Showing posts with label MEPPADIYAN(2022) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label MEPPADIYAN(2022) - மலையாளம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, March 03, 2023

MEPPADIYAN(2022) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


மேப்படியான்  என்பதற்கு  தமிழில்  மேற்கூறியபடி  என  அர்த்தம்.  நடிகர்  உன்னி  முகுந்தனின்   முதல்  சொந்தப்படம். உன்னி  முகுந்தன்  ஃபிலிம்ஸ்  என  சினிமா  கம்பெனி  தொடங்கி  எடுத்த  முதல்  படம் . இந்தப்படம் ரிலீஸ்  ஆகும் முன்  அமலாக்கத்துறை  இவர்  வீட்டில்  ரெய்ட் வந்தது  அப்போது  பரபரப்பாகப்பேசப்பட்டது. 2010 ஆம் ஆண்டு    கேரளா மாநிலம்  இடுக்கி  மாவட்டம் ஈராற்றுப்பேட்டை (  ஈராட்டுப்பேட்ட) எனும்  ஊரில்  நிகழ்ந்த  உண்மை  சம்பவம்  இது 

  ஸ்பாய்லர்  அலெர்ட்



நாயகன்  ஒரு  கார்  மெக்கானிக் . இவருக்கு  சொந்த  வீடு  உண்டு, அம்மா, ஒரு  காதலி  உண்டு இவர்  வசிக்கும்  அதே  ஏரியாவில்  மளிகைக்கடை  நடத்தி  வருபவர்  10 செண்ட்  நிலம்    வாங்க  ஆசைப்படுகிறார்.அதே  போல  நாயகனுக்கும்  10  செண்ட்  நிலம்  வாங்க  வேண்டிய  தேவை  இருக்கிறது 


அப்போது  ஒருவரிடம் 54 செண்ட்  இடம்  இருப்பதாக  தகவல்  வருகிறது . அந்த  மளிகைக்கடைக்காரர்  நாயகனிடம்  சொல்லும்  யோசனை  இதுதான். நாம்  இருவரும்  சேர்ந்து  அந்த  நிலத்தை  வாங்குவோம். அந்த  நிலத்தை  நிரவி  ஃபிளாட்  போட்டு  விற்றால் டபுள்  மடங்கு    லாபம்  கிடைக்கும், அப்போ  நாம்  வாங்கிய   10 செண்ட்  நிலம்  நமக்கு  இலவசம்  என்பது  போல் ஆகிவிடும்  என்கிறார்


இருவரும்  அந்த  நிலத்துக்கு  சொந்தக்காரரை  சந்திக்கின்றனர் . விலை  பேசி  ரூ ஒரு லட்சம்  அட்வான்ஸ்  கொடுக்கின்றனர். ஆறு  மாதம்  டைம், அதற்குள்  ரிஜிஸ்டர்  செய்து  விட  வேண்டும்  என  கண்டிஷன். ஓக்கே  சொல்லி  டீலை முடிக்கின்றனர்


 திடீர்  என  சில  நாட்கள்  கழித்து  நிலத்தின்  ஓனர்  ஃபோன்  செய்து  என்  மகளுக்கு  திருமணம்  நிச்சயம்  ஆக  இருக்கிறது.  முன்  கூட்டியே  நிலத்தை  வாங்கிக்கொள்ள  வேண்டும்  என்கிறார்


 இப்போது  மளிகைக்கடைக்காரர்  கையில்  பணம் இல்லை  என  பின் வாங்குகிறார். நாயகன்  வேறு  வழி  இல்லாமல்   பணம்  ரெடி  பண்ண  ஒத்துக்கொள்கிறார்


நாயகனுக்கு  வர  வேண்டிய  பேங்க் டெபாசிட்  பணம்  கைக்கு  வர  இன்னும்  ஆறு  மாதம்  டைம்  உள்ளது . அதனால்  உடனடியாக  பணம்  ரெடி பண்ண  வேறு  சோர்ஸ்  இல்லாததால்  தன்  சொந்த  வீட்டை  விற்க  முன்  வருகிறார். ஆனால்   நாயகனின்  நெருக்கடி  தெரிந்த  ஃபைனான்சியர்  நாயகனின்  வீட்டை  பாதி  விலைக்கு  அதாவது  ரூ  25  லட்சம்  ரூபாய்க்கு  கேட்கிறார்.


