மினிமம் பட்ஜெட்டாக ரூ 10 கோடி செலவில் உருவான இந்தப்படம் பாக்ஸ் ஆஃபீசில் 15 கோடி இதுவரை சம்பாதித்து உள்ளது , ஓடி டி ரைட்ஸ் , டி வி ரைட்ஸ் லாபம் தனிக்கணக்கு . ஆக்சன் படங்கள் அல்லாது இது போன்ற ஃபீல் குட் மூவிகள் வசூலில் அள்ளுவது ஆரோக்யமான ரசனை மேம்படுவதற்கான அறிகுறி
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஆயுர்வேதிக் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கிறார். அவர் கடை வைத்திருக்கும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஓனர் ஒரு முறை தன் அம்மாவை ரயிலில் துணைக்கு மும்பை வர போகச்சொல்கிறார். அதற்குப்பரிசாக ஒரு ஐ ஃபோன் பரிசு என்கிறார்.சும்மா ஜாலியா ஒரு ட்ரிப் போய்ட்டு வந்தால் ரூ 60,000 மதிப்புள்ள ஃபோன் ஃப்ரீ என்றால் கசக்கிறதா? நாயகன் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்
பயணத்தில் கடை இருக்கும் ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் ஓனரின் அம்மா நாயகனுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார் . அவருக்குத்தெரிந்த ஒரு ஏழைப்பெண் ஒரு இடத்தில் பணீப்பெண்ணாக இருக்கிறார்.வறுமையின் காரணமாக பணிக்குச்செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர் முழு மனம் சம்மதம் இல்லாமல் ஏனோதானோ என பணி செய்கிறார். அவருக்குப்படிக்க ஆசை , அவரை அந்த கும்பலில் இருந்து மீட்டுக்கொண்டு வர வேண்டும், இந்த உதவியை செய்தால் நாயகன் வாடகைக்கு இருக்கும் கடை அவருக்கே சொந்தம் ஆகி விடும் .
நாயகனுக்கு அற்புத விளக்கு பூதம் தந்த வரம் மாதிரி கிடைத்த இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை எப்படி பயன்படுத்தினார்? கூடவே அவரது காதல் என்ன ஆனது ? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் ? குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு ஆகிய இரு நல்ல விஷயங்களைப்படம் பேசுகிறது . இது டாக்குமெண்ட்ரி ஃபீல் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக நாயகனின் காதல் சைடு டிராக்கில் ஓடுகிறது
நாயகன் ஆக ஃபகத் ஃபாசில் . கமல் ஹாசனே மனம் திறந்து பாராட்டிய நடிகர் இவர் . என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு ? படம் முழுக்க டைமிங் காமெடி டயலாக்குகள் வேறு . மனிதர் பிரித்து மேய்ந்து விட்டார்
நாயகி ஆக அஞ்சனா ஜெயப்பிரகாஷ். பாந்தமான களையான முகம் . நடிப்பில் கச்சிதம் , கண்ணியமான உடை அலங்காரத்தில் அழகு பொம்மை ஆக வருகிறார். நாயகன் உடனான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
நாயகனின் அப்பாவாக முகேஷ் . இவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகல தான் . நாயகனின் கடை காம்ப்ளெக்ஸ் ஓனராக வினீத் . அவரது அம்மாவாக விஜி வெங்கடெஷ் பக்குவப்பட்ட நடிப்பு
அகில் பாத்யனின் எடிட்ட்ங்கில் 171 நிமிடங்கள் படம் ஓடுகிறது . இன்னும் ஷார்ப் ஆக கட் செய்து இருக்கலாம். பாத்திரங்கள் அறிமுகம் , அவரவர் கேரக்டர் விவரிப்பு போன்றவற்றுக்கே 45 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்கள் .
ஒளிப்பதிவு , இசை தரம் அகில் சத்யன் தான் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். காமெடி மெலோ டிராமாவாக முதல் பாதி போனாலும் கடைசி ஒரு மணி நேரம் நாயகன் நாயகியின் ரொமாண்டிக் போர்ஷன் அட்டகாசம்
கிரேசி மோகன் பாணீயில் எழுதப்பட்ட டைமிங் ஜோக் காமெடிகள் அற்புதம்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனின் அப்பா வைத்திருக்கும் கார் ஒரு கேரக்டராகவே வருவது படிக்காதவன் படத்தில் லட்சுமி ஸ்டார்ட் ஆகிடு என்பதை நினைவு படுத்தினாலும் அந்த கார் அடிக்கடி அசமஞ்சமான நேரத்தில் ஹார்ன் அடிக்கும் காட்சிகள் எல்லாமே காமெடி களேபரம்
2 முதல் பாதி முழுக்க வானம் , பையா , திருடா திருடா திருடா போல ட்ராவல் ஸ்டோரி அல்லது ரோடு சைடு ஸ்டோரி என்றாலும் போர் அடிக்காமல் சுவராஸ்யமாக நகர்த்திய விதம்
3 கடைசி ஒரு மணி நேரம் ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி பார்ப்பது போல மனசுக்கு நெருக்கமான மென்மையான காதல் காட்சிகள்
ரசித்த வசனங்கள்
1 நமக்கு அவனைப்பிடிச்சிருக்குனு அவனுக்குத்தெரிஞ்சுட்டா நம்ம தலைமேல ஏறி உக்காந்துக்குவான்
2 உனக்கு அமைஞ்ச நல்ல பொண்ணுங்களை இல்லாம் அடுத்து இதை விட நல்ல பொண்ணாக்கிடைக்கும்னு தட்டிக்கழிச்சே! இப்போ அதுக்கும் வழி இல்லாம இருக்கு
3 கண்ணியமான , ஜெனியுனான பெண்கள் ஒரு ஆணைக்கழட்டி விடறாங்கன்னா நிச்சயம் ஏதாவது கச்சிதமான காரணம் இருக்கும்
4 ஃபிரண்டா இருந்தாலும் , தோழியா இருந்தாலும் , வாழ்க்கைத்துணையா இருந்தாலும் அவங்களுக்கான இடத்தை நாம குடுக்கனும், அப்போத்தான் வாழ்க்கை ஸ்மூத்த்தா இருக்கும்
5 எங்களை ஞாபகம் இருக்கா?
