Showing posts with label NADIGAR (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label NADIGAR (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, June 04, 2024

NADIGAR (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா )

       


  ஒரு  நல்ல  படம்  பார்த்தோம்  என்ற  திருப்தி  இருந்தால்  போதும், அது  கமர்ஷியல்  ஹிட்  ஆகி  இருக்க  வேண்டும்  என்ற  அவசியம்  இல்லை . ஏன்  எனில்  பெரும்பாலான  மக்கள்  வரவேற்பைப்பெற்று  மெகா  ஹிட்  ஆன  படங்கள்  தரத்தில்  சுமாராக  இருந்ததும்  உண்டு . பொது மக்களின்  அமோக  வரவேற்பைப்பெறாத  ஆனால்  கலை  அம்சம்  பொருந்திய  நல்ல  படங்களும்  உண்டு    



45 கோடி  பட்ஜெட்டில்  பிரம்மாண்டமாக  எடுக்கப்பட்டு 5  கோடி மட்டுமே  வசூல்  ஆன   ஃபிளாப்  படம்  இது . ஆரம்பத்தில்  வைக்கப்பட்ட  டைட்டில்  நடிகர்  திலகம், ஆனால்  பிரபுவின்  எதிர்ப்புக்குப்பின்  டைட்டில்  நடிகர்  என  மாற்றப்பட்டது . நடிகர்  திலகம்  என்பது  சிவாஜிக்கான  பட்டப்பெயர் . அதை  வைத்து  படம்  எடுக்கக்கூடாது  என  வாதாடினார்        


சினிமாவுக்குள்  சினிமா  என்ற  கான்செப்ட்டை  ஏனோ  தமிழ்  ரசிகர்கள்  விரும்புவதில்லை / ஒரு  சினிமாப்படத்தில்  சினிமா  ஷூட்டிங்  எடுப்பது  போல  கதை  அம்சம்  உள்ள  படங்கள்  அல்லது சினிமா  நடிகர்  பற்றிய  பர்சனல்  கதை  படங்கள்  பெரும்பாலும்  பெரிய  வெற்றி  பெறுவதில்லை . எஸ்  வி  சேகர்  நடித்த  சினிமா  சினிமா  என்ற  படம்   பல  ஹிட்  படங்களின்  தொகுப்பாக  இருந்தது .ஓரளவு  ஓடியது  1980 ல்  ரிலீஸ் ஆன  கல்லுக்குள்  ஈரம்  பாரதிராஜா  நாயகன்  ஆக  நடித்த  படம், ஒரு  சினிமா  டைரக்டரின்  காதல்  அனுபவம், படம் அட்டர்  ஃபிளாப் . 1984 ல்  கே  பாக்யராஜ்  இயக்கி  நடித்த  தாவணிக்கனவுகள்  ஒரு  சராசரி  இளைஞன்  சினிமாவில்  எப்படி  ஜெயிக்கிறான்  என்ற  கதை  தான். முந்தானை  முடிச்சு  என்ற  பிரம்மாண்ட  வெற்றிக்குப்பின்  வந்த  படம்  என்றாலும் பெரிய  அளவில்  ஓட  வில்லை , 1986 ல்  சிவாஜி +  பிரபு  காம்போவில்  வெளியான  படமான  சாதனை  தோல்விப்படமே 


 சினிமாவில்  வில்லனாக  நடிப்பவர்கள்  நல்லவர்களாக  இருப்பார்கள் , நாயகனாக  நடிப்பவர்கள்  வில்லனாக  இருப்பார்கள்  என்ற  கருத்தைச்சொல்லி  சினிமா  உலகின் கறுப்புப்பக்கத்தை  தோல்  உரித்த  படமான   நீங்களும்  ஹீரோ  தான் (1990)  விமர்சன  ரீதியாக  பாராட்டைப்பெற்றாலும் கமர்ஷியல்  ஆக  சுமாராகத்தான்  போனது 


ரஜினி  கெஸ்ட்  ரோலில்  நடிக்க  பசுபதி  ஹீரோவாக  நடித்த  குசேலன் (2008) அட்டர்  ஃபிளாப் . இதன்  ஒர்ஜினல்  வெர்சன்  ஆன  கத  பறையும் போழ்  மெகா  ஹிட்   உன்னருகே  நான்  இருந்தால் (1999) ஹிட். அதில்   விவேக்  காமெடி டிராக்  ஆன  சார்  ரம்பா  சார்   செம ஹிட் 


  விஜய் ஆண்ட்டனியின்  நடிப்பில்  வெளியான  ரோமியோ (2024)  தோல்வி ,. கவின்  நடிப்பில்  சமீபத்தில்  வெளியான   ஸ்டார்  வரவேற்பைப்பெற்ற  படம், ஆனால்  மெகா  ஹிட்  ஆகவில்லை 



ஸ்பாய்லர்  அலெர்ட்


  நாயகன்  ஒரு  சினிமா ஹீரோ.  சூப்பர்  ஸ்டார்  அந்தஸ்தில்  இருப்பவர். சமீபத்தில்  நடித்த  3  படங்கள்  சரியாகப்போகவில்லை. இப்போது  ஷூட்டிங்கில்  ஒரு  படம்  நடித்துக்கொண்டு  இருக்கிறார். அந்தப்பட  ஷூட்டிங்கின்  போது  இயக்குநர்  உடன்  ஒரு  கருத்து  வேற்றுமை  வருகிறது.


