இந்தக்கதைல மொத்தம் 3 கிரகம் இருக்கு. உதாரணமா அதிமுக கட்சில சசிகலா, நடராஜன்,இளவரசின்னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி.. தமிழ் நாட்ல கலைஞர், ஜெ, டாக்டர் மான மிகு ராம்தாஸ்-னு 3 கிரகங்கள் இருக்கே அது மாதிரி,நயன் தாராவை சுத்தி சிம்பு, பிரபுதேவா,ஜெயம் ரவின்னு 3 கிரகம் இருக்கே அது மாதிரி ( ஜெயம் ரவி லேட்டஸ்ட் கிரகம் ஹி ஹி ).
மார்ஸ்னு ஒரு கிரகம்.. இங்கே தான் ஹீரோயின் கொஞ்சம் முற்றிய முகத்தோட,வற்றாத , 2 கைகளால் அணைத்தால் பற்றாத தேகத்தொட கிட்டத்தட்ட டிம்பிள் கபாடியா இன் விக்ரம் மாதிரியும் தூரத்தட்ட கேத்ரினா கைஃப் மாதிரியும் இருக்காங்க .. பூமியில் இருக்கற ஒரு குதிரைப்படை வீரர் தான் ஹீரோ ஜான் கார்ட்டர்.. வில்லன் வில்லனோட மகன் இருக்கற கிரகம் தான் ஹீலியம் ..
பூமில இருக்கற ஹீரோ ஏதோ ஒரு தங்கப்புதையல் இருக்கற தங்கக்குகையை தேடிப்போறார்.. போற வழில அவருக்கு ஒரு பவர் கிடைக்குது.. அதாவது ஸ்பிரிங்க் மாதிரி ஜம்ப் பண்ற பவர்.. காலை ஒரு உந்து உந்துனாருன்னா ஜொய்ங்க்னு ஆகாசத்துல 2 கி மீ போய்ட்டு வருவார்.. கால் சுளுக்காது.. இதை நம்ப முடியாதவங்க கால் கிலோ மல்லிகைப்பூவை வாங்கிட்டு தியேட்டருக்கு வரவும் .. அப்பப்ப நம்ம காதுல வெச்சுக்க..
மார்ஸ் கிரகத்துல இருக்கற ஜீவராசிகள்க்கு 4 கை, 2 கால்.. மத்ததெல்லாம் எத்தனைன்னு தெரியலை.. என்னமோ ஈரோடு எலிகெண்ட் டெயிலர்ட்ட டிரஸ் தெச்ச மாதிரி அந்த ஏலியன்ஸ்ங்க டிரஸ் போட்டிருக்குங்க.. அவங்க ஹீரோவோட பறக்கும் சக்தியை பார்த்துட்டு வியக்காங்க.. இது எப்படின்னா ஏதோ எதேச்சையா தனுஷ் கொலை வெறி பாட்டை பார்த்து மயங்கி பிரதமரே பார்ட்டிக்கு கூப்பிட்டாரே? கமல் பொண்ணு ஸ்ருதி 3 படத்துல ஷூட்டிங்க் ஸ்பாட்ல தனுஷ் ஐஸ்வர்யா பார்க்க பார்க்க கில்மா பண்ணுச்சே அந்த மாதிரி ஒரு லக்கி பிரைஸ்..
ஹீரோயினை வில்லனோட மகன் கல்யாணம் பண்ண ட்ரை பண்றான்.. ஹீரோ அதை தடுத்து எம் ஜி ஆர் மாதிரி காப்பாத்தி அவன் பண்ணிடறான்.. அதாவது கல்யாணத்தை.. அவ்ளவ் தான் கதை..
