சீனாவில் 1709 இல் பிரமாதமான கோட்டை ஒண்ணை எழுப்பி இருக்காங்க. அதுல 12 ராசிகளையும் குறிக்கும் அற்புதமான சிலைகள் செஞ்சு வெச்சிருக்காங்க . 1860 இல் பிரிட்டிஷ் - சீனா போர் வருது . 150 வருடங்கள் பாரம்பரியம் மிக்க அந்த சிலைகள் மற்றும் செலவ்ங்களை பிரிட்டிஷ் ஆட்டையைப்போட்டுடுது. அடுத்தவன் சம்பாதனையை அனுபவிக்கறதுதான் அவங்க குல வழக்கம் போல
2000 ஆம் வருஷத்துல அந்த சிலைகள் ஏலத்துக்கு வருது . லண்டன் ல நடக்கும் இந்த நிகழ்ச்சி உலகம் பூரா கவனம் கவருது.
ஹீரோவுக்கு கொடுக்கப்படும் பிராஜக்ட் என்னான்னா அந்த 12 சிலைகளையும் கடத்தி ஒப்படைக்கனும். ஒரு சிலைக்கு ஒரு மில்லியன் யூரோ டாலர் ரேட்.
வில்லன் புராதன சின்னங்களை , பழங்காலப்பொருட்களை ஒரிஜினல் மாதிரியே தயார் பண்ணி விற்பவன் . இருவருக்கும் ஏற்படும் போராடம் தான் திரைக்கதை .
ஹீரோவோ உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான். இந்த வயசுலயும் இவ்ளவ் சுறு சுறுப்பான ஒரு ஹீரோவை நாம் பார்க்க முடியாது . ஓப்பனிங்க் ல நடமாடும் ஸ்கேட்டிங்க் மிஷினா அவர் பண்ற சாகசம் செம . அதுக்கான ஐடியாவும் சண்டைப்பயிற்சியும் அட்டகாசம் .ஜாக்கிசான் படங்களின் ஸ்பெஷாலிட்டியே ஃபைட் நடக்கும் சூழல் , கண்ணில் படும் பொருட்களை அந்த நிமிஷத்துல யூஸ் பண்ணும் அதி புத்திசாலித்தன்ம் , வேகம் , மின்னல் வேக சுறு சுறுப்பு தான்.

நீண்ட இடைவெளிக்குப்பின் பழைய ஜாக்கிசானைப்பார்க்கமுடியுது . மிராக்கிள்ஸ் , ஆர்மர் ஆஃப் காட் படத்துக்குப்பின் இதுல கடுமையா உழைச்சிருக்கார். வெல்டன் .இதுதான் அவரோட கடைசி ஆக்ஷன் படம்னு விளம்பரம் செஞ்சது சும்மா பிஸ்னெஸ் ட்ரிக்னு தோணுது. இன்னும் பண்ண வாய்ப்பு இருக்கு
ஹீரோயின் பிரமாதமான ஃபிகர்னு அள்ளிக்கவும் முடியாது , மொக்கை ஃபிகர்னு தள்ளிடவும் முடியாது , மீடியம் ஃபிகர் தான். ஆனா அவர் கூந்தல் கலக்கலா இருக்கு நமக்கு கருங்கூந்தல் , செம்பட்டை டை அடிச்ச கூந்தல் , இளநரையை மறைக்க மருதாணி , கேசவர்த்தணி ஆயில் தடவுனதால பிரவுனிஷ் கூந்தல் , கேரளா இயற்கை கூந்தல் இப்படிப்பார்த்தே பழக்கம் ஆன கண்களுக்கு கோல்டு கலர்ல தங்க கூந்தல் பார்க்க செமயா இருக்கு . மத்தபடி தமிழனைக்கவரும் அம்சம் எதுவும் இல்லை. ஹீரோயினுக்கு கண் , மூக்கு, உதடு எல்லாமே சின்னது , ஹி ஹி
படத்துல் மெயின் வில்லன்னு யாரும் இல்லை. அதனால க்ளைமாக்ஸ் ஃபைட் கசமுசா இல்லை. ஆனா க்ரூப் ஃபைட் தானே ஜாக்கி ஸ்பெஷல் அது 5 இடங்கள்ல வருது . சண்டைப்பயிற்சியும் அவராத்தான் இருக்கும்

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1. ஓப்பனிங்க் சேசிங்க் சீன்ல ஜாக்கி ஒரு பெரிய் டிரக் பின்னால தொத்திட்டு போறாரு . அதை மோத வரும் வேன் . கடைசி மினிட் ல அவர் ஜம்ப் பண்ண வேன் மோதும் காட்சி தத்ரூபமா படமாக்கப்பட்டிருக்கு. வெல்டன் ஆக்ஷன் ( க்ளைமாக்ஸ் ஆக்ஷ்ன ரீப்ளே ல அந்த சீன் எடுக்கும்போது என்ன ஆச்சு அப்டினு காட்டி இருக்கலாம்,. பல சீன்கள் காட்டறாங்க , அந்த சீன் மிஸ்ஸிங்க் )
