இந்தக்கதைக்கும் தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் , மு க ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல
ஒரு ஊர்ல ஒரு எம் எல் ஏ. அவருக்கு 2 பசங்க .மூத்தவன் நல்லவன் , அப்பாவுக்கு உதவியா அப்பா சொல் பேச்சு கேட்டு அப்பா கிட்டே நல்ல பேர் எடுத்து அடக்கமான பையனா இருக்கான், ஆனா இளையவன் ஒரு டிரக் அடிக்ட் , உருப்படாதவன் , ரவுடி , அடிக்கடி கோபப்படுபவன். தன் மேல அப்பாவோ , அக்காவோ பாசம் காட்டாம தன்னை ஓரம் கட்டறாங்கன்னு இவனா மனசுக்குள்ள நினைச்சுக்கறான் .
தன்னோட அரசியல் வாரிசா அப்பா மூத்த பையனை அறிவிச்சதும் இளைய பையன் கிட்டத்தட்ட சைக்கோ ஆகிடறான். தன் காதலியையே ரேப் பண்ணி மர்டர் பண்ணிடறான். போலீஸ் தேடுது .தனக்கு அடைக்கலம் கொடுக்கத்தயங்கும் சொந்த அக்கா , மாமா 2 பேரையும் கொலை பண்ணிடறான்.
இந்த இக்கட்டான சூழல்ல எலக்ஷன் வருது . எம் எல் ஏவுக்கு கெட்ட பேரு . சொந்தப்பையனே ஒரு கிரிமினல் . அதுக்கப்புறம் என்ன ஆச்சு?ன்னு வெண் திரையில் காண்க . இந்தத்திரைக்கதைல 2 சஸ் பென்ஸ் ட்விஸ்ட்டும் இருக்கு
எம் எல் ஏ வா சாய் குமார். ஓல்டு கெட்டப்பா இருந்தாலும் கோல்டு ஆக்டிங்க் . ஆந்திரா தியெட்டர்களில் விசில் பறந்திருக்கும் .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நடிப்பில் ஆஹா!
முதல் பையனா எங்கேயும் எப்போதும் ஹீரோ சர்வானந்த். அசால்ட்டான நடிப்பு , எதுக்கும் அலட்டிக்கவே இல்லை, ஓவர் ஆக்ட்டிங்கும் இல்லை. வெரிகுட் . இந்த மாதிரி ஹீரோக்கள் தெலுங்கில் குறைவு.ரொமான்ஸ் காட்சிகளில் நல்லா சைன் பண்ணுபவர் இயக்குநர் விடாததால் தவிக்கிறார்.
2 வது பையனா யாருடா மகேஷ் ஹீரோ சந்தீப் , கிட்டத்தட்ட இவர் தான் ஹீரோ மாதிரி , அதாவது ஆண்ட்டி ஹீரோ . ஹீரோவை விட இவருக்கே காட்சிகள் அதிகம் . இவர் முகம் பால் மணம் மாறா பாலகன் மாதிரி இருப்பதால் தாடி எல்லாம் வெச்சு வில்லத்தனம் ட்ரை பண்ணி இருக்காரு , ஆனா எதிர்பார்த்த ரிசல்ட் வர்லை , ஆனாலும் மோசம் இல்லை
ஹீரோயின் ரூபி பரிகார். எந்தக்கோயில் ல போய் பரிகாரம் பண்ணாலும் லட்டு ஃபிகர் ஆக வாய்ப்பே இல்லை . இவருக்கு ப்டத்தில் பெரிதா சீன்களும் இல்லை . 2 டூயட் தான் மிச்சம்.
இன்னொரு ஹீரோயின் ரேஷ்மி அவருக்கு இவர் எவ்வளவோ தேவலை . இவர் டிரக்ட் அடிக்ட்டை ஏன் லவ் பண்றார் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1 ஆந்திராவில் தானே இருக்கோம், தமிழ் நாட்டு அரசியல் வாதிங்க வந்து கேட்கவா போறாங்க என்ற தைரியம் பாராட்டலாம்
2. மூன்று ஹீரோக்கள் படத்தில் இருந்தாலும் காட்சிகளை சரி சமமாக பகிர்ந்தளிக்க முயன்றது
3 படத்தில் திரைக்கதைப்படி ஒரு ரேப் சீன், பல காபரே டான்ஸ் சீன்கள் வருவதாக ஸ்க்ரிப்ட்டில் இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி வராமல் நாசூக்காக தவிர்த்தது , கண்ணியமான படமாக்கம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு ரவுடி , அவன் கூட ஆரம்பத்துல இருந்தே தகராறு பண்ற முஸ்லீம் பொண்ணு 2 பேருக்கும் எப்போ லவ் உண்டாச்சு , எப்படி அந்த சம்பவம் நடந்ததுன்னு காட்டவே இல்லையே?
2 ஆண்ட்டி ஹீரோ வசதியான ஆளு , ஹீரோயின் அவங்க ஹோட்டல் ல மேனேஜரா இருக்கும் ஏழைப்பொண்ணு தான் . 2 பேரும் லவ்விங்க் . எதுக்காக காதலியை ரேப் பண்ணனும்? கொலை பண்ணனும் ? இதுக்கும் விள்க்கமே வைக்கலை .
3 ஆண்ட்டி ஹீரோ தன் காதலியை ரேப் பண்ண தூக்க மாத்திரை அல்லது வயாக்ரா மாதிரி மாத்திரை கொடுத்து கரெக்ட் பண்ணாம எதுக்காக ஆபத்துன்னு தெரிஞ்சும் ஓவர் டோஸ் டிரக் கொடுக்கறாரு ?
