Showing posts with label NAYANTHAARAA. Show all posts
Showing posts with label NAYANTHAARAA. Show all posts

Saturday, August 10, 2019

கொலையுதிர் காலம் - சினிமா விமர்சனம்


kolaiyuthirkaalam എന്നതിനുള്ള ചിത്രംஒரு பெரிய எஸ்டேட் ஓனரம்மா தன்னை மாதிரியே அச்சு அசலா  ஓவியம் வரைஞ்ச ஒரு  செவித்திறன் இல்லாத பேச்சாற்றல் இழந்த சிறுமியை சந்திக்கிறார். அவரை தத்து எடுத்து வளர்த்து அவர் இறக்கும்போது அந்த சிறுமியை யே வாரிசாக்கி உயில் எழுதி வைக்கிறார். சிறுமி வளர்ந்து ஆளாகி எஸ்டேட், அனாதை இல்லங்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்க  ஸ்பாட்டுக்கு  வரும்போது மர்ம நபரால்  துரத்தப்படுகிறார்,க்ளைமாக்ஸ் என்ன ஆச்சு என்பதை வெண் திரையில் காண்க


 நாயகியா 2 கோடி சம்பளம் வாங்கும் லேடி ஸூப்பர் ஸ்டார் தலைவி நயன் தாரா ( இதுக்கு முன்னால அனுஷ்கா வை தலைவின்னீங்களே?ன்னு லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது, முதலாம் தலைவி , இரண்டாம் தலைவி , மூன்றாம் தலைவினு நாமளும் லிஸ்ட் வெச்சிருக்கோமில்ல? )


இதுக்கு முன்னமே  இதே சாயலில் நானும் ரவுடிதான் , ல நடிச்ச கேரக்டர் தான். அசால்ட்டா பண்ணிட்டார் . படத்துல அநியாயத்துக்கு சிக்கனம் , இவருக்கு மூணே மூணு சி சர்ட் , 2 ஜீன்ஸ்  , ஒரு லெக்கிங்ஸ் , ஒரு சுடி பாட்டம் அவ்ளோவ் தான் காஸ்ட்யூமே.,ஒரே பங்களாவுலயே கதை நடப்பதால் செலவே இல்லை, மொத்தப்படமே ஒண்ணே முக்கால் மணி நேரம் தான் என்பதால்  ஃபிலிம் செலவும் மிச்சம், இடைவேளைக்குப்பின் வில்லன், ஹீரோயின் என ரெண்டே கேரடக்ர்கள் என்பதால்  துணை நடிகர்கள் சம்பளமும் மிச்சம்., படம் ஒரு வாரம் ஓடினாலே போட்ட காசு எடுத்துடலாம்


வில்லன் ஒரு மஞ்ச மாக்கானா இருக்கான், 1980 கள் ல வந்த வில்லன் மாதிரி  மாஸ்க் போட்டு சுத்திட்டு இருக்கான் ( அனேகமா  இது 1980 கள்ல வந்த ஒரு நாவலா இருக்கலாம்)திரைக்கதை அமைக்கும்போது இயக்குநர் இந்தக்காலத்துல கொலை காரனும் , கொள்ளைக்காரனும் இப்படித்தான் இருக்காங்களா? என உறுதி செய்து பின் ஷூட்டிங் போய் இருக்கலாம்

 தியேட்டரிக்கல் அப்டேட்டட்  ட்வீட்ஸ்


1  பொட்டி வந்திடுச்சேய் #KolaiyuthirKaalam 5.45 pm fdfs


நச் வசனங்கள்


1   தானமா கிடைச்ச எதுவுமே உனக்கு தகுதி இல்லைன்னா நீ அதை இழந்துடுவே


2  நல்லவங்க தான் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை சீக்கிரமா செஞ்சுட்டு  சீக்கிரமாவே இந்த உலகை விட்டுப்போய்டறாங்க


3 தனக்கு எதுவும் இல்லைன்னாலும் தன்னை சுத்தி இருக்கறவங்களுக்கு எல்லாம் கிடைக்கனும்னு நினைக்கறவங்க அபூர்வம், அப்படிப்பட்ட நல்ல எண்ணம் கொண்டவ தான் இந்தப்பொண்ணு 


 சபாஷ் இயக்குநர்


1  நயன்  தாராங்கற ஒரே ஒரு ஆள் கால்ஷீட் மட்டும் கிடைச்சா போதும் கதை திரைக்கதை எதுவும் தேவை இல்லை என நினைச்ச அந்த அதீத தன்னம்பிக்கை 


2  நயன் தாரா நடிச்ச படங்கள்லயே மிக கம்மியான டிரஸ் போட்ட படம் பில்லா , டூ பீஸ் டிரஸ். படம் பூரா மூணே மூணு செட் டிரஸ் மட்டுமே போட்ட படம் இதுதான்




 ;லாஜிக் மிஸ்டேக்,  திரைக்கதையில் சில சொதப்பல்கள்


1  ஒரு பெரிய ட்ரஸ்ட்டோட தலைவி  மேடை ஏறிப்பேசறாரு , அவர்  தோற்றம் கண்ணியமா இருக்க வேண்டாமா? லோகட் ஜாக்  போட்டு ( அது சர்ட்டா? ஜாக்கெட்டா?)  1 பட்டனை கழட்டி வேற காத்தாட விட்டிருக்கார்



2  ஒரு  சீன்ல  நயன் தாரா ஒரு தோட்டத்துல ஒரு சிலைக்கு முன் விளக்கு  ஏத்துவார், இடம் அமெரிக்கா , பனி, பனிப்புகை வாய் வழியா வருது. ஜில் க்ளைமேட் , தீப்பெட்டி ஓப்பன்  ஸ்பேஸ் ல நமுத்துப்போய் இருக்காதா? பத்த வெச்சதும் உடனே எப்படி பத்துது?


3  எஜமானி அம்மா ஆசிரமத்துக்குள்ளே போறப்ப தன் செரு;ப்பைக்கழட்டி மரியாதையா போறார்,. ஆனா அவர் கூட வரும் அல்லக்கைக 2ம் செருப்போடவே  போறாங்களே?


4   கோடிக்கணக்கான சொத்துக்கு  வாரிசு இவர்தான்னு உயில் எழுதும்போதே சட்டப்படி அது நயனுக்கு சொந்தம் தான்,. ஆனா நயன் வந்து சில பேப்பர்ல சைன் பண்ணி அதை ரெஜிஸ்டர் பண்ணாதான் செல்லும்னு ஒரு டயலாக் வருது



5  ஃபிளைட்ல வந்து இறங்குன நாயகி மஞ்சள் கலர் சி சர்ட் போட்டிருக்கார். அன்னைக்கு நைட்டும் அதே சர்ட் ( வந்ததும் குளிச்ட்டு மாத்திக்க மாட்டாரா?) அடுத்த நாளும் அதே கலர் சட்டை

6  வில்லன் டெட் பாடியை கார்ல  டிரைவர் சீட்ல உக்கார வெச்சு  ஸ்டியரிங்கை தொட்டதும் கார் மூவ் ஆகுது. எக்சலேட்டரை அமுக்க தேவை இல்லையா?


7  நாயகியைத்துரத்தும்  வில்லன் ஒரு இடத்தில்   கதவை உடைத்து தன் கையை  கதவு கேப்பில் விடறார், நாயகி கையில் கத்தி இருக்கு ., அந்தக்கையை அல்லது மணிக்கட்டில் ஒரு கீறு கீறுனா ஜோலி முடிஞ்சது அதை விட்டுட்டு நாயகி கதவோட சேர்த்து ஒரு அசம்ப்சன்ல வில்லன் கால்ல குத்தறார் . அது கதவு ல ஒரு இஞ்ச் பாய்ஞ்சு பின் தானே உடலில் ,லைட்டா படு ம்? 


