Showing posts with label MATKA (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts
Showing posts with label MATKA (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் (. Show all posts

Thursday, December 12, 2024

MATKA (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( கேங்க்ஸ்ட்டர் டிராமா ) @ அமேசான் பிரைம்

           

       14/11/2024     அன்று  திரை அரங்குகளில்   வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீசில்  பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை .  விமர்சன  ரீதியாகவும்  எதிர்மறை கமெண்ட்ஸ்  தான் கிடைத்தது . அவற்றை எல்லாம்   மீறி  இது ஒரு பார்க்கத்தகுந்த     படமே . 5/1/2/2024 முதல் அமேசான் பிரைம்  ஓ டி டி   யில் யில்  காணக்கிடைக்கிறது 


மட் கா  சூதாட் ட வியாபாரி ரத்தன்   கேட்ரி  யின்  வாழ்க்கை வரலாறை  அடிப்படையாகக்கொண்டு   இப்படம் உருவாக்கப்பட்டது 1958 - 1982    24  வருடங்களில்  விசாகப்பட்டினத்தில்  நடந்த நிகழ்வுகளை  அடிப்படையாகக்கொண்டு திரைக்கதை  எழுதப்பட்ட்து 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சிறுவனாக இருக்கும்போது பர்மாவில் இருந்து அகதியா  விசாகப்பட்டினம்  வர்றான் .வந்த இடத்துல சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா  ஒரு கொலை பண்ணிட்டு சிறுவர் சீர் திருத்தப்பள்ளில  இருந்துட்டு  வெளில வர்றான் . வந்தவன்  அங்கே  இருக்கும் மார்க்கெட் ல  கூலி வேலைக்கு  சேர்கிறான் .அந்த ஏரியாவில் இரண்டு  கேங்க்ஸ்ட்டர்  க்ரூப் இருக்கு . ஒரு குரூப் கூட நாயகன் மோதுகிறான் . இதனால்  எதிரிக்கு எதிரி நண்பன்  பார்முலாப்படி இன்னொரு கேங்க்ஸ்டர் குரூப் கூட  சிநேககம் ஆகிறான் . பார்ட்னர்  ஆகிறான் . நல்லாப்பணம் சம்பாதிக்கிறான் . மும்பை போய்    டெக்ஸ் டைல்ஸ்   பிஸ்னஸ்  பண்ணலாம் என கிளம்புபவன்  மனம்     மாறி   கேம்ப்ளிங்க்   கேம்  தொடங்குகிறான் . அதில் யாரும் எதிர்பார்க்காத    அளவு  சம்பாதிக்கிறான் . சி பி ஐ  நெருங்குகிறது . இதற்குப்பின்  நடக்கும் திருப்பங்கள்  தான் மீதி திரைக்கதை 


நாயகன் ஆக வருண  தேஜ்  நாயகன்  கமல் போல  பல கெடடப்களில்  வருகிறார் . மாமூல்  ஆக்சன்  ஹீரோ ரோல் தான் . . நாயகி ஆக மீனாட் சி  சவுத்ரி   அழகிய பதுமை ..வில்லி ஆக  நோரா . வில்லித்தனம் முகத்தில்  இல்லை . மற்ற  அனைவர் நடிப்பும்  கசசி தம் 


ஜி வி பிரகாஷ் குமார் இசையில் 5 பாடல்கள் , 3 சுமார் ரகம் .பின்னணி  இசை அருமை . கே ஜி எப் சாயல் , கார்த்திகா சீனிவாஸ் எடிட்டிங்கில்  படம் 160 நிமிடங்கள்  ஓடுகின்றன . இன்னமும் ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கலாம் , கிஷோர்  குமாரின்  ஒளிப்பதிவு   அழகு . திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் கருணா குமார் 


 சபாஷ்  டைரக்டர்\


1  கேஜிஎப் பட ஸ்டைலில்  அபாரமான  வசனங்கள் .சதுரங்க வேடடை  ஸ்டைலில்   பின் பாதி திரைக்கதை 

2   ஓப்பனிங்கில் வரும் மார்க்கெட்  சண்டைக்காடசி  மாஸ் சீன் 


3   கள்ளநோட்டு கும்பலின் போர்ஜரியை நாயகன் கண்டு பிடித்து அவர்களுக்கு ஆப்பு வைக்கும் காட் சி அப்லாஸ்  அள்ளும் காடசி 


4    நாயகியின்  ஹேர் ஸ்டைல் , உடல் மொழி , பார்வை அனைத்தும்  அழகு 


5  ரயிலில் முதன் முதலாக நாயகன் தன்  சூதாட்டத்தை ஆரம்பிக்கும்  காட் சி 


6  லக்கி நெம்பர்ஸை  ரயிலில் எழுதும் ஐடியா செம 


  ரசித்த  வசனங்கள் 


1  டியூட்டில  சேரும்போதே    பயத்தை  விட்டுட்டேன் 


2  வேட்டைக்குப்போகும் முன்  மீன்களைப்பற்றி தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன் 


