ஃபீனிக்ஸ் பறவையைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியன் பாலைவனத்தில் வாழ்ந்த பறவை இனம் இது. தன்னைத்தானே எரித்துக்கொண்டு பின் அதன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து புதிய இளம் வாழ்க்கையைத்தொடங்கியதாக சொல்லப்படுகிறது. இன்றும் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வாழும் மனிதர்களை ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்த்தெழுந்ததாக சொல்வார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு வக்கீல். தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருபவர். சில காரணங்களால் தான் குடி இருக்கும் இடத்தை விட்டு வேறு இடம் புதிதாகக்குடி போக நேரிடுகிறது . பல இடங்கள் பார்க்கிறார் , எதுவும் அவருக்கு செட் ஆகவில்லை. அக்கம் பக்கம் வம்பு பேசாத , ஆட்கள் அதிகம் இல்லாத தனிமையான இடம்தான் அவருக்குத்தேவை .
கடைசியில் அவர் எதிர்பார்த்த மாதிரியே ஒரு வீடு வாடகைக்குக்கிடைக்கிறது. அந்த வீட்டுக்குக்குடி போகிறார்கள் . சில அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன.
நாயகன் வீட்டுக்கு தினசரி ஒரு கடிதம் வருகிறது . அன்னா ரோஸ் என்னும் பெண் ஃபிரட்டி என்பவருக்கு எழுதிய காதல் கடிதங்கள் அவை . தபால் காரரிடம் கேட்டால் அது தான் டெலிவரி செய்தது அல்ல என்கிறார். அக்கம் பக்கம் விசாரித்தால் அந்த ஏரியாவில் அந்தப்பெயரில் யாரும் வாழவில்லை என தெரிய வருகிறது
சில விசாரணைகளுக்குப்பின் தான் ஒரு உண்மை தெரிய வருகிறது . 1970 ஆம் ஆண்டு இப்போது கொரானா வந்தது போல காலரா வியாதியால் பலரும் இறக்க அந்த சமயத்தில் எல்லோரையும் ஒரே இடத்தில் புதைத்தார்கள் . அந்த புதைக்கப்பட்ட இடத்தில் தான் நாயகன் குடி இருக்கும் வீடு கட்டப்பட்டு இருக்கிறது . அந்த இறந்த ஆத்மாக்களில் ஒரு பெண் ஆத்மா தான் தன் நிறைவேறாத ஆசைக்காக மீண்டும் உயிர்த்தெழுந்து உலா வருகிறது
ஃபிளாஸ்பேக் ( அன்னா ரோஸ் + ஃபிரட்டி )
நாயகன் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவன். நாயகி ஒரு அனாதை . நாயகியைக்கண்டதும் நாயகன் காதல் வயப்படுகிறான். அவளையே ஃபாலோ பண்ணிக்கொண்டு இருக்கிறான். நாயகிக்கும் விருப்பம்தான் . ஆனால் ஒரு கட்டத்தில் நாயகன் பிரப்போஸ் செய்யும்போது இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது . காதல் நமக்கு வலியைத்தான் தரும் என மறுக்கிறாள்
ஒருவாறாக நாயகன் நாயகியை சம்மதிக்க வைத்து விடுகிறான். இருவரும் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறார்கள் . ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியை விட்டுப்பிரிந்து சில மாதங்கள் நகரத்துக்குச்செல்ல நேர்கிறது. நாயகி தனிமையில் இருக்கிறாள்
அங்கே நாயகன் நகரில் இருக்கும்போது வீட்டில் பெற்றொர் ஒரு பெண்ணை நாயகனுக்காக திருமணம் செய்ய ரெடி செய்கிறார்கள். நாயகன் ஏதோ ஒரு சபலத்தில் , மன மாற்றத்தில் நாயகியை மறந்து புதுப்பெண்ணுடன் பழகிக்கொண்டு இருக்கிறான்
