Showing posts with label NANJUPURAM. Show all posts
Showing posts with label NANJUPURAM. Show all posts

Friday, April 01, 2011

நஞ்சுபுரம் - திக் திக் ஸ்னேக் திக் - சினிமா விமர்சனம்


http://mimg.sulekha.com/tamil/nanjupuram/wallpaper/800-600/nanjupuram-desktop-themes91.jpg
தளபதி,ரோஜா,ராவணன் என்று மணிரத்னம் மட்டும் தான் புராணக்கதைகளை உல்டா பண்ணுவாரா? நாங்களும் செய்வமல்ல என சில கோடம்பாக்கத்து இயக்குநர்கள் கிளம்பி இருக்கிறார்கள்... அதில் ஒரு லோ பட்ஜெட் உல்டா தான் இந்த நஞ்சு புரம்.

முனிவரை அவமானப்படுத்திய பரீட்சித்த மகாராஜா பாம்பால் இறக்கும் சாபம் பெற்று, அதே போல் இறந்தாரே.. அதை அப்படியே கொஞ்சம் உட்டாலக்கடி பண்ணி கிராமத்து பின் புலத்தில் கிளாமருக்கு மோனிகாவை காதலி ஆகி விட்டால் நஞ்சு புரம் ரெடி...

பாம்புகள் அதிகம் உள்ள ஒரு கிராமத்துல ஹீரோ ஒரு பாம்பை அடிச்சுட்டு தப்பிக்க விட்றாரு.. அடி பட்ட பாம்பு 40 நாட்களுக்குள் பழி வாங்க வருமாம்.. ( பாம்பு கூட காலண்டரை மெயிண்டெயின் பண்ணுதோ..? #டவுட்டு)அதனால ஹீரோ ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு மேடை அமைச்சு உயரத்துல தங்கறாரு.. 40 வது நாள் அன்னைக்கு என்ன நடக்குதுங்கறதுதான் க்ளைமாக்ஸ்....







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivD4XXFYPi2zXxZ6H6qE_7iYCbIOz66bAhezid2SD7s2M7eeyoCbToppr9nwLEq0sYRIwqnQsEdITRULMzTuE6MyW0bLgLYgPjLC6PeJIeX9YgjKdK4da2uVPmT2KGRLGbYYUPtb2gY8I/s1600/Monika-at-Nanjupuram-Audio-Launch+%25281%2529.jpg

தமிழ் சினிமா ஹீரோவோட இலக்கணப்படி இவரும் தலையே சீவாம ஃபங்க் தலையோட சுத்திட்டு இருக்காரு.. நடிப்புக்கு பாஸ் மார்க்...ஹீரோயின் அழகி புகழ் மோனிகா...கிராமத்து கதை என்பதால் இவருக்கு டல் மேக்கப் போட்டது இயக்குநரின் அறியாமையா? மேக்கப் மேனின் அசால்டா தெரிய வில்லை...ரொம்ப நாளுக்குப்பிறகு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர்.. நிறைவாக செய்து இருக்கிறார்...

இயக்குநரை மெச்ச வைக்கும்  சீன்கள்

1. பாம்பு பிடிக்க பானையை துளை செய்து , பாம்பு நுழைந்த பைப்பில் ஒரு புறம் வைத்து மறு புறம் புகை விடுவது அசல் கிராமத்து பாம்பு பிடிக்கும் முறையின் பதிவு...

2. நடு ராத்திரியில் சட்டையை தண்ணீரில் நனைத்து சேவல் திருடன் சேவலை ஒரே அமுக்காக அமுக்குவது...

