Showing posts with label Mahesh Babu. Show all posts
Showing posts with label Mahesh Babu. Show all posts

Tuesday, January 22, 2013

Seethamma Vaakitlo Sirimalle Chettu - சினிமா விமர்சனம்

http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/11/Seethamma-Vaakitlo-Sirimalle-Chettu-Release-Wallpapers-123cinejosh.jpgஅண்ணன் , தம்பி 2 பேரு , அம்மா , அப்பா உள்ள ஃபேமிலி .அண்ணனுக்கு முறைப்பொண்ணு வீட்லயே இருக்கு . ஃபேமிலிக்கு ஆகாத தூரத்து ச்சொந்தம் வீட்ல தம்பிக்கு ஒரு பொண்ணு மாட்டுது. தம்பியோட லவ் அண்ணனுக்கு பிடிக்கலை. இதனால அண்ணன் தம்பிக்குள்ளே நிகழும் போராட்டங்கள் தான் கதை . ஆல்ரெடி நாம வானத்தைப்போல , ஆனந்தம் , நட்புக்காக மாதிரி பல படங்கள்ல பார்த்த கதை தான். ஆந்திராவுக்கு ஒரு வேளை புதுசா இருக்கும்.


ஆந்திரா சூப்பர் ஸ்டார்கள் வெங்கடேஷ் , மகேஷ் 2 பேரும் தான் அண்ணன் , தம்பி .  படம் பூரா வில்லன்களோட ஃபைட் போடாம அமைதியா இருந்ததுக்கே அவார்டு தரலாம். வேலை இல்லாத வெட்டாஃபீசாய் , முன் கோபி யாய் வரும் வெங்கடேஷ்க்கு செம ஈசியான வேலை . அப்பப்ப தளபதி ரஜினி மாதிரி முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலே போதும் , மிச்சத்தை இயக்குநர் சமாளிச்சுக்கறார். அவர் அடிக்கடி சட்டைக்காலரை பின்னால தூக்கி விட்டுக்கறதுதான் ஸ்டைலா? நம்ம ஊர்ல ரஜினி 25 வருஷத்துக்கு முன்னாலயே அதை பண்ணிட்டாரு .


மகேஷ் இளமைத்துள்ளலான கேரக்டர் . வழியில் தென்படும் ஃபிகர்களை வலியனாப்போய் வம்பிழுக்கும் விதம் ஆஹா! கோபுர வாசலிலே படத்தில் கார்த்திக் பண்ணாததா?  ஆனாலும் ஜாலியா இருக்கு. அவர் அடிக்கடி டக் இன்  பண்ணிய சர்ட்டை எடுத்து வெளியே விடுவது ஸ்டைலா? , சகிக்கலை.  15 ரீல் படத்துல  27 டைம்  அப்படி பண்றார்.. உஷ் அப்பா . அவர் அடிக்கடி ஈ அப்டி காட்டுவது ஆரண்ய காண்டத்துல ஜாக்கி ஷெராப் ஆல்ரெடி செஞ்சாச்சி . புதுசா  அவர் பண்ணுனது ஒண்ணும் இல்லை .

 http://www.webparx.com/movies/wp-content/nggallery/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie/mahesh-babu-in-seethamma-vakitlo-sirimalle-chettu-movie-webparx-2.jpg




ஹீரோயின் 2 பேர்ல முதல் அறிமுகம் ஆவது  அனுதினமும் அணு அணுவாக ரசிக்கச்சொல்லும் அங்காடித்தெரு அஞ்சலி. கொழுக் மொழுக் கன்னம் , சிரிக்கும் கண்கள் , அழைக்கும் உதடுகள் என அவர் வரும் காட்சி எல்லாம் ஈர்ப்பு. இந்திய சினிமாக்களிலேயே கிளாமரான ஹீரோயின் அறிமுகம் ஆகும்போது அடிக்கும்  டார்க் கலரான சிவப்பு , வயலெட் , மயில் கழுத்து , ராமர் க்ரீன் ஜாக்கெட் எல்லாம் போடாமல் மிக எளிமையான  சம்பங்கி கலரில் ( லைட் காக்கி கலர் )  ஜாக்கெட் போட்டு அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ஈர்த்து விடுகிறார். 


