Showing posts with label NUNAKKUZHI (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label NUNAKKUZHI (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, August 22, 2024

NUNAKKUZHI (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி டிராமா)

   


  டிடெக்டிவ் (2007)  என்ற முதல் படத்திலேயே தன்  முத்திரையைப்பதித்தாலும்  மம்மி அண்ட் மீ (2010)  மை  பாஸ் ( 2012) , மெமரிஸ் ( 2013)  ஆகிய மூன்று படங்களையும் ஹிட் ஆக்கி இருந்தாலும்  எ  ஜீத்து ஜோசப் பிலிம் என டைட்டில் ல  பேர் வரும்போது ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் அளவு மார்க்கெட்  வந்தது த்ரிஷ்யம் (2013)  படத்தின் பிரம்மாண்டவெற்றிக்குப்பின் தான் . இந்தியாவிலேயே அதிக மொழிகளில்  ரீ  மேக் ஆன முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது 


முதல் பாகத்தைப்போல அதிரி புதிரி  ஹிட் இல்லை என்றாலும் த்ரிஷ்யம் 2 வும் ஒரு ஹிட் படம் தான் . சமீபத்தில்  ரிலீஸ் ஆன நேரு , லெவல் கிராஸ் இரண்டும்  ஹிட் தான் . 

மின்னல் முரளி என செம ஹிட் படம் இயக்கிய இயக்குனர்  என்ற அடையாளம் இருந்தாலும்  ஜெயஜெய ஜெய ஹே  , பால்தூ  ஜான்வர் , குருவாவூர்  அம்பல   நடையில்   ஆகிய காமெடிபபடங்களின் நாயகன் என்ற அடையாளம் தான்  ரசிகர்கள்      மனதில் அதிகம் தங்கி இருக்கும் .பசீல்  ஜோசப் .அப்பாவித்தனமான முகம் , இடக்கு மடக்குக்காமெடி என கே பாக்யராஜை நினைவுபடுத்தும்  கதாநாயகன் 

க்ரைம் டிராமா ஸ்பெஷலிஸ்ட்  ஜீத்து ஜோசப்   + காமெடி நாயகன் பசீல்  ஜோசப்  இந்த காம்போ படம்    எப்படி இருக்கும்?  காமெடி டிராமா  க்ரைம் கலந்து கலக்கல் காமெடி  ஆக வந்துள்ளது .  மோகன் லாலின் சொந்தப் படம் இது .மினிமம் பட்ஜெட்டில் உருவான இப்படம்  ரிலீஸ் ஆன  முதல்  வாரத்திலேயே 15 கோடி வசூல் செய்துள்ளது                 


ஸ்பாய்லர்  அலெர்ட்

சம்பவம் 1 - நாயகன் மிகப்பெரும் தொழில் அதிபர் . தன அப்பாவுக்குப்பின் தான் தான் அந்தக்கம்பெனி  எம் டி என்றாலும் அவருக்கு தொழில் ஆர்வம் இல்லை .சமீபத்தில் தான் திருமணம் ஆகி உள்ளது . தன  மனைவி உடன்  தான்  நெருக்கமாக இருப்பதை  தன பர்சனல் லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருக்கிறார் . அந்தக்காட்சியை  கம்பெனியில் இருக்கும்போது கண்டு மகிழ்ந்து கொண்டு இருக்கும்போது   இன்கம்டாக்ஸ்  ரெய்டு வருகிறது .எவ்வளவோ  விளக்கம் சொல்லியும்  கேட்காமல் வந்தவர்கள்  அந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து கொண்டு போகிறார்கள். . நாயகனின் மனைவி  அந்த லேப்டாப்பை யாரும் பார்க்கும்  முன்   கைப்பற்றிக்கொண்டு வர வேண்டும்  இல்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன்  என மிரட்டவே  நாயகன் அந்த லேப்டாப்பை அபகரிக்கும் முயற்சியில் இறங்குகிறான் 

