2021 ஆம் ஆண்டில் 14 விருதுகளைக்குவித்த படம். 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு டபுள் மடங்கு வசூலை அள்ளிய படம் என கம்ர்ஷியல் ஆகவும் இது வெற்றிப்பட,ம். ஆனால் தமிழில் சூப்பர் ஹீரோ படங்கள் ஓடியதில்லை . ஜீவா நடித்து மிஸ்கின் இயக்கத்தில் வந்த முகமூடி அட்டர் ஃபிளாப் , சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ ஃபிளாப் . ஆனால் தமிழ் சினி ஃபீல்டால் சாதிக்க முடியாத ஒன்றை கேரள பட உலகம்சாதித்தது என்றால் காரணம் திரைக்கதை
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு டெய்லர் , வில்லன் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஏழை . இருவருமே தனித்தனியாக வெவ்வேறு பெண்ணை விரும்பியவர்கள் . ஆனால் இருவருக்கும் காதல் கை கூடவில்லை
நாயகன் காதலித்த பெண் வழக்கம் போல வசதியான மாப்பிள்ளை கிடைத்ததும் நாயகனுக்கு அல்வா கொடுத்து விடுகிறாள் . வில்லனின் காதல் கதையே வித்தியாசமானது . ஸ்கூல் படிக்கும்போதே காதலிக்குத்தெரியாமல் மனசுக்குள் பூட்டி வைத்துத்தன் காதலை வளர்க்கிறான்
ஆனால் வில்லனின் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகிறது. ஆனால் அவன் திருமணத்துக்குப்பின் மனைவியைக்கை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் ஓடி விட்டான்., இப்போது வில்லனின் காதலி அவளுக்குப்பிறந்த ஒரு பெண் குழந்தையுடன் அப்பா வீட்டில் வசித்து வருகிறார்
ஒரு நாள் ஊரில் கடும் மழை ,மின்னல் . அந்த மின்னல் நாயகன் ,வில்லன் இருவரையும் தாக்குகிறது . இருவருக்குள்ளும் அபூர்வ சக்தி வருகிறது . இருவருமே அவரவர் பர்சனல் வாழ்க்கையில் அபூர்வ சக்தியை பயன்படுத்திக்கொள்கின்றனர்
வில்லனின் காதலியை மணக்க காதலியின் அப்பா குறுக்கே நிற்க ஆத்திரத்தில் அவரைக்கொன்று விடுகிறான் வில்லன். ஒரு கட்டத்தில் தன் காதலியைக்கொலை செய்த ஊர் மக்களைப்பழி வாங்கத்துடிக்கிறான் வில்லன் . நாயகன் வில்லனை எவ்வாறு வீழ்த்தினான் என்பதே மீதிக்கதை
நாயகன் ஆக டொவினோ தாமஸ் சாமான்ய இளைஞனாக வரும்போதும் சரி ,சூப்பர் ஹீரோ அகும்போதும் சரி மாறுபட்ட நடிப்பைத்தந்திருக்கிறார். குறிப்பாக சூப்பர் ஹீரோ யூனிஃபார்மில் பாடி ஃபிட்டாக தொப்பை இல்லாமல் கச்சிதமாக இருக்கிறார்
வில்லன் ஆக குரு சோமசுந்தரம் ஆரம்பத்தில் பரிதாபம் ஏற்படுத்தும் கேரக்டரில் வந்து விட்டு வில்லனாக மாறுவது கச்சிதம் நாயகனுக்கு இணையான கேரக்டர். பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்
வில்லனின் காதலியாக ஷெல்லி வட்ட முகம், நாவல் பழ கண்கள் . கச்சிதமான நடிப்பு நாயகனின் கேர்ள் ஃபிரண்ட் ஆக ட்ராவல் ஏஜெண்ட் ஆக ஃபெமினா ஜார்ஜ் கவனிக்க வைக்கிறார்
159 நிமிடங்கள் ஓடும்படி எடிட்டர் ட்ரிம் பண்ணி இருக்கிறார். முதல் பாதி ரொம்ப ஸ்லோ. இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம். பல காட்சிகள் கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ் கிளப்புகின்றன