2. காட்டுல 5 அடி நீளமுள்ள பள்ளத்தாக்கு , ஜாக்கி 2 காலையும் ஃபு;ல்லா விரிச்சு ஒரு மனித பாலமா மாறி நிக்கறார் . 3 ஹீரோயின்ஸும் அவரால் ரீப்ளேஸ் பண்ணப்படும் காட்சி ஆக்ஷனுக்கு ஆக்ஷன் கிளுகிளுப்ப்புக்கு கிளு கிளுப்பு
3. கவர் செய்யப்பட்ட பாம் ல தேனிக்கள் மாதிரி பூச்சிகளை அடைச்சு வில்லன்க கூட்டத்துல விசிறி அடிக்கும் காட்சி
4. தூங்காதே தம்பி தூங்காதே படத்துல நுணுக்கமான ஒரு பெஞ்ச் ஃபைட்டை கமல் ரொம்ப சிரமப்பட்டு பண்ணி இருப்பார் . அந்த மாதிரி ஒரு சோபா ஃபைட் வருது . சூப்பர் . கண்டிஷன் என்னன்னா இருவரும் சோபாவை தொட்டுட்டெ இருக்கனும் . டச் விட்டுட்டா ஆள் அவுட் , ஹீரோவும் , வில்லனும் மோதும் ஃபைட் செம
5. ஸ்பானிஷ் கனெக்ஷன் ல பண்ற மாதிரி இதிலும் ஒரு குடை ஃபைட் உண்டு . என்னா லாவகம் .
6. ஹனி ஐ ஸ்ரங்க் த கிட்ஸ் படத்துல வர்ற மாதிரி அழகான ஒரு கானகம் , அதில 50 நிமிடங்கள் ஓடும் படம் . ஒளிப்பதிவு , ஆர்ட் டைரக்ஷன் அற்புதம் . அந்த ராட்சச மரம் , தங்கக்கட்டிகள் ஐடியா எல்லாம் ஓக்கே
7. படத்தோட ஓப்பனிங்க ல பில்டிங்க்ல வவ்வால் மாதிரி , மங்கி மாதிரி ஹீரோ தாவும் காட்சிகள் , புதிர் பூங்கா காட்சிகள் குழந்தைகளை கவரும்
இயக்குநர் ஜாக்கிசானிடம் சில கேள்விகள் ( எப்படியும் அவருக்கு தமிழ் தெரியாது )
1. ஹீரோ ஒவ்வொரு ஏரியாவிலும் காமராவை கழுத்துல மாட்டிக்கிட்டு போறார். எல்லா மியூசியத்திலும் ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்கின்றனர். அவங்க ஏமாந்த சமயம் பார்த்து க்ளிக்கறார். கேமராவே நாட் அலோடுன்னு வாசலில் ஏன் வாங்கி வைக்கலை? தமிழ் நாட்ல எல்லாம் அப்படித்தான் . டோக்கன் சிஸ்டமே போட்டு கேமராவை வாங்கி வெச்சுக்குவாங்க. அதுக்கு பதிலா ரகசிய கேமரா ஜேம்ஸ் பாண்ட் படத்துல வர்ற மாதிரி சின்னதா கொண்டு வந்து கனகச்சிதமா காரியத்தை முடிப்பது போல் காடி இருக்கலாம். இப்படி பட்டவர்த்தன்மாய் கேமராவோடு ஏன் அலையனும்?
2. ஒரு 6 அடி நீளமும் , 4 அடி அகலமும் உள்ள மரத்துல உள்ளுக்குள்ளே 8000 கிலோ தங்கக்கட்டிகள் இருக்கும்னு நம்ப முடியலை
3. அந்த மரத்தை கப்பல்ல கட்டி இழுத்துட்டுப்போறாங்க . மரம் கடல் தண்ணில . உப்புத்தண்ணில நீண்ட பயணத்தில் மரம் உளுத்துடும்கற பேசிக் நாலெட்ஜ் கூடவா கப்பல்ல இருக்கும் 24 பேருக்கும் தெரியலை ? மரத்தை கோடாலில வெட்டி முதல்ல தங்கக்கட்டிகளை எடுத்து கப்பல்ல வெச்சுட்டு பயணத்தை தொடராம இப்படி லூஸ் மாதிரி யாராவது கோல்டு ஆப்புர்ச்சுனிட்டியை மிஸ் பண்ணுவாங்களா? ( கடல்ல கொட்டிடுது)
4. ஒரு சீன்ல ஃபைட் காட்சில ஒரு பெரிய பீரோ ஜாக்கி காலட்டியில் விழுது . லாங்க் ஷாட்ல காட்டும்போது தெளிவா அவர் பாதம் அருகே விழுவது தெரியுது . அடுத்து க்ளோசப்ல காட்டும்போது அவர் பாதம் அந்த பீரோவுக்குள் மாட்டிக்குவது காட்டறாங்க
மனம் கவர்ந்த வசனங்கள்
1. அவங்க தேச பக்தியை வெச்சு நாம லாபம் பார்த்துக்கலாம்னு சொல்றியா?