4 கணவனா வரப்போகும் காதலன் தானே? அவன் கில்மாவுக்குக்கூப்பிடும்போது நாசூக்கா மறுக்கறது ஓக்கே , என்னமோ வில்லன் ரேஞ்ச்க்கு ஏன் போராடனும் ? மேட்டர் நடந்தாலும் பாதிப்பு இல்லையே? ஜீன் ஆதாரம் இருக்கு , பார்ட்டி பெரிய பார்ட்டி , லைஃப் ல செட்டில் ஆக சேஃப் தானே > ஏன் பார்ட்டி பம்முது ?
5 ஹீரோ தன் அப்பா கூட காரில் போய்ட்டு இருக்கும்போது கொலை மிரட்டல் கால் வருது . அப்போக்கூட கார் ஜன்னல் டோரை கூட க்ளோஸ் பண்ணாம அஜாக்கரதையாவா இருப்பாங்க ? ஒரு எம் எல் ஏ கார் அப்படித்தான் இருக்குமா?
6 ஆல்ரெடி உயிருக்குப்போராடிட்டு இருக்கும் ஆளை சாய் குமார் கார்ல கூட்டிட்டு ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கார் . அவரை ஏன் கழுத்தை நெறிச்சு கொலை செய்யனும் , கார்ல ஸ்லோவா போனா போதும் , அல்லது ஹாஸ்பிடல்க்கு சுத்து வழில போனா போதும், ஆட்டோமேடிக்கா அவர் இறந்துடுவாரே? க்ளவுஸ் கூட போடாம எதுக்கு ரிஸ்க் எடுக்கறார்?
7 அரசியல்னாலே ரவுடியிசம் தான் , அயோக்கியத்தனம் தான் . வில்லனா இருக்கும் சாய் குமார் ஏன் தன் இளைய பையனை அப்படி வெறுக்கனும் ? வில்லனுக்கு வில்லன் தானிக்கு தீனி சரியாத்தானே இருக்கு ?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. சிகரெட் பிடிக்கறதுக்கும் , மரியாதைக்கும் சயிண்ட்டிஃபிக்கா எந்த சம்பந்தமும் இல்லை. அதனால என்னைப்பார்த்ததும் சிகரெட்டை கீழே போடனும்னு அவசியம் இல்லை
2 யோவ் கிழவன் மாதிரி ஓட்டாதே , யூத் மாதிரி ஓட்டு , காரை
3 அவன் ஆலோசிச்சு எதையும் செய்வான் , நீ ஆவேசத்தோட செய்வே
4 நான் பலர் வாழ்க்கையை கெடுத்தவன் , நீ என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே ?
5 பசியோட பாலிடிக்ஸ் பண்ண முடியாது , முதல்ல சாப்பிடுவோம்
6 இந்த உலகத்துல ஜெயிக்கிறது யாரு? தோக்கறது யாரு? னு முடிவு பண்றது ஒரே விஷயம் தான். அது உன் கேரக்டர் தான்
7 பொண்ணுங்களை மடக்க கண்ண தாசன் ல இருந்து கசாப்புக்கடைக்காரன் வரை ஒரே மாதிரி தான் பேசறாங்க
8 அரசியல் ல விசுவாசமா இருக்கறவனை விட வில்லங்கமா இருக்கறவன் தான் ஜெயிப்பான்
9 ஜெயிக்கறவனுக்கும் , தோக்கறவனுக்கும் இடைல இருக்கும் வித்தியாசம் நம்பிக்கை தான்
10 எதிரிங்க எப்பவும் ஆப்போடதான் அலைவாங்கனு தெரியாதா?
11 தலைவன் ஆகனும்னா வாரிசா இருந்தா போதாது ரத்தத்துலயே ஊறி இருக்கனும்
12 பெரிய கேடியா இருந்தாலும் நியாய தர்மத்துக்குப்பிறந்தவன் மாதிருயே பேசறாரே?
சரக்கும் , சைடு டிஷ்சும் கம்மியா சாப்பிடறவர் போல
13 சரிக்கட்ட முடியலைன்னா சமாதி கட்டு - இதுதான் என் பாலிசி
14 சிம்ப்பதிலயே சீட்டிங்க் எம் எல் ஏ சீட்டைப்பிடிக்கலாம்னு நினைக்கறாரு
15 பவர் வேணும்னா சாகறதுக்கும் , சாகடிக்கறதுக்கும் தயாரா இருக்கனும்
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்- 40 ( டப்பிங்க் படத்துக்கு விமர்சனம் போட மாட்டாங்க )
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே
ரேட்டிங் = 3 / 5
Director:
Katta DevaWriter:
Katta Deva (dialogue and story)Stars:
Jeeva | ... |
Machi reddy
|
|
Sundeep Kishan | ... |
Chinna
|
|
Vennela Kishore | ... |
Goli
|
|
Sai Kumar | ... |
Loki
|
|
Pavithra Lokesh | ... |
Mother
|
|
Ruby Parihar | ... |
Heroine
|
|
Jaya Prakash Reddy | ... |
Bangaru Naidu
|
|
Reshmi | ... |
Nadia
|
|
Parihar Ruby | ... |
Heroine
|
|
Sharvanand | ... |
Hero
|
|
Surekha Vani | ... |
Sister
|