Showing posts with label POOKKAALAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label POOKKAALAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, June 10, 2023

POOKKAALAM (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )@ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்

 


  ஆனந்தம்  என்னும்  மெகா ஹிட்  படத்துக்குப்பின்  இயக்குநர்  கணேஷ் ராஜ்  நான்கு  ஆண்டுகள்  கால  அவகாசம்  எடுத்து  பட்டை  தீட்டிய  திரைக்கதைதான்  இந்த  பூக்காலம், 100  வயது  ஆன  ஒரு  தாத்தா  வின்  வாழ்க்கையில்  எழும்  சந்தேகம்  தான்    கதைக்கரு . முதல் படத்தில்  காலேஜ்  இளைஞர்கள்  வாழ்வை    படம்  எடுத்த  இயக்குநர்  இரண்டாவது  படத்தில்  100  வயதான  தம்பதியர்  வாழ்வை படம்  எடுக்கத்துணிந்திருப்பது  சிறப்பு . இது  ஒரு  ஃபீல்  குட்  ஃபேமிலி  மெலோ டிராமா

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் 100  வயதான  ஒரு  தாத்தா . அவர்  தன்  மனைவியை  மணந்து  80  வருட  மண  வாழ்க்கையை  வெற்றிகரமாக  இனிமையாக  முடித்தவர் . மகன்கள் , மகள்கள் , பேரன்கள் , பேத்திகள்  கொண்ட  கூட்டுக்குடும்பம்  அவர்களுடையது. பேத்தியின்  திருமண  வைபவம்  நடக்கும்  சமயத்தில்   வீட்டின்  பரணில்  இருந்த  பழைய  காதல்  கடிதம்  ஒன்று  நாயகன்  ஆன  தாத்தா  கையில்  கிடைக்கிறது 


 அது  50  வருடங்களுக்கு  முன்   அவரது  மனைவிக்கு   காதலன்  எழுதிய  கடிதம் . அக்காதல்  கடிதத்தைப்படித்துப்பார்த்து  அதிர்ச்சி  அடைகிறார்  நாயகன். காதலனைத்தேடிப்போகிறார். காதலன்  இன்னும்  உயிருடன் தான்  இருக்கிறான்.  பழைய  கதைகளை  எல்லாம்  எடுத்து  விட்டால்  உனக்குத்தான்  அவமானம்  என  காதலன்  சொல்ல  கோபமாகத்திரும்பி  வருகிறார்  நாயகன், 


 தனது  மனைவியை  விவாக ரத்து  செய்ய  முடிவெடுக்கிறார். இதற்குப்பின்  திரைக்கதையில்  நிகழும்  சுவராஸ்யமான  சம்பவங்கள் , உணர்ச்சி மயமான  காட்சிகள் , நெஞ்சை  வருடும்  க்ளைமாக்ஸ்  இவை  எல்லாமே  பார்ப்பவர்  மனதைக்கட்டிப்போடுகிறது 


 நாயகன்  தாத்தாவாக   விஜயராகவன்  என்பவர்  நடித்துள்ளார், அற்புதமான  நடிப்பு . அவரது  மனைவியாக  கேபிஏசி  லலிதா  பிரமாதமாக  நடித்திருக்கிறார், க்ளைமாக்ஸ்  காட்சியில்  இருவரும்  போட்டி  போட்டு  நடித்திருக்கிறார்கள் 


வக்கீல்  ஆக  வரும்  பஷீல்  ஜோசஃப்  ( ஜெய ஜெயஜெயஹே  நாயகன்) காமெடி  நடிப்பில்  பின்னி  எடுக்கிறார். ஜட்ஜ்  ஆக  வரும்  வினீத்  சீனிவாசன்  கேரக்டர்  டிசைன்  அருமை . இருவருக்குமான  காம்பினேஷன்  காட்சிகள்  இதுவரை  தென்னிந்திய  சினிமாவில்  காணாதவாஇ , ஜட்ஜ் - வக்கீல்  இருவரும் க்ளாஸ்மேட்ஸ்  என்ற  கான்செப்ட்டே  புதுசு 


ரோஷன்  மேத்யூ , சுஹாசினி  மணிரத்னம்  ஆகியோரும்  கச்சிதமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார்கள் . 