 சம்பவம் 2 - நாயகிக்குத்திருமணம்  ஆகிவிட்டது . டைவர்ஸும்  ஆகப்போகிறது . கோர்ட்டில் கேஸ் நடக்கிறது .கேஸ் விசாரணையில் நாயகியின் கணவர் தரப்பு வக்கீல் நாயகியை அவமானப்படுத்துகிறார் . ஒரு பல் டாக்டர்  நாயகிக்கு எதிராக பொய் சாட்சி சொல்கிறார் .இதனால் செம கடுப்பான நாயகி அந்த பல் டாக்டருடன்  வாக்குவாதம் செய்ய அவர்  இடத்துக்குப்போகிறார் .போன இடத்தில் தள்ளு முள்ளு   ஏற்பட்டு அந்த பல் டாக்டரைக்கொலை செய்து   விடுகிறார் .ஆக்சிடெண்டல் டெத் 


சம்பவம் 3 -  பிரபல நடிகரின் மனைவி  அந்த பல் டாக்டரின் கள்ளக்காதலி . அவரைக்காண  அவர் இடத்துக்கு வருகிறார் . அதே சமயம்  நாயகி அங்கே வந்ததால் தன கள்ளக்காதலியை அருகில் இருக்கும் அறையில் ஒளிந்துக்கொள்ள சொல்கிறார் . 


சம்பவம் 4 - பிரபல நடிகருக்குக்கதை சொல்ல  ஒருவர் வருகிறார் .அவர் தான் இன்கம் டாக்ஸ் ஆபீசரின் உறவினர் .நாயகனின் லேப்டாப் அவரிடம் சிக்கி விடுகிறது 


மேலே சொன்ன நான்கு சம்பவங்களை முதல் 30 நிமிடங்களில்  சொன்ன இயக்குனர்  அதற்குப்பின்  நிகழும் காமெடி கலாட்டாக்களை  சிரிக்க சிரிக்க  சொல்லி இருக்கிறார் 



சுந்தர் சி படங்களைப்போல  சிச்சுவேஷன்  காமெடி  உண்டு , கிரேசி மோகன் படங்களைப்போல  வசனக்காமெடியும் உண்டு .எனவே மலையாளம் நன்கு அறிந்தவர்கள் தான் பூரணமாக ரசிக்க முடியும் 


நாயகன் ஆக .பசீல்  ஜோசப் அதகளம் பண்ணி இருக்கிறார் . நாயகி கலந்து வைத்த விஷத்தைக்குடித்து விட்டு இவர் படும் பாடு செம காமெடி . லேப்டாப்  விஷயத்தை அம்மாவிடம் சொல்லமுடியாமல்   சிரமப்படுவது  சிரிக்க வைக்கிறது . போலீஸ் ஆ பிசரிடம்  வாக்குவாதம் செய்வது அதகளம் 


 நாயகி  ஆக  கிரேசி  ஆண்ட்டனி  காமெடிக்கலக்கல் நடிப்பு . என்னைக் குடிகாரினு சொல்லிட்டியே  என புலம்புவதும்  விஷம்  குடிதத நாயகனை ஹாஸ்பிடலில்  சேர்க்கும்போது நடக்கும் களேபரங்களிலும்   சிரிக்க வைக்கிறார் 


இன்ஸ்பெக்ட்டர் ஆக வரும் பைஜு சாந்தோஸ் + கான்ஸடபிள் ஆக வரும்  அஜீஸ் மாங்காடு கூட்டணி கலக்கள் காமெடி .பேசும்  வசனங்கள் செம சிரிப்பு 


இவர்கள் போக மனோஜ் கே ஜெயன் , சித்திக் , அஜு வர்கிஸ் ,நிகிலா விமல் என அனைவரும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை  செய்திருக்கிறார்கள் 


விஷ்ணு ஷியாமின் பின்னணி இசை அருமை . ஜெ உண்ணிதின்  இசையில்  இரண்டு பாடல்கள் ஓகே ரகம் விநாயக்கின் எடிட்டிங்க் அட்டகாசம் . ஒரு  காட்சி கூட குழப்பம் இல்லை கே ஆர் கிருஸ்ணகுமாரின்  திரைக்கதை அபாரம் . சீரியஸ் ஆன க்ரைம் கதையை காமெடியாக சொன்ன விதத்தில்  இயக்குனர்  ஜெயித்து இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்

1  நான்கு  வெவ்வேறு  டிராக்குகளை குழப்பம் இல்லாமல்   ஒரே  நேர்கோட்டில் இணைத்துக்கதை சொன்ன விதம் 


