கமல் ஸ்ரீ தேவி ஜோடியா நடிச்ச கடைசிப்படம் இதுதான் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் திரைக்கதையும் அவரே . இந்தப்படம் ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணால ரிலீஸ் ஆகி 40 நாட்கள் ஓடுச்சு . ஒரு தெலுங்கு டப்பிங் படம் இந்த ஓட்டம் ஓடுதேனு பலருக்கு ஆச்சர்யம், பாடல்கள் எல்லாம் செம ஹிட்டு . கமல் ஸ்ரீ தேவி காம்போ செமயா இருக்கும் . படம் முழுக்க கமல் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் பட்டாசா இருக்கும். ஆள் மாறாட்டக்காமெடியில் தன்னை இன்னார் என நிரூபிக்க கமல் அடிக்கடி பேண்ட்டை கழட்டி மச்சம் காட்டும் காமெடி செம ஃபேமஸ் , குமுதம் விமர்சனத்தில் இந்தப்படத்துக்கு மச்சம் காட்டி மனுசன்னு டைட்டில் வெச்சிருக்கலா,ம் என நக்கலாக எழுதியது
ஒரு கிசு கிசு . கமல் ஸ்ரீதேவிக்கு நிஜ வாழ்வில் மேரேஜ்க்கு பிரப்போஸ் செய்ததாகவும் அதற்கு அவர் நாசூக்காக மறுத்ததாகவும் சொல்வாங்க . கடைசியா ஜோடி சேரும் படம் என்பது தெரிந்தோ தெரியாமயோ இதுல தாலி கட்டும் காட்சி மணவறைக்காட்சி எல்லாம் செண்ட்டிமெண்ட்டா இடம் பெற்றிருக்கும்
செம ஹிட்டு பாட்டு லிஸ்ட்டு
1 தை தை தகதிமி தை தை தகதிமி தக்குமிக்கு தாளம் வை வை வை முன் பின் தளும்புது வேர்வை அரும்புது சின்னப்பொண்ணு முகம் வை வை வை ( ஓபனிங் ஹீரோயின் கலாட்டா சாங் )
2 பருவமுருக இதயம் தவிக்க இனிய குரலில் யமுனை மிதக்க ( லவ் டூயட் சாங்)
3 சாமக்கோழிதான் மச்சான் டி கண்ணு முழிப்பதில் கில்லாடி ( மேரேஜ் ஆன பின் கிளுகிளு சாங் )
4 யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ சிறு இடை உன் துடி இடை ( அனுராதா கூட கிளப் டான்ஸ்)
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் காலேஜ்ல ஒண்ணா படிக்கறாங்க காலேஜ்ல எலக்சன் வருது . ரெண்டு பேரும் போட்டி போடறாங்க . இந்த இடத்துலதான் ஒரு கூடை பூ நம்ம காதுல ஹீரோயினுக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைச்சிருக்காது ஹீரோ அழகுல மயங்கி எல்லா கேர்ள்ஸூம் அவருக்கே ஓட்டு போட்டிருப்பாங்க
நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்கறேன் பொண்ணுங்களே அப்படி ஜொள் விட்டுட்டு ஆம்பளைக்கு ஓட்டுப்போடறப்ப ஆம்பளைங்க என்ன தக்காளி தொக்கா? ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைக்கு எதுக்கு ஓட்டுப்போடனும் ? இப்போ நம்ம் ஃபேஸ்புக்லயே ட்விட்டர்லயே ஆண் பதிவுக்கு லைக்ஸ் வருதா? பொண்ணுங்க பதிவுக்குதானே கூட்டமே அள்ளுது ?அப்போ ஹீரோயினுக்குதானே பசங்க ஓட்டுப்போட்டிருக்கனும்?
எலக்சன்ல ஜெயிச்சதைக்கொண்டாட ஹீரோயினைக்கலாய்க்க டூ இன் ஒன்னா ஒரு சாங். அது முடிஞ்ச்தும் காலேஜ் பிரின்சிபால் கூப்ட்டு ஜெயில் கைதிகளுக்கு ஒரு கல்ச்சுரல் புரோக்ராம் அதுல நம்ம காலேஜ் தான் கலந்துக்குதுங்கறார்
அந்த விழாவில் ஹீரோவை அவமானப்படுத்த ஹீரோயின் பரத நாட்டியம் டப்பாங்குத்து டிஸ்கோ என மாறி மாறி சாங் போட்டு விட நம்மாளு அவரது திறமையை எல்லாம் காட்டி எல்லா டான்சையும் ஆடறாரு.
