Showing posts with label PREMALU (2024) - மலையாளம் /தமிழ்- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label PREMALU (2024) - மலையாளம் /தமிழ்- சினிமா விமர்சனம். Show all posts

Monday, April 01, 2024

PREMALU (2024)பிரேமலு - மலையாளம் /தமிழ்- சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

  


     வெறும்   3 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 10  நாட்களில்  115  கோடி  ரூபாய்  வசூலை  வாரிக்குவித்த  படம் இது. 9/2/24   முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இந்த  மலையாளப்படத்தின்  தெலுங்கு , தமிழ்  டப்பிங்  வெர்சன் 15/3/24  முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  சக்கை  போடு  போட்டுக்கொண்டிருக்கிறது .மலையாளப்படங்களில்  100 கோடி  வசூலைத்தொடும்  ஐந்தாவது  படம்  இது  ( புலி முருகன் லூசிபர் ,
2018  மஞ்சும்மேல்  பாய்ஸ் , பிரேமலு)


கதை  எல்லாம்  சாதாரண  கதை  தான். ஒரு  லட்சம்  படங்களில்  பார்த்த பணக்கார  வீட்டுப்பெண் - ஏழைப்பெண்  காதல்  கதை  தான், திரைக்கதை , நாயகன் - நாயகி  கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆன  விதம்  தான்  படத்தை இந்த  அளவு  ஹிட்  ஆக்கி  இருக்கிறது 


இந்தியில்  வெளியான  ச்சோட்டி சி  பாத்  (1976) .தமிழில்  வெளியான  யாரடி  நீ  மோகினி (2005)  , தீயா  வேலை  செய்யனும்  குமாரு ( 2013)  ஆகிய  மூன்று  பட  டிவிடிகளை  அட்லியிடம்  கொடுத்து  ஒரு படம்  பண்ணுங்க  என்றால்  அவர்  என்ன  செய்வாரோ  அதைத்தான்  இந்தப்பட  இயக்குநர்  செய்திருக்கிறார், ஃபகத்  ஃபாசிலின்  சொந்தப்படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி ஐ டி ல  ஒர்க்  பண்ணும்  பெண்.தன்னை  விட மெச்சூரிட்டி  உள்ள  , வாழ்க்கைல செட்டில் ஆன  ஒரு  ஆளைத்தான்  கல்யாணம்  பண்ணிக்கனும்னு  நினைக்கறா.இவள்  எல்லா  ஆண்களிட,மும் சகஜமாகப்பழகக்கூடிய  சோஷியல்  டைப் 

நாயகன்  ஒரு சரக்கு  பார்ட்டி . வெட்டாஃபீஸ் , எதிர்  காலம்  குறித்த  எந்த  விதமான  திட்டமிடலும்  இல்லாமல்  இருப்பவன். நாயகியை  விட    ஜூனியர்

வில்லன்  நாயகி  பணி  புரியும்  ஐ டி  கம்பெனியில்  டீம்  லீடர்.இவனுக்கும்  நாயகி  மீது  ஒரு  கண்  உண்டு . இவன்  ஒரு  டீ  டோட்டலர். எந்த கெட்ட  பழக்கங்களும்  இல்லாதவன்


முறைப்படி  பார்த்தா  நாயகி  வில்லனைத்தான்  லவ்  பண்ணி  கல்யாணம்  பண்ணிக்கனும், ஆனா  நிஜ  வாழ்க்கையிலும்  சரி , சினிமாக்களிலும்  சரி பெண்கள்  நல்லவனைக்காதலிப்பதில்லை .பொறுக்கி , குடிகாரன் , கஞ்சா  கேஸ்  இந்த  மாதிரி  ஆட்களைத்தான்  உருகி  உருகி  லவ்   பண்றாங்க 

