1995ல் துணை நடிகராக அறிமுகம் ஆன ஜோஜூ ஜார்ஜ் 2015 வரை சுமார் 21 வருடங்கள் நம்ம ஊர் சத்யராஜ் போல சின்னச்சின்ன ரோல்களில் நடித்து வந்தார் . . 2015ல் வெளியான ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா கேரளா மாநில அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருதைப்பெற்றார் . 2018ல் ரிலீஸ் ஆன ஜோசஃப் படத்தில் ஹீரோவாக அவருக்கு பிரேக் கொடுத்தது , 2021 ல் ரிலீஸ் ஆன சோலா வில் மாநில அரசின் விருது கிடைத்தது . நயாட்டு , பொரிஞ்சு மரியம், ஜோஸ் , ஹலால் லவ் ஸ்டோரி ,ஜகமே தந்திரம் (தமிழ் ) , பட , மதுரம் ஆகிய படங்கள் இவர் பேர் சொல்பவை . இவர் ஒரு பிண்ணனிப்பாடகரும் கூட
பணி என்பதற்கு தமிழ் , மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே அர்த்தம் தான் . வேலை . ரவுடித்தனத்தையே வேலையாகக்கொண்டவனின் க்ரைம் ஆக்சன் கதை இது
ஸ்பாய்லர் அலெர்ட்
சம்பவம் 1 - கதை நடக்கும் இடம் கேர்ளா மாநிலம் , திருச்சூர் . போலீஸ் கமிசனர் ஒரு மீட்டிங்க் போட்டு நகரில் நடக்கும் பல கொலை , அடிதடிகளூக்கு ஒரு கேங்க்ஸ்டர் க்ரூப்பே காரணம், அவர்களைக்கண்காணிக்க வேண்டும் என முடிவு எடுக்கிறார்கள்
சம்பவம் 2 -பல ரவுடிகளுடன் தொடர்பில் உள்ள நாயகன் தான் போலீஸ் கண்காணிக்கும் நபர் . நாயகன் தன் மனைவியுடன் இனிமையான இல்லற வாழ்வு நடத்தி வருகிறார்
சம்பவம் 3 . வில்லன்கள் இருவர் . இவர்கள் வாடகைக்கொலையாளிகள் . இவர்களிடம் பணம் கொடுத்து ஆளைக்காட்டி விட்டால் ஆளைப்போட்டுத்தள்ளி விடுவார்கள் . படத்தின் ஓப்பனிங் ஷாட்டிலேயே பப்ளிக் நடமாடும் இடத்தில் வில்லன்கள் இருவரும் அசால்ட்டாக ஒரு கொலையை செய்து போலீசை அழைத்து கொலையைப்பார்த்த சாட்சிகளே தாங்கள் தான் என்கின்றனர்
சம்பவம் 4 - ஒரு ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் போய் இருந்தபோது வில்லன்கள் இருவரும் நாயகனின் மனைவியை வேண்டும் என்றே உரசி விடுகிரார்கள் . அதைக்கண்ட நாயகன் வில்லன்கள் இருவரையும் புரட்டி எடுக்கிறார். இதனால் வன்மம் கொண்ட வில்லன்கள் வெகுண்டெழுந்து நாயகனின் வீட்டைக்கண்காணித்து நாயகன் இல்லாத தருணம் அவர் மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள்
நாயகன் அந்த வில்லன்களை எப்படிப்பிடிக்கிறார் ? அவர்களை என்ன செய்கிறார் என்பதே மீதி ஆக்சன் அடி பொழி கதை
நாயகன் ஆக ஜோஜூ ஜார்ஜ் அமைதியான புயலாக நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு வசனம் மிகக்குறைவு. ரஜினி பாணீயில் சொல்லனும்னா பேச்சு இல்லை , வீச்சு தான்
நாயகியாக அபிநயா நடித்திருக்கிறார். உணர்ச்சிப்பிழம்பான நடிப்பு
வில்லன்களாக சாகர் சூர்யா , வி.பி ஜூனைஸ் இருவரும் பட்டையைக்கிளப்பி இருக்கிறார்கள் . வில்லன்களை இவ்வளவு வலிமையாக சித்தரிக்கும் படத்தில் நாயகனாக படத்தின் இயக்குனரே நடித்திருப்பது ஆச்சரியம்
விஷ்ணு விஜய் , சாம் சி எஸ் , சந்தோஷ் நாடாயணன் என ஒரு பட்டாளமே இசை அமைத்திருக்கிறது . பிஜிஎம்மில் பல இடங்கள் அப்ளாஸ் பெறுகிறது.மனு ஆன்ட்டனி யின் எடிட்டிங்கில் படம் 143 நிமிடங்கள் ஓடுகிறது . ஒளிப்பதிவு வேணு & ஜிண்ட்டோ ஜார்ஜ் . சிறப்பான கேமரா ஒர்க் . குறிப்பாக சேசிங்க் காட்சிகளில் முத்திரை பதிக்கிறது
கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி இருப்பவர் ஜோஜூ ஜார்ஜ்
சபாஷ் டைரக்டர்
1 தன் மனைவி பிரசவ வலியை அனுபவிக்கக்கூடாது என நாயகன் குழந்தை பெறும் எண்ணத்தையே விட்டு ஒழிப்பது புதுமையாகவும் அன்பை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது . அந்தக்காட்சியை நேரடியாக சொல்லாமல் பூடகமாக உணர்த்திய விதம் குட்
