வெறும் 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி வசூல் செய்த படம் இது . பட பூஜை போட்ட போது 30 வயசுப்பெண்ணுக்கும், 25 வயதுப்பையனுக்கும் நடக்கும் காதல் என்ற ஒன் லைன்ல தான் ஆரம்பித்தார்கள் ,ஆனால் போகப்போக திரைக்கதை மொத்தமாக மாறியது , கற்பனைக்கதை தான்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி சிறுமியாக இருந்த போதே நாயகியின் அப்பா நாயகியின் அம்மாவை விட்டு ஓடிட்டாரு. அதனால நாயகிக்கு ஆண்கள் , கல்யாணம் , காதல் , மேல் நம்பிக்கை இல்லை . யாரையும் நம்பத்தயார் இல்லை . ஆனா அம்மா உடல் நிலை சரி இல்லாம இறந்துடறாங்க . இனிமே நமக்குனு யார் இருக்காங்க ? நமக்குன்னு ஒரு ஜீவன் வேணும், ஒரு குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்கறாங்க , ஆனா இயற்கை முறைப்படி வேண்டாம், டெஸ்ட் ட்யூப் பேபி போல உருவாக்கிக்கலாம்னு முடிவு பண்றாங்க . அதுக்காக ஸ்பெர்ம் டோனர் தேடும் பணில இருக்காங்க
ஈரோடு மகேஷ் , மதுரை முத்து மாதிரி பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆன ஜோக்குகளை மனப்பாடம் பண்ணி தானே உருவாக்கியது போல பேசும் வல்லமை படைத்த ஆள் போல் இல்லாமல் நாயகன் சொந்தமாக ஜோக்ஸ் சொல்லி மேடைகளில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்பவன். பார்ட் டைம் ஜாப் ஆக இதை செய்கிறான். நாயகி ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சீஃப் செஃப் ஆக பணி புரிகிறார்
நாயகிக்கு உருவாக இருக்கும் கரு ஆரோக்கியமான நல்ல குடும்பப்பின்னணி உள்ள ஆணிடம் இருந்து பெற வேண்டும் என நினைக்கிறார். பலரை இண்ட்டர்வ்யூ செய்கிறார். யாரும் செட் ஆகவில்லை .நாயகி கண்ணில் நாயகன் பட்டதும் அவனது புத்திசாலித்தனம் , குடும்பப்பின்னணி நாயகிக்குப்பிடித்து விடுகிறது
ஆனால் நாயகனுக்கு நாயகியின் பின்னணி தெரியாது . தன்னை லவ் பண்ணுகிறார் என நினைக்கிறார். இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் , நெஞ்சைத்தொடும் க்ளைமாக்ஸ் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக நவீன் ஆந்திர கார்த்திக் போல சுறுசுறுப்பு துறுதுறுப்பு என கலக்கலான நடிப்பு. அப்பாவித்தனமான முகம் இவரது பிளஸ்
நாயகி ஆக அனுஷ்கா ரொம்பவே அடக்கி வாசித்து இருக்கிறார். கேரக்டர் டிசைன் டல் என்பதால் டல் மேக்கப்புடன் வருகிறார். அட்லீஸ் நெற்றியில் குங்குமம் ஆவது இட்டிருக்கலாம்
நாயகியின் அம்மாவாக ஜெயசுதா சில காட்சிகளில் வருகிறார். பாந்தமான நடிப்பு .நாயகனின் அப்பாவாக முரளிசர்மா கச்சிதமாக நடித்திருக்கிறார்
5 பாடல்களில் மூன்று சிறப்பு, பிஜிஎம் ஓக்கே ரகம். கோட்டகிரி வெங்கடேஸ்வரராவின் எடிட்டிங்கில் 147 நிமிடங்கள் ஓடுகிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் மகேஷ்பாபு