அடுத்தடுத்த காட்சிகளில்  அவர் டார்க் கலர் டிரஸ்ஸில் கலக்குகிறார். எல்லா காட்சிகளும் சேலைகள் தான். செம செம . எஜமான் படத்தில் வருவது போல் ஹீரோவுக்கு அடிக்கடி துண்டு  எடுத்துக்கொடுத்து தூண்டும் வேலை . ஒரு டூயட்டும் உண்டு 


அடுத்த ஹீரோயின் சந்தனச்சிலையா? என திகைக்க வைக்கும் சமந்தா. கிண் ஸ்பெஷலிஸ்ட்டான இவர் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போக வேண்டி வந்தது எல்லாம் இயற்கையின் திரு விளையாடல் . பாட்டியாலா சுடிதார் ,  லெக்கின்ஸ் , பாராசூட் மாடல் பைஜாமா என அவர் வகை வகையாய் உடை அணிந்து வருகையில் தியேட்டர் பெண்கள் எல்லாம் நோட் பண்ணிக்கறாங்க . செத்தாண்டா அவங்கவங்க புருஷங்க . 

அஞ்சலியை விட இவர் அதிக காட்சிகளில் வர்றார். ஓப்பனிங்க் சாங்க் , ஒரு டூயட் என இவருக்கு 2 பாட்டு .கலர் ஃபுல் கலக்கல்ஸ். 


பிரகாஷ் ராஜ் இருவர் பட கெட்டப் , காஞ்சிவரம் பட  பாடி லேங்குவேஜ் என அடக்கி வாசிக்கிறார்.

 http://publichubs.com/blogimages/hub/784-2-anjali-saree-stills-at-malabar-gold-showroom.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சந்தனச்சிலை சமந்தா ஒவ்வொரு டைம் ஃபோன் பண்ணும்போதும் ஹீரோ ஃபோனை   ஓடும் மிக்சி ஜார் அருகே  ஃபோனை வைப்பது , ஊதும் நாதஸ்வரம் முன் வைப்பது என ஜாலி கலாட்டாக்கள் 


2. அஞ்சலிக்கான ஜாக்கெட் டிசைன் அற்புதம் , முழு முதுகும் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு  பேக் யு நெக் ஜாக்கெட். கேமரா எப்பவும் அஞ்சலி முதுகுலதான் லேண்ட் ஆகுது . ஹூம், முதுகா அது? பத்தமடை பாய் மாதிரி 



3. மேரேஜ் ஃபங்க்‌ஷனில் ஹீரோவைக்கண்ட  சம்ந்தா வெளிப்படுத்தும் ஷாக் சர்ப்பரைஸ் ரீ ஆக்‌ஷன்  சோ க்யூட்


 http://web2look.com/wp-content/gallery/samantha-hot1/samantha-hot-6.jpg



4. ஹீரோவை விட சமந்தா மிக குள்ளம் என்பதால் அவருக்கு  ஒரு அடி உயரத்துக்கு  ஹை ஹீல்ஸ் போட்டு சமாளிப்பதும் , வெங்கடேஷ் விட அஞ்சலி ஹைட் என்பதால் அவரை எப்போதும் வெறுங்காலுடன் நடக்க விடுவதும் , வெங்கடேஷ் ஹை ஹீல்ஸ் ஷூ அணிவதும் ( நம்ம ஊர் சூர்யா மாதிரி ) பேலன்ஸ்டு சீன்ஸ் 



5. தூரத்துடுக்கு பாட்டப்ப அஞ்சலி  தன்னோட இடுப்பை ஒரு வெட்டு வெட்டுவாரே .. செம கிக். கோடானு கோடி  பாட்டப்ப அந்த லேடி இடுப்பை ஒரு சுத்து சுத்துமே அந்த கிக்குக்கு சமம் 



