500 கோடி , 700 கோடி செலவில் எடுக்கப்படும் பிரம்மாண்டமான படங்கள் எல்லாம் டப்பா ஆகும்போது லோ பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் ஹிட் ஆவது மகிழ்ச்சி .முன்னணி ஹீரோக்கள் படங்கள் ஹிட் ஆனால் அவரது சம்பளம் தான் உயரும் , ஆனால் லோ பட்ஜெட் படங்கள் ஹிட் ஆனால் ஆரோக்கியமான சினிமாக்கள் மேலும் உருவாகும், திரைக்கதை ஆசிரியர்களுக்கு மரியாதை கிடைக்கும்
வெறும் 3 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கமர்ஷியலாக ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுதல்களைக்குவித்தது .24/5/24 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு சராசரி மிடில்கிளாஸ் இளைஞன். பெற்றோர் நிச்சயித்த திருமணம் நடக்கிறது .கல்யாண விழாவில் நடக்கும் காமெடி களேபரங்கள் முதல் பாதி படம் கலகலப்பாக நகர்த்துகிறது .முதல் இரவு நடக்க இருக்கும்போது நாயகனின் நண்பர்கள் உனக்கு தைரியம் வர வேண்டுமானால் சரக்கு அடிக்க வேண்டும் என தவறாக வழி காட்டுகிறார்கள் .நாயகனுக்காக மிக்ஸ் பண்ணி வைத்திருந்த காக்டெயில் சரக்கை தவறுதலாக அவன் மனைவி குடித்து விடுகிறாள்
போதையில் என காதலனைப்பார்க்கணும் , அவன் கிட்டேயே கூட்டிட்டுப்போ என்கிறாள் . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் கதை
கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான அந்த 7 நாட்கள் கதையையே காமெடியாக எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் இப்படத்தின் கான்செப்ட்
நாயகன் ஆக அல்தாபி சலிப் பிரமாதமாக நடித்திருக்கிறார் .ஆல்ரெடி பிரேமம் , சகாவு , தோல்வி எப் சி போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தவர் தான் , இதில் நாயகன் ஆக பிரமோஷன் .அப்பாவித்தனமான முகம் இவருக்கு கை கொடுக்கிறது
நாயகி ஆக அனார்கலி மரிக்கா அமர்க்களப்படுத்தி இருக்கிறார் .குறிப்பாக மப்பில் உளறும் காட்சிகள் அருமை
நாயகனின் அம்மாவாக நடித்தவர் அட்டகாசமான உடல் மொழி , நடிப்பு , அதிலும் சரக்கு அடித்து விட்டு காட்டும் கெத்து தியேட்டரில் கைதட்டலை அள்ளி இருக்கும்
நாயகனின் மாமாவாக வரும் ஜாபர் இடுக்கு காமெடிக்கு
மீதி உள்ள அனைத்துக் கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கின்றனர்
பிபின் அசோக் இசையில் இரு பாடல்கள் மெலோடி .பிஜிஎம் குட்
ஷிஜு எம் பாஸ்கர் ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை
எடிட்டிங்க் ஷிரில். 2 மணி நேரம் ஓடுகிறது
திரைக்கதை ஷிஜு எம் பாஸ்கர் + ஷாலு .இயக்கம் வினோத் லீலா
சபாஷ் டைரக்டர்
1 96 படத்தில் வரும் விஜய் சேதுபதி - த்ரிஷா போல படம் முழுக்க ஒரு ஜோடி உலா வருவதும் காதலை சொல்லாமல் மென்று முழுங்கும் இதயம் பட முரளி போல அந்த ஆள் கடைசி வரை தான் யார் என்று சொல்ல முடியாமல் தவிப்பதும் நல்ல காமெடி
2 நாயகனின் அம்மா சரக்கு அடித்து விட்டு நாயகியை , தோழி களை , ஜீப்பில் ஏற்றி செல்லும்போது டிராபிக் போலீசில் மாட்டுவதும் . அந்த இன்ஸ்பெக்ட்டர் நாயகனின் அம்மாவிடம் டிரைவிங்க் படித்தவராக இருப்பதும் அங்கே நடக்கும் உரையாடல்கள் , சம்பவங்கள் செம கலக்கல்ஸ்
3 என் காதலன் என்னை மோசம் பண்ணிட்டான் என்று உளறும் நாயகி அந்த பிளாஸ்பேக்கை சொல்லும் வரை பதைபதைப்பாக இருப்பதும் , சொன்ன பின் காமெடியாக மாறுவதும் நல்ல திரைக்கதை உத்தி
ரசித்த வசனங்கள்
1 என்ன? பாத்ரூமில் உட்கார்ந்து சரக்கு அடிக்கறே? அப்போ இது அவுட் கோயிங்க் இல்லை ? இன் கமிங்க்?