சபாஷ் டைரக்டர் (மகேஷ்பாபு )
1 ஸ்பெர்ம் டோனர் ஆக ஹாஸ்பிடல் வரும் நாயகன் ரிசப்ஷனில் பாட்டில் குடுங்க எனக்கேட்கும்போது டேபிளில் ஒரு லிட்டர் வாட்டர் கேன் இருப்பதைக்கவனிக்காமல் அருகே இருக்கும் சின்ன பாட்டிலை மீன் பண்ணி சொல்லும் ரிசப்ஷனிஸ்ட் , அதை தவறாகப்புரிந்து கொண்ட நாயகன் நான் என்ன குதிரையா? இவ்ளோ பெரிய பாட்டில் எதுக்கு ? என அப்பாவியாய் கேட்கும்போது வெடிச்சிரிப்பு அக்மார்க் கே பாக்யாராஜ் டைப் காமெடி . விஷூவலாக பிர்மாதமாக ஒர்க் அவுட் ஆன காமெடி சீன்
2 சீரியஸ் ஆன திரைக்கதையை காமெடியாக எடுத்துச்சென்ற விதம் அருமை
3 முதல் பாதி ஆண்களுக்குப்பிடித்த மாதிரி கலகலப்பாகவும், பின் பாதி பெண்களுக்கு பிடித்த மாதிரி டி வி சீரியல் போலவும் திரைக்கதை அமைத்த விதம்
ரசித்த வசனங்கள்
1 நாம எல்லாருமே எக்ஸ்பயரி டேட் உடன் தான் இங்கே வர்றோம். அதனால டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது
2 நமக்குன்னு யாரும் இல்லாம போனா வாழ்க்கை பூரா தனிமைதான்
3 போகப்போகும் உயிரைக்கைல பிடிச்சு இழுத்து நிறுத்த நமக்கு ஒரு கை வேண்டும்
4 அடுத்தவங்களை சிரிக்க வைக்கறவங்களுக்கு ஷார்ப் மைண்டாம்
5 ஸ்டேண்ட் அப் காமெடி பற்றி உங்களுக்கு சரியாத்தெரியல. அதுல இல்லாதது மூணு 1 சூடு 2 சொரணை 3 துட்டு
6 கார்ப்பரேட் கம்ப்பெனியா? என் கிட்டே கரன்சி தான் இல்லை , ஆனா க்ரிப்டோ கரன்சி ஜோக்ஸ் நிறைய இருக்கு
7 நர்ஸ் = அந்தப்பொண்ணு உங்க சிஸ்டரா?
சிஸ்டர், நீங்க சிஸ்டர் என்பதால் பார்க்கற எல்லாப்பொண்ணுமே சிஸ்டர் ஆக முடியுமா? சிஸ்டர் ?
8 காதலனுக்கும் , காதலிக்கும் இடையே உள்:ள உறவு எபப்டி இருக்கனும் தெரியுமா? ரத்த தானம் செய்பவர் , அதைப்பெறுபவர் இருவருக்கிடையே உள்ள உறவு போல இருக்கனும், மேட்ச் ஆனாலே போதும்
9 என்னது ? மேரேஜ் வேண்டாம், ஆனா உன் மூலம் ஒரு குழந்தை வேணும்கறாளா? டைரக்டா ஃபர்ஸ்ட் நைட்டா? ஐ ஜாலி
10 அவ உனக்கு ஓக்கே சொன்னாளா? இல்லையா?
அது வந்து ... மேடம்க்கு பீட்சா வேணுமாம், ஆனா கலோரி வேண்டாமாம், வீடு வேணுமாம், ஆனா இஎம் ஐ கட்ட மாட்டாங்களாம், ஃபிளைட்ல ஏறனுமாம், ஆனா டிக்கெட் எடுக்க மாட்டாளாம்
11 என்ன ? அவ கூட லவ் ஜோன் க்கு போயாச்சா?
இல்லடா., இது ப்ரோ ஜோன் இல்லை , ஃபிர்ண்ட்ஷிப் ஜோன் கூட இல்லை , யூஸ் அண்ட் த்ரோ ஜோன் மாதிரி இருக்கு
12 எனக்கு காதல் , கல்யாணம்., ரிலேஷன்ஷிப் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை , இட் ஈஸ் நாட் எ கப் ஆஃப் டீ
ஆனா எங்க:ளுக்கு அது ஃபுல் மீல்ஸ் பிளேட்
13 ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்காம தாய் ஆக நினைப்பது சீப்பா? தப்பா> ?