6. படத்தில் வாய்ப்பு இருந்தும் சண்டைக்காட்சிகள் வைக்காதது , திரைக்கதையில் இரு காதல் ஜோடிகளின் ரொமாண்டிக் காட்சிகளை ஒன் பை ஒன் மாத்தி மாத்தி காட்டி பேலன்ஸ் பண்ணது 



7 . கல்யாண கலாட்டா காட்சிகள் அழகு + பிரம்மாண்டம்

http://moviegalleri.net/wp-content/gallery/samantha-ruth-prabhu-latest-hot-images/hot_samantha_latest_stills_pics_3143.jpg




 இயக்குநரிடம் சில கேள்விகள்




1. வசதியான குடும்பத்தில் இருக்கும் ஒரு நியூலி மேரீடு கப்பிள் ரயில்ல அன் ரிசர்வ்டுல ட்ராவல் பண்ணுவாங்களா? ஏ சி கோச் ல வராட்டியும் அட்லீஸ்ட் ரிசர்வ்டு செகண்ட் கிளாஸ்ல தானே வருவாங்க.. 


2. அஞ்சலிக்கு மட்டும் இண்ட்ரோ சாங்க் இல்லை, ஆனா சமந்தாவுக்கு இருக்கு. இது எந்த வகைல நியாயம்? ஒரு கண்ணுல வெண்ணெய் , இன்னொரு கண்ல தொண்ணையா? 



3. படத்துல ஏகப்பட்ட கேரக்டர்ஸ். கலைஞர் குடும்பம் மாதிரி , எல்லா கேரக்டரும் அறிமுகம் ஆகி கதைக்கு செட் ஆகும்போதே ஒரு மணி நேரம் ஆகிடுது 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidMMvOqxwULA-hFsezvrDydqB7AZsk8R6FbbgN3Rn-f6LQCyOa6u2KCAiykz5JyOWmcqKx6dLM2NtMjKNkrmp2cCtc58Gzr68qcQhJJGSV60oo4N7qI6AmeXA6wcwtoWZfkfDxwORoBtqh/s1600/anjali-hot-stills.jpg



4.  ஒரு சீனில் வேலை வெட்டி இல்லாத வெங்கடேஷ்  இன்ஸ்பெக்டரை கோபத்தில் பளார் என அடிப்பது எல்லாம் ஓவரோ ஓவர். அவர் ஆன்னு பார்த்துட்டு இருக்காரு . அவர் ஒண்ணும் ரவுடி கிடையாதே  நிஜ வாழ்வில் பப்ளிக்கில் ஒரு போலீஸ் ஆஃபீசரை ஒரு வெத்து வேட்டு பப்ளிக் பிளேஸ்ல அடிச்சா என்ன ஆகும்? 



5. கதைப்படி ஆன்மீக வாதியாக வரும் பிரகாஷ் ராஜ் ஒரு சீனில் கூட நெற்றியில் திருநீறோ , குங்குமமோ வைக்கலை, ஆனா கோயில் பிரசாதத்தை ஒணத்தியா சாப்பிடறார், கோயில்ல இருக்கார் . 



6. கல்யாண வேலைகளில் வீடே பரபரப்பாக இயங்குகையில் எல்லாரும் வெறும் காலுடன் இருக்க, ஹீரோ மகேஷ் மட்டும் ரன்னிங்க் கேன்வாஷ் ஷூ உடன் அலைகிறார்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbymytcERdthXZUXZC7CyzwFqGecFmrPwEBR7JvimYRrcpf-A-26-Hrh9aUxqLJl-6mFRslfWXaVt1kcglxQJ607XclINq81EDciycSwXtK_CrcAiy2B5KPWZYjRM7yQvg1I0KZlyygt-C/s1600/Anjali-Latest-New-Unseen-Photo-Shoot-+(1).jpg



7. அதே போல் மேரேஜ் ஃபங்க்‌ஷனில் குப்பம்மா, குருவம்மா , முனியம்மா எல்லாம் பட்டு சேலையில் மினுக்கிட்டு வரும்போது அஞ்சலி சாதா சேலையில் உலா வர்றாரே?  க்ளைமாக்ஸ்ல அவருக்கு மேரேஜ் ஆகும் காட்சியில் தான் சில்க் சேலை . ஒய்? 