8  நாயகி செம ஃபிகரு . மாற்றுத்திறனாளி வேற , வில்லன் அவரை ரேப் பண்ண ட்ரை பண்ணவே இல்லை

9   நாயகியின் வேலைக்காரியை கொலை செய்த வில்லன் அப்பவே அவருக்கு முதுகு காட்டி அமர்ந்திருக்கும் நாயகியை அங்கேயே போட்டுத்தள்ளி இருக்கலாம், ஆனா செய்யலை 

10  க்ளைமாக்ஸ்ல   திடீர்னு ஒரு ட்விஸ்ட் வருது. அடுத்த பாகத்துக்கான லீடா? புரியலை 




சி.பி கமெண்ட்-கொலையுதிர் காலம் − முதல் பாதி ஸ்லோ ஸ்க்ரீன்ப்ளே,பட் குட்,பின்பாதி ஹீரோயின்− வில்லன் ஒரே பங்களாவில் சேஸ் பண்ணிட்டே இருப்பது பின்னடைவு,நயன் மட்டுமே +
ஏ சென்ட்டர் க்ரைம் த்ரில்லர் ,விகடன் 41 ,ரேட்டிங் 2.75 /5 #KolaiyuthirKaalam

Thursday, March 28, 2019

ஐரா - சினிமா விமர்சனம்


நாயகி மீடியா ல ஒர்க் பண்ணுது, வீட்ல  மாப்ளை பார்க்கறாங்க , ஃபாரீன் மாப்ளை, பேசிப்பார்த்தா பிடிக்கலை. மேரேஜ்ல இருந்து எஸ் ஆக வீட்டை விட்டு ஓடிப்போய் கிராமத்துல இருக்கற பாட்டி வீட்டுக்கு வருது. அந்த பங்களால பேய் நடமாட்டம் இருக்கு.இதை வெச்சு நாயகி காண்ட்ரவர்சியா டூப்ளிகேட்டா சில வீடியோ க்ளிப்ஸ் போட்டு ஃபேமஸ் ஆகுது. ஒரு கட்டத்துல அவரோட பாட்டியே பேயால் கொல்லப்படறாங்க

பேயோட டார்கெட் நாயகிதான். ஏன்? எதனால? ஒரு ஃபிளாஸ்பேக்
மிச்சத்தை வெண் த்ரையில் காண்க


 நாயகியா பட்டர் ஃபிகர் நயன் தாரா. ஓப்பனிங் சீன்ல அவரோட காரக்டர் என்னமோ ஜான்சி ராணி  மாதிரி காண்பிச்ச்ட்டு பின் வ்ழக்கமான பயந்தாங்கொள்ளியா காட்டியது சொதப்பலான கேரக்டரைசேஷன். இயக்குநரின் சறுக்கல் இங்கே ஆரம்பிக்குது

பின்னணி இசை , ஒளிப்பதிவு நல்லாருக்கு

நயன் தாரா மாறுபட்ட இரு வேடங்களில் முடிஞ்சவரை சைன் பண்ணி இருக்கு, இந்தப்படத்தில் ஒரே ஆறுதல் கலையரசன் தான். நல்ல கேரக்டர். குட்

 யோகி பாபு இடை வேளை வரை சம்பந்தம் இல்லாம வந்து மொக்கை போடறார், ஒரு ஜோக் கூட சிரிக்கற மாதிரி இல்லை. இவரும் மதுரை முத்து , ஈரோடு மகேஷ் மாதிரி டி வி ஷோ போய்டலாம்

 ஃபிளாஷ்பேக் சீன் கறுப்பு வெள்ளையில் எடுத்தது நல்ல ரசனை



நச் டயலாக்ஸ்


1  மீடியா ல ஒர்க் பண்றே,நாலஞ்சு பேரையாவது அட்ஜஸ் பண்ணாமயா இந்த நிலைமைக்கு வந்திருப்பே?


உன்னை மாதிரி ஆளுங்களாலதான் பெண்களுக்கு ஆதரவா அவங்க குடும்பத்தாரே பேச முடியாத சூழல் ஏற்படுது,உனக்கு ஆதி னு பேர் வெச்சதுக்குப்பதிலா..... ( sv சேகர் தாக்கப்பட்டார்)



2 என் வாழ்க்கையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நாலஞ்சு வாழ்க்கை வாழ்ந்துட்ட மாதிரி இருக்கு

( சிம்பு
பிரபு தேவா
ஆர்யா
உதயநிதி
விக்னேஷ்சிவன்)

3  எப்பவும் நம்ம கூட சண்டை போடறவங்க என்ன திட்றாங்கனு காது கொடுத்துக்கேட்கக்கூடாது,நம்ம நிம்மதி போயிடும்

எந்த அப்பாவும் தன் பொண்ணுகிட்ட தன் கோபத்தைக்காட்ட மாட்டாரு

5  பாகுபலியே எடுத்தாலும் ப்ளூசட்டை குறை சொல்லித்தானே முன்னேறுனாரு?


பாத்தேன் பாத்தேன்,கழுவிக்கழுவி ஊத்துவாரே? ( தாக்கறதா நினைச்சு இலவச விளம்பரம்)


6 கான்ட்ரவர்சியா எதாவது பேசுனாதான் புகழ்பெற முடியும்,அட்டென்சன் சீக்கிங் தேவை

7  என் வாழ்க்கைல நடந்த ஒரே நல்ல விஷயம் நீதான் #ஐரா

8  வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு? போதும் போதும்கற அளவுக்கு ஒருத்தனுக்கு எல்லாமே கிடைக்குது, இன்னொருத்தனுக்கு எதுவுமே கிடைக்கறதில்லை, கடவுள் தூங்கிட்டாரா? #ஐரா




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  ஓப்பனிங் சீன்ல தலைவி நயன்தாரா வண்டியை ஒருத்தன் இடிச்சுடறான்,டேய் பொறம்போக்கு னு திட்டுது.குறியீடு.ராதாரவி ரசிகர்கள் ,உடன்பிறப்புகள் கடுப்பாயிடுவாங்க


2 நேத்து ப்ரீவ்யூ ஷோ பாத்துட்டு பலரும் ஆஹா ஓஹோ அபாரம் பரிமளா ரேஞ்சுக்கு பாராட்னாங்க, அப்டி ஒண்ணும் ஸ்பெஷலா  இல்லையே? டெம்ப்ளேட் பேய்ப்பட ஃபார்முலா தான், க்ளிஷே தான் #ஐரா@ இடைவேளை




சபாஷ் டைரக்டர்


1  லட்சுமி கில்மாப்பட இயக்குநர் அந்தப்பட புகழை வெச்சு நயன் கிட்டே கால்ஷீட் வாங்குனது, அறம் மாதிரி பிரமாதமான படம் பண்ணிட்டு இது மாதிரி சாதா கதைல நடிக்க ஓகே பண்ண வெச்சது

2  பட ரிலீஸ் டைம்ல ராதாரவி யை காண்ட்ரவர்சியா பேச வெச்சு படத்துக்கு இலவச விளம்பரம் தேடிக்கிட்டது






லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)

லாஜிக் மிஸ்டேக் 1 − ஊருக்கு ஒதுக்குப்புறமா இவ்ளோ பெரிய பங்களாவா?னு அந்த ஏரியா போலீசே வியக்குது.அதெப்பிடி ஒரு போலீசுக்கு அவங்க ஏரியா பங்களாவே பரிச்சயம் இல்லாம போகும்?


2  லாஜிக் மிஸ்டேக் 2 -ரீசென்ட் டெத் பவானி இன் சென்னை அப்டினு இங்க்லீஷ்ல டைப்ம் பண்ணி கூகுள் சர்ச் பண்ணுது தலைவி, ஆனா மேட்டர் ( சாதா மேட்டர்தான் )தமிழ்ல வருது  #ஐரா

3  ஃபிளாஸ்பேக்கில் வரும் பவானி கேரக்டர் பொண்ணு முகச்சாயல் நயனுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம இருக்கு

4  நாயகியின் பாட்டிக்கும் பேய்க்கும் சம்பந்தமே இல்லை. கண்ணு தெரியாத பாட்டியை எதுக்கு பேய் கொல்லுது> பேய்க்கும்  கண் தெரியலையா?

