ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் , வில்லன் இருவருமே இந்தியாவின் ரா ஏஜெண்ட்ஸ். வில்லன் ரா ஏஜெண்ட் ஆக இருந்தபோது நாட்டுக்காக பணி செய்தவர்தான், ஆனால் ஒரு கட்டத்தில் எதிரி நாட்டினரால் பணயக்கைதிகளாகப்பிடிபட்ட அவர் , அவரது நிறைமாத கர்ப்பிணி மனைவி இருவரும் சித்திரவதைக்கு ஆளான போது இந்தியா வாய்ப்பிருந்தும் அவர்களைக்காப்பாற்றாமல் விட்டு விட்டது . எதிரி நாடு வில்லனின் மனைவியை சுட்டுக்கொன்றது . இதனால் இந்தியா மீது கடுப்பான வில்லன் எதிரி நாட்டுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவை அழிக்கத்துடிக்கிறான்
காலாவதி ஆன அம்மை வைரசை மீண்டும் உருவாக்கி அந்த திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்ற வில்லன் பாடுபடுவதும் நாயகன் எப்படி அதை முறியடிக்கிறார் என்பதும்தான் கதை .
நாயகன் - வில்லன் கதை மட்டும் இருந்தால் கிளாமர் இருக்காது என்பதால் நாயகனுக்கு உதவி செய்ய பாகிஸ்தான் ஏஜெண்ட் ஆக நாயகி கேரக்டர் டிசைன் வடிவமைக்கப்ப்ட்டிருக்கிறது
நாயகனாக ஷாரூக்கான். தில்வாலே துல்ஹனியா லே ஜாயெங்கே படத்தில் தான் இவரை காதல் நாயகனாக நாம் கொண்டாடினோம். விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடித்த பிரியமுடன் படத்தின் ஒரிஜினல் வெர்சன் ஆன பாசிகர் படத்தில் ஷாரூக்கின் நடிப்பு மிரட்டல் ஆக இருக்கும், அவற்றை எல்லாம் பார்த்து விட்டு இப்போது முதிர்ச்சியான முகத்துடன் களை இழந்த ஷாரூக்கைப்பார்க்கும்போது உத்தம புத்திரன் படத்தில் யாரடி நீ மோகினி என் ஸ்டைல் காட்டிய சிவாஜிகணேசனை என் தமிழ் என் மக்கள் படத்தில் எப்படி பரிதாபமாகப்பார்த்தோமோ அப்படி பார்க்க வேண்டி இருக்கிறது
வில்லனாக ஹான் ஆப்ரகாம் கலக்கி இருக்கிறார். ஜிம் பாடி , மசில்ஸ் பைசெப்ஸ் எல்லாம் தெறிக்க அவர் நடந்து வரும்போதே அள்ளுகிறது. அவரை ஹாரூக் ஃபைட் போட்டு ஜெயிக்கும்போது காமெடியாக இருக்கிறது
நாயகியாக தீபிகா படு கோனே . காஸ்ட்யூம் டிசைனருக்கு சம்பள பாக்கி போல . 80 செமீ ஜாக்கெட் பிட்டை இரண்டாகக்கிழித்து 40 செமீ ல ஒரு மேலாடை , மீதி 40 செமீ ல ஒரு கீழாடை என படம் முழுக்க கிளாமராக வருகிறார். சில காட்சிகளில் இவர் உடை அணிந்திருக்கிறாரா? சும்மா ஷால் மட்டும் போட்டிருக்காரா? என சந்தேகம் வருகிறது . ஒரு ஃபைட் சீனில் நல்லா பண்ணி இருக்கார்
டிம்ப்பிள் கபாடியா கமலின் விக்ரம் படத்தில் இளமையாகப்பார்த்தது , இப்போ பாட்டி வயது ஆகி விட்டது ., பாவமாக இருக்கிறது . உயர் அதிகாரியாக வருகிறார்
எக்தா டைகர் , டைகர் ஜிந்தாபாத் ஆகிய படங்களில் நடித்த சல்மான்கான் இதில் நாயகனுக்கு உதவும் கெஸ்ட் ரோலில் வந்து அப்ளாஸ் அள்ளுகிறார். ஹம் ஆப் கே ஹேங் கோன்ல சாக்லெட் பாய் ஆகப்பார்த்து விட்டு இதில் சத்யா கமல் கெட்ட்ப்பில் தாடி மீசை உடன் பார்க்க என்னவோ போல் இருக்கிறது
