சாஜி சுரேந்திரன் கேரளாவின் சூப்பர் ஹிட் ஹாட்ரிக் ஹிட் டைரக்டர்...அவரது முதல் படம் ”இவர் விவாஹித்தவரையில்" , அவரது 2வது படம் ” ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் “ அவரது 3 வது படம் தான் இது.. கேரளாவுல போன வருஷமே ரிலீஸ் ஆகி சுமாரா ஓடுச்சு.. இப்போ தமிழ்ல அன்புள்ள கமல் அப்டிங்கற டைட்டில்ல வந்திருக்கு. கமல் ஒரே ஒரு சீன்லதான் வர்றாரு, ஆனா போஸ்டர்ல அவர் தான் ஹீரோ என்பது போல் பில்டப்பு...
விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னே இந்தப்படத்தை ரீமேக் பண்ற ஐடியா யாருக்காவது இருந்தா அவங்களுக்கு ஒரு வார்னிங்க் குடுத்துக்கறேன்.. இது தமிழ்ல ரீமேக்குனா சத்தியமா ஓடாது.. ஏன்னா ஆல்ரெடி பல வருஷங்களுக்கு முன்னால விஜய் காந்த் நடிச்ச தழுவாத கைகள் உட்பட 27 படங்கள் இதே கான்செப்ட்ல வந்துடுச்சு...இங்கே எடுபடாது..
படத்தோட கதை என்ன? கோடீஸ்வரர் கம் தொழில் அதிபர் ஜெயராம்,லோக்கல் ரவுடி ஜெயசூர்யா, போபன் ஒரு இசைக்கலைஞர், மீராஜாஸ்மின் தனது சித்தியால் கொடுமைப்படுத்தப்பட்டு மன நிலை பாதிக்கப்பட்ட (மெண்டல் அல்ல) மன அழுத்தம் கொண்ட பெண்.. வெவ்வேறு பேக் கிரவுண்ட் உள்ள 4 பேரும் ஒரு புள்ளியில் இணையறாங்க.. 4 பேருக்கும் கேன்சர்..( (blood, liver, bone, stomach cancer) ஒரே ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் நடக்குது..
4 பேருக்கும் என்ன என்ன ஆசை இருக்கோ அதை நிறைவேற்ற ஒண்ணா கிளம்பறாங்க ( அப்போத்தானே கதை நகரும்?) ஒருத்தர்க்கு தன் காதலிக்கு கிடார் பரிசாத் தர்னும்னு ஆசை , அதுக்காக மலேசியா போறாங்க,இன்னொருத்தர்க்கு கமல்ஹாசனை நேர்ல பார்க்க ஆசை ( படத்தோட ஸ்டார் வால்யூ ஏத்திக்க).. 4 பேரும் ஜாலியா கிளம்பி போறாங்க.. என்ன நடக்குது? என்பதே திரைக்கதை..
ஜெயராம் தான் ஹீரோன்னு சொல்லவும் வேணுமா? பொண்ணுங்க எப்பவும் புத்திசாலிங்க என்பதை மீரா ஜாஸ்மின் கேரக்டர் மூலமா சொல்றார் டைரக்டர்.. அதாவது பாப்பா கோடீஸ்வரரான ஜெயராமை லவ்வுது.. ஏன் அதே ஹாஸ்பிடல்ல இருக்கற ஒரு பரதேசியை லவ்வலை? அட்லீஸ்ட் கூட இருக்கற மற்ற 3 பேரை லவ்வலை?
இடைவேளை கார்டு போடறப்ப கமல் வர்றாரு. தன்னம்பிக்கை வரிகள், தத்துவம் சொல்லிட்டு கிளம்பிடறாரு.
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்
1. முடியைப்பிச்சுடுவேன்..
அது வளர்ந்திடும் பல்லைப்பிடுங்கிடுங்க, வளராது..
அடப்பாவி, போட்டுக்குடுக்கறியா?
2. என் கிட்டே 30 ஜோக்ஸ் கை வசம் இருக்கு.. எல்லாரையும் சிரிக்க வைக்கப்போறேன்.
எல்லாம் எனக்கு மனப்பாடம். நீ நெம்பரை மட்டும் சொல்லு, நான் நினைவு படுத்திக்கிட்டு சிரிச்சுடறேன்..
