2018ல் ரிலீஸ் ஆன ஹிந்திப்படமான அந்தாதூன் க்ரைம் த்ரில்லர் ரசிகர்களைக்கொண்டாட வைத்தது. இந்தியாவில் அதிக மொழிகளில் ரீமேக் ஆன படங்களில் டாப் 2 ஆக அது திகழ்ந்தது.( டாப்1 த்ரிஷ்யம்) தமிழில் கூட அந்தகன் என்னும் டைட்டிலில் பிரசாந்த் நடிக்க வெளி வர இருக்கிறது . அப்படிப்பட்ட செம ஹிட் பட இயக்குநர் ஆன ஸ்ரீ ராம் ராகவன் 5 வருட இடைவெளிக்குப்பின் இயக்கும் ஹிந்தி -தமிழ் ஆகிய இரு மொழிப்படம் தான் இந்த மெரி கிறிஸ்மஸ்
முதல் 30 நிமிடங்கள் பிரமாதமான ஃபீல் குட் ரொமாண்டிக் மூவிமாதிரி செல்லும் திரைக்கதை பின் பாதியில் தான் க்ரைம் த்ரில்லர் ஆக மாறும், எனவே த்ரில்லர் ரசிகர்கள் அல்லாதோர் கூட முதல் 30 நிமிடங்களை மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்.
ரைட்டர் ஃப்ரெட்ரிக் டார்ட் எழுதி 1960 ல் ரிலீஸ் ஆன நாவல் ஆன எ பர்ட் இன் எ கேஜ் கதையைத்தழுவி எழுதப்பட்ட திரைக்கதை இது. 1958ல் அகதா கிறிஸ்டி எழுதிய நாவல் ஆன த அன் எக்ஸ்பெக்ட்டட் கெஸ்ட் கதையை மையமாக வைத்து 1989ல் TARKA என்ற கன்னடப்படம் ரிலீஸ் ஆனது . அதன் அஃபிசியல் ரீமேக் ஆக தமிழில் 1990 ல் ரிலீஸ் ஆன கே எஸ் ரவிக்குமர் + ரகுவரன் காம்போ படம் ஆன புரியாத புதிர் அமைந்தது . இந்த இரண்டு நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் திருமணம் ஆகாதவர் . அவர் திருமணம் ஆகி ஒரு குழந்தையுடன் இருக்கும் நாயகியை ஒரு கிளப்பில் சந்திக்கிறார். எதேச்சையாக உரையாடல்கள் வளர அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நட்பு உருவாகிறது.தன் வீட்டுக்கு நாயகி அழைக்கிறார்
நாயகன் நாயகி வீட்டுக்கு செல்கிறார். இருவரும் வீட்டில் சரக்கு அடிக்கிறார்கள் .குழந்தையைத்தூங்க வைத்து விட்டு நாயகி நாயகனிடம் ஜாலியாக ஒரு ரைடு போகலாமா ? எனக்கேட்க இருவரும் வெளியே சென்று விட்டு பின் வீட்டுக்குத்திரும்புகிறார்கள் . ஒரு அதிர்ச்சி . நாயகியின் கணவர் நாயகியின் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். இருவருக்கும் அதிர்ச்சி.
இதற்குப்பின் நிகழும் சம்பவ்ங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக விஜய் சேதுபதி அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். அழகான டான்ஸ் ஸ்டெப்கள் போடுகிறார். கமல் போலவோ , பிரபு தேவா போலவோ முறையாக நடனம் பயிலாத அவர் ஒரு சாமான்யன் ஆடும் ஆட்டம் போல அவ்ளோ யதார்த்தமாக போடும் ஸ்டெப்களுக்கு ஆடியன்ஸ் தரப்பில் அவ்ளோ வரவேற்பு
நாயகி ஆக கேத்ரினா கைஃப் அழகாக வந்து போகிறார். முகத்தில் குழந்தைத்தனம் , ஆனால் உடலில் கிளாமர் . இந்த வித்தியாசமான காம்பினேஷனில் ஜொலிக்கக்கூடிய நடிகைகள் இருவர் தான் இந்தியாவில் இருக்கிறார்கள் 1 ஸ்ரீ தேவி 2 கேத்ரினா கைஃப். இயல்பாக நடித்திருக்கிறார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
போலீஸ் ஆஃபீசர் ஆக விருமாண்டி புகழ் சண்முகராஜனும், ஏட்டம்மாவாக ராதிகாவும் நடித்திருக்கிறார்கள். ராதிகாவின் உடல் மொழியில் , டயலாக் டெலிவரியில் ரொம்பவே செயற்கை தெரிகிறது
பூஜா லதா ஸ்ருதி தான் எடிட்டர். இது ஒருவரா?மூவரா? தெரியவில்லை .144 நிமிடங்கள் படம் ஓடும்படி ட்ரிம் பண்ணி இருக்கிறார்.