விஷால் சேகர் இசையில் 2 பாடல்கள் நன்றாக இருக்கின்றன . பிஜிஎம் மில் இன்னும் கலக்கி இருக்கலாம் . சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமான காட்சிகள் கண் முன் விரிகின்றன , அந்த பனிப்பிர்தேச பைக் ரேசில் பின்னி எடுத்து விட்டார்கள் . ஆரிக்கின் எடிட்டிங்கில் 145 நிமிடங்கள் படம் ஓடுகிறது , ஆக்சன் சீக்வன்ஸ் எல்லாம் அதகளம், காதில் பூக்கூடைக்ள்தான்
சபாஷ் டைரக்டர் ( சித்தார்த் ஆனந்தா)
1 லாக்கரை திறக்க குறிப்பிட்ட நபரின் கை ரேகை தேவை , அதைப்பெற தீபிகா படுகோனே போடும் ஐடியா செம . வழக்கமா வில்லனை ஏமாற்ற கேவலமான ஒரு கிளப் டான்ஸ் பாட்டு இருக்கும், அது இங்கே மிஸ்சிங் , ஆனா அந்த எஃபக்ட் இருந்தது
2 தீபிகா பாத்ரூமில் வெயிட் பண்ணி அந்த ஃபாரீன்லேடி வ்ந்ததும் அவள் கெட்டப்க்கு மாறுவது செம சீன், இந்த சீனில் எடிட்டர் மிக நேர்த்தியாக கட் பண்ணி இருந்தார்
3 இரு எதிர் எதிர் திசைகளில் தலா 10 கிமீ தூரத்தில் இருந்து இருவரும் கிளம்பி வர விமானத்தை நியமிப்பதும் , அந்த காட்சி எக்ஸிகியூசனும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பிரம்மாண்டம்
4 ஆபாவாணனின் இணைந்த கைகள் இண்டர்வெல் பிளாக் சீனை நினைவுபடுத்தினாலும் ஷாரூக் - தீபிகா இருவரும் ரோப்பில் ஒரே புள்ளியில் இணையும் காட்சி அப்ளாஸ் அள்ளும் காட்சி
ரசித்த வசனங்கள் ( அப்பாஸ் டயர்வாலா)
1 மண்பானை உடைஞ்சு போச்சுன்னா விரிசல் விழுந்த பகுதில தங்கத்தால ஜப்பானியர்கள் ஒட்ட வைப்பாங்க . அதன் உறுதியும் அழகும் அதிகம் ஆகிடும், அதன் விலை மதிப்பும் கூடிடும் அது மாதிரி தான் போரில் காயம் பட்ட ராணுவ வீரர்களும்
2 நான் எங்க பாஸ்க்கு அவரோட சிம்மாசனத்தை திருப்பித்தர்றேன்
3 எங்களுக்குனு எந்த ரூல்சும் இல்லை , அதனால ரூல்சை மதிப்பவர்களுக்கு எங்களைப்பிடிக்காம போச்சு
4 பிரசிடெண்ட் கூட ஒரு செல்ஃபி எடுத்திருந்தா என் சம்சாரத்தை இம்ப்ரெஸ் பண்ணி இருக்கலாம்
மேரேஜ் ஆகி 30 வருசம் ஆகியும் இதுக்கு மேலெ உன் சொந்த சம்சரத்தை இம்ப்ரெஸ் பண்ணி என்ன பண்ணப்போறே?
5 சீட்டாட்டத்தில் கைக்கு வரும் கார்டு வெச்சுதான் நாம ஆட முடியும். இந்த ஆட்டத்தைப்பொறுத்தவரை மொத்த ஏஸ் சும் என் கிட்டே தான் இருக்கு
6 பலவீனமானவங்கதான் மண்டி இடுவாங்க , சோல்ஜர்ஸ் இல்லை
7 மிஸ்! போலீஸ்க்கு நீ இங்கே இருப்பது தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்
ஏன்?
ஏன்னா நீ பாம் மாதிரி இருக்கே
8 சதுரங்கத்துல ராணி தனக்காக உயிரை விடப்போறா என ராஜா நினைப்பான், அவன் கான்செண்ட்ரேஷன் எல்லாம் ராணியைக்காப்பாத்தறதுல தான் இருக்கும்
9உன்னை செமயா அடிச்சிருக்காங்க , இந்த பெயின் கில்லர் டேப்லெட்ஸ்
புலிகளுக்கு என்னைக்கும் வலி தெரியாது
10 ஒரு பெண்ணை எப்பவும் காக்க வைக்கவே கூடாது
11 இந்த பாரீஸ் சிட்டில ரெண்டு பேரு ஒண்ணா போனா அது கப்பிள் , மூணு பேரு போனா அத் கிரவுடு
12 யூ லுக்கிங் குட்
ஆல்வேஸ்...
காதல் என்பது ,முதல் பார்வைலதான் வரும்னு உனக்கு யார் சொன்னது ?
13 எது வைரல் ஆகுதோ அதுதான் விலை போகுது
14 பயம் மனுசங்களொட கண்ணை மறைச்சிடும்
15 எங்கே பார்ட்டி நடந்தாலும் கூப்பிடாமயே ஆஜர் ஆகிடறே!