3. என் கடைசி நாட்களை நான் கொஞ்சம் எஞ்சாய் பண்ணிக்கறேன்..
அப்டி சொல்லாதே.. இயற்கையை ரசிக்க கிளம்பறேன்னு சொல்லு..
4. உன்னோட சாவு நெருங்கிட்டு இருக்கறதா நினைக்காதே, காப்பாத்த வழி இருக்கு..
என் கிட்டே டாக்டரா நடந்துக்காதே.. ஒரு நண்பனா நடந்துக்கோ..
5. I AM NOT OBJECT TO ENTERTAIN......
பாப்பாவுக்கு தமிழ் தெரியாது போல... ( எல்லாம் தெரியும், பசங்களூக்கு முன்னால ஃபிலிம் காட்டும்ங்க..)
6. நான் அவ திமிரை அடக்கறேன்...
லேடி - வாடா.. நான்.. ரெடி.. அடக்கு/... ( அடங்கோ)
7. பதுங்கி தாக்குற புலி மாதிரி மரணம் நமக்காக காத்திருக்கு
8. நெகடிவ்வை பாசிட்டிவ்வா பார்க்கனும், இனிமே கேன்சர் வியாதி உள்ள எல்லாரையும் குழந்தையா பார்ப்போம் நாம்..
9. சிம்ப்பதி ( இரக்கம்) அவளுக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை ..
10. மனசுல தைரியம் உள்ளவன் எந்த வியாதி வந்தாலும் ஃபேஸ் பண்ணுவான்..
11. இப்போ எல்லாம் இன்னும் வாழனும்கற ஆசை எனக்கு ரொம்ப வந்திருக்கு..
12. கிளம்பறப்ப தான் பிரிவோட வலி தெரியுது..
13. வெளிநாடு போய் சம்பாதிக்க வேணாம்டா மகனே.. 100 ரூபாய் சம்பாதிச்சாலும் எங்க கூடவே இருடா..
14. டேய்.. அது ஏசியா இல்லடா.. மலேசியா..
ஓ.. ஏசியாவோட தலைநகரம் மலேசியாவா?
15. அவங்க எப்படி ரீ ஆக்ட் பண்ணுவாங்கன்னு தெரியல..
அவங்க மட்டும்தான் ரீ ஆக்ட் பண்ணுவாங்களா?நாங்களும் தான் ரீ ஆக்ட் பண்ணுவோம்..
16. பாடம் சொல்லிக்குடுத்த ஐடியல் டீச்சர்ஸ், அம்மா, அப்பா இவங்க கால்ல மட்டும் தான் நான் விழுவேன், ஆசீர்வாதம் வாங்குவேன், வேற எவன் கால்லயும் எதுக்காகவும் விழமாட்டேன்.
17. மலையாள நடிகர் சத்யன் இருக்காரே, அவரைப்பற்றி ஒரு தகவல்.. அவர் அடிக்கடி செல்ஃப் டிரைவ் பண்ணி ஹாஸ்பிடல் போய் பிளட் ட்ரான்ஸ்ப்ளேண்ட்டேஷன் பண்ணிட்டு அவரே ரிட்டர்ன் வண்டி ஓட்டிட்டு ஷூட்டிங்க் ஸ்பாட் வருவாராம்.. எந்த அளவு மனோ தைரியம் வேணும் இதுக்கு..
18. இந்த உலகம் ஒன்லி ஃபார் மில்லியனர்ஸ்.....
19. நீங்க இருக்கற இடம் தேடி வர்றவங்க தான் உண்மையான ஃபிரண்ட்ஸ்..
20. வினிதாவுக்கு காலேஜ் லீவ்.. இனி மண்டே (MONDAY) தான் அவளை பார்க்க முடியுமாம்..
வினிதா மண்டையை பார்த்து என்ன யூஸ்? எல்லாத்தையும் பார்ப்போம்.. ( அடப்பாவி!!)
21. அவனுக்கு வந்திருக்கற கேன்சர் நோய்க்கு மருந்து இருக்கு.. உனக்கு வந்திருக்கற இந்த சேஃப்டி லைஃப் போதும், லவ் வேணாம்கற சுய நல நோய்க்கு மருந்தே இல்லை..
