பாணியில் இந்த கொடுமையை செய்தது யார்?
                Points
                120
                a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                   
                • மணி  
                  நாடாளுமன்றம் இருபெரும் குற்றங்களைச் செய்திருக்கிறது.துப்புறவுத் தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக அமர்த்தியிருப்பது மற்றும் இந்நாட்டுக்குடிமகனி(ளி)ன் கோரிக்கையை அலட்சியப்படுத்துவது.இச்சட்ட விரோத நாடாளுமன்றத்தை என்ன செய்யப்போகிறோம் நாம்?
                  Points
                  600
                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                  • Singam  
                    தேங்க்ஸ் டு தி ஹிந்து தமிழ் துணிச்சல்
                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                    • Anthony Fernando  
                      அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் தகரும். - எழிலன்
                      Points
                      1225
                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • பாலா  
                        இந்துவின் பணி பாராட்டுக்கு உரியது!
                        Points
                        35645
                        2 days ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                        sridhar  Up Voted
                        • Narendran  
                          வாழ்த்துக்கள் தமிழ் ஹிந்து.
                          Points
                          1655
                          2 days ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                          • T. Siva  
                            நாடாளுமன்ற துப்புரவு பணிப் பெண்ணுக்கே பாலியல் தொந்தரவா ?நாடாளு மன்றம் டெல்லியில் இருப்பதால் நடந்ததில் ஆச்சரியமில்லை !!

                          thanx - the hindu