பாடல்களுக்கான இசை ப்ரீதம் . பின்னணி இசை டேனியல் பி ஜார்ஜ் . க்ளைமாக்ஸ் சீனில் வயலினைப்போட்டு கொண்டாடி இருக்கிறார்,
மது நீலகண்டன் ஒளிப்பதிவில் டார்க் ஷேடில் ரம்மியமாகக்காட்சிகள் நகர்கின்றன. பெரும்பாலான காட்சிகள் ஒரே இரவில் நடப்பதாக காட்டி இருப்பதால் ஒளிப்பதிவாளருக்கு சவாலான வேலை தான்
எனக்குத்தெரிந்து சமீப காலப்பட்ங்களில் திரைக்கதை எழுத மட்டும் 11 பேர் ஈடுபட்டிருப்பது இதில் மட்டும் தான்
சபாஷ் டைரக்டர்
1 முதல் முப்பது நிமிடங்கள் அட்டகாசமான ரொமாண்டிக் ஃபீல் குட் மூவி பார்ப்பது போல அவ்ளவ் யதார்த்தமான காட்சிகள் .நடிப்பு , இயக்கம், இசை , ஒளிப்பதிவு எல்லாம் அருமை
2 த்ரிஷ்யம் படத்தில் கொலை நடந்த தேதியை மாற்றி அமைக்க திட்டம் போடுவது போல இதில் கொலை நடக்கும் இடம் ஜெராக்ஸ் காப்பி போல அருகருகே ஒரே மாதிரி இரு வீடு என்பது மாறுபட்ட கற்பனை
3 வில்லன் பர்சை நாயகியின் வீட்டில் சோபாவில் ஒளித்து வைப்பதும் அதை வைத்து பின்னப்பட்டிருக்கும் வலைகளும் அருமை
4 நாயகன் பேப்பர் மூலம் கப்பல் , ராக்கெட் செய்யும் வித்தையை ஓப்பனிங்கில் சாதாரணமாகக்காட்டி பின் ஒரு காட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் அதை வைத்து காட்டப்பட்டிருக்கும் ஒரு ட்விஸ்ட் குட்
5 க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகன் நாயகியிடம் மோதிரத்தை தர அதை அணிவிக்கும்படி நாயகி சூசகமாக தன் கை விரல்களைக்காட்ட அது ஒரு கவிதையான காட்சி
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்துல சின்ன உயிரினங்கள் , பெரிய உயிரினங்கள் எல்லாமே ஒரு மொமெண்ட்டுக்காகத்தான் காத்திருக்கும். அந்த மொமெண்ட் வரும்போது மிஸ் பண்ணிடக்கூடாது
2 துபாய் எப்படி இருக்கு ?
டூ மச் டிசிப்ளின்
3 எது பெரிய துயரம்?னு தெரியலை . பிடிச்சவங்க இல்லாம போவதா? இருக்கறவங்க பிடிக்காம போறதா?
4 இந்த ஃபோட்டோவில் ரொம்ப ம்கிழ்ச்சியா இருக்கீங்க? ஆனா லைஃப் செட் ஆகலைங்கறீங்க?
அதுக்காக யாராவது அழுதுட்டு இருக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்து ஆல்பத்துல வைப்பாங்களா?
5 அவளை மறந்தபின் அந்த மோதிரத்தை தூக்கிப்போட்டுடலாம்னு இருக்கேன்
தூக்கிப்போட்டா தானே மறக்க முடியும் ?