ஆனந்த் சி சந்திரன்  ஒளிப்பதிவு  கொள்ளை  அழகு மிதுன்  முரளியின் எடிட்டிங்கில்  படம்  137  நிமிடங்கள்  ஓடுகிறது 


சச்சின்  வாரியர்  பின்னணி  இசை  கூடுதல்  பிளஸ்


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கும்  கணேஷ் ராம்   வியக்க  வைக்கிறார்,  அவர்  நினைத்தால்  சீரியசாக  கதையை  நகர்த்துகிறார். திடீர்  என  கதையுடன்  ஒட்டிய  காமெடி  டிராக்  வருகிறது ,   புதுமையான  முயற்சி


சபாஷ்  டைரக்டர்


1  நூறு  வயதான  ஒரு  தாத்தா டைவர்ஸ்க்கு  அப்ளை  பண்ணும்  திரைக்கதை  ரொம்பப்புதுசு, இதைக்காமெடியாகவும் ஆங்காங்கே  சீரியசாகவும்  காட்சிகளை  அடுக்கியது  அருமை 


2 கோர்ட்  ரூம்  டிராமா  வகைப்படத்தில்  ஜட்ஜூம்  , வக்கீலும்  க்ளாஸ்மேட்ஸ்  என்பதும்  புதுசு , அது  சம்பந்தமான  காட்சிகள்  கலக்கல்  காமெடி 


3  ஜட்ஜ்  ஆக  வருபவர்  கோர்ட்டுக்கு  வெளியே  வக்கீலுக்கு  நண்பனாகவும்,  கோர்ட்டில்  ஜட்ஜ்  சீட்டில்  அமரும்போது  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  ஆவதும்  ரசிக்க  வைக்கும்  காமெடி  சீக்வன்ஸ்


4 கலக்கல்  ஆன  க்ளைமாக்ஸ்  காட்சி  அதில்  இருவரின்  போட்டி  போட்டும்  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  நமக்குள்  இருக்கும்  உறவு  ஒரு  ரப்பர்  பேண்ட்  போல, ஒரு  பக்கம்  நான்  இழுக்கறேன் , இன்னொரு  பக்கம்  நீங்க  இழுக்கனும்


‘நடுவுல  கட்  ஆகிடும் 


2   ஏண்டி , உனக்கு  மேரேஜ் ஆகி   மூணு  வருசம்  ஆச்சில்ல?  தினமும் ?


ம் ம்  தினமும் !


3   நான்  நல்லாப்படிக்கலைன்னா  உடனே  கல்யாணம்  பண்ணி  வெச்சுடுவேன்னு  சொன்னீங்க ஆனா  இத்தனை  சப்ஜெக்ட்ல  அரியர்  வெச்சும்  மேரேஜே  இன்னும்  பண்ணி  வைக்கலை , இது  என்ன  நியாயம் ? 


4  நம்  குடும்பத்தில்  எல்லோரும்  ஒண்ணா  பிரார்த்தனை  பண்ண    வேண்டிய  நேரம்  நெருங்கிடுச்சு 


5   அவனை  என்  வலையில்  சிக்க  வைக்க  எவ்ளோ  எல்லாம்  கஷ்டப்பட்டேன்  தெரியுமா? சமையல்  எல்லாம்  கத்துக்கிட்டேன் 


6   கரண்ட்  போறதுக்கு  ஏதாவது  கின்னஸ்  ரெக்கார்டுனு  ஒண்ணு

இருந்தா  அது  நம்ம  நாட்டுக்குத்தான்  கிடைச்சிருக்கும் 


7    இருட்டுதான்  இந்த  உலகத்துல  பலருக்கும்  பலதைக்கத்துக்கொடுத்திருக்கு 


8  மிஸ்!  நீ  இதுவரை  எத்தனை  பேரை  லவ்  பண்ணி  இருப்பே? 