செம காமெடியான மேட்டர் என்னான்னா நம்ம ஊர்ல ஜிகிடிங்க எல்லாம் அரைகுறையா ஜின்ஸ், ஸ்லீவ்லெஸ் அப்படி சென்னை பஜார்ல சுத்தும்ங்க.. மேரேஜ் அன்னைக்கு பார்த்தா முக்காடு போட்ட முனிஸ்புரி மாதிரி, சீதா தேவிக்கு அக்கா மாதிரி பாந்தமா பட்டு சேலை கட்டி அடக்க ஒடுக்கமா இருக்கும்.. ஆனா இந்தப்படத்துல ஹீரோயின் கல்யாண டிரஸ் செம காமெடி.. மேலே ஒரு பிரா , கீழே ஒரு கோவணம் ஹி ஹி அது அவங்க கிரக வழக்கமாம்.. அடக்கிரகமே..
டைரக்டருக்கு ஃபோன் போட்டு கேட்டப்ப ( ஏன்? அவர் மட்டும் தான் படத்துல ரீல் விடனுமா? நாம விடக்கூடாதா? ஹி ஹி ) அவர் சொல்றாரு. கோடிக்கணக்குல சம்பளம் தர்றோம்.. முடிஞ்சவரை உரிச்சுக்காட்டிடனும் அப்டிங்கறார்.. நம்ம ஊரா இருந்தா டூயட் சீன்ல சீன் காட்ட வைக்கலாம்.. அவங்க நாட்டுல இந்த மாதிரி பாரம்பரிய உடை அப்டினு ஏதாவது சொல்லி ஏமாத்தனும் போல..
ஓக்கே .. இப்போ நடிப்பை பார்க்கலாம்.. ( நல்லா கேட்டுக்குங்க.. நான் நடிப்பை மட்டும் தான் பார்த்தேன்) ஹீரோ ஆள் ஜெகஜோதியா இருக்கார் ( சரவணா ஸ்டோர் அண்னாச்சி கணக்குப்பண்ணி குடித்தனம் வெச்சாரே அந்த ஜீவஜோதி மாதிரி ஹி ஹி )அவர் எக்சைஸ் எல்லாம் நல்லா பண்ணி பாடியை கட்டு மச்தா வெச்சிருக்காரு.. மிச்ச வேலை எல்லாம் கிராஃபிக்ஸ் பார்த்துக்குது. பாதி நேரம் அண்ணன் ஆகாயத்துல பறக்கறாரு.. மீதி நேரம் ஹீரோயின் கையை அணடர் லைன் கையை மட்டும் தடவிட்டு இருக்காரு ..
ஹீரோயின் இந்திய ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி முக அமைப்பு.. தமிழர்களுக்கு பிடித்தமாதிரி குஷ்பூ, ஹன்சிகா உடற்கட்டு ( சுந்தர் சி, பிரபு, கார்த்திக் மன்னிக்க , மற்றும் பிரபுதேவா மன்னிக்க ஹி ஹி )
இந்தப்படத்துல ஒரு சீன்ல லிப் டூ லிப் சீன் இருந்ததா பக்கத்து சீட் ஆள் சொன்னாரு.. எனக்கு ஏன் தெரியலைன்னா நான் தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி /. சின்னகுழந்தைங்க பார்க்கக்கூடாத மாதிரி சீன் வந்தா நானே எட்டனாவை கீழே போட்டு பொறுக்கிட்டு இருப்பேன் ( பொறுக்கிப்பய ஹி ஹி )
கேப்டன் எல்லாம் என்னய்யா ஆள்? நரசிம்மாவுல 86 பேரைத்தானே அடிச்சார்? இதுல ஹீரோ 1876 பேரை ஒரே ஒரு வாளை வெச்சு அடிச்சு தள்ளறாரு
அடங்கப்பா சாமி .. ஒளிப்பதிவு ஓக்கே .. லொக்கேஷன்கள் நல்லாருக்கு //ஹீரோயின் கூட நிக்கற 5 ஜிகிடிங்க நல்லாருக்காங்க ஹி ஹி
மனதில் நின்ற வசனங்கள்
1. சின்ன வயசுல இருந்தே நீ இப்படித்தான்.. நடக்காத விஷயத்தை நடத்திக்காட்டறேன். முடிச்சுக்காட்டறேன்னு சொல்றவ. முற்போக்கு எண்ணம் உள்ளவ,..