8. படம் போட்டதில் இருந்து அஞ்சலி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் ஏதாவது ஒரு சமையல் எடுபுடி வேலை  செஞ்சுட்டே இருக்காரே? அவர் என்ன வேலைக்காரியா? 



9. இண்ட்டர்வியூவில் எல்லா தேர்விலும் பாஸ் ஆன ஹீரோவிடம் அதிகாரிகள் “ உங்க சிரிப்பில் உயிர் இல்லை. அது இயல்பா இல்லை , நல்லா சிரிங்க அப்போதான் வேலை” என்பதும் மனதில் சோகத்துடன் இருக்கும் ஹீரோ மனம் விட்டு சிரிக்க முடியாமல் செயற்கையாய் சிரிப்பதும் அதனால் வேலை கிடைக்காமல் போவதெல்லாம் ஓவரோ ஓவர் . எந்த இண்ட்டர்வ்யூல சிரிப்பை வெச்சு ஜாப் தர்றாங்க? 



10 . ஒரு காட்சியில் கல்யாணப்பெண் வெள்ளைப்பட்டுப்புடவை அணிந்து வர்றார். கேரளாப்பெண்கள் தான் அப்படி வருவாங்க . நம்ம ஆட்கள் எல்லாம் முகூர்த்தப்புடவை மேக்சிமம் ரத்தச்சிவப்பு , மெரூன் , பிரவுன் , வயலெட் , பச்சை கலர் தான் . சத்தியமா வெ:ள்ளை நாட் அலோடு



11. கிட்டத்தட்ட வில்லனாக வரும் உறவினர் ரமேஷ் ராவுக்கும் பிரகாஷ்ராஜுக்குமிடையே பொறாமை ஏற்படக் காரணம் என்ன?ன்னு கடைசி வரை சொல்லவே இல்லை 



 12. அந்த மின் விபத்து , வில்லனை காப்பாற்றுவது  , அவர் மனம் மாறுவது படு செயற்கை


13. சமந்தா வை பல படங்கள்ல கவனிச்சுட்டுதான் இருக்கேன், அவர் அழகா இருக்கும் புருவத்தை பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணி அப்புறம் அது மேல  ஐ ப்ரோ பென்சிலால டார்க்கா  வரைஞ்சு அலங்கோலம் பண்ணிக்கறார். கார்த்திகாக்குத்தான் வேற வழி இல்லை , வரைஞ்சுக்கறார், உங்களுக்கு என்ன? அஞ்சலி இந்த விஷயத்துல குட்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD8u7je2fw7likzayZEj2zoUZyjVFsuJsCp5dSQ0BFosGSJ-9hpDJ24tmKqO2csxE1qLVYIZoERrSYZLvrhC9Gdea7Oa0v8BF6MPYNrcuumOt0Cg8CYYovgrJ96ompJ8hpwJsIyqtDbso/s1600/Samantha+Hot+Bikini+stills+(8).jpg



சி.பி கமெண்ட் -  ஃபேமிலியோட பார்க்கற மாதிரிதான் இருக்கு . 2 ஹீரோயின் ரசிகர்கள் பார்க்கலாம், மற்றபடி புதுசா கதைல ஒண்ணும் லேது . டைட்டிலுக்கான அர்த்தம் சீதையின் வீட்டின் முற்றத்தில் மல்லி செடி.ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்

Tuesday, December 11, 2012

The Business man - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP6Et_zn021tUF89IeXB5H78fMuZhX8vesDBKnjFK78bqPYN_dchmwhGrP4VYWy655AAoe7ifMElkWqfTF9xPLOe5l24Z_TWHXNZRnsWvx52PK-K7jcp6uhoVa-sq07r4F470MfNSu8g8/s1600/businessman_5th_week_wallpapers_001.jpgமும்பைல  எல்லா தாதாக்களையும் ஒழிச்சாச்சுன்னு நிம்மதியா பெருமூச்சு விடறார்.கழக ஆட்சிகளில் ஊழலையும் , பெரு நகர வாழ்க்கைல தாதாக்களையும் அழைக்கவோ, ஒழிக்கவோ முடியாதுன்னு நிரூபிக்க ஹீரோ  மும்பைல காலடி எடுத்து வைக்கறார்.