5 நயன் தாரா வின் ஒப்பனை யார் பண்ணது? புருவங்களில் ஓவரா மை அப்பி அழகான புருவத்தை நாஸ்தி பண்ணி வெச்சிருக்காங்க

6  லாஜிக் மிஸ்டேக் 3 - 5 1/2 அடிக்கு மேல் உயரமாக இருக்கும் நயன் தாரா வைப்பார்த்து ஒரு பேக்கு பொண்ணு குள்ளமா இருக்கே னு டய;லாக் #ஐரா


7  லாஜிக் மிஸ்டேக் 4 - நீண்ட இடைவெளிக்குப்பின் காதலியை (கிராமத்துப்பொண்ணு)சந்திக்கும் காதலன் ? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?னு கேட்கறார் . இந்துவான நாயகி கழுத்தில் தாலி இல்ல , கால் விரலில் மெட்டி இல்லை, நெற்றி வகிட்டில் சுமங்கலி ஸ்பெஷல் குங்குமம் இல்லை, இதை  எல்லாம் நோட் பண்ண மாட்டாரா?#ஐரா

8  லாஜிக் மிஸ்டேக் 5  - குப்பன் சுப்பனை  எல்லாம் பழி வாங்கும் பேய் தன்னை அபாண்டமா புகார் செய்த அதுவும் தன்னை கரெக்ட் பண்ண பார்த்தானு புகார் சொன்ன ஆளை ஏன் பழி வாங்கலை? #ஐரா






சி.பி கமெண்ட் -ஐரா - முதல் பாதி வழக்கமான டெம்ப்ளெட் பேய்ப்பட ஃபார்முலா, பின் பாதி ஃபிளாஷ்பேக் காட்சிகள் எடுபட;லை, திரைக்கதையை நம்பாம இயக்குநர் நயன் தாராவை நம்பி இருக்கார், விகடன் 38  ரேட்டிங் 2.25 / 5 .கமர்ஷியல் வெற்றி மிக மிக அரிது #ஐரா

Thursday, May 01, 2014

நீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்

வித்யா பாலன் நடிச்சு ஹிந்தில  ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்ட கஹானி படத்தின்   தெலுங்கு  ரீ மேக்  தான் அனாமிகா. நயன் தாரா தனது தார்மீகக்கொள்கைகளில் ஒன்றான கர்ப்பிணியா ந்டிக்க மாட்டேன் என்பதை கறாராகக்கடைப்பிடித்ததால் இயக்குநர் கதையை சாரி கேரக்டரை மாற்றி நடிக்க வைத்த படம்/ தமிழில் சத்தமே இல்லாம டப் ஆகி நேரடித்தமிழ்ப்படம் போலவே வருது  நீ எங்கே என் அன்பே. 



ஓப்பனிங்க்   சீன் ல  இப்போ சென்னைல  பாம் வெடிச்ச மாதிரி   ஹைதராபாத் ல ஒரு வெடிகுண்டு சம்பவத்தை காட்டறாங்க. அப்பவே படத்தோட  கதை டெரரிசம் பேஸ் பண்ணியதுனு தெரிஞ்சுடுது 


ஹீரொயின் ஃபாரீன் ல இருந்து   ஹைதரா பாத் வர்றாங்க . அவர் வந்ததும்  நேரா  ஏர்போர்ட்ல  இருந்து  போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு புகார்  தர்றாங்க . என் புருஷனைக்காணோம் . கண்டு பிடிச்சுத்தாங்க அப்டினு 


 அவர் ஒரு சாஃப்ட்வேர் ஆசாமி . இங்கே லவ் மேரேஜ் பண்ணி  பெற்றோர் எதிர்த்ததால்   ஃபாரீன்  போனவர். இந்தியா   வந்தவர் காணாமப்போய்ட்டார். அவரைத்தேடி சம்சாரம் வந்திருக்கு . 



போலீஸ்   என்ன நினைக்குதுன்னா வெடிகுண்டுச்சம்பவத்துக்குக்காரணமே  ஹீரோயினோட புருசன் தான் அப்டினு . ஹீரோயின் என்ன நினைக்கறா-ன்னா  தீவிரவாதியைக்கண்டு பிடிக்க துப்பு இல்லாம  புருஷன் மேல பழியைப்போட்டு கேசை , ஃபைலை க்ளோஸ் பண்ணப்பார்க்கறாங்கன்னு 


இந்த லட்சணத்துல   ஒரு போலீஸ் ஆஃபிசர் என் கூட  ஒரு வாட்டி  கில்மாக்கு வந்தா நான் உன்   புருஷனை கண்டுபிடிச்சுத்தர்றேன்கறார். 

 இந்த  சிக்கல்ல இருந்து நாயகி எப்படி வெளீல வர்றார் ?  ஹீரோயின்  புருஷன்  சாயல்ல  வேற  ஒரு ஆள்  தான்  தீவிரவாதியா?  என்பதை க்ளைமாக்ஸில்   2 ட்விஸ்ட் உடன் காண்க 


இசை அமைப்பாளர் மரகத மணி  தான்  முதல் பாராட்டுக்கு  உரியவர் . பிரமாதமான  பின்னணி இசை . பின்னிப்பெடல் எடுத்துட்டார் . ஹார்ட் பீட்டை எகிற  வைக்கும்  பிஜிஎம் 


அடுத்து நாயகி நயன்  தாரா . சும்மா  சொல்லக்கூடாது . தீர்க்கமான பார்வை , அசால்ட்டான பாடி லேங்குவேஜ் ( சால்ட் ஆன பாடி லேங்குவேஜ்க்கு எதிர்ச்சொல் தான் அசால்ட் ஆன பாடி லேங்குவேஜோ? ) அவர் நடிப்பில்  புதிய பரிமாணம் தொட்டிருக்கிறார் . இன்னும் 5 வருசத்துக்கு அவரை  யாராலும் அசைச்சுக்கு முடியாது  ( ஷூட்டிங்க் ஸ்பாட்ல போய் அசைச்சுப்பார்த்துட்டு நான் அசைச்சுட்டேன்னு எல்லாம் கடிக்கக்கூடாது ) 

பசுபதி    உயர் அதிகாரியா வந்து கை தட்டலை அள்ளீக்கறார் . அவர் வசன உச்சரிப்பு பக்கா  லோக்கல் 


கில்மா வுக்கு கூப்பிடும் அதிகாரி   சுமார் நடிப்பு . நயனின்  கூடவே வந்து  உதவும்  இன்ஸ்பெக்டர் நல்ல நடிப்பு . நயனுக்கு  புருசனாக வருபவர்க்கு அதிக வாய்ப்பில்லை . படம்  முழுக்க இவரைச்சுற்றித்தான் கதை ந்கர்கிறது . ஆனால் இவர் வருவது 4 காட்சிகள்  தான் 







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. டெட் பாடியை அடையாளம் காட்டச்சொல்லும்  அந்த மார்ச்சுவரி  சீன் கலக்கல் . பி ஜி எம் எம்மில்  மிரட்டிட்டாங்க . பயம் , சோகம் , திகில் கலந்து  நடிப்பில்  நல்ல ஸ்கோர் நயனுக்கு 


2  நயன்  தாராவுக்கு ஃபிளாஸ் பேக் காட்சி கொடுத்து   டூயட் எல்லாம்  போட்டு   சொதப்பாததற்கு   நன்றி.  செம த்ரில்லிங் பின் பாதியில் 



3 க்ளைமாக்சில்  வரும்  ட்விஸ்ட்   நல்லாருக்கு . ஓரளவு  யூகிக்க முடிந்த  திருப்பம்  தான் என்றாலும் பதட்டம்  இல்லாமல்  நிதானமாக அதை அவிழ்த்த  விதம்  அருமை 






இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   முன்  பாதி  திரைக்கதை  மிக  மெது. சி செண்ட்டர் ஆடியன்ஸ் உக்கார்வது கஷ்டம் 


2.  தனது கணவன்  தங்கி  இருக்கும் அறைக்கு  வந்து அதே ஹோட்டலில் தங்கும் நாயகி அந்த சின்னப்பையனிடம் ஏன் ஆரம்பத்திலேயே விசாரிக்கவில்ல்லை ? அவன்  தான்   கணவனிடம்  பேசியவன் என்பது   முதலிலேயே  தெரிந்தும்  ஏன் கண்டுக்கலை  ? 



