Showing posts with label MURPHY (2024) -கன்னடம் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டிராமா ). Show all posts
Showing posts with label MURPHY (2024) -கன்னடம் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டிராமா ). Show all posts

Friday, February 14, 2025

MURPHY (2024) -கன்னடம் - சினிமா விமர்சனம் ( சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

           

              

18/10/2024   அன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இப்படம்  இப்போது அமேசான் பிரைம்  ஓ  டி டி  யில்  காணக்கிடைக்கிறது .தமிழ்  டப்பிங்க் இல்லை .ஆங்கில  சப் டைட்டில் உண்டு. இப்படத்தின்  பெரும்பான்மையான பகுதிகள்  கோவாவில் உள்ள  400 வருடங்கள்  பழமையான   ஒரு வீட்டில்  ஷூட்டிங்  நடத்தப்பட்டது .டைம்  டிராவல்  காதல் கதையாக  வித்தியாசமாக  திரைக்கதை  அமைக்கப்பட் ட  படம்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன்   தன தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறான் .  ஆனால் இருவருக்கும் எப்போதும் ஆகாது . நாயகனின் அப்பா  இறந்து விட்டார்  .அவர் உயிரோடு  இருந்த போது  எப்போப்பாரு  ஒரு ரேடியோவை வைத்து  ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பார் . அதை சிறுவனாக இருந்தபோது நாயகன் கவனித்து இருக்கிறான் 


 அந்த  ரேடியோ  டைம் டிராவல்  மிஷின் போல  செயல்படுமா?    என்பதுதான்  அந்த  ஆராய்ச்சி . நாயகன்  தன் அப்பாவின்  லட் சியத்தை   நிறைவேற்ற  நினைக்கிறான் .


அப்பாவின்  நண்பரிடம்  அதைத்தந்து  ரிப்பேர்  பார்க்கிறான் . செட்  ஆகவில்லை 


எதேச்சையாக ஒரு நாள்  அந்த  ரேடியோ ஆட்டொமேட் டிக்காக  கடந்த காலத்துடன் கனெக்ட்  ஆகிறது .நாயகியுடன் நாயகன் அந்த ரேடியோ மூலம் தொடர்பு கொண்டு  தினசரி பேசி  நட் பை   வளர்க்கிறான் .


 நாயகனுக்கு  ஒரு காதலி உண்டு . அவள்  நாயகன்  இப்படி  ஒரு பெண்ணுடன் கடலை போடுவதைக்கண்டு கடுப்பாகி பிரேக்கப் செய்யும் நிலையில்  இருக்கிறாள் 


 இப்போதுதான்  ஒரு திருப்பம் . நாயகன்  இத்தனை நாட்களாகபேசிக்கொண்டிருந்த பெண் வேறு யாரும் அல்ல .நாயகனின் அப்பாவின் காதலி தான் . இந்த உண்மை  தெரிந்த பின்  நாயகன்  நாயகியிடம்  அதை சொன்னபோது  நாயகி  நாயகனை  தன மகன் என்று  நினைக்கிறார் . ஆனால்  நாயகன்  அதை மறுக்கிறான் .


 நாயகனின்  திட் டம்  என்ன  எனில்  நாயகியைப்பயன்படுத்தி  கடந்த காலத்தில்  அப்பாவுக்கு நிகழ்ந்த  விபத்து  நடக்கும் நாளில்  அவரை  எச்சரித்து  அவரைக் காப்பாற்றுவதே 


 நாயகனின் திட் டம்  நிறைவேறியதா?  நாயகனின் அம்மா தான்   அவரா?  என்பது மீதி திரைக்கதை 


நாயகன்  ஆக பிரபு முண்ட்கர்  அற்புதமாக  நடித்து இருக்கிறார் . தாத்தவுடனான  சண்டை ,  ரேடியோவில் பேசும் பெண்ணுடனான கனிவு   என   அவர் காட்டும்   முக பாவனைகள் அருமை .நாயகி  ஆக  அதாவது  நாயகனின் அப்பாவின் காதலி ஆக  ரோஷினி பிரகாஷ்  கவிதை  போல்    போகிறார்     .நாயகனின்  காதலி ஆக லா   வீரமல்லா  நடித்திருக்கிறார் . இரு நாயகிகள்  நடிப்பும் , முக வெட்டும்  கச்சிதம் 


படத்துக்கான  பின்னணி   இசையை சில்வஸ்டர் பிரதீப்  அமைத்திருக்கிறார் .மெலடியை  அதிகம் நம்பி இருக்கிறார் . படத்தில்  மூன்று பாடல்கள் .பாடல்களுக்கான  இசையை சில்வஸ்டர் பிரதீப்  , அர்ஜுன்  ஜானியா .,, ராஜாட்  ஹெக்டே , கீர்த்தன்  ஹோலா  ஆகிய   நால்வர்  கவனித்து இருக்கிறார்கள் . 

