இயக்குநர் ரேஜின் எஸ் பாபு கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் கூர்க்கெஞ்சேரியைச்சார்ந்தவர், இப்படத்தின் கதையை பல நாயகர்களிடம் சொன்ன போது ஆர்வமாகக்கேட்டாலும் யாரும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.கமர்ஷியல் சக்சஸ் ஆவதில் உள்ள ரிஸ்க் தான் காரணம். பின் எப்படியோ ஒரு டீம் செட் பண்ணி படம் எடுத்து விட்டார். 2023 ஜூன் மாதம் திரைக்கு வந்த இப்படம் இப்போதுதான் ஓடிடி யில் ரிலிஸ் ஆகி இருக்கிறது .
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - நடக்கும் காலகட்டம் 1989 அமீர் - ஏஞ்சல் இருவரும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் .,வயது தலா 14 இருக்கும் இதில் அமீர் மேஜிக் தெரிந்தவன். ஊரில் பலரும் அவனை பில்லி சூனியக்காரன், மனதை வசியம் செய்பவன் அவன் கூட யாரும் சேரக்கூடாது என்கின்றனர் . ஏஞ்சலின் அப்பாவுக்கும் தன் மகள் அமீர் உடன் பழகுவது பிடிக்கவில்லை ..ஸ்கூலில் நடந்த எக்சர்சனில் வெளி இடம் வந்த மாணவர்கள் ஜாலியாக இருக்கின்றனர். ஒரு விபத்து நிகழ்கிறது . ஒரு இடத்தில் கீழே விழுந்த ஏஞ்சல் எந்த பாதிப்பும் இன்றி மீண்டு விடுகிறாள், ஆனால் அமீர் கல்லில் தலை பட்டு மனநிலை பாதிக்கப்படுகிறான்
சம்பவம் 2 நடக்கும் காலகட்டம் 2004 . ஒரு லாரி டிரைவரும் , க்ளீனரும் லாரியில் பயணிக்கின்றனர் . லோடு ஏற்றும் இடத்தில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஆள் அவர்கள் லாரியில் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறான். லோடு ஏற்றிய ஆள் அவனை செல்லும் வழியில் எங்காவது இறக்கி விட்டு விடுங்கள் என்று கூறியதால் அதே போல் அவனை அழைத்துக்கொண்டு லாரியில் பயணிக்கிறார்கள் . வழியில் ஒரு நாயை லாரி அடித்து சாகடிக்கப்போகிறது என அந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஆள் சொல்கிறான், அதே போல் நடக்கிறது.பின் கொஞ்ச நேரம் கழித்து அடுத்து ஒரு மனிதன் லாரியில் அடிபடப்போகிறான் என்கிறான். இருவருக்கும் பயம் வந்து விடுகிறது
சம்பவம் 3 - நடக்கும் காலகட்டம் 2022 - நாயகன் டாக்டர் மகேஷ் திருமணம் ஆனவர் . மனைவி , மகள் உடன் வாழ்கிறார். ஒரு நாள் ஒரு ஜாலி ட்ரிப் போகலாம் என காரில் பயணிக்கின்றனர் . வழியில் அறிமுகம் இல்லாத ஒரு இடத்தில் தங்க நேர்கிறது . அப்போது நாயகன் டாக்டர் மகேஷ்க்கு லாரியில் அடிபட்டு ஒரு விபத்து நேர்கிறது
நாயகனின் மனதில் ஏற்பட்ட கனவுகள் தான் மேலே சொன்ன சம்பவம் 1 & சம்பவம் 2 , ஆனால் அவை உண்மையில் நிகழ்ந்தவை. உண்மையான கனெக்சன் என்ன? என்பதை அறிய நாயகன் ஏஞ்சல் எங்கே என விசாரித்து அவளைக்கண்டு பிடிக்கிறான். அமீர் - ஏஞ்சல் இருவரும் சந்தித்த இடங்களுக்கு அழைத்துச்செல்கிறான் . இதற்குப்பின் நிகழ்ந்த திருப்பங்கள் தான் மீதிக்கதை .