6 லவ் பண்ணினவ்ங்க செத்துப்போறதா?லவ்வே செத்துப்போவதா? எது துயரம் அதிகம் ?
7 இப்போ பிரச்சனை கடவுள் நம்பிக்கை எனக்கு இருக்கிறதா??இல்லையா? என்பதல்ல, கடவுள் என்னை சந்திச்சா என் மேல நம்பிக்கை வைப்பாரா? இல்லையா? என்பதுதான்
8 என்னால ஈசியா ஒரு விஷயம் பண்ண முடியுதுனா அது தோசை ஊத்தறதுதான்
9 நாம பேசிட்டு இருந்த படம் இன்று நான் நாளை நீ தானே?
இல்லை , இன்று நீ நாளை நான்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 இந்தக்காலத்தில் பெண் கிடைக்காமல் ஏக்கத்தில் பல ஆண்கள் சுத்திட்டு இருக்காங்க . அப்படி இருக்கும்போது அல்வாக்குட்டி மாதிரி நாயகி தன்னைத்தேடி வர அந்த ஆள் நாயகி கூட குழந்தை இருப்பதால் ஓடிப்போவது நம்பும்படி இல்லை , அவன் என்ன காலம் பூரா வெச்சுக்காப்பாத்தவா வந்திருக்கான் ?
2 தனக்குக்கிடைக்கலைன்னாலும் அடுத்தவனுக்குக்கிடைக்கக்கூடாது என்ற மனநிலையில் தான் ஆண்கள் இருப்பார்கள் . நாயகியை விட்டு ஓடிப்போக நினைக்கும் அந்த ஆள் அவன் பாட்டுக்கு ஓடிப்போகாம எதற்காக நாயகனிடம் நாயகியை அறிமுகப்படுத்தி விட்டு ஓட வேண்டும் ?
3 கொலை நடந்த வீட்டில் சாட்சிகள்,தடயங்கள் கலையாமல் இருக்க போலீஸ்காரர் ஒருவரை பாதுகாப்புக்கு விட்டுச்செல்வது மரபு , அது ஃபாலோ செய்யப்படலை
4 நாயகி கொலை நடந்த வீட்டின் ரூமுக்கு அருகே இன்னொரு ரூமில் எல்லாப்பொருள்களையும் போட்டு எரிக்கிறார். அடுத்த நாள் போலீஸ் கேள்வி கேட்காதா?
5 நாயகன் க்ளைமாக்சில் எடுக்கும் முடிவு அபத்தமானது . எதற்காக வாலண்ட்ரியாகப்போய் மாட்டிக்கொள்கிறார் ?
6 கதை நடப்பது இந்தியாவில். போலீஸ் என்ன மாதிரி நடக்கும் என்பதை இந்தியக்காவலர்கள் போல தான் காட்ட வேண்டும், ஒரிஜினல் நாவல் கதைக்களம் ஃப்ர்ஞ்ச் நாடு. ஃப்ரெஞ்ச் நாட்டில் மனித உரிமை இருக்கும், அதை இங்கே இருப்பது போலப்பேசிக்கொண்டு இருப்பது சிரிப்பை வர வைக்குது .நம்மூரு போலீஸ் எந்தக்காலத்தில் மனித நேயத்தோடு நடந்து இருக்காங்க ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரொமாண்டிக் டிராமா ரசிகர்கள் முதல் பாதியையும், க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பின் பாதியையும் ரசிக்கலாம், விஜய் சேதுபத் , கரீனா கைஃப் ரசிகர்கள் முழுப்படத்தையும் பார்க்கலாம் . ரேட்டிங் 2.75 / 5
Merry Christmas | |
---|---|
Directed by | Sriram Raghavan |
Written by |
|
Based on | Le Monte-charge by Frédéric Dard[1] |
Produced by |
|
Starring | |
Cinematography | Madhu Neelakandan |
Edited by | Pooja Ladha Surti |
Music by |
|
Production companies | |
Distributed by | |
Release date |
|
Running time | 144 minutes[2] |
Country | India |
Languages |
|
Budget | ₹60 crore[3][4] |