Showing posts with label Nenu Meeku Baaga Kavalsinavaadini(2022) ( தெலுங்கு) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label Nenu Meeku Baaga Kavalsinavaadini(2022) ( தெலுங்கு) - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, November 15, 2022

Nenu Meeku Baaga Kavalsinavaadini(2022)( தெலுங்கு) ( என்னை மாதிரி ஒருத்தன்தான் உனக்குத்தேவை) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


நாயகன்  ஒரு  வாடகை  டாக்சி  டிரைவர். ஒரு  நாள்  இரவு  ஒரு  சவாரி  கிடைக்குது . நாயகி நல்லா  சரக்கடிச்சுட்டு  போதைல  இருக்கு, அவளுக்கு  ஒரு  செக்யூரிட்டி.  டாக்சி ல  போகும்போது  நாயகன் சில  ரவுடிகளிடம்  இருந்து  காப்பாற்றுகிறான். அந்த  பழக்கத்துல  நாயகி  கிட்டே  நீங்க  ஏன்  இப்படிக்குடிச்சுட்டு  இருக்கீங்க ? உங்க  பிரச்சனை  என்ன?  உங்க  ஃபிளாஸ்பேக்  கதையை  சொல்லுங்கனு  கேட்கிறான்

நாயகி  அவ  கதையைச்சொல்ல  ஆரம்பிக்கிறா. நாயகிக்கு  ஒரு  அக்கா  இருக்காங்க . அக்காவுக்கு  ஒரு  காதலன். இருவரும்  கல்யாணம்  பண்ணிக்கலாம்னு  முடிவு  எடுக்கும்போது  அப்பா  நாயகிக்கு  மேரேஜ்  ஏற்பாடு  பண்ணிடறாரு. அக்காவுக்கு  அப்பாவிடம்  தன்  காதலை  சொல்ல  தைரியம்  இல்லை. இதனால  பாதிக்கப்பட்ட  அக்காவின்  காதலன்  பழி  வாங்க  முடிவு  எடுக்கிறான், தன்   காதலியின்  தங்கையை  அதாவது  நாயகியைக்காதலிப்பது  போல  நடிக்கிறான், இவன்  அக்காவின்  முன்னாள்  காதலன்  என்பது  தெரியாம  நாயகி  காதல் வலையில்  விழுந்திடறா


இப்போ  நாயகிக்கு  திருமண  ஏற்பாடுகள்  நடக்குது . விடிந்தால்  திருமணம். நாயகி  வீட்டை  விட்டு  ஓடி  வந்துடறா. காதலன்  உன்னை  மேரேஜ்  பண்ணிக்க  லவ்  பண்ணலை , உங்க  அக்கா , அப்பாவை  பழி  வாங்கத்தான்  இப்படிப்பண்ணுனேன்னு  சொல்லிட்டு  கிளம்பிடறான்


 இனிமே  வீட்டுக்குப்போனா  அம்மா, அப்பா  மதிக்க  மாட்டாங்க , ஊர்  தப்பாப்பேசும்னு  நாயகி  சொந்த  ஊருக்குப்போகாம சிட்டில  வேலை  தேடிக்கிட்டு  தனியா  இருக்கா. காதல்  தோல்வியைத்தாங்க  முடியாம  குடிப்பழக்கத்துக்கு  அடிமை  ஆகிறாள் 


இதுதான்  நாயகியின்  ஃபிளாஸ்  பேக்.  இப்போ  நாயகி  நாயகனிடம்  உன்  கதையைப்பற்றி  சொல்லு  என்று  கேட்கிறாள்.  நாயகனும்  அவனது  ஃபிளாஸ்பேக்  காதல்  கதையை  சொல்றான், அது  கிட்டத்தட்ட  அபூர்வ  சகோதரர்கள்  குள்ள  அப்பு  காதல்  கதை  போல  இருக்கு 


 இருவருக்கும்  ஒரு  அண்டர்ஸ்டேண்டிங்  வருது நாயகி  நாயகனிடம்  தன்  காதலை  வெளிப்படுத்தலாம்னு  நினைக்கும்போது  ஒரு  திருப்பம். நாயகி  காதலனுடன்  ஓடிப்போனாள்  இல்லையா? அப்போ அவளுக்கு  ஒரு திருமண  ஏற்பாடு  அப்பா  மூலம்  நடந்ததே4  அந்தக்கல்யாண  மாப்பிள்ளை  தான்  நாயக்ன் .  அவனது  ஃபிளாஸ்பேக்  என  ஒரு  காதல்  தோல்விக்கதையை  எடுத்ஹு  விட்டானே  அது  கற்பனை கதை 


 இந்த  விஷயம்  தெரிந்த பின் நாயகி  என்ன  முடிவு  எடுத்தா ?  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகனா   கிரண் (  வின்னர்ல  நடிச்ச  நடிகை  கிரண்  வேற  இவர்  வேற ) . இவர்தான்  கதை  எழுதி  இருக்கிறார். இயல்பான  நடிப்பு .  சண்டைக்காட்சிகளில் .  கலாய்ப்புக்காட்சிகளில்  சராசரி  தெலுங்கு  ஹீரோ  போல  முத்திரை  பதிக்கிறார் .