3  அவ்ளவ்  பெரிய  போலீஸ் ஆஃபீசர்  ஏன்  நயனிடம் அப்படி  கெஞ்சிக்கிட்டு இருக்கார் ? இந்தக்காலத்துல சாதா கான்ஸ்டபிளே சர்வ சாதாரணமா  ரேப் பண்ணிட்டு  போய்க்கிட்டே இருக்கார். நயனுக்கு பாதுகாப்பா யாரும்  இல்லை , அம்மா அப்பா இல்லை ,. ஃபாரீனில்  இருந்து தனியா வந்து  தனியா  ஒரு பாடாவதி   ஹோட்டல் ல தங்கி  இருக்கார் / 10  நிமிசத்துல  முடிக்க வேண்டிய மேட்டரை  ஒரு மணீ நேரமா பம்முவது  ஏனோ ? 


4 முஸ்லீம்  பெரியப்வர்  ஒரு மேரேஜ்  ஃபங்க்‌ஷனுக்கு   வரச்சொல்றார். அங்கேஎ கொலையாளீ வருவாங்கங்கறார். நயனும் , நண்பரும் போறாங்க . அப்போ  ஃபோன் வந்து   நண்பர் ஏன் கிளம்பனும் ? அங்கேயே  இருந்து ஆளைப்பிடிக்கலாமே? கொலை ஆனது ஆகிடுச்சு. அரை மணீ நேரம்  லேட்டாப்போனா என்ன ?>


5 ஸ்கூட்டர்  கொலையாளீ ஆள்  செம குண்டு . போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆள் ட்ரிம்மா ஒல்லி. குண்டு ஆள் மெதுவா ஓடறான். இவரு செம வேகமா  ஓடறார். 10 நிமிச சேசிங்க் ல ஏன் பிடிக்க  முடியலை ? 


6 க்ளைமாக்ஸில்  அவ்வளவு  பெரிய  தீவிரவாதி  நயன்  கையால் குத்தப்படுவதை நம்ப  முடியலை . அவன் உடல் செல்  பூரா அலர்ட்டா இருக்காதா? 





மனம் கவர்ந்த வசனங்கள்

1. போலீஸ் ஸ்டேஷன் வந்தா மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரனும்.ஆனா நீங்க பேசறதை எல்லாம் பாத்தா பயம் தான் வருது # அனாமிகா 



2. என் கணவர் எல்லார் கிட்டேயும் சகஜமா பழகுவார். 



 ஓ.உங்க கிட்டே? # அனாமிகா



3. தீவிரவாதிங்க எல்லாரும் மசூதில இருந்தும் ,பள்ளி வாசல்ல இருந்தும் தான் வர்றாங்கனு பலர் தப்பா நினைச்ட்டு இருக்காங்க # அனாமிகா




4. ஒரு பெண்ணை கஷ்டப்படுத்திக்கண்ணீர் விட வெச்சவங்க உருப்பட்டதா சரித்திரமே இல்ல # அனாமிகா




5. ஒரு பொண்ணுக்கு மரியாதை தராத யாருக்கும் நான் மரியாதை தரனும்னு அவசியம் இல்லை # அனாமிகா



6. 400 பேர் சாவுக்குக்காரணமான ஒரு தீவிரவாதியையே உங்களால பிடிக்கக்கையாலாகலை.காணாமப்போன என் கணவரை எப்டி கண்டுபிடிக்கப்போறீங்க?#அனாமிகா



7. போலீஸ் காரன் பேச்சை என்னைக்கும் நான் நம்ப மாட்டேன் # அனாமிகா



8. ஒரு பொண்ணு எப்போ பூவா இருப்பா.எப்போ புயலா மாறுவா னு அவ மாறும் வரை சொல்ல முடியாது # அனாமிகா


9  ஏன் சார் > புருஷன்  இறந்த துக்கத்துல  டிரஸ் பத்தி கவலைப்பட முடியுமா? புகார்  குடுத்தா அதைக்கண்டுபிடிக்காம என் டிரஸ் பத்தி கமெண்ட் பண்ணிட்டு  இருக்கீங்க ? 






படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1. அதிரச நாயகி கம் நவரச நாயகி நயன் தாரா வின் அனாமிகா ( தெலுங்கு) ( தமிழில் நீ எங்கே என் அன்பே) ( வித்யா பாலன் ன் கஹானி ஹிந்தி ரீமேக் )

2. ஒரு அடி தடி இல்லை.தள்ளு முள்ளு இல்லை.இப்டி டீசன்டான ஆடியன்ஸ் இருந்தா படம் பார்க்கும் மூடே வராதே ;-))

3. வெடிகுண்டு தயாரிப்பு பற்றி இவ்வளவு விஸ்தீரணமாகக்காட்டுவது தடை செய்யப்படவேண்டும்.எடுத்துக்கொடுத்தது போல் ஆகிடும் # அனாமிகா

4. பிஜிஎம் கலக்கல்.சவுண்ட் இஞ்சினியர் வெல்டன் ஜாப் # அனாமிகா

5. வாவ்! திரைக்கதை = பிரபல நாவல் ஆசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத் # அனாமிகா

6. இசை அழகன் புகழ் மரகதமணி .பின்றாரு மனுசன்

7. 11 மணிக்கு படம் போட்டாச்சு.11 41 க்கு ஒரு காதல் ஜோடி தியேட்டருக்கு வருது.இனி எப்டி படம் புரியும்?( சப்போஸ் படம் பாக்க வந்திருந்தா)

8. மேலே ஜெர்கின்ஸ் ,கீழே லெக்கின்ஸ் ,மொத்தத்துல கின்ஸ் # நயன் தாரா காஸ்ட்யூம் கலக்கல்கள் @ அனாமிகா


அனாமிகா (தெலுகு)=நீ எங்கே என் அன்பே (தமிழ் டப்டு) = குட் த்ரில்லர் மூவி - நயன் நடிப்பு, BGM குட் = விகடன் மார்க் =41 ,ரேட்டிங் =3 / 5




சி பி கமெண்ட் 



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் = 3 / 5 


Directed bySekhar Kammula
Written bySekhar Kammula
Sai Prasad
Based onKahaani 
by Sujoy Ghosh
StarringNayantara
Pasupathy
Vaibhav Reddy
Harshvardhan Rane
Music byM. M. Keeravani
CinematographyVijay C. Kumar
Editing byMarthand K. Venkatesh
StudioEndemol India
Logline Productions
Select Media Holdings
Release dates1 May 2014[2]
CountryIndia
LanguageTelugu
Tamil
a


தஞ்சை ஜி வி காம்ப்ளெக்ஸ்


Friday, May 25, 2012

நயன் தாராவுடன் காதலா? ஆர்யா பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKz5h7Joupr3U37Qylq03nhXGJV0CwM_3pIxvZsyz5C3Yhyy5DqJijorA9Oxt56CHTz-kGJhiBwnKyGQgi6r4aV9A3ZSihwdGrcSwTlCditvBDESb6XD91yuz71prX8c9a0_-qdGy8lBsx/s1600/Nayanthara+(11).jpgவேட்டை’யை முடித்துவிட்டு 'சேட்டை’யில் இறங்கிவிட்டார் ஆர்யா. நான்வெஜ் ஜோக்ஸ், டாய்லெட் காமெடி என்று இந்தியில் பட்டையைக் கிளப்பிய 'டெல்லி பெல்லி’யின் தமிழ் ரீ-மேக் இது. சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி என செம கலகலப்பில் இருந்த ஆர்யாவை மட்டும் தனியே தள்ளிக்கொண்டு வந்தேன்...


சி.பி - பெல்லி கில்லின்னு டைட்டில் வெச்சிருக்கலாம் அல்லது சேட்டைக்காரன்னு வெச்சிருக்கலாம் கெத்தா இருந்துருக்கும்


1. ''செம போல்டான 'டெல்லி பெல்லி’யை அப்படியே இங்கே எடுக்க முடியுமா?''