இவர்கள்  மூவர்  வாழ்க்கையிலும்  நடக்கும்  சம்பவங்கள் தான்  முழு  திரைக்கதையும் 


நாயகன்  ஆக நஸ்லன் பிரமாதமாக  நடித்திருக்கிறார்.  தான்  ஒரு  குடிகாரன் , எதுக்கும் லாயக்கில்லாதவன்  என்ற  தாழ்வு  மனப்பானமை  அவரது  உடல்மொழியில்  கொண்டு  வருகிறார். நண்பனுடனான  உரையாடலில்  அனாயசமாக காமெடி  வசனங்களை  அள்ளித்தெளிக்கிறார்


நாயகி  ஆக  மமிதா  பைஜூ  கலக்கி  இருக்கிறார். சுட்டித்தனமான  நடிப்பு , உடல் மொழி  , கிளாமர் , நடிப்பு  என  எல்லா  ஏரியாக்களிலும்  சிக்சர்  அடிக்கிறார்


வில்லன்  ஆக  ஷ்யாம்  மோகன்  அருமையான  நடிப்பு.  ஜிம்  பாடி  ஃபிட்டிங் , பர்சனாலிட்டி , ஹைட்  எல்லாவற்றிலும்  நாயகனை  விட  ஒரு  படி  மேலே  இருந்தாலும்  நடவடிக்கைகளால்  நாயகி , ஆடியன்ஸ்  மனதில்  வெறுப்பை  வர  வைக்க  வேண்டும். பின்னி  இருக்கிறார்  நடிப்பில் 


ஆகாஷ் ஜோசஃப்  வர்கீஷின்  எடிட்டிங்கில்  படம் 156  நிமிடன்கள்  ஓடுகிறது  , ஒரு  சீன்  கூட  போர்  அடிக்கவில்லை 

விஷ்ணு  விஜய்  இசையில் பாடல்கள்  எல்லம்  ஆல்ரெடி  செம  ஹிட் . பின்னணி  இசையும்  நன்றாக  இருந்தது 


அஜ்மல்  சாபுவின்  ஓளிப்பதிவு  கண்ணுக்குக்குளுமை 


கிரண்  ஜோஷி  யுடன்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர்   ஏ டி  கிரிஷ் . இது    இவருக்கு  முதல்  படம் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகி  பைனாகுலர்  மூலம்  நாயகன்  வீட்டை  நோட்டம்  இட  அது  அறியாத  நாயகன்  செய்யும்  அலப்பறைகள் தியேட்டரில்  கரகோஷம்  அடங்க  10  நிமிடங்கள்  ஆனது 


2   இயக்குநர்  கவுதம்  வாசுதேவ்  மேனன்  படங்களில்  வருவது  போல்  நாயகன்  - நாயகி  ரயில்  பயணம் ,  கார்  பயணம்  என  ரொமாண்டிக்  காட்சிகளை  மனசுக்கு  நெருக்கமாக  அமைத்த  விதம்  அருமை 


2  போர்  அடிக்கும்  காட்சிகளே  இல்லாமல்  நாயகன் - நாயகி  இணைவார்களா?என்ற   எதிர்பார்ப்பை படம்  நெடுக  ஏங்க  வைப்பதே    திரைக்கதையின்  வெற்றி 

  ரசித்த  வசனங்கள் 


1  அஞ்சலி , ஐ லவ்  யூ 


 தண்ணி  போட்டிருக்கியா?


 அய்யோ ,இல்லை 

 அப்புறம்  எப்படி  உனக்கு  இந்த  தைரியம்  வந்தது ? நாலு  வருசம்  முன்னே  ஒரு  டைம்  இதே  மாதிரி  சரக்கு  போட்டுட்டு  எனக்கு  ஃபோன்  பண்ணே  இல்ல? 


