Showing posts with label ONCE UPON A TIME IN MUMBAI DOBARA - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ONCE UPON A TIME IN MUMBAI DOBARA - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, August 24, 2013

ONCE UPON A TIME IN MUMBAI DOBARA - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை மட்டுமின்றி பாலிவுட் இயக்குனர்களையும் பெரிதும் கவர்ந்தது. இயக்குனர் அனுராக் கஷ்யப், நான் வந்த பாதையை வைத்து ஓர் படம் இயக்க சுப்ரமணியபுரம் முக்கிய கர்த்தாவாய் அமைந்ததென உரைத்தார். இந்த சுப்ரமணியபுரம் படம் பார்த்து பெரிதும் பாதிப்படைந்த இயக்குனர் மிலன் லூத்தேரியா. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’, ‘டர்டி பிக்சர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தயாரிப்பாளர் ஏக்தா கபூருடன் இயக்குனர் மிலன் லுத்தேரியா இணைந்துள்ள படம் இது.

மும்பை அண்டர்வேர்ல்டை வைத்து ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா, கம்பெனி, சர்கார், சர்கார் ராஜ் முதலிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன.  இந்த அண்டர்வேர்ல்டு வாழ்க்கை பற்றியும், நிழலுலக டான்கள் பெற்ற மரியாதை, எதிர்ப்பு இவற்றை புதிய சாயலில் உரைத்த படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை’.

இதில் மும்பையை ஆட்டிப் படைத்த தாவூத் இப்ராஹிம் கதாபாத்திரம் போன்ற வர்ணனை அஜய் தேவகனுக்கு அமைக்கப்பட்டிருந்தது.  எண்பதுகளில் மும்பையில் காணப்பட்ட அமைப்பு, உடைகள், சிகை அலங்காரம் உள்ளிட்ட பல அம்சங்கள் ரசனையுடன் அமையப்பட்ட இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு, மாபெரும் வெற்றியை கண்டது.  இப்படத்தின் தொடர்ச்சியாக இந்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை துபாரா’ வெளிவந்துள்ளது.
 
 
 


இம்முறை மும்பை நகரத்தின் பிஸ்தாவாக அக்ஷய் குமார். துபாயிலிருந்து மும்பை அண்டர்வேர்ல்டை ஆட்டிப்படைக்கிறார். கிட்டத்தட்ட நம்ம போக்கிரி படத்து பிரகாஷ் ராஜ் மாதிரி வெச்சுக்கோங்க.  மும்பையில் எதிர்கட்சி தாதாவின் கொட்டம் அதிகமாக இதை முடக்க மும்பை கிளம்புகிறார்.

அக்ஷய்குமாரின் விசுவாசமான தொழிலாளி இம்ரான் கான், மும்பைக்கு வரும் அக்ஷய் குமார் நடிகையாக முயற்சிக்கும் சோனாக்ஷி சின்ஹா மீது காதலில் விழுகிறார்.  சோனக்ஷியோ இம்ரான் கானை காதலிக்கிறார். இதன் பின் அக்ஷய் குமார், சோனாக்ஷியை அடைந்தாரா??  இம்ரான் கான் அக்ஷய் குமாரை எதிர்த்தாரா?? யாருக்கு சோனாக்ஷி??  உங்களுக்கு தெரிந்த விடைதான்.

ஒருபடத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வரும்பொழுது முந்தைய பாகத்துடன் இணைத்துப் பேசும் ஒப்பிடுதல் எழுவது சகஜம். முதல் பாகத்தில் அஜய் தேவகன், இம்ரான் ஹஸ்மியின் நடிப்பு யதார்த்தம் கலந்த தோரணையுடன் படத்தைத் தூக்கி நிறுத்தியது. ஆனால் இப்படத்தில் அதற்கு அப்படியே எதிர்மறை.




‘நோ டென்ஷன்’ எனக் கூறி “கோ" கோட்டா சீனிவாசராவ் போல் தோன்றும் வில்லன். ஷோஹைப்பாக அக்ஷய் குமார் பழைய காலத்து  வில்லன் நடிகர்களைதான் நினைவுபடுத்துகிறார்.  பக்கம் பக்கமாக வசனங்கள் .பேசுவது, காதல் காட்சி என்ற பெயரில் காட்டு மொக்கை போடுவது , மாஸ்டர் ப்ளான் என்று மங்குனித்தனமாய் யோசிப்பது இப்படி இவர் ஒரு புறம் வேடிக்கையாய் தோன்ற, மறுபுறம் சோளக் கொல்லை பொம்மைக்கு மாட்டிவிட்ட உடையலங்காரம்,சிகையலங்காரம் இம்ராம் கானுக்கு. மாடர்ன் பாய் இவருக்கு எண்பது கெட்டப் சுத்தமாகப் பொருந்தவில்லை.

சோனாக்ஷி சின்ஹாவின் உப்புசப்பற்ற நடிப்பு வலுவான தொய்வு.  இவர் இருவரிடமும் வழிந்து வழிந்து பேசும் போது ஒரு வேளை சி.பி.ஐ ஆபிஸரோ??  எனத் தோன்றினால் அதுவுமில்லாமல் போவது ஆறுதல்!!. இம்ரான் கானுக்கும் சோனாக்ஷிக்கும் ஜோடிப் பொருத்தம் சூன்யம்!!.

அக்ஷய் குமாரின் நடிப்பு யதார்த்தமின்றி தோன்றியும் அதுவே படத்தின் பலமாக அமைந்துள்ளது.  சாதா காட்சிகளையும் சுமாராக மாற்றுவது ப்ரீத்தமின் பின்னணி இசை. முந்தைய பாகங்கள் பார்த்தவரால் உணர முடியும் இது வெறும் முதல் பாதியின் சி.டி., தட்டுதான் என்று.
 
 


திரைக்கதையின் சாதுர்யம் ஆங்காங்கே சூடு பிடிக்க உடனே பாடல்கள் தோன்றி அதை நீராடச் செய்கிறது.

மொத்தத்தில்: ராஜத் அரோரா கதையில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை துபாரா’ திரையரங்கில் ஆராரோ பாடி உறங்க வைக்கிறது. வெட்டி பந்தா, நேரத்தை விரயம் செய்யும் கேலிச்சித்திரம். 
 
 
thanx - dinamalar 
 
 
 
 
மனம் கவர்ந்த  வசனங்கள் 



1.பொண்ணுங்க மாதிரி அழாதே.ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்களை அழ வெச்சுத்தான் பழக்கம்




2.காதலன் கூட இருந்தா ராத்திரி பூரா அவன் மடில தலை சாய்க்கலாம்னு பொண்ணுங்க நினைப்பதுண்டு





3. ஹீரோயின் - நாங்களும் பல கோர்ஸ் படிச்சு முடிச்சிருக்கோம்.


நல்லவேளை.இன்ட்டர்கோர்ஸ் கூட முடிச்சாச்சுனு சொல்லல



4. இதுக்கு முன்னால பொண்ணுங்க கிட்டே பேசுனதே இல்லையா?



அப்டி பேசி டைம் வேஸ்ட் பண்ணதில்ல