சகுனி கார்த்தி மாதிரி நம்பவே முடியாத சாக்சங்களை எல்லாம் பண்றார். ஸ்லம் ஏரியாவான தாராவியில் அனைத்து மக்களின் பேங்க் லோன் க்ளியர் பண்ணித்தற்றேன்னு வாக்குத்தர்றார். அவங்க லோன் வாங்குன பேங்க்ல நைட்டோட நைட்டா போய் லோன் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் அபேஸ் பண்ணிட்டு வந்து  மக்கள் கிட்டே எம் ஜி ஆர் ஆகறார்.


 கூடுதல் சப்போர்ட்டுக்கு போலீஸ் கமிஷனர் மகளான ஹீரோயினை லவ் பண்றார்.கார்ப்பரேட் கம்பெனி மாதிரி ஆக்டோபஸ் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நாடு முழுக்க தன் ஆக்ரமிப்பை நிகழ்த்தறார்.இந்தியாவின் நெம்பர் ஒன் தாதா ஆகறார். அவர் பிளான் என்ன? எதுக்காக அங்கே விஷால் மாதிரி ஊரு விட்டு ஊரு வந்தார் என்பதை வெண் திரையில் காண்க 


 சும்மா சொல்லக்கூடாது . மூளையைக்கழட்டி வெச்சுட்டு பார்த்தா பர பர என ஆக்‌ஷன் பட்டாசான படம் , ஒரு சீன் கூட போர் அடிக்கலை.. ஆனா லாஜிக் எல்லாம் பார்த்தா ரசிக்க முடியாது . லாஜிக் வேணுமா? எண்ட்டர்டெயின்மெண்ட் வேணுமா?


 ஹீரோ மகேஷ் , ஆந்திராவின் இளைய தளபதி . கொஞ்சம் ஏமாந்தா அப்பாஸ் மாதிரி மைதா மாவு ஆகி இருப்பார் , ஹேர் இழையில் எஸ் ஆகி ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டார்.. இவர் நடிப்பு படத்துக்கு பெரும் பலம்.  அசால்டான நடிப்பு , பாடி லேங்குவேஜ் , வசனம் பேசும் வேகம், நடன அசைவுகள் , ஸ்டண்ட் காட்சிகளில் உழைப்பு என அக்மார்க் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து இலக்கணங்களிலும் டிஸ்டிங்க்‌ஷன்.. 



ஹீரோயின் கா ஜில் அகர் வால்.இவர் நடிப்பு எப்படி?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது  .3 இடங்கள்ல ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றார். 6 இடங்கள்ல புற முதுகு காட்டும் புரவலர் ஆகறார். 4 இடங்கள்ல  லோ கட் லோக நாயகியா, 13 இடங்கள் ல லோ ஹிப்னாடிசம் பண்றார்,. இதை விட  ஒரு கிளாம்ர் ந்டிகை என்ன திறமையை காடட முடியும்கறீங்க? சென்சார் எல்லாம் இருக்கில்ல? 