22. கமல் - எனக்கு நெருக்கமான பல ஃபிரண்ட்ஸ் நோயால இறந்திருக்காங்க.. ஸ்ரீவித்யா கூட கடுமையா நோய் கூட போராடி இறந்தாங்க.. என் கவுதமிக்கு கூட புற்று நோய் இருக்கு.. ( இது புது தகவல்)
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. கமர்ஷியல் சக்சஸ்க்கு சான்ஸ் இல்லை என தெரிந்தும் துணிச்சலாக இந்த கதை கருவை எடுத்துக்கொண்டது,,
2. கமலை கரெக்ட்டாக யூஸ் பண்ணிகொண்டது..
3. மீரா ஜாஸ்மின் - ஜெயராம் காதலை கண்ணியமாக காட்டியது..
4. இறக்கப்போகும் தருவாயில் உள்ளவர்களை ஆறுதல்படுத்தும் விதம் காட்சிகளை அமைத்து, தன்னம்பிக்கை டானிக் வசனங்கள் சேர்த்தது
இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகள்
1.கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே ஹாஸ்பிடலில் என காட்டும்போதே அனைவருக்கும் இந்த ஹாஸ்பிடலில் இருப்பவர்கள் கேன்சர் பேஷண்ட்ஸ் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல ,நயன் தாராவின் தெளிவற்ற காதல் போல புரிந்து விடுகிறது.. பிறகு எதற்காக ஒவ்வொருவருக்கும் கேன்சர் என்று சொல்லும்போதும் ஒரு அதிர்ச்சி இசையை பின்னணியில் காட்டுவதும், அதை கேட்கும் கேரக்டர்கள் ஜெர்க் ஆவதும்?
2. மீரா ஜாஸ்மின் ஒரு பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அந்த பர்த்டே பேபி மீரா ஜாஸ்மினுக்கு கேக் ஊட்ட ஓடி வருகிறார்.. அப்போ பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட ஆர்ச் 6 இடங்களை அவர் கடந்து ஸ்லோ மோஷனில் ஓடி வர்றார். பின் கேக் ஊட்டும்போது 2வது ஆர்ச்சில் 2 பேரும்.. எப்படி? கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்?
3. ஜெயராம் ஒரு கோடீஸ்வரர்.. அவர் ஏன் குறிப்பிட்ட 4 பேரை மட்டும் செலக்ட் செய்து டூர் போகனும்? எல்லாரையும் கூட்டி செல்லலாமே?அல்லது அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கலாம் ( பட்ஜெட் எகிறிடுமே..)
4. போபனின் காதலி போபனுக்கு கேன்சர் என்பது தெரிந்ததும் அவனை அவாய்ட் பண்ண மலேசியா போயிடறதா சொல்றார். அப்படி அவாய்டு பண்ணனும்னு நினைக்கறவ எதுக்காக அவளோட பேரண்ட்ஸ்கிட்டே தன் அட்ரஸ் குடுத்து அவன் வந்தா குடுங்கன்னு சொல்லனும்? ரகசியமா எஸ் ஆக வேண்டியதுதானே?
5. போபன் மரணப்படுக்கைல இருக்கறப்ப அவனோட காதலியை கடைசியா ஒரு தடவை பார்க்க ஏன் ஆசைப்படலை?
6. மீரா ஜாஸ்மின் கேரக்டர் படம் பூரா ஒரு சீன்ல கூட பொட்டு வைக்கலை.. ஏன்? அதுக்கான எந்த விளக்கமும் படத்துல இல்லை.. அவர் ஒண்ணும் விதவை கிடையாது..
7. இடைவேளை வரை கேரக்டர் அறிமுகத்துலயே படம் நகருது... ஆனா அதுக்குப்பிறகு திரைக்கதை தடுமாறுது..
8. சாகறாங்கன்னு தெரிஞ்சதும் எல்லாரும் அவங்கவங்க பேரண்ட்ஸ்கூடத்தானே இருக்க ஆசப்படுவாங்க?
சி.பி கமெண்ட் - இந்தப்படம் மரண பயம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஆண்கள் அதிகம் ரசிக்க மாட்டார்கள். பொறுமை ரொம்ப அவசியம்.. பெண்களுக்குப்பிடிக்கலாம்..
ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் இந்தப்படம் பார்த்தேன்