2. ஹீரோ - நான் தான் உன்னை காப்பாத்த வந்தேன்.. ஆனா நியாயமா பார்த்தா நான் தான் ஒதுங்கி நிக்கனும் போல..
ஹீரோயின் - ஆமா.. ஏதாவது டேஞ்சர்னா என்னை கூப்பிடு.. நான் பார்த்துக்கறேன்..
3. யுத்தம் அவமானச்சின்னம்
ஆனா நல்ல விஷயத்துக்கு நடந்தா அது மக்களைக்காக்கற கலங்கரை விளக்கம் ( ஆனா இந்தியாவுல மட்டும் 2 நாள் கூட தாங்காதாம் அவ்வ்வ் )
4. நீ சொல்றதை உண்மைன்னு எப்படி நம்பறது?
ஏன்? நீ சொல்றதை நான் நம்பலையா? என்னை நம்பித்தான் ஆகனும் ( பாப்பா அவன் ஆம்பளை, நம்பலாம்.. நீ பொம்பளை எப்படி நம்பறது?)
5. ஏய்.. கை கொடுன்னா வெறும் விரலை மட்டும் தர்றே.. இதை எப்படி குலுக்க?
இதே போதும் .....
6. மூளை இல்லாதவன் போல் நடிக்கறது கஷ்டம் , அது எல்லாருக்கும் வராது..
7. எந்த ஒரு ராஜ்யத்தையும் ஆள மக்கள் ஆதரவு ரொம்ப முக்கியம்
புரியலை
உனக்குப்புரியலைன்னா அதை புரிஞ்சவனை வாரிசா தேர்ந்தெடுக்க வேண்டி வரும்.. ( மக்கள் ஆதரவு கிடைக்க எளிய வழி.. எதையாவது இலவசமா தர்றதா சொல்லி ஏமாத்தறதுதான் )
8. வில்லன் - எனக்கு மனசாட்சி இருக்கு
ஹீரோயின் - மனசே இல்லாத உனக்கு மனசாட்சி இருக்குறது எப்படி?
9. இந்த கிரஹத்துல ஆண்கள் உப்பை விட சப்பை.. பெண்கள் பாறையை விட கடினமானவங்க ( அடப்பாவமே அப்போ எதுக்கும் யூஸ் ஆக மாட்டாங்களா?)
10. ஒரு வீரன் ஆயுதத்தை மாத்துவான் , ஆனா மனசை மாத்த மட்டான்
11. சாகா வரம் பெற்றவர்களால மட்டும் தான் மரண பயம் இல்லாம வாழ முடியும்
12.. நான் இருக்கறவரை இந்த கிரகத்தை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது..
உயிர் போற நேரத்துலயும் ஊக்கம் குடுக்கறியா?
13. சில நேரங்கள்ல நமக்கு விருப்பப்படாததை விரும்பித்தான் ஆகனும்
படம் பார்க்கற யாரும் இந்தக்கதையை நம்பவே முடியலையே அப்படின்னு சொல்லிடக்கூடாதுன்னு ஒரு முக்கியமான டயலாக்கை 7 இடத்துல ரிப்பீட்டறாங்க
அந்த டயலாக் “ என்னால நம்பவே முடியல “ - இந்த டயலாக்கை ஹீரோ 4 தடவை, ஹீரோயின் 3 தடவை சொல்றாங்க.
சி.பி கமெண்ட் - ஸ்கூல் பசங்க, பொழுது போகாதவங்க மட்டும் இந்தப்படத்தை பார்க்க்கலாம் மோசம் இல்லை.. கொஞ்சம் டகால்டி ....
ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல படம் பார்த்தேன்