 அப்புறம் பிரகாஷ் ராஜ், நாசர், பிரம்மாஜி எல்லாம் தலையை காட்டறாங்க. பெருசா சொல்லிக்க ஒண்ணும் இல்லை.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOpEy8YHjAYxPjbxuOeA-mNCIBAWv-XpliI3u32YGKkuR4N0O9T5qSOqDL0WXOpHOrTfhboVsAbf5fwid4f6EdzwcGaoam3bp1rmNGvCuwgpkQqfVdkNRagBd9i-WEbR5OHSGtjCy-BQ/s1600/sabhotcom+Kajal+Agarwal+Hot+Lip+Kiss+in+Businessman+movie+stills+%25281%2529.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. தூக்குடு படம் மாதிரி இதுவும் மெகா ஹிட் படம், அதே மாதிரி பர பர திரைக்கதை , ஆனா நம்பகத்தன்மை  குறைவு


2. ஹீரோ ஸ்டெப் ஸ்டெப்பா எப்படி பெரிய ஆள் ஆகிறான் என்பதை தெளிவா சொன்ன விதம் 


3. படத்தில் திரைக்கதையில்  ஒரு சீன் ஆக்‌ஷன் பட்டாசு , அடுத்த சீன் நாயகியுடன் காதல் காட்சி  இந்த ஃபார்முலா மிகச்சரியா முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு மெயிண்ட்டெயின் பண்ணது அட்டகாசம் 


4.  தமனின் பின்னணி இசை கொஞ்சம் அங்கே இங்கே சுட்டிருந்தாலும்  3 பாட்டு செம ஹிட் .


5. திரையில் காட்சிகள் , ஆர்ட்டிஸ்கள் எல்லாரும் பிரமாண்டம் , பிஅரமிக்க வைக்கும் எடிட்டிங்க் , ஆர்ட் டைரக்‌ஷன்

6. ஹீரோ மும்பை வந்ததும் கைல 10 பைசா இல்லாமல் நண்பனிடம் நீ தான் என் பி ஏ , உனக்கு மாசம் ரூ 25,000 சம்பளம். என சொல்லும் கெத்தான காட்சி அதை நம்பும்படி செய்த திரைக்கதை 


7. பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ராவில் கொள்ளை அடிக்கும் காட்சி 


8. செம சூடு கிளப்பும் லிப் டூ லிப் கிஸ் சீன் பை காஜல்


http://movies.fullorissa.com/wp-content/uploads/2011/12/businessman_movie_pics.jpg



 மனம் கவர்ந்த வசனங்கள்



1.  மும்பைல டெயிலி ஒரு லட்சம் பேரு வருவாங்க அதுல யாரோ ஒருத்தனுக்குத்தான் அதிர்ஷ்ட லட்சுமி அள்ளிக்குடுக்கும் 



2. உலகத்துலயே பெரிய ஸ்லம் ஏரியா மும்பைல இருக்கும் தாராவி தான் 


3. நம்ம ஊர்ல 10000 ரூபாய்க்கும்  டிஃபன் கிடைக்கும் ஜஸ்ட் 10 ரூபாய்க்கும் கிடைக்கும் 


4. பணம் சம்பாதிக்கறது ரொம்ப ஈசி , ஃபிகர் மடிப்பதுதான் கஷ்டம் 


5. நான் மும்பைல பொழப்புத்தேடி வர்லை, மும்பையை ஆள வந்திருக்கேன் 


6.  ஹாய்  மிஸ், ஏன் பெயிண்ட்டிங்கை கையால வரையறீங்க? பிரஷ் வாங்க காசு இல்லையா? 


 நோ நோ அது ஒரு வகை ஆர்ட்


7. பேசனும்னு  ஒரு மூடுல வந்ததால சரியா அடிக்க முடியல 


8. ஹீரோயின் - இப்படி எல்லாம் சொல்லிக்க உனக்கு வெட்கமா இல்லை? 