3.ஹீரோ, ஹீரோயின் லிப் டூ லிப் கிஸ் சீனை மிக கவுரவமாக காட்டியது.. ( அனுஹாசனின் இந்திரா பாதிப்பு இருந்தாலும்.. )

4.கதைக்களம் கிராமம் என்பதால் ஹீரோயின் உட்பட அனைத்துப்பெண் கேரக்டர்களும் எல்லா சீன்களிலும்  கனகாம்பரப்பூவை அணிந்திருப்பது போல் காண்பித்தது..  ( 2 சீன்ல மட்டும் மல்லிகைப்பூ #கிக்குக்காக)

5. ஹீரோ தாமரைப்பூவை குளத்தில் இறங்கிப்பறித்துத்தந்தார் என்றதும் ஹீரோயின் தன் தாவணியால் ஹீரோவின் தலையை துவட்டியதும், 2வது முறையாக இன்னொரு தாமரையை எடுத்து வந்து மீண்டும் அதே போல் தாவணித்துவட்டலை எதிர்பார்ப்பது...,.

6. ஒரு பாடல் காட்சியில் 7 செகண்டே வரும் சீனுக்காக 2 ஆடுகளுக்கு ஆண், பெண் டிரஸ் போட்டு அழகு பார்ப்பது...

7 ஹீரோயின் சாப்பிடும் லாலிப்பாப்பை லபக்க ஹீரோ போடும் ஐடியா... அதைத்தொடர்ந்து வரும் ஹீரோயினின் வெட்கம் கலந்த முக பாவனைகள் ...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjDBchf69q4ntjkJXtq650SDvKaxDqTGbO80w3VuXTXq-4VShZlfT_1-TRRdOWqaFvBm7piiWf5Syo4pOLgOd-XfbGGpTj1tTtI8UeHgC5_5TTDKruB8UygmMis1UrLlhPXS-A5O20XX8/s640/tamil+movie+nanjupuram+hot+actress++monica+masala+wet+bathing+stills-03.jpg
படத்தில் நெஞ்சில் நின்ற வசனங்கள்

1. அண்ணன் ஏன்  ரொம்ப வெட்கப்படறாரு?

நேத்துத்தானே வயசுக்கு வந்திருக்காரு?

2. ஹீரோயின் - நான் முதன் முதலா வயசுக்கு வந்தப்ப சொந்தக்காரங்க எல்லாம் ஸ்வீட்ஸோட வந்ததைப்பார்த்து மாசாமாசம் வந்தா , இதே சம்பவன் நடந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு நினைச்சேன்..அதே போல் மாசா மாசம் சம்பவம் நடந்தது.. ஆனா ட்யாரும் வர்லை...

3. ஹீரோயின் - யோவ்.. எனக்கு புத்தியே வேலை செய்யறது இல்லை.. இல்லன்னா உன் கிட்டே போய் மாட்டி இருப்பேனா?

4. ஹீரோ - என்னைப்பார்க்க வந்துட்டு ஏன் ஆகாத கதை எல்லாம் பேசறே.. கிளுகிளுப்பா வேற ஏதாச்சும் பேசேன்...

ஹீரோயின் - வேற ஏதாச்சும் பேசுனா வேற ஏதாவது ஆகிடும்... வம்பு
http://www.freedownloadpond.com/wp-content/uploads/2010/12/Hot-Anushka-Sharma-11.jpg
5. சந்திர கிரஹணம் முடிஞ்சுட்டா அந்த பாம்பு ஒண்ணும் செய்யாது..

அதுக்கும். இதுக்கும் என்ன சம்பந்தம்?

ராகு, கேது 2 பாம்புகளும் சந்திரனை விழுங்கறது தானே சந்திரன கிரஹணம்?


6. இங்கே பார்டி.. உன் பொண்ணை நான் எதுவும் செய்யாம இருக்கனும்னா அவளை அசலூர்க்காரனுக்கு கட்டி வெச்சுடு.. என் பார்வைல படக்கூடாது.. உள்ளூர்க்காரனை மாப்பிள்ளை ஆக்குனா.. அவ்ளவ் தான்....