சி.பி - நாங்க எல்லாம் அப்பவே அப்படி, இப்போ கேக்கனுமா? எதை எடிட் பண்ணனும்? எதை சேர்க்கனும்னு தெரியாதா?
''கொஞ்சம் காரம் குறைச்சிருக்கோம். நான், சந்தானம், பிரேம்ஜினு காம்பினேஷன். வெடிச்சுச் சிரிக்கவைக்கும். ஆக்ஷன் சொன்னதும் யூனிட்டே சிரிச்சு உதறுது. சந்தானத்தோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் இப்போ காமெடி ஈஸியா வொர்க் - அவுட் ஆகுதுங்க!''


சி.பி - அது வேணா உண்மை தான், பாஸ் எ பாஸ்கரன் நல்லா காமெடி களை கட்டுச்சு, கல்லாவும் கட்டுச்சு


2. ''அதேசமயம் செல்வராகவன் படத்திலும் நடிக் கிறீங்க... அது வேற ஸ்கூல் ஆச்சே..?''


 சி.பி -அது ஸ்கூல்  இல்லிங்கோவ் சைக்கோ யுனிவர்சிட்டிங்கோவ்



''அது ஸ்கூல் இல்லை... யுனிவர்சிட்டி. 'ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார். அவர்கிட்ட எந்த ஜாலியும் வேலைக்கு ஆகாது’னு சொல்வாங்க. ஆனா, 'இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்ல கேமரா ரோல் ஆகும்போது மட்டும்தான் அப்படி இருப்பார். 'கட்’ சொன்ன அடுத்த நொடியே, அவர் வேற ஆளா மாறிடுவார். உறவுகள்... நமக்குப் பரிசளிக்கிற உயரம், கொடுக்கிற துயரம்னு ரொம்ப சென்சிட்டிவ்வான கதை. எனக்கு ஜோடி அனுஷ்கா. செம ஃப்ரெண்ட்லி  பொண்ணு. எதைப் பத்தியும் அவங்ககிட்ட பேசலாம். ஒவ்வொரு நாளும் ரசனையா, திருப்தியா போகுது.''


 சி.பி - இரண்டாம் உலகம் இரண்டாம் மயக்கம் என்ன மாதிரி இல்லாம இருந்தா சரிதான்..



''3. அஜீத்கூட நடிக்கிறீங்கபோல... அதுவும் வில்லனா?''


சி.பி - இந்த மாதிரி கேள்வி கேட்டே நல்லா நட்பா இருக்கறவங்களையும் யோசிக்க வெச்சுடுங்க 
''எனக்கு அஜீத்தை ரொம்பப் பிடிக்கும். 'மங்காத்தா’வில் அறிமுக நடிகர்களோடு எந்த ஈகோவும் இல்லாம நடிச்சு இருப்பார். அவரை நான் மீட் பண்றப்போ, என் படங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் பேசுவார். அவரோட ஒவ்வொரு வார்த்தையுமே அவர் நம்ம மேல் வெச்சிருக்கிற அக்கறையைச் சொல்லும். இந்தத் தடவை அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். 'விஷ்ணு சொன்னார், நாம இரண்டு பேரும் சேர்ந்து கலக்குவோம்’னு சொல்லிச் சிரிச்சார். விஷ்ணுவர்தன் எனக்கு செம ஃப்ரெண்ட். அவர் தன்னோட படத்தில் என்னை ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன்.''



4. ''என்னங்க, எங்கே பார்த்தாலும் உங்க புது வீட்டுக்கு நயன்தாரா வந்தாங்கனுதான் பேச்சு...''



சி.பி - வந்தாரு, ஓக்கே ஆனா மறுபடியும் ரிடர்ன் போக 36 மணி நேரம் ஆச்சாம். 

''பத்து ஹீரோ, பத்து டைரக்டர்கள் வந்திருந்தாங்க... நயன்தாராவும் வந்திருந்தாங்க. ஆனா, அவங்க வந்தது மட்டும் நியூஸ் ஆகிடுச்சு. 'எங்க வீட்டுக்கு நிறையப் பேர் வந்திருக்காங்க. நீ வந்ததுதான் பரபரப்பாகிடுச்சு’னு நயன்கிட்ட சொல்லிச் சிரிச்சேன். அவ்வளவுதான்... இதுல பெரிய விசேஷம் எதுவும் இல்லை.''



சி.பி - அடேங்கப்பா மொத்தம் 21 பேரா? ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw7LYX52PMopZMZ-e2bjAd9mNFPmjdnLNlB5jlkklCs3gc7tWDccfbo2KDMYpJvoBOKNnxZv5c3XUwUZHVyy-1EUgjrE-YvY5QRWBU7qbzX4IW1QZE4opdLXN0UmCu_nLihwoRsyIE2_bT/s1600/Nayanthara1.jpg

5. ''என்னங்க இது, 'வெல்கம் பேக் நயன்தாரா’னு எழுதி, கேக் வெட்டி வெல்கம் சொல்லியிருக்கீங்க... விசேஷம் எதுவும் இல்லைன்னா எப்படி?''


சி.பி - அதானே, வெல்கம் ஃபிராண்ட், வெல்கம் சைடு என ஏன் எழுதல இதை வன்மையாக கண்டிக்க்றேன் :) 







''அவங்க கொஞ்சம் அப்செட்டா இருந்தாங்க. அதனால, வீட்டுக்கு வந்தவங்களைக் குஷிப்படுத்த அப்படிப் பண்ணேன். அவ்ளோதான் பாஸ்!''


சி.பி - நயன் தாராவை குஷிப்படுத்திய ஆர்யான்னு டைட்டில் வைக்கலாமா? 
6. ''இப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தானே?''


சி.பி - ஆமா திக் ஃபிரண்ட்ஸ்.  



'' 'பாஸ்’ படத்துல இருந்தே பழக்கம்.  'பாஸ்’ பட ஷூட்டிங் சமயம் அவரோட செம 'லவ்’வில் இருந்தாங்க. அப்பவும் நான் ஃப்ரெண்டுதான்... இப்பவும் நான் ஃப்ரெண்டுதான்!''


7. ''உங்க ஃப்ரெண்டோட காதல் பிரிவுக்கு என்ன காரணம்னு விசாரிச்சீங்களா?''


''அதை எப்படிங்க கேட்க முடியும்? 'என்னாச்சு’னு மட்டும் கேட்டேன். 'வொர்க் - அவுட் ஆகலை’னு ஒரே வரியில் முடிச் சுட்டாங்க. காதல், கல்யாணம் எல்லாம் அவங்களோட ரொம்ப பெர்சனல்.''



சி.பி - அது என்ன ஜிம்ல போய் பண்ற எக்சசைஸா? ஒர்க் அவுட் ஆகாம இருக்க?


http://media5.onsugar.com/files/2011/06/22/5/1756/17567308/ca/nayanthara-hot-sexy-gallery-4.jpg

8. ''அப்ப ஆர்யா - நயன்தாரா நடுவில் காதல் இல்லவே இல்லையா?''


''என்னங்க... ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா? கிசுகிசு வருதேனு காதல், கல்யாணம்லாம் பண்றதுன்னா...  எப்பவோ நான் கல்யாணம் பண்ணியிருக்கணும். என் அப்பா - அம்மா எனக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. நம்ம மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு வரட்டும். அப்புறம் பண்ணிக்கலாம் கல்யாணம். நாம எப்பவும் அப்பா - அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும். நான் இருக்கேன். அது போதும் சார்.''


சி.பி - அண்ணன் என்ன சொல்ல வர்றாருன்னா நயன்க்கு ஆறுதலா இருப்பாரு, குஷிப்படுத்துவாரு, சந்தோஷப்படுத்துவாரு. ஆனா கல்யாணம் பண்ணி படுத்த மாட்டாரு.. 