ஹீரோ - நோ , எனக்கு வெட்கப்பட்டு பழக்கம் இல்லை 


9. அவனவனுக்கு அவனவன் லைஃப்ல ஒரு சினிமா இருக்கும், அதுல அவன் தான் ஹீரோ 


10 கடவுளைக்கையெடுத்து கும்பிடறீங்களே அதுவும் ஒரு பிஸ்னெஸ் டீல் தான், எந்த வரமும் தராது , எந்த நல்லதும் நடக்காதுன்னா எவனாவது சாமி கும்பிடுவானா? 



http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/03/Kajal-Agarwal-In-Mahesh-Businessman-Movie-Exclusive-Images-4.jpg


11. இவனைப்பார்த்தா பாய் மாதிரி தெரியலை ,  மில்க் பாய் மாதிரி இருக்கான்


12.  அதானே, 2 கோடி ரூபா மதிப்புள்ள காரை கிஃப்டா கொடுத்தா எவ வேணாலும் ஐ லவ் யூ சொல்வா


 ஹலோ , நான் மனசுல நினைச்சதை  சொன்னேன், அப்போ நீங்க கிஃப்ட் குடுத்துட்டீங்க, அவ்ளவ் தான் 


13. யுத்தத்துக்கு பயப்படறவன் தான்   தர்மம் பற்றி பேசுவான்


14. இந்த உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு வரும், உன் கனவு எனக்கும், என் கனவு உனக்கும்  பிடிக்கனும்னு அவசியம் இல்லை. ஆனா பிடிச்சுது எப்டி? அதான் லவ் 


15. அப்பப்ப விநாயகர் பால் குடிச்சாத்தான் மதிப்பு , ஓடோடிப்போவாங்க. அதே ரெகுலராப்பால் குடிச்சா ஒரு பய மதிக்க மாட்டான் 



16. கவர்மெண்ட்க்கு சர்வீஸ் டாக்ஸ் , சேல்ஸ் டாக்ஸ் கட்டற மாதிரி  இனி மும்பைல எல்லாரும் சூர்யா டாக்ஸ் கட்டனும், யார் யார் கிட்டே என்ன வாங்கினாலும் 1 % டாக்ஸ் எனக்கு கட்டனும்


17.  சூர்யா பாய் நீயா? 


 சூர்யா பாய் நான் இல்லை, அது ஒரு பிராண்ட் 


18. பணம் நிரந்தரம் இல்லை , மனுஷங்க தான் நிரந்தரம்னு எந்த கேனயன் சொன்னான்? இந்த உலகத்துல  மனுஷங்க தான் செத்துப்போவாங்க.. கரன்சிக்கு சாவே இல்லை 


19.  சாகும்போது எவனும் பொய் சொல்ல மாட்டான் 




http://images.south365.in/2012/01/Kajal-Agarwal-in-Businessman-Movie-2.jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. அம்மா , அப்பாவைக்கொன்னவங்களை ஹீரோ பழி வாங்கறார். கொன்னவன்  பெரும்புள்ளி. அதனால அவனும் பெரும்புள்ளி ஆகி கொல்றான். இதானே மெயின் கதை ? முடியல சார்.. இன்னும் 1950 லயே இருக்கீங்க..  பிரமாதமான திரைக்கதை 2 மணி நேரம் ஓட்டிட்டு க்ளைமாக்ஸ்ல இது மாமூல் ரிவஞ்ச் சப்ஜெக்ட்னு அடிச்சீங்க பாருங்க ஒரு அந்தர் பல்டி  மணிரத்னம் இதயக்கோயில் படம் பற்றி சொன்னது மாதிரி .. 


2. ஷாயாஜி ஷிண்டே தன் எதிரி ஜெயில் கைதியை ஹீரோ கொலை பண்ணியதை பப்ளிக்கா பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ், மீடியாக்கள் முன்னால்யே பாராட்டி கட்டிப்பிடிக்கறாரே? இவ்ளவ் பப்ளிக்கா டி வி ஷூட் நடக்கும்போது சொல்லி எஸ் ஆக முடியுமா? 



3. பொதுவா ஒரு பேங்க்ல லோன் டாக்குமெண்ட்ஸ்  ஒரிஜினலை ஹெட் ஆஃபீஸ்க்கு அனுப்பிடுவாங்க. எங்கே லோன் வாங்கபட்டதோ அதே பேங்க்ல  10 வருஷமா இருக்கு என்பது செம ரீல் 


4. அப்படியே ஒரு வாதத்துக்கு டாக்குமெண்ட்ஸ் லோக்கல் பேங்க்ல இருந்தாலும் ஹீரோ & கோ அந்த டாக்குமெண்ட்ஸை எடுத்துட்டு வந்துட்டா  லோன் கேன்சல் ஆகிடுமா? 


