Showing posts with label POINT BREAK- FILM REVIEW. Show all posts
Showing posts with label POINT BREAK- FILM REVIEW. Show all posts

Saturday, January 09, 2016

POINT BREAK- (2016)-திரை விமர்சனம்

நடிகர் : எட்கர் ரமிரேஜ்
நடிகை :தெரேசா பால்மர்
இயக்குனர் :எரிக்சன் கோர்
இசை :ஜுங்கி எக்ஸெல்
ஓளிப்பதிவு :எரிக்சன் கோர்
1991-ம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட படத்தை இப்போது 3டி-யில் ரீமேக் செய்திருக்கிறார்கள். மலையில் இருந்து குதிப்பது, வானில் பறப்பது என்று எதற்கும் அஞ்சாமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொள்ளையடிக்கும் ஒரு குழுவை ஹீரோ எப்படி பிடிக்கிறான் என்பதுதான் பாய்ண்ட் பிரேக் படத்தின் கதை.

ஜானி ஒரு இளம் எப்.பி.ஐ. அதிகாரி மட்டும் அல்ல, சாகச வீரனும்கூட. ஆனால் மோட்டர் சைக்கிள் சாகசத்தின்போது தன் நண்பன் இறந்த பிறகு, சாகசங்கள் செய்வதை விட்டுவிட்டு எப்.பி.ஐ.-யில் வேலைக்கு சேர்கிறான்.

அவன் வேலை பார்க்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அடிக்கடி கொள்ளை நடக்கிறது. மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் உயிரை பணயம் வைத்தும் கொள்ளையடிக்கும் இந்த குழுவை பிடிக்க முடியாமல் போலீஸ் திணருகிறது.

இதனையடுத்து ஹீரோ ஜானியை அந்த குழுவினரோடு பழகவைத்து, அவன் மூலமாக கொள்ளை கூட்டத்தை பிடிக்க திட்டமிடுகிறது போலீஸ். ஜானியும் அந்த குழுவோடு நெருக்கமாகிவிடுகிறான். அந்த குழுவின் தலைவனான வில்லன் போதி, ஜானிக்கு கடல் சறுக்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கிறான்.

சாகச விரும்பியான ஜானி வந்த வேலையை மறந்துவிட்டு சர்பிங்கில் மூழ்கிவிடுவதோடு, அந்த குழுவை இருக்கும் டெய்லரையும் காதலிக்க தொடங்குகிறார். இதனை அறிந்துக்கொண்ட போலீஸ் ஜானிக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதனால் அந்த குழுவின் செயல்பாடுகள் பற்றி தனது மேல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கிறான்.

பின்னர், வில்லன்கள் ஒரு வங்கியை கொள்ளையடிக்கும்போது ஜானியும் மற்ற போலீஸ் அதிகாரிகளும் அவர்களை விரட்டுகிறார்கள். அப்போது கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை கொல்ல ஜானிக்கு வாய்ப்பு கிடைத்தும் அவன் கொல்லாமல் விட்டுவிடுகிறான். இதனால் மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகிறான். கொள்ளை கூட்டத்திற்கும் ஜானி ஒரு போலீஸ் என்று தெரிந்துவிடுகிறது. வில்லன் போதி ஜானியின் காதலியான டெய்லரைக் கடத்துகிறான். அவளை விடுவிக்க வேண்டுமென்றால், ஜானி தங்களுடன் சேர்ந்து ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபட வேண்டுமென சொல்கிறான்.

இறுதியில் ஜானி, கொள்ளைக்கூட்டத்துடன் இணைந்து வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு தனது காதலியை காப்பாற்றினாரா? அல்லது உண்மையான போலீஸ் அதிகாரியாக தனது கடமையை ஆற்றினாரா? என்பதே மீதிக்கதை.

1991-ம் ஆண்டு வெளிவந்த படத்துடன் ஒப்பிடும்போது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலக்கியிருக்கிறார் இயக்குனர் எரிக்சன் கோர். மற்றபடி படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வானில் பறப்பது, சர்ப்பிங் செய்யும் காட்சிகள் எல்லாம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் பழைய படத்தில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்லை. இந்த படத்தின் இயக்குனர் ‘பாஸ்ட் அண்ட் தி ப்யூரியஸ்’ படத்தில் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ‘பாய்ண்ட் பிரேக்’ தடுமாற்றம்
http://cinema.maalaimalar.com/2016/01/08083646/Point-Break-Review.html