ஹீரோ ஒரு திருடன் , அவர் கிட்டே ஒரு ஊர்ல பல வருசங்களுக்கு முன் புதைக்கப்பட்ட புதையல் எடுக்கும் பணி ஒப்படைக்கப்படுது , எப்படி திமுக காங்கிரஸ் , கூட கூட்டணி அமைச்சு தேர்தல்ல போட்டியிடுதோ அந்த மாதிரி ஹீரோவும் இன்னும் 3 திருடங்களை கூட்டணி சேர்த்து ( அப்பதானே பலமான கூட்டணி ஆகும்?) அந்த ப்ராஜெக்ட்டை சக்சஸ்ஃபுல்லா எப்படி முடிக்கறார்? என்பதே கதை
ஹீரோவா நயன் தாராவின் முன்னாள் காதலர் பிரபுதேவா. ஓப்பனிங் சீன்ல ஒரு செம டான்ஸ் ஆடி இருக்கார் ., அதகளமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் , அப்பறம் ஒரு டூயட்ல ஜிமிக்ஸ் வேலை எல்லாம் காட்டி ஒரு டான்ஸ் , அவ்ளோ தான் ஹீரோ ஒர்க் முடிஞ்சுது , தேவி படத்துல ரீ எண்ட்ரி ஆன மாதிரி இதுலயும் ஒரு காட்டு காட்டுவார்னு ட்விட்டர்ல பில்டெப் எல்லாம் நான் குடுத்தேன், எல்லாம் வேஸ்ட்
அதுக்குப்பதிலா ஹன்சிகா இதுல செம காட்டு காட்டி இருக்கார். ஹன்சிகா அவளோ திறமை காட்டி நடிச்ச படமா?னு வியக்க வேணாம் , கிளாமர் காட்டி நடிச்சிருக்கார் . பாடல் காட்சிகளில் இவர் ஒரு திறந்த புத்தகம் . 3 சீன்களில் ஹீரோ இவரை ரொம்ப ஜொள் விடுவது சகிக்கல. குறிப்பா பிரபு தேவா வுக்கு என்னா டேஸ்ட்டோ சிம்பு கரெக்ட் பண்ணி கழட்டி விட்ட/ விடப்பட்ட ஃபிகர்களா பார்த்து ரூட் போடறார்.
ரேவதி நல்ல பர்ஃபார்மென்ஸ் இதுல . மகளிர் மட்டும் , மஞ்சப்பை படங்களுக்குப்பின் சொல்லிக்கொள்ளும் ஒரு ரோல் , சத்யனை ஓப்பனிங் சீன்ல ஏமாற்றுவது , செண்ட்டிமெண்ட் கதை சொல்லி தப்பிப்பது , க்ளைமாக்ஸில் குதூகலம் காட்டுவது என பின்றார்
அவருக்கு அடுத்தது நம்ம மொட்டை ராஜேந்திரன் . அம்மா,. சித்தி என அவர் உருகுவது செம காமெடி . எம்(டன்) மகன் படத்தில் வடிவேலு அப்பாவை வெச்சு ஒரு சுடுகாட்டு காமெடி + குணச்சித்திர ரோல் பண்ணி கைதட்டலை அள்ளி \ இருப்பார் , அதுதான் இதுக்கு இன்ஸ்பிரேசன் போல
முனீஸ்காந்த் க்கு முக்கிய ரோல் , ஆனாலும் பெரிய அளவில் காமெடி இல்லை
வில்லன்களாக ஆனந்த்ராஜ் & கோ வுக்கு பெரிய வேலை ஏதும், இல்லை
பாடல்கள் , இசை எல்லாம் சுமார் ரகம் . ஒளிப்பதிவு , எடிட்டிங் சராசரி தரம்
கதை சொல்லப்போறேன் பட இயக்குநருக்கு இது கையைக்கடிக்காத முதலீட்டுக்கு மோசம் போகாத சராசரி வெற்றிப்படம் தான்
நச் டயலாக்ஸ்
1 நான் ஒரு டாக்டரா இருக்்கறதால பிறப்பு ,இறப்பு இத எல்லாம் சகஜமா எடுத்துக்க முடியுது #kulaebahaavali
2 பலமான எதிரி அமைஞ்சாதான் பிஸ்னெஸ்ல ஈசியா டார்கெட் அச்சீவ் பண்ண முடியும் #kulaebahaavali