வேறு வழி  இல்லாமல்  அதற்கு  ஒப்புக்கொண்ட  நாயகன் வீட்டை  விற்று  பணத்தை  இடத்தின்  ஓனரிடம்  கொடுக்கிறார்.  அவரது  மகள்  திருமணம்  நிகழ்கிறது . அடுத்த  நாள்  இடத்தை  ரிஜிஸ்டர்  பண்ணலாம்  என  இருக்கும்போது  இடத்தின்  ஓனர்க்கு  சீரியஸ் , ஆள்  இன்னும்  ஒரு  நாள்  தான்  தாங்குவார்  என  டாக்டர்  சொல்லி  விடுகிறார்


இந்தப்பிர்ச்சனையை  நாயகன்  எப்படி  எதிர்  கொள்கிறார்? இதற்குப்பின்  இடம் ரிஜிஸ்டர்  ஆன  பின்  தான்  அந்த  இடத்தில்  ரயில்வே  டிராக்  அமைக்க  இருப்பதாக  தகவல்  வருகிறது. அந்த  பிரச்சனையை  எப்படி  டீல்  செய்கிறார்? என்பதே  மீதி  கதை  


நாயகனாக  உன்னி  முகுந்தன் . சிறப்பாக  செய்திருக்கிறார். பார்ப்பவர்  அவர்  மேல்  பரிதாபம்  கொள்ளும்படியான  பாத்திர  வடிவமைப்பு ,நாயகியாக , காதலியாக அஞ்சு  குரியன்  அழகிய  முகம் , அதிக  வாய்ப்பில்லை 


மளிகைக்கடைக்காரர்  வர்கீஸ்  ஆக சைஜூ  க்ரூப்  கிட்டத்தட்ட  வில்லன்  ரோல்.  இவர்  வேண்டும்  என்றே  செய்யவில்லை , ஆனால்  நாயகனை  சிக்கலில்  மாட்ட  விடுகிறார். மெச்சத்தக்க  நடிப்பு 


சமயம்  பார்த்து  அடி  மாட்டு  விலைக்குக்கேட்கும்  ஃபைனான்சியராக  இந்திரன்ஸ் . குள்ளநரித்தனமான  பார்வை ,  அமைதியான  தோற்றம்  என  கனகச்சிதமான  நடிப்பு 

\

 இந்தப்படத்தின்  திரைக்கதை  பிரமாதம் ,  ஒரு  சாதா  கதையை  க்ரைம்  த்ரில்லர்  போல  பர  பரப்பாக  எடுத்துச்செல்வது  சிறப்பு . பிள்ட்  பிர்சர்  இருப்பவர்கள் படத்தின்  க்டைசி  அரை  மணி  நேரத்தை  பார்ப்பதை  தவிர்ப்பது  நல்லது . அவ்ளோ  டெம்ப்ட்  ஏற்றி  இருகிறார்கள், செம  ரைட்டப் 


சஹீர்  முகம்மதுவின்  எடிட்டிங்கில்  கச்சிதமாக  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்யப்பட்டு  உள்ளது  நீல்  டி  குன்ஹா வின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  கண்  முன்  நடப்பது  போல  அத்தனை  தத்ரூபம்  ராகுல்  சுப்ரமணியின்  இசையில்  பாடல்கள்  கச்சிதம், பின்னணி  இசை  விறு விறுப்பு , திரைக்கதை  வசனம்  இயக்கம் விஷ்ணு  மோகன்


 குடும்பத்துடன்  பார்க்கத்தக்க  இந்தப்படம்  அமேசான்  பிரைம்ல  கிடைக்குது . ஒரு  இடம்  அல்லது  வீடு  வாங்குவதில்  எத்தனை  ;பிரச்சனை  உள்ளது  என  எடுத்துச்சொல்லும்  நல்ல  படம் 


சபாஷ்  டைரக்டர்


1  பாத்திரங்களை  அறிமுகப்படுத்த  முதல்  30  நிமிடங்கள்  ஆகிறது, அதற்குப்பின்  ஒரு  இடத்தில்  கூட  தொய்வு  இல்லை , செம  விறுவிறுப்பு 


2  இது  நிஜ  சம்பவத்தின் படமாக்கம்  என்பதால்  தேவை  இல்லாத  திணிப்புகள்  எதுவும்  இல்லாமல்  நேரடியாக  கதை  சொன்ன  பாங்கு 


3  நாயகன் ஆல்ரெடி  ஏகப்பட்ட  பணச்சிக்கலில்  இருக்கும்போது  வீட்டை  விற்க  ஆள் ரெடி  செய்த  நண்பன்  அதற்கு  புரோக்கர்  கமிஷன்  கேட்டு  நாயகனை  நெருக்கும்  இடம் , அதற்கு  நாயகனின்  ரீ ஆக்சன்  செம   


4  நாயகனின் காதலியின்  பெற்றோர்  பேசும்  இடம், இவனுக்கு  வேலையும்  இல்லை , இருந்த  வீடும்  போச்சு  , இவனை  நம்பி  எப்படிப்பொண்ணு  தர  என  அவநம்பிக்கை  தெரிவிக்கும் இடம் 