நாயகி தினசரி கடிதங்களாக எழுதித்தள்ளுகிறாள் . நாயகன் எதற்கும் பதில் அளிக்கவில்லை . அப்போதுதான் நாயகி இருக்கும் ஏரியாவில் காலரா பரவ ஆரம்பிக்கிறது. நாயகிக்கும் அந்த நோய் வந்து விடுகிறது
இதற்குப்பின் நாயகன் - நாயகி சேர்ந்தார்களா? வக்கீல் குடும்பத்துக்கும் இவ்ர்களுக்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன நட்ந்தது? என்பது மீதி திரைக்கதை
நாயகன் வக்கீல் ஆக அஜூ வர்கீஸ் அமைதியாக நடித்திருக்கிறார். ஃபிளாஸ்பேக்கில் வரும் ஃபிரட்டி ரோலில் சாந்து நாத் அருமையாக நடித்திருக்கிறார். காதல் வசப்படுவதும், சபலப்படுவதும் , நாயகியை தவிக்க விட்டுட்டமே என்ற குற்ற உணர்ச்சியிலு ம் அவரது முக பாவங்கள் அபாரம்
அன்னா ரோஸ் ஆக அபிராமி போஸ் அற்புதமான நடிப்பு ., அவரது முக அழகு , அமைதி எல்லாம் செம .தன் காதலன் தன்னை மறந்தாலும் , தடம் மாறினாலும் தன் அன்பை இம்மி அளவு கூட மாற்றிக்கொள்ளாத ஒரு உயர்ந்த மனம் அதை பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்
சாந்துநாத் - அபிராமி போஸ் இருவருக்குமான கெமிஸ்ட்ரி அருமையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது . காதல் கதைகளில் இந்த கெமிஸ்ட்ரி செட் ஆவது மிக முக்கியம்
அனூப் மேனன் கெஸ்ட் ரோலில் பாதிரியார் ஆக வருகிறார்
நிதீஷ் கே டி ஆர் 132 நிமிடங்கள் ஓடும்படி ஷார்ப் ஆக ட்ரிம் செய்து இருக்கிறார். ஃபிளாஸ்பேக் காட்சிகள் இன்னும் கொஞ்சம் நேரம் வராதா? என ஏங்க வைக்கிறார்
சாம் சி எஸ் இன் இசை ரொமாண்டிக் போர்சனில் குதூகல இசையையும், ஹாரர் எலிமெண்ட்ஸ் வரும்போது திகில் உணர்வையும் கொடுக்கிறது . பல இடங்களில் பிஜிஎம் மாஸ்
அல்பியின் ஒளிப்பதிவு சிறப்பு . குறிப்பாக க்ளைமாக்ஸ் ஷாட்டில் அந்த காமரா ஆங்கிள் , படமாக்கப்பட்ட விதம் அனைத்தும் அருமை
பிகில் பாலகிருஷ்ணனுடன் இணைந்து இயக்குநர் விஷ்ணு பரதன் கதை எழுதி இருக்கிறார். மிதுன் மேனுவல் தாமஸ் திரைக்கதை எழுதி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர் (விஷ்ணு பரதன் )
1 ஒட்டு மொத்தப்படத்துக்கும் சிகரம் வைத்தது போல அந்த க்ளைமாக்ஸ் ஷாட் அற்புதம்.
2 நாயகி அபிராமி போஸ் முக வசீகரம் , ஒப்பனை இல்லாத இயற்கை அழகி , கண்ணிய உடை , உடல் மொழி அனைத்தும் அருமை
3 நாயகியின் அன் கண்டிஷனல் லவ் , நாயகன் மீதான நம்பிக்கை தான் பெரும் பலம்
4 வக்கீலின் மகள் ஒரு காட்சியில் தன் விரலை முறித்துக்கொள்ளும் காட்சி செம திகில்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 புதிதாகக்குடி வந்த வீட்டில் வக்கீல் தன் மனைவியுடன் பெட்ரூமில் படுத்து இருப்பதும் , சுமார் ஐந்து வயதே ஆன 3 குழந்தைகளை தனி பெட்ரூமில் படுக்க வைப்பதும் நம்பும்படி இல்லை . ஃபாரீனில் தான் அப்படி தனி பெட்ரூம் இருக்கும். நம் இந்தியாவில் ஒரே ரூமில் தானே படுப்பார்கள்?