5. ஹீரோ & கோ பேங்க்ல இருக்கும் சிஸ்டம் எல்லாத்தையும் உடைச்சுடறாங்க. அப்படி பண்ணிட்டா எல்லா விவரங்களும்  அழிஞ்சுடுமா? இது எப்படி இருக்குன்னா  என் மெயில் ஐடில  என் மெயிலுக்கு வந்த மேட்டர்சை அழிக்க  என் வீட்டில் புகுந்து அந்த சிஸ்டத்தை உடைப்பது போல் . வேற சிஸ்டம் ஓப்பன் பண்ணி என் மெயில் ஓப்பன் பண்ணினா தீர்ந்தது .. ஹய்யோ அய்யோ 


6. ஹீரோ தன் அடியாள்ங்க கிட்டே பேங்க்ல எந்த பொருள் , நகை , பணத்தை கை வைக்கக்கூடாதுங்கறார். அவங்க எப்படி அதை ஒபே பண்றாங்க? நீண்ட நாள் பழக்கமும் இல்லை. ஹீரோவுக்கும் , அவங்களுக்கும் ஜஸ்ட் அப்போதான் அறிமுகம்.. ஹீரோ அவங்க கூட போகலை..  தேனை எடுத்தவன் புறங்கையை ருசிக்காமலா இருப்பான்னு தானைத்தலைவர் , தமிழ் இனத்தின் விடி வெள்ளி விடி சனி  டாக்டர் கலைஞரே சொல்லி இருக்காரே? ஹீரோ எந்த நம்பிக்கைல அவங்களை தனியா விடறார்? 


7. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆளிடம் ஒரு பெரிய அரசியல் தலைவர் கொலைக்கு பிளான் போடுவது ஓவர் 


8. தமன் இசைஞானி இளையராஜாவை ஆங்காங்கே அப்பட்டமா சுடறார், குறிப்பா ஹீரோயின் ஓப்பனிங்க் சீன் , இருவருக்குமான ஊடல் காட்சிகளில் பி ஜி எம்  ராசாத்தி மனசுல என் ராசா பாட்டின் சரணத்தின் இசை உல்டா . 


9. அதே போல்  1964இல் ரிலீஸ் ஆன A FISTFUL OF DOLLARS படத்தில் வரும்  இசையின் உல்டா தான் ஹீரோ - ஹீரோயின் காதல் அரும்பும் காட்சியின் பி ஜி எம் - தகவல் உதவி -தமிழ் சினிமா உலகம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC5XBHXcD1nzkZv0f1HKtU8A7CGGZ51DSc3ujIp79n6LKSruAPRAL0fKILlRwMzuUT_faZJgS3pDPPoogwdaxbTGZGbjaFqeKBukOyOpV-kGhXEvL0AqIIOzGX6D8Y3x-EFnBZyF05Ka4I/s1600/business_man_movie_new_hot_stills_mahesh_kajal+%25281%2529.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43 


 குமுதம் ரேங்க் - ஓக்கே 


சி .பி கமெண்ட் -  மாமூல் மசாலா ஹிட் படம் பார்க்கும் ரசிகர்கள் , டைம் பாஸ் பண்ணனும்னு நினைக்கறவங்க , ரஜினி , விஜய் ரசிகர்கள்க்கு படம் பிடிக்கும். கமல் ரசிகர்கள் பார்த்தா செம காண்டாகிடுவாங்க.. லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRlgDq4W21zY97RAAvS-mxPgMao2TycB6iaiLEhtMN-aGA_dfaXvMTHgnWy2xfxrLZsL3Pe0miQchwGwSODgYsVWyhbuDlyahjOfBrECbaNEfWgoIF32tG2SD3yUiJmbRNHOlhyphenhyphenna_mAD/s1600/businessman+telugu+movie.jpg