14 நீ நினைச்சுட்டு இருக்கற மாதிரி நீ காமெடியன் எல்லாம் இல்லை , ஜோக்கர் ,எனக்கு ஜோக்கர் கூட வேலை இல்லை
15 தோசை ஊத்தறேன், சப்ட்டுட்டு போடா
நீ தோசை ஊத்து அவன் சாயங்காலம் நம்மைக்கழுவிக்கழுவி ஊத்தட்டும்
16 நேத்து உன் ஷோ பார்த்தப்ப வோர்ல்ட் கப் கிரிக்கெட் மேட்ச் ஆட தகுதி உள்ளவன் தெரு ஓரம் மேட்ச் ஆடற மாதிரி இருந்துச்சு
17 ஒரு பெண்ணின் மனசை நிரப்பனும்னா முதல்ல அவ வயிற்றை நிரப்பனும்
18 IUIமுறைப்படி ஒரு டாக்டரோட சூப்பர்விஷன்ல தான் இது ந்டக்கும்
புரியல , ஐ யூ ஐ, இடைல டாக்டர் எதுக்கு ?
19 நீ சொன்னதைக்கேட்டா மேரேஜ்க்கு முன்னமே டைவ்ர்ஸ் செஞ்ச மாதிரி இருக்கு
20 என்ன? பப்ளிக்ல இந்த மாதிரி புக் படிச்சுட்டு இருக்க?
இங்கே நடக்க இருப்பது ஹோமம் இல்லை , காமம்
21 ஷேம் ஆன் யூ மேன் , சிகரெட் பிடிச்சா குழந்தை பிறக்காது தெரியுமா?
ஆல்ரெடி எனக்கு மூணு குழந்தைங்க
அப்ப இனிமே பிறக்காது
22 ஒரு பிரேக்கப்பிற்குப்பின் பசங்க எல்லாம் டிப்ரெஷன் ஆகிடுவாங்க , ஆனா பொண்ணுங்க இன்னும் ஸ்ட்ராங் ஆகிடுவாங்க
23 அம்மா இல்லாத குறையை அம்மா ஆகி தீர்த்துக்கறதா சொல்றே!
24 பிரேக்கப் ஆனதுக்கப்புறம் ஃபிரண்ட்ஸ் உசுப்பேத்துவாங்க , கடல் ல ஏகப்பட்ட மீன்கள் இருக்க கவலை எதுக்கு?ம்பாங்க, ஆனா மீனுக்கு தூண்டில் ஓடும் மீனவர்களும் இருக்காங்களே?>
25 வெளில இருந்து கிடைக்கும் அன்பை அவ நம்பாததால் தான் தனக்கு உள்ளே ஒரு உறவை தேடிக்கிட்டா
26 எனக்கு நீ வேணும்னு நீ கேட்டியே தவிர உனக்கு நான் இருக்கேன்னு சொல்லலையே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி தனக்கு உருவாக இருக்கும் குழந்தைக்கு அப்பாவாக வர இருப்பவன் திறமைசாலியாக இருக்க வேண்டும், நல்ல குடும்பப்பின்னணி இருக்க வேண்டும் என எதிர்பார்த்து பலரை இண்ட்டர்வ்யூ செய்கிறார், ஆனா யாரும் செட் ஆகலை, ஆனால் நாயகனை ஒரு ஷோவில் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிறார். முதல் டைம் பார்க்கும்போதே நாயகன் சரக்கு அடிச்சுட்டு இருக்காரு. அது நாயகி கண்ணை உறுத்தலையா? போயும் போயும் ஒரு குடிகாரனையா தேர்ந்தெடுப்பார் ?
2 நாயகனின் அப்பா நாயகனின் ரூமுக்கு வந்து அந்த ஃபோட்டோவில் இருப்பது யார்? என விசாரிக்கிறார். அப்போ இதுவரை அவர் தன் மகன் ரூம்க்கு வந்ததே இல்லையா? ஒரே வீட்டில் இருந்துமா?