 அது மீன் இல்லை , திமிங்கலம் 


3  தோத்துப்போய்  கிடைக்கும்  பணத்தை விட ஜெயித்துக்கிடைக்கும் கவுரவம் தான் பெருசு 


4   இந்த  உலகத்துல நூத்துக்கு 90  பைசாவை ஒருத்தன் தான் சம்பாதிக்கிறான் .மீதி இருக்கும் 10 பைசாவுக்காகத்தான்  மீதி இருக்கும் எல்லாரும் அடிச்சுக்கறாங்க 


5  இங்கே     இருப்பதெல்லாம்  தரை டிக்கெட் , சோபியா ஒருத்தி மட்டும் தான்  பால்கனி . ஆனா சினிமா ஒண்ணு  தான் . புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் 


6   அவன்  சர்க்கஸ்  கோமாளி இல்லை , சிங்கத்தை அடக்கி ஆளும் ரிங்க் மாஸ்டர் 


7  இருக்கறது போதும்னு நினைச்சிருந்தா நான் மேலே வந்திருக்கவே  முடியாது 


8 வியாபாரம்னா வாங்கனும் , விக்கணும் .நாம  ஆசையை வாங்கறோம்  , நம்பிக்கையை விக்கறோம் 


9 சூதாட்டத்துக்கு அரசாங்கம் ஒத்துக்குமா? 


 ஒரு தடவை  பணம்  பேச ஆரம்பிச்சுட்டா  வேற  யாரும்  வாயைத்திறக்க முடியாது 


10 ஆசைக்கு  எல்லை இல்லை , கெட் ட்துக்கு வேகம் குறையாது 


11  ஜனங்களுக்கு உழைக்காம பணம் வேணும் 


12  நூறு   எலிகளைத்தின்ன  பூனை தீர்த்த யாத்திரைக்குப்போய்  இருக்குன்னா யாராவது நம்புவாங்களா? 


13  அசலை  விட போலி தான்  நல்லா மின்னும், ஆனா  அதுக்கு ஆயுள் கம்மி 


14   ஆட்டத்துல  தோக்கறவனோட   உயிரை விட ஆட்டத்துல  ஜெயி க்கறவனோட ஆதரவு தான்   எனக்கு  வேணும் 


15  பாவம் , புண்ணியம்  பார்த்திருந்தா  அன்னைக்கு நாம எங்கே  இருந்தோமோ அங்கே  தான் இப்பவும் இருந்திருப்போம் 


16 ஆட்டத்துல  ஜெயிச்சவன் வந்து எனக்கு ஸலாமும் போடலை , தோத்தவன்  பற்றி  எனக்கு அக்கறையும்  இல்லை 


17    சோபியா =  என் பின்னால சுத்தும் ஆம்பளைங்களை விட  என்னை ஒதுக்கும் ஆளுங்களைத்தான் எனக்கு ரொம்பப்பிடிக்கும் 


18   முதலீடு  மட்டும்  பிஸ்னெஸ்க்குப்போதாது , உன் டைமும் வேணும் 


19   நிலத்துல   காசு போடுவது  என்னைக்கும்வீண் போகாது 

20 நான் கெடடவனா ? நல்லவனா? 

 நீ  ஒரு பைட்டர் 

21  இந்த  பிஸ்னஸ்  இந்த அளவு வளரக்காரணம்  மனிதனின்  ஆசையும் , பயமும் 


22   உண்மையை சொல்லிடடா  எனக்கு டைம் மிச்சம் ஆகும், உனக்கு உன் உயிர் மிச்சம் ஆகும்


23   பாலிடிக்ஸ்  ஒரு எவர் கிரின்  பிஸ்னஸ் 


24  யுத்தம்  நிற்கணும்னா  எதிரி சாகனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அழகான நாயகியை    பாதியில்  கொலை செய்ய வேண்டிய  அவசியம் இல்லை . இது பழி வாங்கும் கதை இல்லை . அவரு பாட்டுக்கு குறுக்கே நெடுக்க வந்துட்டுப்போ யிட்டு இருந்திருப்பார் 

2   க்ளைமாக்சில்  நாயகன் தன மகளிடம் சொல்லும் நரிக்கதை இழுவை 


3   படம் முடியப்போகும்  கடைசி  20 நிமிடங்களில் தேவை இல்லாத 2 பாட்டுக்கள் 


4  படத்தின்  முதல் பாதி  கேங்க்ஸ்ட்டர்  டிராமா  பிளாஷ்பேக்  பல படங்களில் பார்த்தது தான். பின் பாதி  சூதாட் டம் , சி பி ஐ  துப்பறியும் காட்சிகளை  வைத்து    முழுப்படமும்  எடுத்திருக்கலாம் 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U/A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாதி பார்க்க  பொறுமை தேவை , இரண்டாம் பாதி  குட் . ரேட்டிங்  2.5 / 5 


Matka
Theatrical release poster
Directed byKaruna Kumar[1]
Written byKaruna Kumar
Based onThe life of Ratan Khetri
Produced by
  • Vijender Reddy Teegala
  • Rajani Talluri
Starring
CinematographyA. Kishor Kumar
Edited byKarthika Srinivas
Music byG. V. Prakash Kumar
Bhavani Rakesh (1 song)
Production
companies
  • Vyra Entertainments
  • SRT Entertainments
Release date
  • 14 November 2024[4]
Running time
159 minutes
CountryIndia
LanguageTelugu