2 என்ன அங்கிள் ?நீங்களே ஜோக் அடிச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க , வேற யாரும் சிரிச்ச மாதிரி தெரியலையே?
3 அத்தை நகையை எங்கே வைக்கணும்?இடம் இல்லை ?
அதுக்காக பிரிட்ஜில் வைக்கறதா?
4 என்னதான் இருந்தாலும் நயன் தாரா செஞ்சது சரி இல்லை
ஒரு நடிகைன்னா அழகை ,இளமையை பாதுகாக்கணும், அதனாலதான் அவங்க சரோகசி முறையை தேர்நதெடுத்தாங்க , வாடகைத்தாய் என்பதை சரோகசி என சொல்வார்கள்
என்னது ? சரோஜினி சேச்சியா?
5 சாரி , டியர் , முதல் இரவு அறைக்கு வர லேட் ஆகிடுச்சு , நீ எப்போ வந்தே?
நான் இங்கே வந்து 25 வருஷம் ஆகிடுச்சு
ஓ , காமெடி ? நல்ல சென்ஸ் ஆப் ஹியூமர்
6 முதல் இரவில் எல்லா பொண்டாட்டிங்களும் புருஷன் கிட்டே " உங்களுக்கு ஏதாவது லவ் மேட்டர் உண்டோ?"னு கேப்பாங்க .நாம உண்மையை உளறிக்கூடாது . ஆனா அவங்களா அவங்களோட லவ் மேட்டர் சொன்னா நமக்கு அது போனஸ்
7 பெரிய மெக்கானிக் மாதிரி வண்டிக்குக்கீழே என்ன பார்க்கறே ? அந்த வண்டி ஆணா ? பெண்ணா?ன்னா?
8 சரக்கு அடிக்கலாம்னு வந்தேன் , எங்கே கிளம்பிட்டீங்க ?
கல்யாண வீட்டில் பிரச்சனை , அதை சரி பண்ண நாங்க எல்லாரும் கிளம்பிட்டோம்
ஓகே , சரி பண்ணிட்டு வாங்க , அப்புறமா அடிக்கலாம், ஐ ஆம் வெயிட்டிங்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 காமெடி கதை ,பேமிலி டிராமா என முடிவு செய்த பின் படம் முழுக்க தண்ணி அடிக்கும் காட்சிகள் ஓவர் . மது பானக்கடை படத்தில் கூட இவ்ளோவ் சரக்குக்காடசிகள் இல்லை
2 என்னதான் ஆண்களுக்கு இணையா பெண்களும் முன்னேறி வருகிறார்கள் என்றாலும் திருமண வீட்டில் பெண்கள் கூட சரக்கு அடிப்பது போல காட்சி வைக்கணுமா?
3 ஒரு கம்பெனியில் பல வருடங்களாக வேலை செய்யும் ஆள் அந்த கம்பெனியில் இருந்து நிற்பதாக முடிவெடுத்தால் தீபாவளி போனஸ் வாங்கிய பின்தான் நிற்பான் . அது மாதிரி தான் பெண்களை ஏமாற்றும் ஆண்களும் . . வில்லனின் டார்கெட் பணம் மட்டும் தான் என்பது போலக்காட்டியது நம்ப முடியவில்லை . காதலியை அனுபவிக்காமல் பணத்தை / நகையை மட்டும் அபேஸ் செய்வது ஏனோ?
4 நாயகியின் காதலன் திடீர் என் இரவு நேரத்தில் நாயகியின் வீட்டுக்கு முன் வந்து சில வேண்டுகோள்கள் விடுப்பது , அதை நாயகி கேட்பது , அதைத்தொட ர்ந்து நடக்கும் சம்பவங்கள் நம்பும்படி இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தண்ணி அடிக்க சேர்ந்த கூட்டம்னு டைட்டில் வெச்சிருக்கலாம் ,காமெடிப்படத்தை விரும்புபவர்கள் பார்க்கலாம், ஒரே நாளி ல் நடக்கும் கதை . ரேட்டிங்க் 3/5
Mandakini | |
---|---|
Directed by | Vinod Leela |
Written by | Shiju M Bhaskar Shalu |
Produced by | Sanju Unnithan |
Starring |
|
Cinematography | Shiju M Bhaskar |
Edited by | Sheril |
Music by | Bibin Ashok |
Distributed by | Spire Productions |
Release date |
|
Country | India |
Language | Malayalam |
Box office | 3 crores |