Thursday, March 29, 2012

போடா போடி ??- தனுஷ், 9 தாரா ?!! - வேட்டை மன்னன் சிம்பு பேட்டி காமெடி கும்மி


http://www.innisaitamil.com/images/cd_images/1323747983_vettai%20mannan.jpg


அமெரிக்கக் குளுமை இன்னமும் படிந்திருக்கிறது சிம்பு முகத்தில்!  'வேட்டை மன்னன்படத்துக்காக பின்னி மில்லில் பின்னி எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் காதல், லவ் ஆன்தம், தனுஷ், கொலவெறி, ஸ்ருதி, ஸ்டார் கிரிக்கெட், கல்யாணம்... இன்னும் நிறையப் பேசியதில் இருந்து...  


சி.பி -பின்னி மில்லுல பின்னிட்டு இருந்தாரா? எதை? ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியோட ஜடையையா?


1.  '' 'லவ் ஆன்தம்ஆல்பம் ரெடியா?''

சி.பி - லவ் பண்றவங்க எல்லாருமே தாடி வெச்சுட்டு தம் அடிக்கனும்கறதை சிம்பாலிக்கா சொல்றதுதான் லவ் ஆன்”தம்”ம்மா?



''அது ரெண்டு மாச உழைப்பு. 'ஒரு பாட்டோட நிறுத்த வேணாம். முழு ஆல்பமாவே பண்ணிரலாம்னு முடிவு பண்ணி இறங்கிட்டேன். புரொமோஷனுக்காக வெளியான ரெண்டு நிமிஷப் பாட்டுக்கே பாராட்டு அள்ளுச்சு. முழு ஆல்பத்தைச் சிலருக்கு மட்டும் போட்டுக் காமிச்சேன். 'செம சூப்பர்னு மனம் திறந்து பாராட்டினாங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ரிலீஸ். ரொம்பப் படபடப்பா, ஆர்வமா இருக்கு. எல்லாம் சரியா அமைஞ்சா, இந்த ஆல்பம் எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கித் தரும்!''


சி.பி - என்னது? சிம்பு அண்ணனுக்கு நல்ல பேரா? குறளரசன் திகைப்பு.. டி ஆர் நகைப்பு.. ஹி ஹி 


http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/10/Hansika_gangster_Vettai-Mannan.jpg
2. ''நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க. ஆனா, 'சிம்பு ஷூட்டிங் வராம அமெரிக்கா போய் உட்காந்துட்டாரு. தயாரிப்பாளர்கள் கொதிச்சுப்போய் இருக்காங்கனுல இங்கே செய்தி பரவிக்கிடக்கு?''  

''நான் எது பண்ணாலும் தப்பாப் பேசுறவங்க கௌப்பிவிடுறதுதான் இதுவும். 'வேட்டை மன்னன்தயாரிப்பாளர்கிட்ட 'லவ் ஆல்பம்வேலைகளுக்காக அமெரிக்கா போறேன்னு முன்னாடியே சொல்லிட்டுத்தான் கால்ஷீட் தேதி கொடுத்தேன்

சி.பி - அதானே, அமெரிக்கா எப்போதான் சுத்தி பார்க்கறது?


'போடா போடிபடத்தின் வெளிநாட்டு லொகேஷன் களின் படப்பிடிப்புக்கு உடனே அனுமதி கிடைக்கலை. சரி... சென்னைக்குக் கிளம்பு வோம்னு பார்த்தா, இங்கே ஸ்டிரைக். 'கிடைச்ச நேரத்தை ஆல்பம் வேலைகளுக் குப் பயன்படுத்திக்கலாம்னு இறங்கிட் டேன். எனக்குச் சம்பளம் கொடுக்கும் எந்தத் தயாரிப்பாளரும் என்னைப் பத்தி எந்தப் புகாரும் பண்ணலை. மத்தவங்களைப் பத்தி நான் ஏன் கவலைப்படணும்? இன்னும் எவ்வளவுதான் பேசுறாங்கனு பார்க்கலாம்!''

சி.பி - நல்ல வேளை.. நீங்க கெட்டவர்ங்கறதுக்காகத்தான் உங்க பட டைட்டிலே கெட்டவன்னு வெச்சாங்களா?ன்னு யாரும் கேட்கலை..


http://static.sify.com/cms/image//lf0tKCchiaa.jpg


3. ''என்னதான் சமாதானம் சொன்னாலும் 'போடா போடிஆரம்பிச்சு ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சே... இது அதீத தாமதம்தானே?''  



'' 'போடா போடிரொம்ப ஸ்டைலான படம். சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. 'ஹம் ஆஃப் கே ஹைன் கௌன்மாதிரி கலர்ஃபுல்லான படம்.

சி.பி -சுத்தம்.. அப்போ அந்தப்படத்தோட அப்பட்டமான தழுவலாத்தான் இருக்கும்.. கேட்டா ஜ்ஸ்ட் இன்ஸ்பிரேஷன்...பாங்க


 அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. வெய்ட் பண்ணுங்க... 'விண்ணைத் தாண்டி வருவாயாபடத்தில் என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!''

சி.பி - விண்ணைத்தாண்டி வருவாயா? ஹிந்தி வர்ஷன்ல ஊத்திக்கிச்சாம்.. இதான் நல்ல சான்ஸ்.. விடாதீங்க.. ஹிந்தி ரீமேக்ல நான் நடிச்சிருந்தா சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்னு அறிக்கை விடுங்க.. இப்போ அது தான் ஃபேஷன்..  

http://2.bp.blogspot.com/_T1vzYiWcy7U/SMs-ocq_LAI/AAAAAAAAXjA/MdpYpjWIq0o/s1600/Podaa-Podi-Movie-stills-simbu%2B(9).jpg


4. ''முன்னாடி ஸ்டார் கிரிக்கெட்னா முதல் ஆளா நிப்பீங்க... இந்த சீஸன்ல ஆளைப் பார்க்க முடியலையே?''  


''இப்போ ஜெயிச்ச செட்ல பலரை டீமுக்குள் கொண்டுவந்ததே நான்தான். டீம் வொர்க்தான் கிரிக்கெட்டின் அழகு. ஆனா, அதைப் புரிஞ்சுக்காம சிலர் என்னை டாமினேட் பண்ணப் பார்த்தாங்க. எனக்கு எதிரா சில வேலைகள் பார்த்தாங்க. முக்கியமான முடிவுகள்ல வேணும்னே என்னைப் புறக்கணிச்சாங்க. அதான் நான் ஒதுங்கிட்டேன். ஆனா, அடுத்த முறை நிச்சயம் டீம்ல இருப்பேன். கிரிக்கெட்டையும் என் னையும் பிரிக்க முடியா துங்க!''


சி.பி - கிரிக்கெட் என்ன நயன் தாராவா?


5. ''இவ்வளவு நாள் லவ் பண்ணாம இருக்கிறது கஷ்டமா இருக்குமே?''


சி.பி - வாரத்துக்கு வாரம் வித்தியாசம் அதுதான் சிம்பு ஹி ஹி ஆ:ளை அடிக்கடி மாத்து... நம்பி வர்ற ஃபிகரை ஏமாத்து.. இதுதான் அண்ணன் பாலிசி

''இல்லைங்க... அமெரிக்காவுல என் கஸின் வீட்ல ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்குச் சாதம் ஊட்டுறதுல ஆரம்பிச்சு நாப்கின் மாத்துறது வரை நானே எல்லாம் பார்த்துக்கிட்டேன். அவன்கூடவே விளையாடிட்டு இருந்தப்ப, நானே என்னை ஒரு சின்னப் பையன் மாதிரி ஃபீல் பண்ணேன். அப்போதான் சட்டுனு அப்பா ஆகணும்... மகனைப் பார்த்துக்கணும்னு ஆசை வந்துச்சு.


உண்மையைச் சொன்னா, கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு நம்பிக்கையும் இல்லை; ஆசையும் இல்லை. கல்யாண வாழ்க்கை மேல சின்ன பயம்கூட இருக்கு. ஆனா, 'அப்பா ஆசைக்காகத்தான் கல்யா ணம் பண்ணிக்கலாம்னு தோணுது. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். காதல் கல்யாணம்தான் ஆசை. அது ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். ஆனா, ஒரு வருஷத்துக்குள் காதல் வருமான்னு தெரியலை. பார்க்கலாம்!''

http://www.kollytalk.com/wp-content/uploads/2012/03/Varalaxmi-Sarathkumar-Celebrates-Womans-Day-3.jpg
போடா போடி படத்தில் வரலட்சுமி சரத்குமார் ( சரத்குமாரின் மகள்)
6. ''வீட்லயும் பொண்ணு பார்ப்பாங்களே... உங்க கண்டிஷன்கள் என்ன?''