 எட்டு  பேரு  இருக்கும்னு  நினைக்கறேன், அதுக்கு மேல  கணக்கு  வெச்சுக்க  முடியல 


9   உங்க  வாழ்க்கை  வாழ்ந்து  முடிஞ்சு  பாதி  காலம்  ஆனபின்  வாழ்ந்ததெல்லாம்  பொய்யான  வாழ்க்கைதான்  என  தெரிய  வந்தா  என்ன  செய்வீங்க ? 


10  இத்தனை  காலம்  நீங்க  கூப்பிட்ட  இடத்துக்கு  எல்லாம்  நான்  வந்திருக்கேன் , இப்போ  நீங்க  கோர்ட்டுக்குக்கூப்பிட்டாலும்  அங்கேயும்  நான்  வருவேன் 

11  இந்தக்காதல்  கடிதத்தைத்தவிர  வேற  சாலிட்  எவிடென்ஸ்  இருக்கா?


 யுவர்  ஆனர்  அந்தக்காதல்  கடிதமே  ஒரு  சாலிட்  எவிடென்ஸ்தான் 


12   எங்கப்பா  கோயில்  பூசாரி , கோயிலுக்குள்  போகும்  முன்  அவர்  சரக்கு  அடிச்ட்டு  குடிகாரனா   இருப்பாரு, கோயிலுக்குள்ள  போய்ட்டா  அவர்தான்  தெய்வம், அது  மாதிரிதான்  கோர்ட்க்கு  வெளில  நாம  ரெண்டு  பேரும்  ஃபிரண்ட்ஸ், கோர்ட்டுக்கு  உள்ளே  வந்துட்டா  நான்  ஜட்ஜ்  , நீ  வக்கீல் 

13    நான்  சும்மா  காமெடிக்காகத்தான்  அப்படிச்சொன்னேன்


 வெளில  இருந்து  பார்க்கறவங்களுக்குத்தான்  அது  காமெடி , ஆனா  அவங்களுக்குள்ள  ரொம்பக்கஷ்டமான  தருணம்  தான்  இது 


14   யோவ்  வீட்டு  வாடகை  எங்கேய்யா?  வக்கீல்னு  எல்லாம்  பார்க்க  மாட்டேன்..


 உங்க  வீட்ல  மாடு  இருந்தா  சொல்லுங்க , வந்து  பால்  வேணா  கறக்கறேன், இப்போதைக்கு  என்னால  அதுதான்  செய்ய  முடியும் 


15   பால்  கறந்து  கறந்து  என்  கை  எல்லாம்  பால்  வாசம்  அடிக்குது


 ஆவின்  பாலா?


  14   தனி  மரமா  நிற்கறதோட  கஷ்டம்  என்ன?னு  உங்களுக்குத்தெரியுமா?  எனக்குத்தெரியும் 


15   நாம்  எடுக்கும்  முடிவுகள்  எல்லாமே  ஒண்ணுக்குப்பின்  ஒண்ணு  கிடையாது , எல்லாம்  முன்னுக்குப்பின்  முரணாக  நடப்பவை 


16    சில  நேரங்களில்  நாம்  தப்பு  என  நினைக்கும்  முடிவுகள்  சரி  ஆகிடும், சரி  என  நினைத்து  எடுக்கும்  முடிவுகள்  தப்பு  ஆகிடும் 


15   சரி  எது ? தப்பு  எது?னு  தெரியாம  ஒரு  கூண்டுக்குள்  வாழ்ந்துக்கிட்டு  இருக்கோம், இதுதான்  பெரிய தப்ப



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மலையாளப்படங்களின்  தனித்துவமான  ஸ்லோனெஸ்  இதிலும்  உண்டு , ஆனால்  ஒரு  ஃபீல்  குட்  ஃபேமிலி  மெலோ டிராமா  அவசியம்  பார்க்கலாம்  ரேட்டிங் 3 / 5 





Pookkaalam
Pookkaalamfilm.jpeg
Poster
Directed byGanesh Raj
Screenplay byGanesh Raj
Produced by
  • Thomas Thiruvalla
  • Vinod Shornur
Starring
CinematographyAnend C Chandran
Edited byMidhun Murali
Music bySachin Warrier[2]
Production
companies
  • CNC Cinemas
  • Thomas Thiruvalla Films
Release date
  • 8 April 2023[1]
CountryIndia
LanguageMalayalam