Showing posts with label PULIMADA (2023) - புலி மடா - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label PULIMADA (2023) - புலி மடா - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, November 28, 2023

PULIMADA (2023) - புலி மடா - மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

     


புலியின்  குகை  என்பதுதான்  டைட்டில்   . பெண்ணின் பிரத்யேக  மணம்  என்பது  கிளை   டைட்டில் .ஜோஜூ  ஜார்ஜ் +ஐஸ்வர்யா  ராஜேஷ்  காம்போ  வில்  2023  அக்டோபர்  26  அன்று  திரையில்  வெளியான  இப்படம்  கலவையான  விமர்சனங்களைப்பெற்றது. 2023  நவம்பர் 24 முதல்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓடிடி  யில்  வெளியாகி  உள்ளது 


   ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   நல்ல  வசதி  படைத்த  நபர் . ஒரு  ஃபாரஸ்ட்  ஏரியாவில்  சொந்த  வீடு  இருக்கு , இவருக்கு  ஒரு  அம்மா  இருந்தாங்க , ஆனால்  சின்ன  வயதில்  இறந்து  விட்டார். அம்மா  மனநிலை  சரி  இல்லாதவர். அதனால்  நாயகனுக்கும்  மனம்  சார்ந்த  சில  பிரச்சனைகள்  இருந்தன. இதனால்  இவர்  போலீஸ்  வேலையில்  இருந்தும்  யாரும்  பெண்  தர  வில்லை . அமைந்த  சில  வரன்களும்  கடைசி  நேரத்தில்  தட்டிக்கழிந்தன.

 மனநல  மருத்துவரை  அணுகி  தான்  திருமணம்  செய்து  கொள்வதில்  ஏதும் பிரச்ச்னை  வருமா? எனக்கேட்டு  க்ளியர்  செய்து  கொள்கிறான் எப்படியோ  ஒரு இடத்தில்  பெண்  அமைந்து  விடிந்தால்  நாயகனுக்குத்திருமணம் 


 சொந்தக்காரர்கள் , நண்பர்கள்  எல்லோரும்  கூடி  விட்டார்கள் . இப்போது  ஒரு  அதிர்ச்சியான  செய்தி , மணமகள்  அவள்  காதலனுடன்  ஓடி  விட்டாள் . இதைக்கேட்டு  செம  கடுப்பாகிறான்  நாயகன்.


 இன்று  எனக்கு  முதல்  இரவு  நட்ந்தே  ஆகவேண்டும்  என  கொக்கரிக்கிறான். பெண்ணைத்தேடி  பைக்கில்  அலைகிறான்


 அதே  சமயம் புலி  ஒன்று  ஊருக்குள்  புகுந்து  விடுவதால்  போலீஸ்  ஜீப்  ரோந்து  வந்து  மக்களை எச்சரித்துக்கொண்டு  இருக்கிறது


நாயகி  பணி  செய்யும்  இடத்தில்  தன்னிடம்  வாலாட்டிய  நபரைக்கொலை  செய்து  ஜெயிலுக்கு  சென்றவள், இப்போது  பரோலில்  வந்திருக்கிறாள் . இந்த  விஷயங்கள்  எல்லாம்  நாயகனுக்குத்தெரியாது . நாயகி வ்ந்த  கார்  ரிப்பேர்  என்பதால்  லிஃப்ட்  கேட்கிறாள். நாயகன்  நாயகியை  தன்  வீட்டுக்கு  அழைத்து  வருகிறான், இதற்குப்பின்   நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஜோஜூ  ஜார்ஜ்  தெனாவெட்டான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார். அச்சு  அசல்  குடிகாரன்  மாதிரியே  அவர்  கண்கள்  சிவக்கின்றன . குடிகாரன்  போதை  நடை  கைவரப்பெற்றிருக்கிறது 


 நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஷ் . கிளாமர்  பாதி , குணச்சித்திர  நடிப்பு  மீதி   என  கலந்து  செய்த  கலவை  இவர்.  இவரது  சிரிப்பு  இவருக்கு  பிளஸ்  பாயிண்ட்