2   எல்லாப்பாத்திரங்களும் சீரியசாகப்பேசிக்கொண்டு இருப்பார்கள் , ஆனால் பார்க்கும் நமக்கு சிரிப்பு வரும் . இது போல காட்சி அமைப்பது சிரமம் 


3   சீரியஸ் ஆக க்ரைம் கதை சொல்லிக்கொண்டே அதில் காமெடியைக்கலக்கும்போது மெயின் கதையின் சாராம்சம் , அதன் சீரியஸ்னஸ்  பாதிக்கும் . ஆனால் என்ன ஒரு மேஜிக் ? அப்படி எதுவும் நிகழவில்லை 


  ரசித்த  வசனங்கள் 


1  இந்தகேசில் இருந்து உன்னைக்காப்பாத்திடறேன் , எனக்கு ஒரு 10 லட்சம்  தந்துடு 


 தந்துட்டாப்போச்சு 


 அடடா .இப்படின்னு தெரிஞ்சிருந்தா  ஒரு 15 லட்சம் கேட்டு இருக்கலாம் போலயே 



2   டியர் , ஒரு கேஸ் மாட்டி இருக்கு .10 லட்சம் வருமானம் வரப்போகுது 


 20 லட்சம் ஆக்க முடியுமா பாருங்க 



3  மேடம் ,வசதி  ஆன குடும்பமா  இருக்கீங்க .நல்ல சரக்கா அடிக்கலாமில்ல ? 


4   டாக் டர்  சார் , என் புருஷன்  தெரியாம விஷம் குடிச்சுட்டார் 


 புருஷனுக்குத்தெரியாம விஷம் கொடுத்துட்டீ ங்க்ளோ  என்னவோ ? 


5   அய்யய்யோ , போலீஸ்  வருது .எதுவுமே தெரியாதது போல நடிக்கணும் 


 ஓகே  ஆனா நீங்க நடிக்க வேணாம்  .சொதப்பிடுவீங்க . சும்மா இருங்க .போதும் 


6   எங்கே இந்தப்பக்கம் ? 


 இப்பப்பாரு என் ஆக்டிங்கை .. இன்ஸ்பெக்டர் , நாங்க யாரையும்  கொல்லலை ,சும்மா  இங்கே வந்தோம் 


 ஓஹோ , நான்  அதைக்கேட்கலை யே?  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  மனைவியை விட்டுப்பிரிந்து இருக்கவில்லை  ஒன்றாகத்தான் இருக்கிறார் . பின் எதற்கு  லேப்டாப்பில் அதைப்பார்க்க ஆசைப்படுகிறார் ? கனி இருக்கக்காய் கவர்ந்தற்று , நிஜம் இருக்க நிழல் எதற்கு ? 

2  நாயகனின் மனைவிக்கு நாயகன் லேப்டாப்பில் பதிவு செய்வது பிடிக்கவில்லை .அது தெரிந்தும் நாயகன் எதனால் தன மனைவியிடம் அந்த சம்பவத்தை  சொல்ல வேண்டும் ? ஆண்களின் குணமே  , மனைவிக்குப்பிடிக்காத காரியத்தை தான் செய்தால்   அதை  மறைப்பதுதானே? 

3   தொழில் அதிபர் ஆன நாயகனிடம் 10 லட்சம் ரூபாய்க்கு டீல் பேசும் இன்ஸ் பெகடர்  பிரபல ஹீரோவிடம்  டீல் பேசாதது என்? 

4   ஒரு ஹையர் ஆபிசரிடம் சாதா போலீஸ் கான்ஸடபிள்  தோளில் கை  போட்டு பேசுவாரா?  

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் , காமெடி பிரியர்கள் இரு தரப்பினரையும் கவரும் படம் , ரேட்டிங் க் - 3. 25 / 5 .மலையாளத்தில் நுண என்றால் பொய் என்று அர்த்தம் . டைட்டிலான நுணக்குழி  என்பதற்கு பொய்க்குழி  என்று அர்த்தம் 


Nunakkuzhi
Theatrical release poster
Directed by
Written byK. R. Krishna Kumar
Produced bySaregama
Starring
Edited byVinayak V.S
Music by
  • Songs:
  • Jay Unnithan
  • Vishnu Shyam
  • Background Score:
  • Vishnu Shyam
Production
company
Distributed byAashirvad Cinemas
Release date
  • 15 August 2024 (India)
CountryIndia
LanguageMalayalam
Box office 12.55 crore[1]