2014 ஆம் ஆண்டு வெளியாகி செம ஹிட் ஆன சவுத் கொரியன் படமான மிஸ் கிரானி படத்தின் அஃபிசியல் அட்லீ ஒர்க் இது . தெலுங்கில் வெளியாகி சமந்தாவுக்கு நல்ல பெய்ர் வாங்கிக்கொடுத்த காமெடி படம் . வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று பல மொழிகளில் ரீ மேக் ஆனது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி 70 வயது பாட்டி. திருமணம் ஆன கொஞ்ச காலத்துலயே கணவனை இழந்தவர். ஒரே ஒரு மகன், அவனை வளர்க்க மிகவும் பாடுபட்டவர். மகன் பெரியவன் ஆகி அவனுக்குத்திருமணம் ஆகி அவனுக்கும் திருமண வயதில் ஒரு மகன், மகள் உண்டு . எல்லா வீட்டிலும் இருப்பது போல இங்கேயும் மாமியார் - மருமகள் பிரச்சனை உண்டு
ஒரு கட்டத்தில் மாமியார் நம்முடன் இருக்க வேண்டாம் என மருமகள் அடம் பிடிக்க மிகுந்த மன வருத்தத்தில் மாமியாரான பாட்டி வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகிறார். ஒரு ஃபோட்டோ ஸ்டுடியோவில் ஃபோட்டொ எடுக்கும்போது அபூர்வமாக ,அதிசயம் ஆக 24 வயது இளம்பெண்ணாக அதாவது பாட்டி 24 வயதில் எப்படி இருந்தாரோ அதே போல் ஆகி விடுகிறார்
நாயகிக்கு சின்ன வயதில் பாடகி ஆக வேண்டும் என்ற கனவு உண்டு .விஜய் டி வி சூப்பர் சிங்கர் போல ஒரு டி வி புரோகிராமில் பாடகி ஆக இப்போது உருமாறுகிறார். அங்கே இருக்கும் ஒருவர் நாயகியை இப்போது காதலிக்கிறார். நாயகியும் அவ்ருடன் பழகுகிறார்.
நாயகி சின்ன வயதில் கிளாஸ்மேட் ஆக இருந்த ஒரு ஆள் இப்போதும் நாயகியை மனதார காதலிக்கிறார். அந்த விஷயம் அப்போது நாயகிக்குத்தெரிய வில்லை. இப்போது 24 வயதுப்பெண்ணாக உரு மாறிய பின் தான் தெரிய வருகிறது
பேரன் ஒரு இசைக்குழு நடத்தி வருகிறான். அதில் நாயகி இப்போது பாடகி . பேரனுக்கு நாயகி தான் தன் பாட்டி என தெரியாது . இளம்பெண் என நினைத்துப்பழகுகிறான். எங்கே அவன் தன்னைக்காதலித்து விடுவானோ என நாயகி பயந்து கொண்டே இருக்கிறாள்
இந்த காமெடி களேபரங்கள் எல்லாம் எப்போது முடிவுக்கு வ்ந்தது ? என்பது தான் மீதி திரைக்கதை
நாயகி பாட்டி ஆக லட்சுமி அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். 24 வயதுப்பெண்ணாக உரு மாறும்போது சமந்தா ஆகிறார். உடல் வயது 24 மனசுக்கு வயது 70 என உடல் மொழ்யில் கலக்கி இருக்கிறார். பாய் ஃபிரண்ட் , காதலன் , கிளாஸ்மேட் என யாருட்ன் பழகினாலும் தாய்மை உணர்வுடன் இருப்பது சிறப்பு
ஊர்வசி ஒரு சின்ன ரோலில் சிறப்பாக நடித்திருக்கிறார்
161 நிமிடங்கள் ஓடும்படி எடிட் செய்து இருக்கிறார்கள் மிக்கி ஜே மேய்ர் இசையில் ஆறு பாடல்கள் , அவற்றில் மூன்று நன்று
கொரியன் கதையை நம்ம ஊருக்கு ஏற்ற திரைக்கதை ஆக்கி வழங்கி இருப்பவர் பி வி நந்தினி ரெட்டி . பெண்களை மிகவும் கவரும் விதத்தில் ஃபேமிலி காமெடி மெலோ டிராமாவாக உருவாக்கி இருப்பது சிறப்பு
சபாஷ் டைரக்டர் (பி வி நந்தினி ரெட்டி)
1 தன்னை விட தன் மாமியார் தன் கணவனை , குழந்தைகளை நன்கு கவனித்துக்கொள்வது கண்டு மருமகள் பொறாமைப்படும் காட்சி சிறப்பு
2 நாயகியின் ஸ்கூல் மேட் ஆக வருபவர் இத்தனை வருடங்கள் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் நாயகி மீது அன்பு வைத்திருப்பது நெகிழ வைக்கும் கதை அமைப்பு
3 நாயகி 24 வயதுப்பெண்ணாக மாறியதும் மூன்று பேர் அவரை சுற்றி வந்தாலும் கண்ணியமான காட்சி அமைப்புகள் சாமார்த்தியமான சமாளிப்புகள் என திரைக்கதையை நகர்த்திய விதம்
4 க்ளைமாக்சை எப்படி முடிப்பார்களோ என நினைக்கும்போது நாயகிக்கு ரத்த இழப்பு ஏற்பட்டால் பழைய தோற்றம் வரும் என கொண்டு வந்து பேரனுக்கு விபத்து , ரத்த தானம் - ப்ழைய தோற்றம் என சமாளித்த விதம் குட்
ரசித்த வசனங்கள்
1 குரல் குயில் மாதிரி இருந்தாலும் தலை எழுத்து கழுதை மாதிரி இருந்தா?