2 நடு இரவில் தண்ணீர் தாகம் எடுத்தால் குடிக்க ஒரு சொம்பு தண்ணீரை பெட்ரூமில் கட்டிலுக்கு அருகே வைத்துக்கொள்வதுதானே எல்லோர் வழக்கமும்/ சும்மா திகில் ஊட்ட ஹாலுக்கு வந்து கிச்சனுக்குப்போய் தண்ணீர் குடிப்பதாகக்காட்டி இருப்பது ஏனோ/
3 ஃபிளாஸ்பேக் கதையில் நாயகன் - நாயகி இருவரும் வறுமையில் இருப்பது போலக்காட்டுகிறார்கள் . காய்கறிக்கடையில் காய் வாங்கும்போது கூட காசு கம்மியா இருக்கிறது என பாதிக்காய்கறிகளை ரிட்டர்ன் செய்கிறார்கள் , ஆனால் குடி இருப்பது மிகப்பெரிய பங்களாவில் அது எபப்டி ? நாயகியும் அனாதை , நாயகனும் வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து விட்டான். அப்போ அவ்ளோ வாடகை தர பணம் ஏது ?
4 நாயகனுக்குப்பெற்றோர் ரெடி செய்த பெண்ணை நாயகன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை முதலில். அப்போது அந்தப்பெண்ணுக்கு சந்தேகம் வராதா?
5 நாயகனின் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் ? என்பதை வலுவாகச்சொல்லவில்லை
6 வக்கீலின் மகள் நைட்டில் ஒரு காட்சியில் எனக்கு தூக்கம் வரவில்லை என ஹாலில் வந்து உலாத்தும்போது அவளை பெட்ரூமுக்குக்கொண்டு வந்து படுக்க வைத்து கதை ஏதாவது சொல்லி தூங்க வைக்காமல் தூங்கு என சொல்லி விட்டு பொறுப்பில்லாமல் கிளம்புவது ஏன் ?
7 வக்கீல் ஒரு காட்சியில் ஆஃபீஸ்க்கு போய் வர எனக்கு ஒரே ஒரு ஸ்கூட்டர் மட்டும் இருக்கு என்கிறார். ஆனால் ஒரு காட்சியில் புல்லட்டில் வருகிறார்
ரசித்த வசனங்கள்
1 டீன் ஏஜ் ல எல்லோருமே முட்டாள் தனங்கள் , விளையாட்டுத்தனங்கள் செய்துதான் இருப்போம். அதில் இந்தக்காதலும் ஒண்ணு
2 வாழ்க்கைல எப்படியாவது வெற்றி பெற வேண்டும், அது நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடும்
3 வாழ்க்கைல நமக்கு பல நண்பர்கள் கிடைப்பாங்க , ஆனா ஏதோ ஒரு பயணத்தில் ஸ்பெஷலா ஒரு ஃபிரண்ட் கிடைக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ படம் தான் . ஒரு லிப் லாக் சீன் இருக்கிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தரமான ரொமாண்டிக் ஹாரர் த்ரில்லர். அவசியம் பார்க்க வேண்டிய படம். ரிலீஸ் ஆன டைமில் விமர்சகர்களிடையே பலத்த வரவேற்பைப்பெற்ற படம், வசூல் ரீதியாகவும் இது சக்சஸ் . ரேட்டிங் 3 / 5
Phoenix | |
---|---|
Directed by | Vishnu Bharathan |
Screenplay by | Midhun Manuel Thomas |
Story by | Vishnu Bharathan Bigil Balakrishnan (story concept) |
Produced by | Rinish K. N. |
Starring | |
Cinematography | Alby |
Edited by | Nithish K. T. R. |
Music by | Sam C. S. |
Production company | Front Row Productions |
Distributed by | Central Pictures |
Release date |
|
Running time | 132 minutes |
Country | India |
Language | Malayalam |