நாயகியாக ச்ஞ்சனா  ஆனந்த். குடிபோதையில்  இருக்கும்போது  ஒரு  விதமான  நடிப்பு , ஃபிளாஸ்பேக்  காட்சியில்  குடும்பப்பாங்கான  நடிப்பு , க்ளைமாக்ஸ்  காட்சியில்  உணர்ச்சி  பொங்க  நடிப்பு  என   குருவி  தலையில்  பனங்காய்  வைத்திருக்கிறார்    டைரக்டர்  , சமாளிக்கிறார் 


 நாயகனின்  கற்பனை  ஃபிளாஸ்பேக்கில்  லாயர்  துர்காவாக  வரும்  சோனு  தாக்கூர்  கொஞ்ச  நேரமே  வந்தாலும்  போட்டுத்தாக்குகிறார்.  துறுதுறு  சுறு சுறு  நடிப்பு 


நாயகியின்  அக்காவாக  வரும்  நவீனா  ரெட்டி  நாயகியை  விட  அழகாக  இருக்கிறார் நாயகியின்  அக்காவின்  காதலராக  பிறகு  நாயகியைக்காதலித்து  ஏமாற்றும்  காதலராக  சித்தார்த் மேனன்  கச்சிதமான  வில்லன்  நடிப்பு. ஆனா  திரைக்கதையில்  நம்பகத்தன்மை  இல்லாததால்  இவரது  கேரக்டர்  டிசைன்  ஒட்டவில்லை 


இசை  மணி  சர்மா . அழகன்  புகழ்  மரகத  மணி  தெலுங்குப்பட  உலகில்  மணி சர்மா  என்பது  உலகம்  அறிந்த  உண்மை .  சுண்ணாம்பு  சேர்க்காத  கள்ளு  என்னைக்கண்டாலே துள்ளுமடா  என்ற  ஓப்பனிங்  குத்தாட்டப்பாடலும்  சரி  க்ளைமாக்ஸில்  படம்  முடிந்த  பின்  வரும்  கொண்டாட்டப்பாட்டும்  சரி  செம  ஹிட்  அடிக்கும் 

ரவி  கே  நள்ளியின்  ஒளிப்பதிவு  கண்களுக்கு  இதம் பிரவின்  புடியின்  எடிட்டிங்  அளந்து வைத்தது  போல்  இருக்கிறது. ரெண்டே  கால்  மணி  நேரம்  ஓடும்  படத்தில்  முதல்  30  நிமிடங்கள்  நாயகன் நாயகி  அறிமுகப்படலம் , அடுத்த  30  நிமிடங்கள்  நாயகியின்  ஃபிளாஸ்பேக்  . இப்போ  இடை  வேளை . பிறகு  நாயக்னின்  கற்பனை  ஃபிளாஸ்பேக்  கதை  35  நிமிடங்கள் . கடைசி  45  நிமிடங்கள்  நாயகன் - நாயகி  காதல்  காட்சிகள்   என  கனக்ச்சிதமாக  பிரித்து  வைத்திருக்கிறார்கள் 


திரைக்கதையில்  நம்பகத்தன்மை  இல்லாததால்  ஒரு  நல்ல  காதல்  கதையாக  வந்திருக்க  வேண்டிய  படம்  மிஸ்  ஆகி  விட்ட்து  என்றுதான்  சொல்ல  வேண்டும் 


ரசித்த  வசனங்கள் 


1  பொண்ணுங்க  தானா  முன்  வந்து  கை  கொடுத்தா  ஓக்கே ? நாம  அவங்களுக்கு  கை கொடுக்கக்கூடாது ?


2  பொண்ணுங்க  பிரேக்கப்க்கு  முன்னே  கிஸ்  அல்லது  ஹக்  இப்படி  ஏதாவது  நினைவுச்சின்னமா   தர்றது  இப்பொ  ட்ரெண்ட் 


3 ஆம்பளைக்கு  குடிக்க    பெருசா  காரணம்  எதுவும்  தேவை  இல்லை , ஆனா  ஒரு  பொண்ணு  இந்த  அளவுக்குக்குடிக்கறா  எனில்  ஏதாவது  முக்கியமான  காரணம்  இருக்கனும்


4   காதல்னா  என்ன?னு    எனக்குப்புரிவதற்கு  முன்பே  உன்  மேல  காதலில்  விழுந்துட்டேன் 


5 நம்மை  விட  இவன் நம்ம  பொண்ணை  நல்லாப்பார்த்துக்குவான்கற  நம்பிக்கை  வரும்போதுதான்  பெண்ணின்  பெற்றோர்  மகிழ்ச்சி  அடைகின்றனர் 