எடிட்டிங்கை  மகேஷ் & கவின் ஆகிய இருவரும்  செய்திருக்கிறார்கள் . 136  நிமிடங்கள்  படம் ஓடுகிறது 

ஒளிப்பதிவு  ஆர் ஆதரிஷா . இவருக்கு சவாலான பணி . நிகழ்காலம் , கடந்த காலம்   கலர் டான் கரெக்ட்  ஆக செட்  செய்ய வேண்டும் . சரியாக  செய்து  இருக்கிறார் 

  நவீன் ஜி ரெட்டி , தயாரிப்பாளர் ஆன பிஸ் பி  வர்மா , நாயகன் ஆன  பிரபு முண்ட்கர்  ஆகிய  மூவரும் இணைந்து வசனம் எழுதி இருக்கிறார்கள் 

இயக்கி இருப்பவர் தயாரிப்பாளர் ஆன பிஸ் பி  வர்மா 



தயாரிப்பாளர் ஆன பிஸ் பி  வர்மா , நாயகன் ஆன  பிரபு முண்ட்கர்  ஆகிய  இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகியின் அற்புதமான நடிப்பு , சோகக்காட் சிகளில்  கூட  அவர் முகம் காட்டும்  பாவங்கள்  பிரமாதம் .  அடர்த்தியான கூந்தல் மயில் தோகை மாதிரி .. க்ளோசப்  சீன்களை  பிரமாதமாக்கப்படமாக்கிய ஒளிப்பதிவாளர் ,க்கு ஒரு ஷொட்டு 


2   டைம்  டிராவல்  செய்து  நாயகன் நாயகியுடன் நடத்தும் உரையாடல்கள்  த்ரில்லிங்க்  எபக்ட்  உடன்  சொன்ன   விதம் 


3  நாயகன் - நாயகி   இருவரும்  காதலர்கள் என  ஆடியன்ஸை  என்ன    வைத்து  திடீர்   என  ஒரு டிவிஸ்ட்   வைத்த விதம் அருமை 


4   தாத்தா , பேரன்  இருவரும்  நிகழ்  காலத்தில்  இருந்து கடந்த  காலத்தில்  அப்பாவின் குரலை  கேட்டுக்கண்ணீர் விடும் சென்ட்டிமென்ட்  சீன் 


  ரசித்த  வசனங்கள் 

1  ஐன்ஸடீன்  சொல்லி இருக்காரு , காலம் என்பது கற்பனை 


2  நிகழ் காலம் , எதிர் காலம் , இறந்த காலம்  இந்த மூன்றையும் யாராலும்  மாற்ற  முடியாது 


3 விதியை மாற்றி எழுதும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை 


4   பெரிய  மனிதனிடம் ,நம்மை விடப்பெரிய ஆளிடம்  மன்னிப்புக்கேட் கத் தயங்கக்கூடாது  


5  இன்ஸ்டா   என்றால்  என்ன?னு தெரியுமா? 


இன்ஸ்டால் மென்ட்  லோன் ? 


6 நதி மூலம், ரிஷி மூலம்  கேட்கக்கூடாது 


7 எனக்காக   இதுவரை  ஒரு கவிதையாவது  எழுதி  இருக்கியா? 


 சரி , பேப்பர்ல எழுதலை, ஆனா உன் இதயத்தில் எழுதி இருக்கேனே? 


8 பிசிக்ஸ்  ஒத்து வருது ,  கெமிஸ்ட்ரி  ஒர்க் அவுட் ஆகுது , இது ஒரு மிஸ்ட்ரி தான் . ஹிஸ்ட்டரில  இடம் பிடிக்கப்போறோம் 

9   எதிர்பாராமல் பெய்யும் மழை  மாதிரி என் அருகாமையில் வரும் உன் நிகழ்வுகள் 


10   ஒரு சின்ன  நிகழ்வு  ஒரு பெரிய நிகழ்வுக்குக்காரணி ஆவதை  டாமினோ  எபக்ட் என்பார்கள் . வரிசையாக அடுக்கப்பட் ட  சீட்டுக்கட்டு  ஒரே ஒரு  சீட் டால்  கவிழ்வது போல 

11   ஒரு நல்ல   அப்பா எப்படி  இருக்கணும் என்பதற்கு சிறந்த  உதாரணம்  என் அப்பா 


12  எனக்கு டேவிட்  ரொம்பப்பிடிக்கும். நீ என் கூடவே இருந்தா உனக்கும் பிடிக்கும், இருப்பியா?


எனக்கு  வேற ஆப்சன்  இருக்கா? 


13   எல்லா   பெற்றோரும்  குழந்தைகளுக்காக தியாகம்  செய்கிறார்கள்.ஆனால்   அதைப்பற்றி  அவர்கள் நினைத்துக்கொள்வதில்லை 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நிகழ் காலம் , எதிர் காலம் , இறந்த காலம்  இந்த மூன்றையும் யாராலும்  மாற்ற  முடியாது   என இவங்களே  படத்தில் ஒரு டயலாக்  வைத்து விட்டு   அந்த விதியை மீறியது 


2    டைம் டிராவல்  கான்செப்ட்டில்  நாயகன் - நாயகி   இருவர் மட்டும் தான்  உரையாட முடிகிறது . வே று யாரும் உடன் இல்லை .இது எதனால் ? தாத்தா , மகன்,  இருவரும்   அப்பாவிடம்   டைரக்ட்  ஆக  பேச முடியாதது எதனால் ? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மனதைத்தொடும்  காதல்   கதை .அப்பா, மகன் , தாத்தா சென்ட்டிமெண்ட்  சீன்களும் உண்டு . பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்,ஆண்கள் பொறுமைசாலி ஆக இருந்தால் ரசிக்கலாம் . ரேட்டிங்க்

   3 / 5 


Murphy
Theatrical release poster
Directed byBSP Varma
Written by
Dialogues by
  • Naveen G. Reddy
  • BSP Varma
  • Prabhu Mundkur
Produced by
  • Ramco Somanna
  • BSP Varma
Starring
CinematographyAdarsha R
Edited by
  • Mahesh Thogata
  • Kevin Mascarenhas
Music by
  • Songs:
  • Arjun Janya
  • Sylvester Pradeep
  • Rajat Hegde
  • Keerthan Holla
  • Score:
  • Sylvester Pradeep
Production
companies
  • Somanna Talkies
  • VarnaSindhu Studios
Distributed byGoldie Films
Release date
  • 18 October 2024
Running time
136 minutes[1]
CountryIndia
LanguagesKannada
Konkani