7.  பரீட்சித்த மகாராஜா செத்துப்போன பாம்பை முனிவர் மேல போட்டாரு..செத்த பிராணியை மேல போடறதை விட பெரிய அவமானம் பிராமணனுக்கு இல்லை...

8.. இந்த ஏற்பாட்டுக்கு என் மக சம்மதிக மாட்டா..

அடி போடி.. கோழியை கேட்டுக்கிட்டா குழம்புக்கு மிளகா அரைப்பாங்க..?

9. ஹீரோயின் - நான் உனக்காக எவ்வளவு தடவை நடு சாமம்னு பார்க்காம காத்துட்டு இருந்தேன்.. நீ ஒரு தடவை கூட என்னைப்பார்க்க வர்லையே.. எனக்கு வீட்ல நிச்சயம் பண்ணீட்டாங்க.... ( இந்த சீனில் மோனிகாவின் நடிப்பு கலக்கல் ரகம்)

மைனா படத்துல குணச்சித்திரம் , காமெடி 2லும் கலக்கிய தம்பி ராமையா இதுல வில்லன் வேடத்துலயும் நல்லா பண்ணி இருக்காரு.. ஹீரோயினின் அம்மாவை அவர் ஆசை நாயகியாக வைத்திருப்பது, பின் ஹீரோயினை அடிய நினைப்பது மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqtsO18jFaIYRcYIqI48iahD1qN-yc3IPjHAOXSW9NB5OFKEUJ3cBHb6pfp45BItACnaofB9E5ZbSyhjzZZMBkmJL-ynrdjCbxo47N-KpqZxcuweEui-CbeOZyZm74wfndH-atbPrjAOw/s400/Nanjupuram-hot-stills-06.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஒரு பொண்ணோட பாதத்துல பாம்பு கொத்திடுது.. 5 நிமிஷம் கழிச்சு அங்கே வர்ற ஹீரோ கடிவாய்க்கு பக்கத்துல கயிற்றால கட்டு போடறார்.. கடி பட்ட அடுத்த செகண்டே கட்டு போட்டா அது ஓக்கே..  5 நிமிஷம் ஆனதால விஷம் கொஞ்சம் ஏறி இருக்குமே.. முழங்கால்ல தானே கட்டு போடனும்?


2.  பாம்பு கொத்தி உயிருக்குப்போராடிட்டிருக்கற பொண்ணை ஹீரோ தூக்கிட்டுப்போய் காப்பாத்தறதை விட்டுட்டு ஊர்ப்பெரிய மனுஷங்க கிட்டே வாதம் பண்ணிட்டு இருக்காரே..  10 நிமிஷம்..அது ஏன்?

3.  உயரமான இடத்தை விட்டு இறங்கக்கூடாது.. 40 நாட்களுக்கு அங்கேயே இருக்கனும்கறதுதான் ஏற்பாடு.. சாப்பாடு ஹீரோவுக்கு அனுப்பறது ஓக்கே.. அவரு குளிக்கறது, பாத்ரூம் போறது இதுக்கு எல்லாம் கீழே வந்துதானே ஆகனும்?அப்போ பாம்பு அவரை போடாதா?

4.  அதே மாதிரி 40 நாட்கள் ஹீரோ எங்கேயும் போகக்கூடாதுன்னு 4 பேர் காவல் காக்கறாங்க.. அவங்க அதுக்குன்னே நேர்ந்து விடப்பட்டவங்களா?வேற வேலையே கிடையாதா? ஆனா அவங்க தண்ணியைப்போட்டுட்டு மப்புலதான் பாதி நேரம் இருக்காங்க.. 

http://3.bp.blogspot.com/_XqT5QI2tKm0/S43i9kahH_I/AAAAAAAABsY/WKLfBg587xs/s1600/Nanjupuram-hot-stills-01.jpg
5. ஹீ ரோ இந்த 40 நாட்கள் ஹீரோயினை 47 தடவை அருவிக்கரைல சந்திக்கறாரு.. ( #கவுண்ட் டவுன் கண்ணாயிரம்)...எதுக்கு ரிஸ்க்.. அந்த உயரமான இடத்துக்கு ஹீரோயினை வரச்சொல்லிட்டா மேட்டர் ஓவர்..  ( # ஐடியா அய்யா சாமி)