யா யா \\ யார்னு சொல்லுங்க பார்க்கலாம்\
அது வந்து .. ஞாபகம் இல்லை \\
என் பொண்ணை பெண் பார்க்க வந்தீங்க \\
ஆங்.. அப்றம் ஏன் மேரேஜ் நடக்கலை ? ஜாதகம் பொருந்தலையா?
இல்லை , என் பொண்ணுக்கு உங்களைப்பிடிக்கலை
6 உலகத்தில் நான் எங்கே இருந்தாலும் சண்டேன்னா அது தூங்கற துக்கு மட்டும்தான்
7 வாட்சப்பால ஏகப்பட்ட நன்மைகள்
ஆனா அதுல வர்றது பாதிக்கும் மேல பொய்கள் தான்
சும்மா இரு வாட்சப்க்கு என்னைஏமாற்றி என்ன கிடைக்கப்போகுது ?
8 கனவு காண ஆகாயம்தான் பெஸ்ட், ஃபிளைட் ட்ராவல்
9 அந்த டாக்டர் முள் எடுக்கறதுல எக்ஸ்பர்ட், நீங்க 2 மணிக்கு முன்னே வந்திருந்தா ஈசியா அந்த மீன் முள்ளை தொண்டைல இருந்து எடுத்திருக்கலாம்\\
விளையாடாதீங்க , முள் மாட்டுனதே ரெண்டு மணிக்கு அப்றம் தான்.
10 எங்க ஓனர் வர வேண்டிய ஃபிளைட்டை மிஸ் பண்ணிட்டார் , அடுத்து மிஸ் ஆகாத ஃபிளைட்ல சீக்கிரம் வந்துடுவார்
11 ஸ்பெஷல் ட்ரெய்ன் எப்பவும் லேட்டாதான் வரும்
12 சில ஆட்கள் வளர வளர அவங்க மனசு சுருங்கிடும்
13 குழந்தையா இருக்கும்போது , சின்னப்பையனா இருக்கும்போது எப்படி இருந்ததோ அந்த மாதிரி அப்பாவி மனசு இப்போ யாருக்கும் இருக்கறதில்லை
14 நாளை போலீஸ் ஸ்டேஷன் எப்போ ஓப்பன் பண்ணுவாங்க ? \
\
போலீஸ் ஸ்டேஷன் எப்பவும் ஓப்பன்ல தானே இருக்கும் |?
15 நமக்கு ரொம்பப்பிடிச்ச ஒரு ஆள் இனிமே இல்லைனு ஆகும்போது நம்மை அப்படியே முடக்கிப்போடற மாதிரி ஒரு சோகம் வரும்
16 நம்ம சோகம் எப்போதும் நமக்குள்ளேதான் இருக்கும் , நம்மை விட்டுப்போகாது நாம விட்டாதானே அது போகும் ? நாம தான் எப்பவும் அதை நினைச்சுட்டே இருக்கறமே?
17 எப்பவும் பணம் சம்பாதிச்சுட்டே இருக்கனும்கறது ஒரு வியாதி
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 த கிரேட் இண்டியன் கிச்சன் க்ளைமாக்சில் நாயகி பொங்கி எழுந்தபோது கேட்ட அதே கேள்வி இந்தப்பட க்ளைமாக்சிலும் கேட்கத்தோணுது . அந்த பணீப்பெண் ஏன் அத்தனை நாட்கள் பம்மி இருந்து விட்டு க்ளைமாக்சில் மட்டும் பொங்குகிறார் ?
2 நாயகிக்குத்தெரியாமல் தன் ஃபோனை மறைத்து வைக்கும் நாயகன் அதை சைலண்ட் மோடில் வைக்க மாட்டாரா? யாராவது கால் செய்தால் ரிங்க் டோன் காட்டிக்கொடுக்கும் என தெரியாதா?
3 எல்லாக்காதல் கதைகளிலும் நாயகிக்கு அமையும் பணக்கார மாப்பிள்ளைகள் மஞ்ச மாக்கான்களாகவே அமைவது எப்படி ?
4 மெயின் கதைக்கும் சபரி மலை சாமி சிறுவன் கேரக்டருக்கும் சம்பந்தம் இல்லை , அந்த போர்சனைத்தூக்கி இருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஃபகத் ஃபாசில் ரசிகர்கள் , டைமிங் ஜோக் விரும்பிகள் , ரொமாண்டிக் ஸ்டோரி ரசிகைகள் அவசியம் காண வேண்டிய ஃபீல் குட் காமெடி மெலோ டிராமா இது . ரேட்டிங் 3 / 5
Pachuvum Athbutha Vilakkum | |
---|---|
Directed by | Akhil Sathyan |
Written by | Akhil Sathyan |
Produced by | Sethu Mannarkkad |
Starring |
|
Cinematography | Sharan Velayudhan |
Edited by | Akhil Sathyan |
Music by | Justin Prabhakaran |
Production company | Full Moon Cinema |
Release date |
|
Running time | 171 minutes |
Country | India |
Language | Malayalam |
Budget | ₹ 10 Crore |
Box office | ₹ 15.00 Crore |