3 ரோட்டோரக்க்டையில் பஜ்ஜி சாப்பிடப்போகும் நாயகன் , நாயகி இருவரும் ரெகுலரா இஞ்ஜின் ஆயில்ல போடும் பஜ்ஜி வேண்டாம், நல்ல ஆயில்ல பஜ்ஜி போடு என்றதும் அடுத்த செகண்டே கடைக்காரன் பஜ்ஜி தர்றான். கடாயை புதுசா அடுப்புல வெச்சு எண்ணெய் காயவே 10 நிமிசம் ஆகுமே? எப்படி நல்ல பஜ்ஜி வந்துச்சு?னு நாயகன் கேட்கவே இல்லை.
4 ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆன நாயகி மிகவும் ஹைஜீனிக்கான உணவு உண்பவர், அவர் எப்படி ரோட்டோரக்கடையில் மட்டமான ஆயிலில் போடும் பஜ்ஜியை சாப்பிட முன் வந்தார் ?
5 நாயகியும் தோழியும் நாயகன் டீ டோட்டலரா? என்பதை செக் செய்ய யார் யாரிடமோ விசாரிக்கிறார்கள் , நாயகன் என்னடானா நடு ரோட்ல தம் அடிக்கிறான், சரக்கு அடிக்கிறான். நாயகனை ஒரு ஃபுல் டே ஃபாலோ பண்ணி வாட்ச் பண்ணாலே போதுமே? அது போக கேன்சர் பிறப்பிடமான சிகரெட் குடிப்பவர்கள் கீழ் உதடு கருத்திருக்குமே? அவங்க பேசும்போது நாற்றம் அடிக்குமே? அது கூடவா கண்டு பிடிக்க முடியல ?
6 ஒரு கட்டத்தில் , ஒரு விவாதத்தில் குடிகாரன் ஆன நாயகன் தன் ஃபிரண்ட்ஸ்களிடம் கோபமாக “ குடிச்சு சாவுங்கடா எல்லாரும் “ என்கிறார், இவர் என்னமோ டி டோட்டலர் மாதிரி
7 நாயகன் ஒரு முறை ஸ்டேண்ட் அப் காமெடி பண்றேன் பேர்வழி என மேடையில் தன் பெற்றோர் எப்படி ரொமான்ஸ் பண்ணுவாங்க என்ப்தை மோனோ ஆக்டிங் ஆக செய்து காண்பிப்பது அபத்தம், அந்த சமயம் அவர் அப்பா அங்கே வருவது அதைக்கேட்பது எல்லாம் இயக்குநரின் மட்ட ரகமான கற்பனை
8 நாயகி பல இடங்களில் அண்டர்ப்ளே ஆக்டிங் பண்ணும்போது நாயகியின் தோழி ஜோதிகாவுக்கு அக்கா மாதிரி ஏன் ஓவர் ஆக்டிங் பண்ணிக்கொண்டிருக்கிறார்?
9 நாயகி நாயகன் வீட்டுக்கு வரும்போது அவன் தூங்கிட்டு இருக்கான் , மேலே போய்ப்பாரு என்று அம்மா சொன்னதும் நாயகி பெட்ரூம் போகிறாள். நாயகன் ஷூ ஷாக்ஸ் எல்லாம் போட்டுட்டு தூங்கிட்டு இருக்கார் . கனவுலயே வாக்கிங் போவாரோ?
10 நாயகி தன் தரப்பு நியாயத்தை நாயகனிடம் 118 வது நிமிடம் , விளக்குகிறார். அதை முதல்லியே சொல்லி இருந்தா இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது ,
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- காட்சி ரீதியாக 18+ ஏதும் இல்லை , ஆனால் வசனத்தில் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பெண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஃபேமிலி ஆடியன்சின் ஆதரவில்தான் ஹிட் ஆச்சு . ரேட்டிங் 3/ 5
Miss Shetty Mr Polishetty | |
---|---|
Directed by | Mahesh Babu Pachigolla |
Written by | Mahesh Babu Pachigolla |
Produced by |
|
Starring | |
Cinematography | Nirav Shah |
Edited by | Kotagiri Venkateswara Rao |
Music by |
|
Production company | UV Creations |
Release date |
|
Running time | 147 minutes[1] |
Country | India |
Language | Telugu |
Budget | ₹12.5–50 crore[2][3] |
Box office | ₹50 crore[4] |