6 வீட்ல  கல்யாணப்பேச்சை  எடுக்கும்போதுதான்  ஒவ்வொரு  பெண்ணுக்கும்  நாம  ஒரு  லவ்வுல  இருக்கோமல்ல?  என்பது ஞாபகம்  வரும் 


7  எத்த்னையோ  முறை  சாக  முயற்சி  பண்ணியும்  என்னால சாக முடியலைன்னா  ஏதோ  ஒரு  வேலை  நான்  செய்ய  மிச்சம்  இருக்குனு  அர்த்தம் 


8   இலை  உதிருதேனு  மரம்  கவலைப்பட்டா  அதனால  புது இலைகளை  உருவாக்க  முடியாது 


9  ஏய்  மிஸ்டர் , கண்  தெரியாதா? உனக்கு ?


 ,மிஸ்!  நீங்க  அந்தப்பக்கமா   திரும்பி  நின்னுக்கிட்டா  உங்க  கண்  எனக்கு  எப்படி  தெரியும் ?  திரும்பி  நில்லுங்க 


10   டேய். அவளைப்பார்த்தா  ஆவரேஜ்  பொண்ணுமாதிரிதான்  இருக்கா 

  என்னை  மாதிரி  காஞ்சு போனவனுக்கு   சராசரிப்பொண்ணே  சரித்திர  அழகாத்தான்  தெரியும்


11   உங்க  கைல  என்ன?


 விஷம் , உங்க  கைல ?


இதுவும்  விஷம்  தான் , சியர்ஸ்


12  ஒரு  பெண்ணை  கரெக்ட்  பண்ணனும்னா  ஒரு    சோகமான  ஃப்ளாஸ்பேக்  லவ்  ஸ்டோரியை  ரெடி  பண்ணிக்கனும் 



  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  ஒரு  பெண்ணைக்காதலித்தவன்  காதல்  கை  கூடலைன்னா  அவளைபழி  வாங்க  அவ  தங்கையைக்காதலிப்பது  போல்  நடிப்பது, பின்  கை  விடுவது  ஓக்கே , ஆனா அவளை  தொடாம  அனுப்புவது  நல்லவனுக்குத்தான்  சாத்தியம் , இவன்  நல்லவனா  இருந்தா  பழி  வாங்கத்தயரா  இருக்க  மாட்டான்,  பழி  வாங்க  முடிவெடுத்தவன்  அரைகுறையா  கிளம்ப  மாட்டான்.  தங்கையை  கர்ப்பம்  ஆக்கி   வாழா  வெட்டியாய்  ஆக்கி  இருப்பான்,   இரண்டும்  கெட்டான்  கேரக்டரா  இருக்கே? 


2  நாயகியின்  அக்கா  லவ்  ப்ண்ணும்போது  காதலனுடன்  ஊரெல்லாம்  சுத்த்றா , ஆனா   தங்கைக்கு  காதலன்  யார்னே  தெரியாதா? அக்கா  தன்  தஙகையிடம்  இதுதான்  என்  காதலன்னு  ஃபோட்டோ  கூட  காட்டி  இருக்க  மாட்டாரா? 


3   விடிஞ்சா  மேரேஜ் . நாயகிக்கு  மேரேஜ்ல  இஷ்டம் இல்லை ஓக்கே  ஆனா  மாப்ளை  யார்னு  கூட  தெரியாதா?  பெண்  பார்க்க  வந்திருப்பார் , பத்திரிக்கை  தர  வந்திருப்பார்  ,அட்லீஸ்ட்  ஃபோட்டோ  கூடவா  வீட்ல  காட்டி  இருக்க  மாட்டாங்க . க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் வேணும்கறதுக்காக  இப்படி  ஆடியன்ஸ்  காதுல  10  முழ்ம்  பூ  சுத்துனா  எப்படி ? 


4   ஓப்பனிங்  சீன்ல  நாயகியின்  செக்யூரிட்டி  வாங்க  மேடம்  போங்க  மேடம்னு  மரியாதையா  பேசறான், திடீர்னு  நீ , வா ,  போ  அப்டினு  பேசறான். எப்படி ? 



சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  நம்பகத்தன்மையே  இல்லாத  லவ்  ஸ்டோரி , பொழுது  போகலைன்னா  இடை  வேளை  வரை  பார்க்கலாம்  ரேட்டிங் 2 / 5 

Nenu Meeku Baaga Kavalsinavaadini
Nenu Meeku Baaga Kavalsinavaadini.jpeg
Theatrical release poster
Directed bySridhar Gade
Written byKiran Abbavaram
Produced byKodi Divya Deepthi
StarringKiran Abbavaram
Sanjana Anand
Sonu Thakur
CinematographyRaj K. Nalli
Edited byPrawin Pudi
Music byMani Sharma
Production
company
Kodi Divyaa Entertainments
Release date
  • 16 September 2022
Running time
130 minutes[1]
CountryIndia
LanguageTelugu