6. கல்யாணம் ஆகாத மகளுக்கு அவளோட அம்மா ஒரு சீன்ல நைட் எட்டேகால்க்கு 4 முழம் மல்லிகைப்பூ வாங்கித்தர்றா... எதுக்கு?அவ வாங்கி தலைல வெச்சுக்கிடு படுத்து தூங்கறா.. என கொடுமை சார் இது/ ( எடிட்டிங்க்ல ஏதாவது கில்மா சீன் கட்டா?)

7.இந்த மாதிரி த்ரில் படத்துக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் ரொம்ப முக்கியம்.. ஆனா சுமார்தான்... எதுக்கு தேவை இல்லாம 4 பாட்டுக்கள்?

8. வில்லன் ஹீரோயினின் அம்மாவை கரெக்ட் பண்றது ஓக்கே.. ஆனா அப்போ ஹீரோயின் அவனுக்கு மக முறை ஆகுமே...அவளையும் க்ரெக்ட் பண்றானே அது ஏன்?  ( பொறாமைல கேட்கலை.. ஒரு ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்க கேட்டேன்,, )

9. பூரான் கடிச்ச பயத்துல ஒருத்தர் பாம்பு கடிச்சதா நினைச்சு சாகறார்.. பயம் தான் ஆளை கொல்லுதுன்னு சொல்ல வர்றிங்க .. ஓக்கே? ஆனா அவன் வாயில நுரை வந்திருக்கே? அது எப்படி? பூரான் கடிச்சா நுரை வராதே?

10. க்ளைமாக்ஸ்ல ஹீரோ, ஹீரோயின் 10 கி மீ தூரம் ஓடறாங்க.. பாம்பும் விடாம துரத்துதே.. நைட் பூரா அதுக்கு களைப்பே வராதா?

11. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பாம்பு கிட்டே இருந்து தப்பி வில்லனோட ஆட்கள் ஹீரோயினை வெட்ட வர்றப்ப குறுக்கே வந்து கழுத்துல வெட்டு பட்டு விழறாரு.. துப்பாக்கி குண்டுன்னா அது ஓக்கே... அது எப்படி அரிவாள் வெட்டு அப்படி விழும்.. அந்த ஷாட்டை ஏன் லாங்க் ஷாட்ல க்ளியரா காட்டலை?


https://lh3.googleusercontent.com/-wjdGlSrHAnU/TYalySBjP3I/AAAAAAAAKv8/7VJvRO9lRtg/s320/actress+monica+hot+Nanjupuram+Audio+launch+stills+001.jpg
மொத்தத்துல படம் பாம்பு பயம் உள்ளவங்களுக்கு பிடிக்கும்.. படம் முடியறப்ப சீட் கீழே பாம்பு இருக்கா?ன்னு பயத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு...

ஏ செண்ட்டர்ல 20 நாட்கள் ஓடும். பி , சி செண்ட்டர்ல 30 நாட்கள் ஓடும்.. படம் லோ பட்ஜெட் என்பதால் ஒரு வாரம் ஓடுனாலே போட்ட காசை எடுத்துடுவாங்க.. இந்த படம் ராமநாராயணன் டைரக்‌ஷன் கிடையாது.. அவர்  இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணீ இருக்கார் அவ்வளவுதான்.. யாரும் பயப்பட தேவை இல்லை..

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க்  - 38

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க்  - ஓக்கே

 ஈரோடு சண்டிகா தியேட்டர்ல இந்தப்படம் பார்த்தேன்.. ரொம்ப சின்னப்படம் 2 மணீ நேரம் தான் ஓடுது