 நாயகனின்  நடிப்பில்  இயக்குநருக்கு  திருப்தி  இல்லை , ஒன்  மோர்  டேக்  போகலாம்  என்கிறார். இதில்  நாயகனுக்கு  ஈகோ  கிளாஷ்  ஆகிறது , கோபமாக  ஷூட்டிங்கை  கேன்சல்  பண்ணி  விட்டு  வருகிறார்


இவர்  தன்  அசிஸ்டெண்ட்  கம்  கார்  டிரைவர் , நண்பர்  ஆகிய  இருவருடன்  டூர்  போகிறார். ஒரு  மனமாற்றத்துக்காக . 


நடிப்பை  மெருகேற்ற  ஒருவரிடம்  டியூஷன்  போகலாம்  என  முடிவு  எடுக்கிறார். அவருடனும்  சண்டை  வருகிறது.  ஒரு  பொது  நிகழ்ச்சியில்  கலந்து  கொண்ட  போது  ரசிகர்களுடனான  கலந்துரையாடலிலும்  இவர்  ஓவராகப்பேசி  கெட்ட  பெயர்  வாங்கிக்கொள்கிறார்


 இந்த  சோதனைகளை  எல்லாம்  கடந்து  அவர்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றாரா?  நடிப்பில்  மெருகேற்றினாரா?  அந்தப்பட  ஷூட்டிங்  நடைபெற்றதா? என்பது  மீதித்திரைக்கதை   


 நாயகன்  ஆக  டோவினோ  தாமஸ் இவரது  கேரக்டர்  டிசைன்  அருமை . ஸ்வாதிமுத்யம் ( சிப்பிக்குள்  முத்து  )  படத்தில்  பிரமாதமாக  நடனம்  ஆடத்தெரிந்த  கமல்  நடனம்  தெரியாத  ஆளைப்போல  ஆடுவது  போல  ஒரு  காட்சி  வரும், அதில்  கலக்கி  இருந்தார். குமுதம்  சினிமா  விமர்சனத்தில்  நன்றாக  நடனம்  ஆடத்தெரிந்த  ஒரு  டான்ஸ்  மாஸ்டர்  நடனமே  தெரியாத  ஆள்  போல்  ஆடுவது  மிக  சிரமம், அதை  அனாயசமாய்  கமல்  செய்திருக்கிறார்  என  விமர்சனம்  எழுதினார்கள் .


   அது  போல  நன்கு  நடிக்கத்தெரிந்த  டோவினோ  தாமஸ்  நடிப்பே  வராத  ஆள்  போல  நடிப்பது  அருமையான  காட்சி .  அற்புதமாக  நடித்திருந்தார் .  எதற்கெடுத்தாலும்  கோபம்  கொள்ளும்  ஆளாக, பின்  தவறை  உணர்ந்து  மன்னிப்புக்கேட்கும்  ஆளாக  அசத்தி  இருக்கிறார்


  நாயகனுக்கு  நடிப்பு  சொல்லிக்கொடுக்கும்  ட்ரெய்னர்  ஆக  சவுபின்  சாஹின்  கலக்கல்  நடிப்பு.இவர்    மலையாள  இண்டஸ்ட்ரியில்  காமெடி  நடிகராக , குணச்சித்திர  நடிகர்  ஆக , நாயகன்  ஆக  பல  பரிமாணங்களில்  நடிப்பை  வெளிப்படுத்துபவர் 


நாயகனின்  கேர்ள்  ஃபிரண்ட்  ஆக  பாவனா , அதிக  வாய்ப்பில்லை , வந்த  வரை  ஓக்கே  ரகம் 


 இந்தப்படத்தில்  கெஸ்ட்  அப்பியரன்சில்  நடித்தவர்கள்  எண்ணிக்கை  மட்டும் 14 . ஏகப்பட்ட  நட்சத்திரப்பட்டாளம். அனைவரது  நடிப்பும்  அருமை 


நேஹா  நாயர் , யாழன்  ஆகிய  இருவரும்  இசை . பின்னணி  இசை , பாடலுக்கான  இசை இரண்டுமே  குட் 


ரத்தீஷ்  ராஜ்  எடிட்டிங்  இரண்டே  கால்   மணி  நேரம்  படம்  ஓடுகிறது.