நாளை நமதே ப்டத்தில் குடும்பப்ப்பாட்டு வெச்சு வாரிசைக்கண்டுபிடிக்கும் காமெடி வர்ற மாதிரி ஜெயில் கைதியா இருக்கும் ஒரு லேடி ஹீரோ போடும் டான்ஸ் ஸ்டெப் வெச்சு இதுதான் தன் மகன்னு கண்டுபிடிக்கறார் அய்யோ ராமா
அதே மாதிரி ஹீரோயினும் தன் சின்ன வயசில் விளையாட்டுக்காக தனக்குதாலி கட்டிய ஆள் ஹீரோதான்னு கண்டு பிடிக்கறார். ரெண்டு பேரும் லவ் பண்றா ங்க மேரேஜ் பண்ணிக்கறாங்க
இப்போதான் ஒரு குழப்பம் வருது ஹீரோ ட்வின்ஸ் எல்லாம் கிடையாது ஆனா அவரது உருவத்தோற்றத்தில் இன்னொரு ஆள் அப்பப்ப வந்துட்டுப்போறாரு அந்தக்காலத்தில் எல்லாம் இந்த ஆள் மாறாட்டக்காமெடி செம ஹிட்டு ஆகும்
அவர்யார் ? அதனால ஸ்ரீ தேவி கற்புக்கு எதுனா பங்கம் வந்ததா? ( அப்டியே பங்கம் வந்தாலு,ம் எதுக்கு பதட்ட,ம் ரசிகர்களுக்கு ?> இரண்டும் கமல் தானே? இதை எல்லாம் யூ ட்யூப்பில் காண்க . தெலுங்கு வெர்சன் தான் யூ ட்யூப்ல இருக்கு நான் பார்த்தது தமிழ் வெர்சன் தியேட்டர்ல். இப்போ விமர்சனத்துக்காக தெலுங்குல ஒரு வாட்டி பாத்தேன்
சபாஷ் டைரக்டர்
1 படம் முழுக்க ஜாலியவே நகரும் ஒரு சீன் கூட போர் அடிக்காது . இந்த வரிசையில் தென்றலே என்னைத்தொடு ,பருவராகம் , போன்ற படங்களை சொல்லலாம்
2 கமல் ஸ்ரீதேவி இருவரும் போட்டி போட்டு நடிச்சிருப்பாங்க டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அள்ளும்
தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிய இடங்கள்
1 கமல் தன் மச்சத்தைக்காட்டி தன்னை நிரூபிக்கும் காட்சியில் வீட்டில் வேலைக்காரி கிட்டேயும் மச்சத்தைக்காட்ட அவர் பேண்ட் ஜிப்ல கை வைக்க வெட்கத்துடன் வேலைக்காரி ஓடும் சீன் அல்லோலகல்லோலப்பட்ட அடியன்ஸ் சிரித்து மாளாத சீன் ( படிக்கும்போது லைட்டா விரசம் போல் தோணும் இந்த சீன் விஷூவலாக செமயா இருக்கும் .ஃபேம்லியோட பார்க்கும்படிதான் இருக்கும் )
2 ஹீரோயினோட அப்பா ஹீரோயினுக்கு ஃபோன் பண்ணி ஹீரோ என் கூட தான் இருக்காரு மச்சத்தை செக் பண்ணிட்டேன் என சொல்ல அங்கே ஸ்ரீதேவி இங்கேயும் தான் என் கூட இருக்காரு நானும் மச்சம் செக் ப்ண்ணிட்டேன் ச்சீ சும்மா இருங்க அப்பா கிட்டே ஃபோன்ல பேசிட்டு இருக்கேன் என சொல்லிட்டு இருக்கும்போது இங்கே அவர் பதட்டப்படும்போது தியேட்டர் ஆர்ப்பரிக்கும்
லாஜிக் ,மிஸ்டேக்ஸ்
1 ஹீரோயினோட அம்மா ஒரு ஏழை . ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி கை ரிக்சா;ல வந்துட்டு இருக்காங்க அவங்களை கடத்த 65 அடியாளுங்க வர்றானுங்க . அவ்ங்க கிட்டே ஒரு ஆள் ஏம்மா நாங்க சொல்ற இடத்துக்கு வாங்கம்மான்னா அவங்களே வந்துடற மாதிரி பாவமா இருக்காங்க. எதுக்கு இவ்ளோ பில்டப் ?
2 ஹீரோ வீட்டுக்குள்லே நைட் டைம்ல சொந்த அம்மா கிட்டே பேசும்போது எதுக்கு கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு ஸ்டைலா இருக்காரு ? பைக்ல போகும்போது கண்ல தூசு படாம இருக்க வெயில்ல இருந்து தப்பிக்கத்தான் கூலிங் கிளாஸ் கண்டுபிடிக்கப்பட்டது ?
3 காலேஜ்ல 3 வருசம் ஒண்ணாப்படிச்ச ஹீரோ பர்தா போட்டுக்கிட்டு பெண் வேஷத்துல ஹீரோயின் கிட்டே வர்றாரு அது கூடவா அந்த பேக்குக்கு தெரியாது ? கண் மூக்கு கன்னம் எல்லாம் நினைவிருக்காதா?
4 ஆள் மாறாட்டத்தை தவிர்க்க மச்சம் விஷயம் அபாரமான கண்டுபிடிப்பு 65 வருச திரை உலக் வாழ்வில் யாரும் இது ,மாதிரி யோசிக்கலை . அதுவும் ஒரு ஆண் தொடையில் மச்சம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கமல் , ஸ்ரீதேவி , இளையராஜா ரசிகர்கள் மட்டுமல்ல்ல அனைவரும் பார்க்க வேண்டிய கலகலப்பான காமெடிப்படம் . ஒரு சீன் கூட போர் அடிக்காது . டோண்ட் மிஸ் இட் ரேட்டிங் 2.75 / 5 யூ ட்யூப்ல தெலுங்கு வர்சன் ல கிடைக்குது . ஆனா ஈசியா புரியும் வசனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காம விஷுவலா சொன்ன படம் அனைவருக்கும் புரியும்