  ரசித்த  வசனங்கள் 

\

1  வேலைல  அரசாங்க  வேலை , தனியார்  வேலைனு  பெருசா  வித்தியாசம்  கிடையாது , ஆனா  வாழ்க்கைல  ரிஸ்க்  எடுக்க  பயப்படறவங்கதான்  கவர்மெண்ட்  ஜாப் க்கு  ஆசைப்படுவாங்க 


2   வாழ்க்கைல  ஒரு கேரண்டி  வேணும்னா  கவர்மெண்ட்  ஜாப்  இருந்தாதான்  முடியும் 


3  கவர்மெண்ட்  ஜாப்ல  இருக்கறவங்களும் , ஃபாரீன்ல  வேலை  செய்பவர்களும்  தான்  சேஃப்டினு  நம்ம  நாட்ல  பலரும்  நினைச்சுட்டு  இருக்காங்க 


4  என்னை  மெக்கானிக்னு  பொத்தாம்  பொதுவா  நினைச்சுடாத . நான்  வண்டிகளைப்பராமரிக்கும்  டாக்டர் 


5   வாழ்க்கைல  ரிஸ்க்  எடுத்தவங்க  மட்டும்  தான்  உயரமான  இடத்தை  அடைய  முடிந்திருக்கிறது 


6  கடன்  வாங்கி  இன்வெஸ்ட்  பண்றது  என்  பிஸ்னெஸ்ல  இல்லை, அந்த  ரிஸ்க்கை  நான்  எப்பவும்  எடுப்பதில்லை 




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு செண்ட்  ஒன்றரை   லட்சம்  ரூபாய்  என  ரேட்  சொல்லும்  ஓனர்  ஒரு லட்சத்துப்பத்தாயிரம்  என   கேட்கும்போது  பேரமே  பேசாமல்  உடனே  ஓக்கே  சொல்வது  எப்படி ?

2  அட்வான்ஸ்  ஆக  ரூ  1  லட்சம்  தரும்போது  கேஷாக  தருகிறார்கள். அதற்கு  ரிசீப்ட்டோ  பேப்பரில்  எழுதியோ  வாங்கவில்லை . அட்லீஸ்ட்  அக்கவுண்ட்  பேயி  செக்காக  தருவதுதானே  சேஃப்டி ? 


3  மார்க்கெட்  வேல்யூ  50  ல்ட்சம்  ரூபாய்  மதிப்புள்ள  தன்  சொந்த  வீட்டை  ஒரு  அவசரத்தேவைக்காக  நாயகன்  ரூ 25  லட்சம்  க்கு  விற்க  சம்மதிப்பது  ஏன்? அதற்கு  வங்கியில் வீட்டுப்பத்திரம்  அடமானம்  வைத்து  பணம்  வாங்கலாமே?  ( வங்கியில்  பிராசசிங்  டைம்  ஆகும்  எனில்  அதை  பணம்  தர  வேண்டிய  பார்ட்டியிடம்  சொல்லலாமே?) 


4  வீட்டை  வாங்கும்  இந்திரன்ஸ்   50  லட்சம்  ரூபாய்  வீட்டை 35  லட்சம்  ரூபாய்க்குப்பேசி  பின்  23  லட்சம்  தான்  இப்போ  இருக்கு , வேண்டும்  என்றால்  தர்றேன், இல்லைன்னா  விடுங்க  என  சமயம்  பார்த்து  கழுத்தறுக்கும்போது  மீதி  ரூ 2 லட்சம்  க்கு  செக்  வாங்கி  இருக்கலாமே?


5  வில்லங்கச்சான்றிதழில்  இது ரெயில்வே  டிராக்  வரும்  இடம் , என்பது இருக்குமே? 


6  சாமான்யர்கள்  ஹைவேஸ்  ரோட்டில்  அமைந்த  இடத்தையோ   ரயில்வே  ட்ராம்  வரும்  இடத்தில்  உள்ள  இடத்தை  ஏமாந்து  வாங்குவதோ  நடக்கலாம், ஆனால்  ஃபைனான்சியர்  தீர  விசாரித்துத்தானே  வாங்குவார் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ  சர்ட்டிஃபிகேட்  ஃபிலிம் , ஃபேமிலியுடன்  பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  - இந்த  மாதிரி  கதைக்கருவை  வைத்து  இப்படி  எல்லாம்  பிரமாதமாக  திரைக்கதை எழுத  முடியுமா? என  வியக்க  வைக்கும்  படம்  ரேட்டிங்  3 / 5 


Meppadiyan
Meppadiyan Poster.Png
Theatrical poster
Directed byVishnu Mohan
Written byVishnu Mohan
StarringUnni Mukundan

Anju Kurian

Saiju Kurup
CinematographyNeil 'D' Cunha
Edited byShameer Muhammed
Music byRahul Subramaniyan
Production
company
Unni Mukundan Films
Release date
  • 14 January 2022 (India)
CountryIndia
LanguageMalayalam