2 பஜாரில் பலர் உலவும் இடத்தில் சாமார்த்தியமாக வில்லன்கள் ஒரு கொலையை நிகழ்த்தும் இடம் அட்டகாசம் . வன்முறையைக்கூட நாசூக்காக நேரடியாகக்கொலையைக்காட்டாமல் பதட்டத்தை ஏற்படுத்துவது எப்படி என்பதை க்ளாஸ் எடுக்கிறது அந்தக்காட்சி
3 ஒரு சீனில் ஒரு அறையில் ஒரு ஆள் தன் நண்பர்களுடன் இருப்பார் . அங்கே வரும் ஒரு இளனிக்காரன் மிகப்பெரிய திருப்பாச்சி அரிவாள் கொண்டு ஒவ்வொரு இளநீராக வெட்டி ஒரே ஆளையே தொடந்து குடிக்கச்சொல்லி கட்டாயபப்டுத்துவான் . அந்தக்காட்சியில் இளநீர் வெட்டும் ஓசை அட்டகாசம். ஒரு சாதா சீனை மாஸ் சீன் ஆக்குவது எப்படி என்பதை காட்டி இருக்கிறார் இயக்குநர்
4 நாயகனின் மனைவியை வில்லன்கள் ரேப் செய்தார்கள் என்பதற்காக நாயகனிடம் வில்லனின் காதலி மாட்டும்போது அவளை எதுவும் செய்யாமல் விடுவது குட்
ரசித்த வசனங்கள்
1 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும்போது இது ஒரு விபத்து என நினைச்சுக்கனும் . வாழ்நாள் முழுக்க இதை மனசில வெச்சுக்கிட்டு இருக்கக்கூடாது
2 போலீசுக்குன்னு சில சட்ட திட்டங்கள் இருக்கு , நீங்க விதிகளை ஃபாலோ பண்ணனும்
விதிகள் என்பது இரு தரப்புக்கும் பொருந்தனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன்களை பலமுள்ளவர்களாக சித்தரித்தது ஓக்கே . ஆனால் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி நாயகனை பலவீனம் ஆக்கி விட்டது . பலமான வில்லன்களை அதை விட பலமாக நாயகன் எதிர் கொண்டால் தான் செமயாக இருக்கும்
2 ஓப்பனிங் சீனில் கொடுக்கும் பில்டப்போடு சரி , போலீசை காணவில்லை .
3 வில்லன்கள் இருவரும் இளைஞர்கள் . எவ்வித பின்புலமும் இல்லாதவர்கள் . ஆனால் பல அடியாட்களுடன் உலா வரும் நாயகனை அசால்ட் ஆக எதிர்ப்பது எப்படி ?
4 ஒரு சீன் அல்லது இரு சீன் என்றால் ஓக்கே ஒவ்வொரு சீனிலும் வில்லன்கள் அசால்ட் ஆக தப்பிப்பது எப்படி ?
5 பாலியல் வன்கொடுமைக்கு நாயகி ஆளாகும் காட்சியை இன்னும் சாஃப்ட் ஆக டீல் செய்திருக்கலாம், வேண்டும் என்றே வன்முறையோடு எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது
6 நாயகன் கேங்க் , வில்லன் கேங்க் இரு செட்டுமே கெட்டவ்ர்கள் என்பதால் யார் செத்தா நமக்கென்ன? என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது . நாயகன் தரப்பில் இழப்பு அதிகம் என்பதும் நாயகனின் மனைவியும், அம்மாவும் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் மட்டுமே பரிதாபத்தை எற்படுத்துகிறது
7 வில்லனின் காதலி நாயகன் கையில் சிக்கியும் அவளைப்பணயமாக வைத்து வில்லனை வரவைக்க எந்த முயற்சியும் நாயகன் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம்
8 ஐ சா த டெவில் - கொரியன் மூவி (2010) , ஒரு தெக்கன் தள்ளு கேஸ் (2022 )மலையாளம் மூவி இரண்டின் பாதிப்பும் திரைக்கதையில் தெரிகிறது
9 ஒரு போல்டான , தைரியமான பெண்ணைக்காட்ட அவள் தம் அடிப்பவளாக சரக்கடிப்பவளாகத்தான் போர்ட்ரே பண்ணனுமா?
10 ப்ரீ க்ளைமாக்ஸ் கேப்டன் பிரபாகரன் க்ளைமாக்ஸ் சீனை நினைவுபடுத்துது . க்ளைமாக்சில் திருப்தி இல்லை .நாயகன் வில்லனைக்கொல்லும்போது வில்லன் மேல் பரிதாபம் வரக்கூடாது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18 +
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரப்ரப்பான க்ரைம் ஆக்சன் த்ரில்லர் தான் முதல் பாதி செம ஸ்பீடு பின் பாதி கொஞ்சம் வேகம் குறைவு . ரேட்டிங் 3 / 5
Pani | |
---|---|
Directed by | Joju George |
Written by | Joju George |
Produced by |
|
Starring |
|
Cinematography |
|
Edited by | Manu Antony |
Music by | |
Production companies |
|
Distributed by |
|
Release date |
|
Running time | 143 minutes |
Country | India |
Language | Malayalam |
Box office | ₹25 crore[1] |