சி.பி - என்ன புது கண்டிஷன்? எல்லாரும் சொல்றதுதான்.. பொண்ணு குடும்பப்பாங்கா இருக்கனும்.. அவங்க வீடே பேங்க்கா இருக்கனும்.. வீட்டுக்கு புருஷன் மிட் நைட்ல லேட்டா வந்தாலும் கண்டுக்கக்கூடாது.. 


''பொண்ணு அழகா இருக்கணும். நல்ல சிவப்பா இருக்கணும். ஏன்னா, எனக்கு அழகான குழந்தை வேணும். நான் சரியாப் படிக்காதவன். அதனால, பொண்ணு நல்லாப் படிச்சிருக்கணும். சினிமாபத்தி கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். என்னைப் பார்த்து பயப்படக் கூடாது. தைரியமா, தன்னம்பிக்கையோட இருக்கணும். சுருக்கமா சொன்னா, ஒய்ஃப் வந்தா... என் லைஃபே மாறணும். அப்படி ஒரு தேவதையா இருக் கணும்!''




Andrea is not Simbus heroine

7. தனுஷ் மேல் கொலவெறியா?


''தனுஷோட 'கொலவெறிக்குப் போட்டியாதான் 'லவ் ஆன்தம்ஆல்பம் பண்றீங்களா?''

''ஒரு பாட்டு சந்துபொந்தெல்லாம் ஹிட் ஆகுற துக்கு, 'நாக்க முக்க’, ' போடுனு ஏற்கெனவேநிறைய உதாரணங்கள் இருக்கு. 'லூஸுப் பெண்ணேனு காதல் தோல்வி ஃபீலிங் பாட்டு டிரெண்டை ஆரம்பிச்சு வெச்சதே நான்தான். இப்போ நேரம் கிடைச்சதால், 'லவ் ஆன்தம்பண்றேன். இதை தனுஷ§க்குப் போட்டினு சொன்னா, அது தப்பு. அப்படி எல்லாம் சீப்பா நடந்துக்கிற ஆள் நான் இல்லை. சொல்லப்போனா, என் ஆல்பம் பேரைப் பார்த்து காப்பி அடிக்கிறவங்க தான் இங்கே இருக்காங்க!''


சி.பி - அண்ணன் எடுத்த படம் எல்லாம் காப்பி.. இதுல அண்ணனையும் காப்பியா? அவ்வ்வ்  .. லூசுப்பெண்ணே.. பாட்டு செம ஹிட் தான் .. ஆனா பிக்சரைசேஷன் மகா மட்டம்.



8. இப்போ தனுஷ்தான் மன்மதனா?




''வழக்கமா ஹீரோயினுடன் காதல்னு உங்க பேர்தான் அதிகமா கிசுகிசுக்கப்படும். இப்போ அந்த இடத்துல தனுஷ் இருக்காரோ?''  


''அவர் லவ் மேட்டர் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது.



சி.பி - என்னாது? அவரோட லவ்வர் ஒரு மேட்டரா? என்னா பேச்சு இது ? ராஸ்கல்? ஏதோ சித்தார்த்தை 2 வருஷம் லவ் பண்ணாங்க.. அப்புறம் தனுஷை 1 வருஷம்.. இப்போ மறுபடி சமாதானம் ஆகி சித்தார்த்தை லவ்விங்.. 3 படம் ஹிட் ஆனா மறுபடி தனுஷ்க்கு ஒரு சான்ஸ் தர்றாராம் ஹி ஹி மற்றபடி அம்மணி நெம்ப நெம்ப நல்ல டைப்ப்ங்கோவ்

 
 என்னைப் பத்தி எதுவும் தப்பா நியூஸ் வர்றதில்லைங்கிற வரை எனக்குச் சந்தோஷம். முன்னாடி விகடன்லயே என்னைத்தான் போட்டு பரேடு எடுப்பீங்க. இப்போ 'வலைபாயுதேகமென்ட்டில் மட்டும்தான் நாம அடிபடுறோம். 'என்னடா பையன் எந்தத் தப்பும் பண்ணாம சும்மா இருக்கானேனு வீட்ல பயந்துட்டாங்கபோல. பரபரனு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் சரினு சொல்லிட்டேன். எவ்வளவு நாள்தான் தனியாவே சுத்திட்டு இருக்கறது?''


சி.பி - விகடன் தாத்தா சைக்கிள் கேப்ல வலை பாயுதே பகுதியை விளம்பரம் பண்ணி எடுத்து அள்ளி விடறாங்க..அப்படி எல்லாம் அவர் சொல்லி இருக்கவே மாட்டார்.. இதுதான் இடைச்செருகல் ஹி ஹி 


http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/nayanthara-simbu-0424-550.jpg


9. ''அப்போ உங்களைத்தான் எல்லாரும் திட்டிட்டு இருந்தாங்க. இப்போ நயன்தாரா பிரபுதேவாகிட்ட இருந்தும் விலகிட்டாங்களே?''



''யார் பண்ண தப்புக்கோ... நாம திட்டு வாங்குறது நம்ம ராசிங்க. நயன்தாரா நல்ல பொண்ணுதான். ஆனா, ஏன் அவங்களுக்கு இப்படியே நடக்குதுனு தெரியலை. அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும். அது போதும் எனக்கு!''

சி.பி - மைன்ட் வாய்ஸ்ல எங்கே இருந்தாலும், யார் கூட இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்ற மாதிரி கேட்குது ஹி ஹி



10. ''நயன்தாராகூட சேர்ந்து நடிப்பீங்களா?''


''நானா தேடிப் போக மாட்டேன். கதைக்குத் தேவை இருந்தால், இயக்குநர் 'அவங்கதான் வேணும்னு சொன்னா, நான் நடிக்கச் சம்மதிப்பேன். நடிப்பது என் தொழில். அதில் பெர்சனல் விஷயங்களைக் கொண்டுவரக் கூடாது!''


சி.பி - ஆர்யா பற்றி எதுவுமே கேட்கலையே? என்ன நிருபர் நீங்க? குமுதம் பாருங்க.. இந்த வாரம்.. ஆர்யா பற்றி அண்ணன் கிட்டே கேட்டு பொளந்து கட்டி இருக்காங்க..  ( 9 தாரா யா யா யா யா யாயா-னு 6 டை, ஆர்யா ( 6 யா) பச்சை குத்தி இருக்காராம் ஹி ஹி 6 யா + 9 தாரா = 69 ஜென்மக்காதல்கள் ஹி ஹி 

http://www.extramirchi.com/gallery/albums/south/actors/Simbu_nayanthara/Simbu_nayanthara__Hogenakkal_fast2.jpg


அண்ணே.. பேப்பர் தலைகீழா இருக்கு ஹி ஹி

Thursday, March 31, 2011

63 நாயன்மார்களும் (காங்க் ) ஒரே ஒரு நயன் தாராவும் (ஆங்க்)

http://www.skynyxonline.com/myimages/actress/nayanthara/nayanthara-hot-sexy-gallery-4%5B1%5D.jpg 

1. தலைவர்  ஏன்  கோபமா  இருக்கார்?

ஓய்வுக்கே  ஓய்வு  கொடுத்தவருக்கு  நாம  ஓய்வு  கொடுத்து  வீட்டுக்கு  அனுப்புவோம்னு  அவரோட எதிரிகள்  பிரச்சாரம்  செஞ்சாங்களாம்.

------------------------

2. தலைவருக்கு  தேர்தல்  ஜுரம்  பிடிச்சிருக்கு...

இப்பவே  இப்படின்னா  தேர்தல்  ரிசல்ட்  ஜுரம்  வந்தா... அவ்வளவுதான்  போல...