2 இப்போதான் அம்மா திட்டுனாங்க , இப்போ சாப்பிடுங்கறாங்க
அம்மான்னா அப்படித்தாண்டா, நமக்கு சாப்பாடும் போட்டு நம்ம கிட்டே திட்டும் வாங்கிக்குவாங்க
3 வீட்ல அம்மா, அப்பா , தாத்தா , பாட்டி யாருமே இல்லைன்னா சாப்பிட்டியா?னு யார் நம்மைக்கேட்பாங்க ?
4 அப்பாவியா இருக்கும் பொண்ணுங்க தான் ஆபத்தானவங்க
5 அவ ரொம்ப அழகி, அதனால தான் கர்ச்சீஃப் போட்டு இடம் பிடிக்க வந்திருக்கேன்
ஆல்ரெடி போர்வையைப்போட்டு இடம் பிடிச்சவனே கம்முனு இருக்கான்
6 சொத்தை எழுதி வைக்கற வரை தான் பிள்ளைகளுக்கு பெத்தவங்க வேணும் கோடில ஒருத்தன் தான் உண்மையான பாசத்தோட இருப்பான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சமந்தா உருவத்தில் இருக்கும் லட்சுமி தன் டி சர்ட்டால் தன் மகன் பூட்சை துடைக்கிறார். அவ்ளோ தூசும் க்ளீன் ஆகிடுது . ஷூவும் சுத்தமா இருக்கு , டி சர்ட்டும் சுத்தமா இருக்கு , அது எப்படி ?
2 போலீஸ்க்கு ஃபோன் பண்ணும் லட்சுமியின் ஃபிரண்ட் அந்த திருடன் கிடைச்சுட்டான் என ஃபோன் பண்றார். திருடனைப்பிடிக்க வரும் போலீஸ் யூனிஃபார்ம்ல வராம மஃப்டில வர்றாங்க . திருடன் எங்கே?னு கேட்காம தண்டமா விசாரிச்சுட்டு இருக்காங்க
3 சமந்தா உருவத்தில் இருக்கும் லட்சுமி என் பையன் என்னை அடையாளம் கண்டு பிடிக்க முடியாது , ஏன்னா நான் 25 வயசா இருக்கும்போது அவன் குழந்தை என்கிறார். ஏன் ஞாபகம் இருக்காது ? கல்யாண ஆல்பம் அம்மா, அப்பாவுடையது பார்த்திருக்க மாட்டாரா?
4 லாஜிக்படி ஒரு அம்மாவுக்கு வேண்டுமானால் தன் குழந்தை வளர்ந்த பின் பார்த்தால் அடையாளம் தெரியாமல் போகலாம், ஆனால் ஒரு குழந்தை சின்ன வயதில் பார்த்த அம்மா முகத்தை வளர்ந்த பின் மறக்குமா? என்ன?
5 க்ளைமாக்சில் பேரம் ஆக்சிடெண்ட் ஆகி ஹாஸ்பிடலில் இருக்க பாட்டி பாட்டு பாடும்போது சந்தோஷ மெட்டில் சிரித்தபடி பாடுவது செயற்கை. அதே போல் பாடகன் ஆக வேண்டும் என்பது பேரனின் கனவு அதனால் பாடுவோம் என பாட்டி அடம் பிடிப்பது முட்டாள் தனம் , புன்னகை மன்னன் படத்தில் வெடிகுண்டு புரளி வந்ததும் ஆடியன்ஸ் எல்லாரும் ஓடி விட யாருமே இல்லைன்னாலும் கச்சேரி நடக்கும் என கமல் சொல்லி கால காலமாக வாழும் காதலுக்கு நாங்க்ள் அர்ப்பணம் என பாடி ஆடுவது எந்த அளவுக்கு மடத்தனமானதோ அதே அளவு மடத்தனம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம், குடும்பத்துடன் பார்க்கலாம் ரேட்டிங் 3 / 5