3 சாமியைக்கும்பிடறவங்களை விட அந்த சாமி சிலையைத் திருடறவங்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு /விலை தெரியும் #kulaebahaavali
4 காக்கா வலிப்பு வந்தா இரும்புச்சாவி குடுக்கனும்
;சாவி குடுக்க அவ என்ன பொம்மையா? #kulaebahaavali
5 நான் தனிமையைத்தேடி காசி,ராமேஸ்வரம் னு போலாம்னு இருக்கேன்
ஆனா,அங்கே ஏகப்பட்ட கூட்டம் இருக்குமே? #kulaebahaavali
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
`1 ஹன்சிகா ஒரு சீன்ல NEVER FINDING FUN னுனு ஒரு வாசக பனியன் சுசீலா கணக்கா போட்டுட்டு வருது , என்ன உள் குத்து அர்த்தமோ தெரில
2 ஓப்பனிங் சாங் ல பிரபுதேவா சிலம்பாட்டம்ல சிம்பு படுத்த மேனிக்கு ஒரு ஸ்டெப் போடுவாரே அதே போல் பேட்டர்ன்ல வெரைட்டியா ஆடி இருக்கார் , பிரமாதம்
3 கிராமத்து வழக்கப்படி ஒரு பரிகாரத்துக்காக ஹன்சிகாவை முழு நிர்வாணமா ஊர்வலம் வரனும்னு சொல்றாங்க , அப்படி ஒரு கிராமம் எந்த மாவட்டத்துல இருக்கு/னு தெரில , தெரிஞ்சா ஒரு மினி டூர் போலாம்
சபாஷ் டைரக்டர்
1 லோ பட்ஜெட்ல ஓரளவு ரசிக்கும்படி ஒரு காமெடிப்படம் கொடுத்ததுக்கு ஒரு ஷொட்டு
2 ஹன்சிகா வுக்கு சம்பளத்தை மட்டும் கொடுத்துட்டு கடைசி வரை கதை , கேரக்டர் பற்றி அவரை வாயை திறக்காம பார்த்துக்கிட்டது
3 ரேவதியின் பங்களிப்பு , மொட்டை ராஜேந்திரன் நடிப்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் ,திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1 ஓப்பனிங் சீன் ஃபிளாஸ்பேக்ல 2 பெட்டி நிறைய வைரக்கற்களை ஒரு ஆள் பதுக்கறான். அந்த வைரக்கற்களை ஒரு எலும்புக்கூட்டில் மறைச்சு அந்த 2 பெட்டில ஒரு பெட்டில அந்த எலும்புக்கூட்டை வைக்கறான் , இது எப்படி சாத்தியம், கொள்ளளவு , கன அளவு இது எல்லாம் டேலி ஆகலையே?
2 ஹன்சிகா நிர்வாணமா வருதா? ஊர்வலம் ல சீன் பார்க்கலாம்னு அந்த கிராமத்துல ஒரே ஒரு ஆள் மட்டும் ஒளிஞ்சிருந்து செக் பண்றான் , ஊர்ல பாதி ஆம்பளைங்க அப்படித்தானே இருப்பாங்க ?
3 பல வருசங்களா பெட்டியில் இருக்கும்போது எலும்புக்கூடு எந்த பாதிப்பும் இல்லாம , தூசி படாம க்ளீனா இருப்பது எப்படி?
சி.பி கமெண்ட் - குலேபகாவலி - புதையலை தேடிப்போகும் திருடர்கள்-மொக்கை காமெடி , ஹன்சிகா கிளாமர் , ரேவதி,மொட்டை ராஜேந்திரன் நடிப்பு மட்டுமே + , விகடன் - 40 ,41 ரேட்டிங் - 2.5 / 5
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 40 / 41
குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) = 3/5
ஈரோடு ஸ்ரீனிவாசாவில் படம் பார்த்தேன். 12 பேர் இருந்தாங்க