2  நாம  வேலை  செய்யறமோ , இல்லையோ  வேலை  செஞ்ச  மாதிரி  நடிச்சா  போதும், ஒரு லேப்  டாப்பைக்கைல  வெச்சுக்கிட்டு  இங்கேயும்  அங்கேயும்  நடந்தா  போதும், நாம  நல்லா  வேலை  செய்யறதா  நினைச்சுக்குவாங்க 


3  இந்த  மாதிரி  ஓவரா கண்டிஷன்  போடற  பொண்ணுங்களுக்கு  கடைசில  மொக்கைப்பையன்  தான்  கிடைப்பான் 


4 ஒரு  பொண்ணோட  கண்ணைப்பார்த்தாலே  அவ சிங்கிள்  தான்னு  தெரியுமா? அது  எப்படித்தெரியும்?


 அது  வந்து  வந்து  அது  அப்படித்தான்  .  தெரியும் 


5   ஜே  கே  ஜே  கே 


 அப்டின்னா?


ஜஸ்ட்  கிட்டிங் ( JUST  KIDDING) 


6   வாழைப்பழம்  ஏது ? திருடுனியா?


 இல்லை , சுட்டுட்டேன்


  நீ  என்ன  குரங்கா? 


7  உங்க  கண்ல  மண்னைத்தூவிட்டு  பொண்ணைத்தூக்கிட்டுப்போய்ட்டான் 


8  டேய்  , ரொம்ப  ஓவராபேசாத , அப்புறம்  உன்  சைலன்சர்ல   சூடான டீ  ஊத்திடுவேன். சைலண்ட்  ஆக்கிடுவேன்


9 இந்த  கம்பெனில  வேலை  செய்யற  பெண்களுக்கு  உபயோகமான  ஒரு  விஷயம்  செய்யனும்னு  ரொம்பநாளா  நினைச்சுட்டு  இருந்தேன்


 அது  நீ  ரிசைன்  பண்ணாதான்  நடக்கும் 


10  நானும்  என்  தோழியும்  பார்ட்டிக்கு  வ்ர்றதா  சொன்னமே  அதுல  ஒரு  பிரச்சனை


 அய்யய்யோ , என்ன?


 இன்னொரு  ஃபிரண்டும்  கூட  வர்றா


 அதனால  என்ன?


   ஜோடிங்களுக்குத்தானே  அனுமதி ?  இன்னொரு  ஆண்  வேணுமே?


ஒண்ணும்  பிரச்சனை   இல்லை , என்  ஃபிரண்டுக்கு  ரெண்டு  ஜோடினு  சொல்லி  சமாளிச்சுக்கலாம் 

11   நீ  பண்றதுக்குப்பேரு  ஸ்டாக்கிங்.STALKING -னா  என்ன?னு  தெரியுமா?


 தெரியும், நான்  கூட  நிறைய  பணம்  போட்டு  லாஸ்  ஆகிடுச்சு 


 அது  ஸ்டாக்  ,மார்க்கெட்.ஷேர் . நான்  சொல்றது  வேற. பொண்ணை கரெக்ட்  பண்ணப்பார்க்கறது 


12  நான்  க்ளப்க்குப்போனது  தெரிஞ்சு  என்  ஆள்  என்  கிட்டே  கோவிச்சுக்கிட்டாடா


 இதெல்லாம்  ஒரு  மேட்டரா? நீ  அவ  ஃபோன்  நெம்பர்  குடு , நான்  சமாதானப்படுத்தறேன்


 ம்ஹூம், நான்  தர  மாட்டேன், பேசிப்பேசி  நீ  அவளை கரெக்ட்  பண்ணிட்டா?


13   எல்லா  சப்ஜெக்ட்டும்  படிச்சோம், ஆனா  பொண்ணுங்களைக்கரெக்ட்  பண்றது  எப்படி? என்பதை  மட்டும்  படிக்கவே  இல்ல


14  பொண்ணுங்களுக்கு  ஃபிரண்டா  இருக்கற  ஃப்ரண்ட்ஷிப்  ஜோன்  எல்லாம்  டேஞ்சர் . கோமா  ஸ்டேஜ் ல  இருக்கற  மாதிரி 


15  என்  வுட்  பி  வர  பஸ்ல  இடம்  இருக்கா?