நண்பன்  ஆக செம்பன்  வினோத்  கச்சிதமான  நடிப்பு எந்த  கேரக்டர்  தந்தாலும்  அதில்  தன்  முத்திரையைப்பதிக்கும்  ஜாபர்  இடுக்கி  இதிலும்  கலக்கி  இருக்கிறார்


வேணுவின்  ஒளிப்பதிவு  அழகு . கானகத்தின்  இயற்கை  எழிலை  கண்  முன்  காட்டுகிறது 


இஷான்  தேவ்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் . அனில்  ஜான்சன்  பின்னணி  இசையில்  த்ரில்லர்  படங்களுக்கே  உரித்தான  விறுவிறுப்பான  பிஜிஎம்  தெறிக்கிறது 


திரைக்கதை  எழுதி , எடிட்  செய்து  இயக்கி  இருப்பவர்  ஏகே  சாஜன்,  110  நிமிடங்கள்  மட்டுமே  ஓடக்கூடிய  அளவு  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார். அதனால்  குயிக்  வாட்ச்  ஆகவே  இதைப்பார்க்கலாம் 



சபாஷ்  டைரக்டர்  ( ஏகே  சாஜன்)


1   நாயகிக்கு  என்ன  நடக்கப்போகிறது  என்ற  பதைபதைப்பை  ஆடியன்ஸ்  மனதில்  விதைக்கும்  உத்தி  அருமை . 


2   ஃபாரஸ்ட்  ஏரியாவின்  அழகை  எல்லாம்  காமரா  படம்  பிடித்த  விதம் 


3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் , பாசிட்டிவ்  எண்டிங் 


4  எப்போதோ  வ்ந்த  பஞ்ச  தாந்திரம்  படத்தின்  ட்விஸ்ட்டை  இதில்  புகுத்திய  சாமார்த்தியம் 


  ரசித்த  வசனங்கள் 


1    இருட்டை  ரசிக்க  இருட்டில்  இருந்தால் தான்  முடியும் 


2  என்ன  நட்ந்தாலும்  நம்  வாழ்க்கையில்  நாம்  முன்னேறிப்போய்க்கொண்டே  இருக்க  வேண்டும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகியை  மாடர்ன்  கேர்ள்  எனக்காட்ட  வேறு  உத்திகளே  இல்லையா?  எல்லா  இயக்குநர்களும்  ஏன்  நாயகி  சரக்கு  அடிபப்து , தம்  அடிப்பது , கஞ்சா  அடிப்பது  எல்லாம்  காட்டி  இவர் தான்  அந்த  பாரதி  கண்ட  புதுமைப்பெண்  என  பிரசங்கம்  பண்ண  வேண்டும் ?


2   நாயகன்  தனிமையில்  இருக்கும்போது  நிராயுதபாணியான  அவரை  புலி  ஏன்  விட்டு  விட்டு  திரும்பி  செல்கிறது ? 


3  நாயகியை  திருமணம்  செய்ய  ஆசைப்படும்  நாயகன்  நாயகி  ஃபோன்  செய்த  ஃபோன்  நெம்பரை  வைத்து ட்ரேஸ்  பண்ணி  இருக்கலாமே? போலீசாக  இருந்தும்  அந்த  முயற்சியை  ஏன்  எடுக்கவில்லை ? 


4  நாயகன், நாயகி  இருவருமே  ஒன்றாக  சரக்கு  அடிக்கிறார்கள் , முன்  பின்  அறிமுகம்  இல்லாத  இடம்,  புது  நபர் . சரக்கு  அடித்தால்  அபாயம்  என்பதை  நாயகி  ஏன்  உணரவில்லை ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யூ / ஏ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரி  ஆன  த்ரில்லர்  படம்  தான் , பார்க்கலாம் ., ரேட்டிங்  2.5 / 5 


Pulimada
Theatrical release poster
Directed byA. K. Sajan
Written byA. K. Sajan
Produced by
  • Rajesh Damodaran
  • Sijo Vadakkan
Starring
CinematographyVenu
Edited byA. K. Sajan
Music by
Production
companies
  • Appu Pathu Pappu Production House
  • Ink Lab Cinemas
  • Land Cinemas
Distributed byAnn Mega Media Release
Release date
  • 26 October 2023[1]
Running time
110 minutes[2]
CountryIndia
LanguageMalayalam