16 நாடு தனக்காக என்ன செஞ்சுது?னு ஒரு சோல்ஜர் கேட்கவே மாட்டான், நாட்டுக்காக நாம என்ன செஞ்சோம்?னு தான் யோசிப்பான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் சரியான பேக்கு அப்டினு நினைக்கறேன். யாருக்குமே தான் யார்னு தெரியக்கூடாதுனு முழு முகக்கவசம் கம் ஹெல்மெட் போட்டிருக்கும் அவன் ஹீரோ கிட்டே ஹெல்மெட் கழட்டி என்னை யார்?னு தெரியுதா? நான் செத்துட்டேனு தானே நினைச்சே? நான் இன்னும் சாகலைங்கறான். அடேய் ரானா ஹெக்சாடாக்டைலா
2 பொதுவா கோட் சூட் போட்டுட்டு பந்தாவா கூலிங் கிளாஸ் போட்டுட்டு பஞ்ச் டயலாக் பேசுவாங்க. இதுல கிறுக்கு வில்லன் ஸ்விம்மிங் பூல்ல இருந்து வெறும் அண்டர் டிராயரோட எழுந்து பந்தாவா கூலிங் கிளாஸ் போடறான். சிரிப்பா வருது .இதை ஷூட் பண்ணும்போது கேவலமா அவங்களுக்கு தோன்றி இருக்காதா?
3 தீபிகா லாக்கரில் கை வைக்கும்போது கிளவுஸ் போடாம திருட்டு வேலை பண்றாரே? கை ரேகை ஆதாரமா சிக்கிடாதா?
4 ஷாரூக் அந்த ரகசியத்தை கைப்பற்றியதும் பேண்ட் பாக்கெட்டிலோ ஜெர்கின் பாக்கெட்டிலோ வைத்து இருக்கலாமே? எதற்கு தீபிகா மேலே இருந்து அதை வீசு என்றதும் இவர் வீச வேண்டும் ?
5 க்ளைமாக்ஸ் ல வில்லன் ஸ்பைடர் மேன் இறக்கை மாதிரி எதையோ ஃபிட் பண்ணி எஸ் ஆகறான், அது அவன் இடம் , அவன் ஆராய்ச்சி பண்ணி ட்ரெயல் பார்த்து ரெடி பண்ணின சாதனம், ஆனா அது பற்றிய எந்த நாலெட்ஜூம் இல்லாத ஹீரோ அதே மாதிரி இன்னொரு உடுப்பை எடுத்து மாட்டிக்கிட்டு அவர் பாட்டுக்குக்கிளம்பிடறாரு, எப்படி ஆபரேட் பண்றதுன்னே தெரியாம என்ன செய்யபோறாரு?
6 வில்லன் கிளம்பும்போது தான் யூஸ் பண்ண மாதிரி ஒரு சாதனம் எக்ஸ்ட்ராவா ஒண்ணு வெச்சுட்டா போவான்,? அதை எரேஸ் பண்ணிட்டோ ,செயல் இழக்க வெச்சுட்டோதானே போவான்?
7 வில்லனோட பிளான் என்ன?னு யாருக்குமே தெரியாது , அவன் பாட்டுக்கு சும்மா இருந்திருந்தா அவன் பிளான் ஒர்க் அவுட் ஆகி இருக்கும், அவன் என்னடான்னா கிறுக்கன் மாதிரி ஹீரோ கிட்டே இடம் சுட்டி பொருள் விளக்கிட்டு இருக்கான். இந்த ரிமோட் இருந்தாதான் அதை தடுக்க முடியும், இதை என் கி ட்டே இருந்து பிடுங்க நினைக்காதேங்கறான், அய்யோ ராமா
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - லிப் லாக் சீன்ஸ் 18+ காட்சிகள் ஏதும் இல்லை , நாயகி தீபிகா மட்டும் அரைகுறையா உலா வருவார்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆக்சன் ரசிகர்கள் , மாமூல் மசாலாப்படப்பிரியர்கள் பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5
Pathaan | |
---|---|
Directed by | Siddharth Anand |
Written by | Abbas Tyrewala (dialogues) |
Screenplay by | Shridhar Raghavan |
Story by | Siddharth Anand |
Produced by | Aditya Chopra |
Starring | |
Cinematography | Satchith Paulose |
Edited by | Aarif Sheikh |
Music by | Score: Sanchit Balhara Ankit Balhara Songs: Vishal–Shekhar |
Production company | |
Distributed by | Yash Raj Films |
Release date |
|
Running time | 146 minutes[a] |
Country | India |
Language | Hindi |
Budget | est. ₹225 crore[3] |
Box office | est. ₹1,048.30 crore[4] (US$130 million) |