 யுவ்ர்  வுட்  பி  ஷுட் பி  கம் 


1உனக்கு  இதுக்கு  முன்னால  நிறைய  பேர்  ப்ரப்போஸ்  பண்ணி  இருக்காங்களா?


 யா. ஏன்  ப்ரப்போஸ்  செய்யாத  அளவு  நான்  மொக்கை  ஃபிகராவா  இருக்கேன் ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனின்  தங்கை  ஜாகிங்க் போய்ட்டு  வந்து 45  நிமிசத்துல   5  கிமீ  ஓடிட்ட்தா  சொல்றா.அவங்க  அம்மா  இப்போதான்  நான்கு  நாட்களாக  ஓட   ஆரம்பிச்சிருக்கா  என  சொல்றாங்க . நாயகனின்  தங்கை  உடல்  பருமனா  வேற  இருக்கு . அந்த  உடம்புக்கு  அந்த  ஸ்பீடு  நாலாவது  நாளா  வர  சான்சே  இல்லை .கின்னஸ்  ரெக்கார்டு


2  வில்லன்  நாயகியிடம்  ஈரோடு  மகேஷ்  மாதிரி  மொக்கையான  பழைய  ஜோக்குகளை  சொல்றான்,நாயகி  அதுக்கும்  சிரிக்குது .நாயகன்  மதுரை  முத்து  மாதிரி  பத்திரிக்கைகளில்  வந்த  ஜோக்சை  சொல்றான் , அதுக்கும்  கெக்கெக்கே  பிக்கெக்கே  என  சிரிக்குது.பத்திரிக்கை  வாசிக்கும்  பழக்கமே  இல்லை  போல 


3  நாயகியின்  தோழி  டான்ஸ்  ஆடிக்கொண்டிருக்கும்போது  அவள்  கண்  எதிரே  நாயகன்  நாயகியின்  தோழியிடம்  நாயகியுடனான  தன்  காதலைப்பற்றிச்சொல்லி  சொல்லசொல்கிறான்,  தோழி  மறுக்கிறா:ள்.இதை  எல்லாம்  தூரத்தில்  இருந்து  பார்க்கும்  நாயகி  தோழியிடம்  என்ன  பேசிக்கிட்டு  இருந்தீங்க  என  கேட்க  மாட்டாளா? 


4  நாயகனின்  நண்பன் , நாயகியின்  தோழி  இருவருக்கும்  ஒரு  சைடு  லவ்  டிராக்  செட்  செய்து  இருக்கலாம்.மிஸ்  ஆகி  விட்டது 


5  க்ளைமாக்ஸ்  சீனுக்கு  முந்தைய  காட்சியான  வில்லன்  கார்  சேசிங்  மகா செயற்கை . வேறு  மாதிரி  யோசித்து  இருக்கலாம்


6   நாயகி  மனமாற்றத்துக்கு  வலுவான  காரணம்  இல்லை .அதே  போல வில்லனை  ஒதுக்க நாயகியிடம்  நல்ல  ஏற்றுக்கொள்ளக்கூடிய  காரணம் இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காதலர்கள்  பார்க்க;லாம்,  ஜனரஞ்சகமான  டைம்  பாஸ்  மூவி . ரேட்டிங்  3 / 5 


நன்றி  - அனிச்சம்  மின்னிதழ்  1/4/2024   இதழ்


Premalu
Theatrical release poster
Directed byGirish A. D.
Written byGirish A. D.
Kiran Josey
Produced by
Starring
CinematographyAjmal Sabu
Edited byAkash Joseph Varghese
Music byVishnu Vijay
Production
companies
Distributed byBhavana Release (Kerala)
Phars Film Co (Overseas)
Sri Venkateswara Creations
Annapurna Studios
Showing Business (Andhra Pradesh and Telangana)
Red Giant Movies (Tamil Nadu)
Release date
  • 9 February 2024
Running time
156 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹3 crore[1]
Box office₹115 crore[2]