இதே மம்முட்டியை வெச்சு போக்கிரிராஜா (2010) எடுத்த இயக்குநர் புலிமுருகன் திரைக்கதை அமைத்த ராசி கையால் இதுக்கும் திரைக்கதை அமைச்சாலும் மாமூல் ஆக்ஷன் மசாலாதான்
வில்லன் ஒரு கள்ளச்சாராயப்பார்ட்டி. திமுக ரவுடிக மாதிரி நில ஆக்ரமிப்பு பண்றவர். இவரோட அட்டூழியம் தாங்காம ஹீரோவோட அப்பா மதுரைல இருந்து கேரளா வரச்சொல்றாரு. அப்பவே வந்துட்டா ஹீரோ கெத்து என்னாகறது? அதுவுமில்லாம இப்போ புலிமுருகன் மெகா ஹிட்டுக்குப்பின் ஹீரோ எண்ட்ரி படம் போட்டு அரை மணி நேரம் கழிச்சுதான் இருக்கனும்னு ஒரு எழுதப்படாத சட்டம் வந்துடுச்சு போல , மோகன் லாலின் லூசிஃபர் படத்துல இதே போல் ஹீரோ எண்ட்ரி 37 நிமிஷம் கழிச்சு. இதுல 52 வது நிமிஷம் தான்
ஹீரோ தன் தம்பியை அனுப்பி வைக்கறாரு, அவர் என்னடான்னா வந்த வேலையை கவனிக்காம ஒரு ஃபிகர் கூட ரூட்டு விட்டுட்டு இருக்காரு, அப்டியாவது பக்கா ஃபிகரை லவ்வி இருந்தாலும் பரவால்ல, எட்டணாக்கு பஞ்சு மிட்டாயும் , நாலணா க்கு கடலை பர்பியும் வாங்கித்தந்தாலே பின்னாலயே வந்துடும் போல ஒரு டொக்கு ஃபிகரு. உள்ளூர் போலீஸ் ஆஃபீசரை போலீஸ்னு தெரியாம ( தொந்தி இல்ல) அடிச்சிடறாரு ஹீரோவோட தம்பி
ஹீரோவோட தம்பியை கைது பண்ணீடறாங்க . அவரைக்கொலைக்கேசில் சிக்க வைக்க வில்லன் ஆள் வெச்சு அந்த போலீசை போட்டுத்தள்ளிடறாரு, ஹீரோ எண்ட்ரி ஆகி எல்லா சிக்கல்களையும் விடுவிப்பதே கதை
ஹீரோவா மெகா ஸ்டார் மம்முட்டி , இவரு ரஜினி ஸ்டைல்ல பட்லர் இங்க்லீஷ் பேசுவது சில இடங்களில் சிரிப்பு , பல இடங்க:ளில் கடுப்பு. நான் சொல்றதத்தான் செய்வேன், செய்யறதைத்தான் சொல்வேன்கற ரஜினி பன்ச் டயலாக்கை வேற அடிக்கடி சொல்றாரு. ஆனாலும் அவரோட ஸ்க்ரீன் பிரசென்ஸ் படத்தைக்காப்பாத்துது
அஞ்சலியோட முன்னாள் லவ்வர் தமிழ் நடிகர் ஜெய் இதுல மம்முட்டியோட தம்பியா வர்றாரு. குட் ஆக்டிங்
வில்லனா ஜெகபதி பாபு , ஒரே மாதிரி நடிப்பு சலிக்க வைக்குது
நாயகியா அன்னா ராஜன். சுமார்தான். ஒரே ஆறுதல் தேவை இருக்கோ இலையோ யூ நெக் லோ கட் ஜாக்கெட் போட்டுட்டு படம் பூரா வர்றவர் அடிக்கடி குனியமுத்தூர் குருவி மாதிரி குனிஞ்சுக்கிட்டே கிளாமர் காட்டுவதே
இன்னொரு நாயகியா எப்பவும் சிடு சிடு மூஞ்சியா அனுஸ்ரீ. எதனால எப்பவும் கோபமாவே இருக்கார் தெரில , பேமெண்ட் வர்லையோ என்னவோ
நெடுமுடி வேணூ பரிதாபமா வந்து போறார்
சித்திரம் பேசுதடி நரேன் கெஸ்ட் ரோல்
படத்தில் ஒரே + மம்முட்டியின் காமெடி ஆக்டிங் தான்
நச் டயலாக்ஸ்
1 நீச்சல் தெரியுமா? குதிச்சு அவனைக்காப்பாத்து
தெரியும்,ஆனா தண்ணில நீச்சல் அடிக்கத்தெரியாது #MadhuraRaja
2 தேர்தல் ல போட்டி இடறது பெரிய விஷயம் இல்லை,ஆனா ஜெயிக்கறதுக்குத்தேவையான செல்வாக்கு நமக்கு இருக்கா?னு தெளியனும் #Madhuraraja ( மம்முட்டியின் அரசியல் முன்னோட்ட பஞ்ச் ) இதே டைப் வசனம் போன வாரம் ரிலீஸ் ஆன மோகன்லாலின் #lucifier லயும்
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 கேஸ்சிலிண்டரைப்படுக்கப்போட்ட மாதிரி / ரயில் பெட்டி மாடல் தியேட்டர்,கிட்டத்தட்ட ஈரோடு ஆனூர் மாதிரி,கேரளா ,ஆலப்புழா− மாவேலிக்கர சந்தோஷ் தியேட்டர் மம்முட்டி யின் #MadhuraRaja
a
2 நம்ம ஊர் ரஜினி மாதிரி மோகன்லால்,கமல் மாதிரி மம்முட்டி. #MadhuraRaja
3 வேலைக்காரன் ரஜினி டைப் பட்லர் இங்க்லீஷ் காமெடி ட்ரை பண்ணி இருக்காரு மம்முட்டி,ஒர்க் அவுட் ஆகுது #MadhuraRaja
சபாஷ் டைரக்டர்
1 மம்முட்டியின் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அவரது அரசியல் பஞ்ச் வசனங்களை சேர்த்தது
2 மோகன் லாலின் லூசிஃபர் படத்துக்கு போட்டியாக கரெக்டா ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்ணது
லாஜிக் மிஸ்டேக்ஸ் ( இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்)
1 லாஜிக் மிஸ்டேக் 1− கள்ளச்சாராயம் காய்ச்சற கும்பலைப்பிடிக்க 4 போலீசோட ஒரு S.I போவாரா?அங்கே 65 ரவுடிங்க இருக்காங்க ,மாட்டிக்கிட்டாரு #MadhuraRaja
2 லாஜிக் மிஸ்டேக் 2− ஒரு பெண் சாட்சியை போலீஸ் ஆபீசர்
மார்க்கெட்ல எல்லார் முன்னாடியும் பப்ளிக்கா கையைப்பிடிச்சு இழுத்துட்டுப்போறாரு,கூட ஒரு பெண் போலீசாவது இருக்க வேணாமா? #MadhuraRaja
சி.பி கமெண்ட் -MadhuraRaja (malayalam)- சராசரி ஆக்சன் மசாலா,தெலுங்கு டப்பிங்க் படம் மாதிரி இருக்கு,சிரஞ்சீவி ரசிகர்களுக்குப்பிடிக்கும்,#Lucifer படத்துக்கு பல படி கீழே ,ரேட்டிங் 2 /5