2. இங்கே யாரும் காரை பார்க் பண்னக்கூடாது
சாரி நான் அர்ஜெண்ட்டா பாத்ரூம் போகனும்
3. மீதி சிலைங்க எங்கே ?யார் கிட்டே இருக்கும்?
இது என்ன கேள்வி? எடுத்துட்டுப்போனவங்க கிட்டேதான் இருக்கும்
4. இதுதான் நீங்க பிரா வாங்கிட்டு வர்ற லட்சணமா?’
சைஸை ஒரு குத்து மதிப்பாத்தான் சொன்னேன் , அவன் ஓவர் சைஸ்ல குடுத்துட்டான் போல ஸாரிடி
ம்க்கும்
5. இவை எல்லாமே அவங்க நம்ம கிட்டே இருந்து சுட்டது . இப்போ நாம சுடறோம்
பொழுது விடிஞ்சதும் இதே டயலாக்கை அவன் சொல்லப்போறான் , சாரி புலம்பப்போறான்
6. என்னடா பார்க் இது? ஒண்ணும் புரியலை , ஏ பி சி டியை தலைகீழாப்போட்டது மாதிரி இருக்கு, எப்படி எஸ் ஆக? சின்ன வயசுல படிச்சி இருந்தாலாவது புரியும்
7. அய்யய்யோ, இத்தனை நாய்ங்களா? விடாது கறுப்பு , கால பைரவா?
8. ஆமா, நாய் குறுக்கே போனா நல்ல சகுன்மா?
9. மிஸ், வீடு உங்களை மாதிரியே அழகா இருக்கு
உள்ளே வந்து பாருங்க , இன்னும் பிரமாதமா இருக்கும் ( எது ? வீடா? )
10. அவங்க புத்திசாலித்தனமா கொள்ளை அடிச்சுட்டுப்போய்ட்டாங்க பாஸ்
அப்போ என்னை முட்டாள்ங்கறியா?
11. சைனா விவசாயம் மடும் தான் பார்த்துட்டு இருக்குன்னு அவங்க நினைச்சா அது அவங்க முட்டாள் தனம்
12. நீங்க அவ கிட்டே சமாளிச்சது எனக்கு ரொம்பப்பிடிச்சிருக்கு
இப்போ நீங்க என் தோள் மேல கை போட்டது கூட எனக்கு பிடிச்சிருக்கு
13. நியாயமே இல்லாத காரணங்களுக்காக அநியாயமா போரில் பல உயிர்ச்சேதங்கள் நடக்குது
14. நீ சொன்னது ரொம்ப சரி , இப்பவாவது சிரி
15. சரி, கூடாரத்துல போய் டிரஸ் மாத்திட்டு வா. மாத்தும்போது லைட்டை ஆஃப் பண்ணிடு , இல்லைன்னா எவனாவது இப்படி வேடிக்கை பார்ப்பான்
ஓஹோ , அப்டி வேடிக்கை பார்த்த அனுபவம் இருக்கா?
ச்சே ச்சே கண்டவனும் பார்த்துடக்கூடாதுன்னு சொன்னேன்
16. ஆஆஆஆஆஅ
நாம லேண்ட் ஆகி 20 நிமிஷம் ஆகுது , இன்னும் ஏன் கத்திட்டு இருக்கே?
17. அய்யய்யோ , என் கொள்ளுதாத்தாவோட எலும்புக்கூட்டுக்கை?
அதுக்குத்தானே கொண்டு வந்திருக்கேன் ஒரு பை
18. நாம மட்டுமே புத்திசாலிங்கன்னு நினைச்சுடக்கூடாது , எதிரிகளிம் புத்திசாலிங்கதான்
19. இப்போ என்ன பண்ணலாம் ?
ஓடிடலாம்
20. நீ மெல்லிசா இருந்தாலும் படு வெயிட்டா இருக்கே
21. எதா இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம்
வில்லன் - ம்ஹூம் முதல்ல தீர்த்துட்டு அப்புறமா பேசிக்கலாம் ( தீர்த்துட்டா அப்புறம் யாரோட பேசுவே? )
22. நான் வயசானவன், என்னை விட்டுடுங்க.. உன்னைப்பார்த்தா என் 2 வது பொண்டாட்டி மாதிரியே இருக்கு
23. பொக்கிஷங்கள் ம் அபூர்வ கலெக்சன்கள்னு சொல்வதில் , 10க்கு 9 டூப்ளிகேட் தான்
பாவம் பணக்காரங்க
24. குரங்குல இருந்து பிறந்தவன் மனுஷன்னு சொல்றாங்க, ஆனா நீ ஏன் இன்னும் குரங்காவே இருக்கே?
ரேட்டிங்க் - 7 / 10
சி.பி கமெண்ட் - ஜாக்கிசான் ரசிகர்கள் , ஆக்ஷன் கம் காமெடி விரும்பிகள் குழந்தைகள் , பெண்கள் எல்லாரும் பார்க்க்கலாம் , ஜாலியான என்ண்டர்டெயின்மெண்ட் .