அல்பியின்  ஒளிப்பதிவு  பிரம்மாண்டம் . காஷ்மீர்  , துபாய் ,  ஆலப்புழா, கொச்சி , ஹைதராபாத் ,மூணாறு  ஆகிய  இடங்களில்  இயற்கை  அழகை  அள்ளி  எடுத்திருக்கிறது  கேமரா 


சுவின்  எஸ்  சோமசுந்தரம்  தான்  திரைக்கதை 


இயக்கம் லால் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  தன்  சூப்பர்  ஸ்டார்  இமேஜால்  திமிராக  நடந்து  கொள்ளும்போது  உன் பெஸ்ட்  பர்ஃபார்மென்ஸ்  எது? எந்தப்படத்தில்?  என  உன்  ரசிகர்களிடம்  கேள்  என்று  கோச்  சொல்ல  நாயகன்  கேட்க  அப்போது  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  அருமை 


2  நாயகன்  முன்  கோபத்துடன்    வில்லத்தனமாக  நடந்து  கொண்டாலும்  படம் பார்க்கும்  நமக்கு  அவர்  செய்வது சரிதான்  என  எண்ண வைப்பதும்,  அந்த  கேரக்டர்க்கு  சாதகமாகவே  நம்  மனதைக்கொண்டு  செல்வதும்  அபாரமான  திரைக்கதை  உத்தி  


3   கோபித்துக்கொண்ட  இயக்குநரிடம்  நாயகன் சமாதானம்  பேச  அன்னாசி    கேக்  வாங்கிப்போவதும்  எனக்கு  அது  பிடிக்காது  என  இயக்குநர்  சொல்லும்போது  உள்ளே  இருந்து  வரும்   இயக்குநரின்  மனைவி   அடடே , இது  அவருக்கு  ரொம்பப்பிடிச்ச  ஐட்டம் ஆச்சே  என்று  சொல்வதும்  அதைத்தொடர்ந்து   நடக்கும்  நிகழ்ச்சிகளும்  நெகிழ்ச்சி 


4   நாம  இப்போ  லக்சரி  ஜீப்பில்  போகப்போறோம்  என  வசனம்  முடிந்ததும்  சாதா  டாடா ஏஸ்  3  வீலரில்  பயணிப்பது  செம  காமெடி 


5  க்ளைமேக்சில்  நாயகன் இயக்குநர்  பாராட்டும்படி  நடிக்கும்  காட்சி  அற்புதம் 


  ரசித்த  வசனங்கள் 


1    சினிமா  என்பது  ரோஜாப்பூப்பாதை  அல்ல .அதிகமாகக்கடின  உழைப்பும், கொஞ்சம்  அதிர்ஷ்டமும்  தேவை 


2    சினிமா  ஒரு  சரித்திரம், அதை  யாரும்  அழிக்க  முடியாது 


3  நீ  எப்போ  சூப்பர்  ஸ்டார்  ஆனாயோ  அப்பவே  உன் மனிதத்தன்மையை  இழந்துட்டே


4  நான்  ஒண்ணு  சொல்றேன்.  கிடைக்குமா? கேக்கு


கேக்கறேன் , சொல்லு 


 அதான்  சொன்னேனே  கேக்  வேணும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  முதல்  பாதி  முழுவதும்  நாயகனின்  மைனஸ்  பாயிண்ட்களை  மட்டுமே  காட்டுவது , பின்  பாதி  முழுவதும்  நாயகனின்  பிளஸ்  பாயிண்ட்களை  மட்டுமே  பாயிண்ட்  அவுட்  பண்ணுவது  நாடகம் பார்க்கும்  உணர்வைத்தந்தது 


2   நாயகனின்  ரசிகன்  தற்கொலை  செய்யும் முன்  நாயகனுக்கு  கால்  செய்வது , நாயகன்  அவனைக்காப்பாற்றுவது  இதெல்லாம்  சரியாக   செட்  ஆகவில்லை 


3  நாயகனின்  கேர்ள்  ஃபிரண்ட்  ஊடல்  எடுபடவில்லை , அவருக்கான  போர்சன்  அதிகம்  இல்லாததால்  பெரிய  பாதிப்பை  ஏற்படுத்தவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  படங்களை  விரும்புபவர்கள் , சினி ஃபீல்டில்  ஆர்வம்  உள்ளவர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5  


Nadikar
Theatrical release poster
Directed byLal Jr.
Written bySuvin S. Somasekharan
Produced byNaveen Yerneni
Y. Ravi Shankar
Allan Antony
Anoop Venugopal
StarringTovino Thomas
Divya Pillai
Balu Varghese
Suresh Krishna
Soubin Shahir
Shine Tom Chacko
Indrans
Anoop Menon
Bhavana
CinematographyAlby
Edited byRatheesh Raj
Music byYakzan Gary Pereira
Neha Nair
Production
companies
Godspeed Cinema
Mythri Movie Makers
Distributed byAan Mega Media
Release date
  • 3 May 2024
Running time
140 minutes
CountryIndia
LanguageMalayalam
Budget₹40 crore[1]
Box officeest.₹5.39 crore[2]