நாயகன் ஆக விஜய் பாபு நன்றாக நடித்திருக்கிறார். தாடி கெட்டப்பில் உள்ள சவுகர்யம் என்ன எனில் முகத்தில் எக்ஸ்பிரசன் வருகிறதா? இல்லையா? என்பதை சரியாக கண்டு பிடிக்க முடியாது ( டி ஆர் ,பிரபுதேவா ரசிகர்கள் மன்னிக்கவும் )
நாயகி ஏஞ்சல் ஆக அனு மோல் கச்சிதமான நடிப்பு .கண்கள், கன்னம் இவரது பிளஸ் பாயிண்ட்ஸ்
நாயகனின் மனைவியாக தேவகி ராஜெந்திரன் கண்ணியமான தோற்றம், தேவையான நடிப்பு என கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருக்கிறார்
அமீர் ஆக பினோஜ் வில்யா நடித்திருக்கிறார். இவர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் . நாயகி கூட டூயட் பாடி ஒரு சீனில் நடிக்கிறேன் என அடம் பிடிக்கவில்லை
ஜீன் பி ஜான்சன் தான் இசை . பிஜிஎம் இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம். சுமார் ரகம் தான் ஈ எஸ் சூரஜ் தான் எடிட்டிங்க். 100 நிமிடங்கள் ஓடும்படி ஷார்ப் ஆக ட்ரிம் செய்து இருக்கிறார். அருண் தாமோதரனின் ஒளிப்பதிவில் கேரளாவின் இயற்கை அழகுகள் அற்புதமாகப்படம் ஆக்கப்பட்டுள்ளது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் இயக்குநர் ரேஜின் எஸ் பாபு
சபாஷ் டைரக்டர்
1 கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது ( 1988) , லியனார்டோ டிகாப்ரியோ ந்டித்த த இன்செப்சன் ( 2010) , சிம்பு நடித்த மாநாடு ( 2021) இந்த மூன்று படங்களையும் கலந்து கட்டி காக்டெயில் பண்ணி விட்டாரா? அல்லது ஏற்கனவே அப்படி காக்டெயில் செய்யப்பட்ட கொரியன் படத்தை அட்லீ ஒர்க் பண்ணி விட்டாரா? அல்லது சொந்த சரக்கா? என்பது அறியாத வண்ணம் அவரும் குழம்பி நம்மையும் குழப்பிய விதம்
2 நாயகனின் மனைவியாக வரும் தேவகியின் கண்ணியமான ஆடை வடிவமைப்பு . ஒரு இயக்குநரின் ரசனையை நாயகியின் உடையை வைத்தே கண்டு பிடித்து விடலாம்
3 நாயகனின் ஹாஸ்பிடலில் சக டாக்டராக வரும் லேடி டாக்டர் நம்ம ஊர் ஊர்வசி போல லொட லொட என பேசுவது ரசிக்க வைத்தது
ரசித்த வசனங்கள்
1 மனிதர்களின் மனதில் இருப்பதை படிக்கும் மேஜிக் ஒன்று உண்டு , ஆழ்ந்த நட்பு தான் அது
2 இந்தக்காலத்தில் ஹாஸ்பிடல்க்கு வர்ற பேஷண்ட்ஸ் எல்லாரும் கூகுள் செக் பண்ணி இன்ன வியாதிக்கு இன்ன மருந்துனு தெரிஞ்சுகிட்டு டாக்டர்ஸ் கொடுக்கும் மருந்து கரெக்ட் தானா?னு அனலைஸ் பண்ணிடறாங்க
3 லூசிட் ட்ரீம் (LUCID DREAM) என்பது அரிதான ஒரு கலை .கனவு காண்பவர் கனவில் வரும் கேரக்டர்களை சூப்பர் வைஸ் செய்ய முடியும்.கனவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். இது எல்லோராலும் முடியாது , சிலரால் மட்டுமே சாத்தியம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மகள் அப்போதான் சோபாவில் படுத்து தூங்க ஆரம்பித்திருக்கு, அம்மா, அப்பா இருவரும் லொட லொடனு பேசிட்டு இருக்காங்க . வழக்கமா தூக்கம் கலையக்கூடாதுனு வெளில போய்த்தானே தம்பதிகள் பேசிக்குவாங்க ?
2 நாம் காண்பது கனவா? நனவா? என்பதை அறிய நம்மை நாமே கிள்ளிப்பார்ப்போம், வலித்தால் அது நனவு , வலிக்க வில்லை எனில் கனவு . இதுதான் நமக்குத்தெரிந்தது , ஆனால் நாயகன் அடிக்கடி இது கனவா? நனவா? என்பதை அறிய டாஸ் போட்டுப்பார்க்கிறான். அது புரியவில்லை
3 அவ்வளவு தூரம் அமீரைத்தேடி அலைந்த நாயகன் க்ளைமாக்சில் அமீரின் டெட் பாடியை புதைக்க பலர் சென்று கொண்டிருக்கும் ஊர்வலத்தைக்கண்டவர் அமீரின் முகத்தைக்கூட பார்க்க முயலவில்லை , அது ஏன்?
4 படத்தின் முக்கியமான கேரக்டர்கள் கையில் மணிக்கட்டுப்பகுதியில் அடிக்கடி ஒரு நத்தை ஊர்கிறது . நாயகனின் மகள் ஒரு சமயம் நத்தை ஓவியம் வரைகிறாள். படம் நத்தை மாதிரி மெதுவாகத்தான் போகும் என்பதன் குறியீடா? வேறு ஏதாவது அமானுஷ்ய சம்பவமா? புரியவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மாறுபட்ட படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம், சின்னப்படம் என்பதால் ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம் , ரேட்டிங் 2.75 / 5
Pendulum | |
---|---|
Directed by | Rejin S. Babu |
Written by | Rejin S. Babu |
Produced by |
|
Starring | |
Cinematography | Arun Damodaran |
Edited by | Sooraj E. S. |
Music by | Jean P. Johnson |
Production companies |
|
Release date |
|
Running time | 106 minutes[2] |
Country | India |
Language | Malayalam |