-----------------------

3. அரசியலில்  என்னை  தோற்கடித்தால்  நான்  சினிமாவில்  நடிப்பேன்னு  தலைவர்  அறிவிச்சிருக்காரே?

ஆமா... அவரோட  நடிப்பை  பார்க்கற  கொடுமைக்கு  ஆட்சிப்  பொறுப்பையே  குடுத்துத்  தொலைச்சிடுவோம்-னு  மக்கள்  நினைக்கட்டும்னுதான்.

------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/nayanthara27.jpg
4. தலைவருக்கு  அரசியல்  அறிவு  சுத்தமா இல்லைனு  எப்படி  சொல்றே?

தமிழகத்தில்  500  தொகுதிகளிலும்  தனித்துப்  போட்டி  இடுவோம்னு  முழங்குனாரே?

--------------------------------

5. தலைவரோட  நாக்கு  குழறுனதால  கட்சில  ஏகப்பட்ட  குழப்பமாமே?

ஆமா...  என்  கூட  பிரச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்கறப்ப  வாய்  குழறி  மகளிர்  அணித்தலைவி  கிட்டே, “என்  கூட  விபச்சாரம்  செய்ய  வர்றீங்களா?-னு  கேட்டுட்டாராம்.

---------------------------------

6. தலைவருக்கு  சின்னம்  இன்னும்  ஒதுக்கலையாமே?

ஆமா...  போற  போக்கைப்  பார்த்தா  அவரையே  ஒதுக்கிடுவாங்க  போல.

--------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqV0VCL9C1k3J54sR_kSPDwjFvi80i5h3o_IEfzDiHlTg-95JQ7bIQ7315IUZbcQ8MTGJFZq-9lmSR2HQ-QebY76XtIxZZq0_OZiKz2vKILjqDO23N10kAssr7_f5D4RTrj7Q5JCEwY8A/s400/Nayantara-Photos-074.jpg
7. கூட்டணித்  தலைவரோட  பேச்சு  வார்த்தை  நடக்கறப்ப  சொடக்கு  எடுத்துவிடறாரே  தலைவரு...?

“எப்படியாவது  அவரை  மடக்கிடுங்கனு  கட்சி  மேலிடம்  சொன்னது  அவர்  காதுக்கு  எப்படியாவது  சொடக்கிடுங்க-னு  கேட்டுதாம்.

--------------------------------

8. தலைவர்  பேச்சைக்  கேட்டு  ஊரே  சிரிச்சுதாமே?

மக்கள்  ஆட்சிவர  ஆதரவளிப்பீர்-னு  சொல்றதுக்குப்  பதிலா  மாக்கான்  ஆட்சி  அமைக்க  ஆதரவு  தாரீர்-னு  உளறிட்டாராம்.

----------------------------

9. தலைவர்  எதுலயும்  பர்ஃபக்‌ஷன்  எதிர்  பார்ப்பார்...

அதுக்காக  மகளிர்  அணித்தலைவி  மேட்சுக்கு  மேட்சா  ஜாக்கெட்  போடலைங்கறதை மேடைலயே  சொல்றது  ஓவர்...

----------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy53lnYNvfAcw27J7C1f84isOoJzcS8uvGIdGvqP4qZ7rwo1FysiRzDtJmrhmVtl7fyAN6RDmcwpyaC9o2XVRnCwl4IuITesOqRykpHmcc7vSmyBezMVMkIjwv9vmEvxTfxmjhE3w7hBc5/s400/nayantara_image_06.jpg
10. இதுவரை  எனக்கு  63  பேர்  லவ்  லெட்டர்ஸ்  குடுத்திருக்காங்க...

அடேங்கப்பா..மேடம்.... பயங்கரமான  நாயன்மார்கள்  கதை  உங்களுதுதான்  போலிருக்கே!  மரித்திடாத  சரித்திரம்  படைத்த  மகளிர்  அணித்தலைவி-னு  போஸ்டர்  ஒட்டிடவேண்டியதுதான்.


டிஸ்கி - இதை எழுதுனா யாரும் ஜோக்கைப்பற்றி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிடறாங்க.. சோ டிஸ்கிக்கு தடா...ஹி ஹி 

விளக்க டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம் 63 நாயன்மார்கள் என்று கலைஞரால் வர்ணிக்கப்பட்ட காங்கிரஸ் தனது தகுதிக்கு மீறி அதிக சீட்டுக்கு ஆசைப்படுது.. நயன் தாரா தன் தகுதியை விட்டு இறங்கி.......... சோ 2 பேரும் அடையப்போவது தோல்விதான்...

Saturday, January 01, 2011

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPJah30Q8wP_awUe4bxDnUsobCzoc6WhXbU4HIJYohZurjICzfRXQv_Tcfatq8VEmgoqFg8mnt-OS80D7cEs-QQShAgZdXmFCdgoY4WOr5lgZ-NfPzAMay0UtNEQ3WHif-TUAN9-G1HnOX/s400/odum.jpg
1. கமல் - எனக்கு பொண்ணுங்களே பிடிக்காது..அப்புறம் முத்தம் தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.

2. ரஜினி - எனக்கு வயசு 20. என் அடுத்த படத்துல அனாகா என்கிற அம்லாபால் தங்கச்சிதான் ஜோடி.அரசியலுக்கு வருவேனா? வரமாட்டேனா ?அப்படிங்கறதை 2011 முடிஞ்சாக்கூட சொல்ல மாட்டேன்.

3. கே பாக்யராஜ் - எனக்கு டான்ஸ் நல்லா வரும்.சித்து பிளஸ் டூ படம் பட்டி தொட்டி எல்லாம் நல்லா ஓடுது.


4.தனுஷ் - தமிழகத்தின் அர்னால்டு நான்தான். பொங்கலுக்கு வர்ற ஆடுகளம் ஆக்‌ஷன்ல மைல்கல் படம்னு பேர்வாங்கும்.

5.ராஜ்கிரண் - எனக்கு ஜீன்ஸ் பேண்ட் ரொம்ப மேச்சிங்க் டிரஸ்.ராஜ் டிவி என்னுதுதான்னும்,கிரண் எனக்குப்பிடிச்ச நடிகைன்னும் சிலர் சொல்றாங்க அது உண்மை இல்ல.
http://narumugai.com/wp-content/uploads/2010/12/Nayanthara3.jpg
6. சிம்பு - நான் என் லைஃப்ல ஒரே ஒரு பெண்ணை மட்டும்தான் லவ் பண்ணுவேன்.


7. விஜய்காந்த் - விருதகிரி எம் ஜி ஆர் நடிச்சு டைரக்ட் பண்ணுன உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி கலக்கிட்டு இருக்கு.அதனாலதான் விருதகிரி 10வது நாள் போஸ்டர்ல உலகம் சுற்றும் வாலிபன் பட ஸ்டில்ல்லை போட்டிருக்கேன்.

8. அஜித் - மங்காத்தா படம் ஒரு ஆத்தா செண்ட்டிமெண்ட் படம்.

9. பிரபுதேவா - என் அடுத்த படம் டைட்டில் ஒருவனுக்கு ஒருத்தி.

10. விஜய் - எங்கம்மா சத்தியமா நானும் ஒரு ஹீரோ,நம்புங்க

டிஸ்கி 1- காலைல 7 மணிக்குத்தானே ஒரு பதிவு போட்டே ,அதுக்குள்ள என்ன மறுபடி ஒரு பதிவு?ன்னு கேக்கறீங்களா? அது அட்டர் ஃபிளாப் ஆகிடுச்சு.அதான்.( புது வருசம் ஓப்பனிங்கே சரி இல்லையே).

டிஸ்கி 2 - ஹீரோக்கள் பற்றிய பதிவுக்கு ஹீரோயின் நயன்தாரா ஸ்டில் எதுக்கு? காரணம் 1 - ஹீரோக்கு ஜோடி வேணாமா?  காரணம் 2 - பிரபுதேவா ஸ்டில் போட்டு உங்களை கடுப்பேற்றவிரும்பவில்லை.அதுக்கு சப்ஸ்டிடியூட்டா...நயன்