Showing posts with label POMBILAI ORUMAI (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label POMBILAI ORUMAI (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, July 04, 2024

POMBILAI ORUMAI (2022) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் ) @ சைனா பிளே

   

     பெரும்பாலான மக்களால் அதிகம் கவனிக்கப்படாத ,அதிகம் பேசப்படாத ஒரு நல்ல படம் இது .பேஸ்புக் நண்பர் பரிந்துரைத்தது . விபின் அட்லி என்ற இயக்குநர் இயக்கிய படம் இது .அட்லி என்ற  பெயரைப்பார்த்து பயப்பட வேண்டாம், சொந்தமாக யோசித்து திரைக்கதை  சொந்தமாக எழுதிய  படம் தான்            


மாற்றுத்திறனாளி ஆக வில்லன் அமைந்த படங்கள் எல்லாம் மெகா  ஹிட் தான் .பூ  விழி வாசலிலே (1987) படத்தில்  ரகுவரன் ஒரு  கால் ஊனம் ஆன மாற்றுத்திறனாளி ஆக கலக்கி இருப்பார் .      


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி படிப்பறிவு அதிகம் இல்லாத ஏழ்மையான  குடும்பத்தைச்சேர்ந்தவர் . திருமணம் ஆனவர் . ஒரு  குழந்தை உண்டு .நாயகியின் கணவன்  திக்குவாய் , ஆனால் வில்லன் . சமீபகாலமாக தன கணவனின் நடவடிக்கையில் சில மாறுதல்கள் இருப்பதை நாயகி  கவனிக்கிறார் 


ஸ்மார்ட் போன் வைத்திருந்த  தன கணவன் திடீர் என அதை தூக்கிப்போட்டு விட்டு பேசிக்  மாடல் போன் வைக்கிறான் . தினசரி  வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் போன்  பேட்டரி கழற்றி  சிம்மை தனியாகக்கழற்றி வைக்கிறான் .தாடி வைத்து பஞ்சப்பரதேசி  மாதிரி இருந்தவன் க்ளீன் ஷேவ் செய்து ட்ரிம் ஆக இருக்கிறான் . கேள்வி கேட்டால் எரிந்து விழுகிறான் 


தன கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக நாயகி சந்தேகப்படுகிறாள் . தன் தோழியின் உதவியுடன் அவள் ஒரு  துப்பறிவாளரின்  மூளை  உடன்  கணவனை சிக்க வைப்பதுதான் மீதி திரைக்கதை 


 நாயகி ஆக ஸ்ரிஸ்மா   சந்திரன் பிரமாதமாக நடித்திருக்கிறார் . இன்ஸ்டாகிராமில்  மாடர்ன் ஆக  இருக்கும் அவர் படத்தில் கிராமியப்பெண் ஆக பட்டாஸாக நடித்திருக்கிறார் . 


வில்லன்  ஆக , நாயகியின் கணவன்  ஆக  சஜித் யாக்கியா  பொருத்தமான நடிப்பு . எரிச்சல் ஏற்படுத்தும் கேரக்டர்  டிசைன் 


வில்லி ஆக ட்வீங்க்கில் ஜுபி அமர்க்களம் ஆன  நடிப்பு . வில்லியின் தோழியாக வருபவர் நல்ல முக லடசணம்  


நாயகிக்கு தோழி  ஆக வரும் ஹெல்த்  இன்ஸ்பெக்டர்  ரோலில்  ஷில்பா அணில் கச்சிதம் 


ஒலிப்பகிவு , ஒளிப்பதிவு , பின்னணி இசை அனைத்தும் அருமை . டெக்னீஷியன்கள் பெயர் தெரியவில்லை 


சபாஷ்  டைரக்டர்


  1  40 நிமிடங்களில் முடிக்க வேண்டிய குறும்படத்துக்கான  கண்டடெண்டடை  2 மணி நேரப் படமாக தந்த சாமர்த்தியம் 


2  வில்லி , வில்லி யின் தோழி  இருவரையும் வைத்து சொல்லப்படட க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் 


3  நேரடியாகக்கதை  சொன்னால் ஒரு மணி நேரத்தில் முடித்து விடக்கூடிய கதை யை நான் லீனியர்  கட்டில்  சொன்ன விதம் 


4  பிரமாதமான ஒளிப்பதிவு , த்ரில்லர் படத்துக்குண்டான பிஜிஎம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 சில குறைகள் உண்டு , ஆனால் லோ  பட்ஜெட்டில் பிரமாதமாக எடுத்திருப்பதால் குறைகளைக்கண்டுகொள்ள வேண்டாம் என விட்டு விட்டேன் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு  மிகவும் பிடிக்கும் . த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், பொறுமை தேவை .ரேட்டிங்  3 / 5