பாடல்களுக்கான இசையை ஷான் ரஹ்மான் , அஜூ வ்ர்கீஸ் இருவரும் கவனிக்க பின்னணி இசையை சுஷீன் ஷியாம் அமைத்திருக்கிறார். சூப்பர் ஹீரோ வரும்போது இன்னும் பிரமாதமான பிஜிஎம்மை தெறிக்க விட்டிருக்கலாம் , மிஸ்டு
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் - நாயகி காதல் கை கூடுமா? என்ற எண்ணத்தை விட வில்லன் - பள்ளிட்தோழி காதல் கை கூட வேண்டுமே என்ற எண்ணத்தை ஆடியன்ஸ் மனதிலே விதைத்த பாங்கு அருமை
2 நாயகன் - வில்லன் சம அளவு வாய்ப்பு என்பதல் நாயகனை குஷிப்படுத்த ஃபிளாஸ்பேக் காட்சிகளில் நாயகனின் அப்பாவாக இன்னொரு ரோல் கொடுத்து எம் ஜி ஆர் கால டெக்னிக் ஆன டூயல் ரோல் ஒரே ஆள் என அமைத்தது சிறப்பு
3 நாயகன் , வில்லன் இருவரும் தங்கள் சக்தியை உபயோகப்படுத்தும் காட்சிகளில் சி ஜி ஒர்க் பக்கா . சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும்
4 நாயகனை உசுப்பேற்றி விடும் அந்த சின்னப்பையன் கேரக்டர் டிசைனும், அவன் நடிப்பும் குட்
ரசித்த வசனங்கள்
1 உன்னை மின்னல் தாக்கிய விஷயத்தை என் ஃபிரண்ட்ஸ் எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேன்
உன்னால முடிஞ்ச வரை என் பேரை ரிப்பேர் பண்ணப்பார்க்கறே
2 ஏண்டி , ஹாஸ்பிடல் போகும் முன் ச்மையல் வேலை எல்லாம் புடுங்கி வெச்சுட்டுப்போன்னு தானே சொன்னேன்?
நான் புடுங்கி வெச்சுட்டுதானே போனேன் ?
என்னது ?
சமையல் பண்ணி வெச்சுட்டுதான் போனேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் தன் காதலியின் அப்பாவைக்கொலை செய்யும் காட்சி தேவையற்றது. ப்ரியமுடன் படத்தில் விஜய் காதலியின் அப்பாவைக்கொல்ல காரணம் இருந்தது . இதில் இல்லை . காதலி இப்போது வாழாவெட்டி . ஒரு பெண் குழந்தையுடன் இருக்கிறார். இப்போது அப்பாவின் சம்மதம் அவ்வளவு முக்கியம் இல்லை . காதலி டீன் ஏஜ் என்றால் ஓக்கே 35 வயசு அச்சு . இனிமேல் அவர் முடிவெடுத்தாலே போதுமே? எதற்கு தேவை இல்லாமல் கொலை ?
2 வில்லன் பாங்க்கைக்கொள்ளை அடித்து ஒரு லட்சம் ரூபா மட்டும் எடுத்துக்கொண்டான் என்பது நம்பும்படி இல்லை . அதே போல் அவளோ பணம் கிடைத்த பின்பும் அவன் வாழ்வியல் முறையில் மாற்றம் வரவில்லை . டீசண்ட் டிரஸ் கூட இல்லை
3 நாயகன் சூப்பர் மேன் ஆனபின் காதலி மனம் வருந்தி அடடா, இவனையே திருமணம் செய்திருக்கலாமே? என மனம் வருந்தும் காட்சி வைக்கப்படவில்லை ., வைத்திருக்க வேண்டும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சிறுவர்கள் மட்டுமல்ல , அனைவரும் காண வேண்டிய சுவராஸ்யமான சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். டோண்ட் மிஸ் இட் ரேட்டிங் 3 / 5
Minnal Murali | |
---|---|
Directed by | Basil Joseph |
Written by | Arun Anirudhan Justin Mathew |
Produced by | Sophia Paul |
Starring |
|
Cinematography | Sameer Thahir |
Edited by | Livingston Mathew |
Music by | Songs: Shaan Rahman Sushin Shyam Background Score: Sushin Shyam |
Production company | |
Distributed by | Netflix |
Release dates |
|
Running time | 159 minutes[1] |
Country | India |
Language | Malayalam |
Budget | ₹20 crore (US$2.5 million) |