Showing posts with label M.S.DHONI -THE UNTOLD STORY ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label M.S.DHONI -THE UNTOLD STORY ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம். Show all posts

Friday, September 30, 2016

M.S.DHONI -THE UNTOLD STORY ( ஹிந்தி ) - சினிமா விமர்சனம்

Image result for m.s.dhoni the untold story 
பொழுதுபோக்குக்கான சினிமா,  கலெக்சன் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சினிமா, இப்படி அல்லவா படம் எடுக்கனும் என பிரமிப்பு உண்டாக்கும்  சினிமா என 3 வகை சினிமாக்கள் உண்டு. இது மூன்றாம் ரகம், முதல் தரம்



தோனி சின்ன வயசில்  ஃபுட்பால் பிளேயராக இருந்
து எப்படி கிரிக்கெட் வீரராக ஆனார்? இந்
திய டீமில் எப்படி இடம் பிடித்தார், அவரது சாதனைகளுக்குப்பின் பொதிந்
திருக்கும் வலிகள் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துது, அது போக அவரது 2 காதல் கதைகளையும். 2ம்  வெவ்வேறு கால கட்டம்


தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட். அடடே ஆக்டிங். அவரின் பாடி லேங்குவேஜ்  அப்படியே கொண்டு வந்
து கண் முன் காட்டுகிறார். அற்புதம்.

ஹீரோயினாக  கியாரா அத்வானி. மென்மையான முகம். யதார்த்தமான நடிப்பு

2 வது ஜோடியாக வரும் ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் செம கல கல

அப்பா வாக அனுபம் கெர் பண்பட்ட ஆக்டிங்

கிட்டத்தட்ட 3 1/4 மணி வரை படம் ஓடினாலும் ஒரு சீன் கூட போர் அடிக்க வில்லை என்பது திரைக்கதை க்கு கிடைத்த வெற்றி

வாவ் டைரக்டர்


1 இந்தியா டீம்க்கு முதன் முதலாக ஆட வரும் தோனி கிரவுண்டில் இறங்கியதும் உயரமான மொட்டை மாடி , மர உச்சி என பார்ப்பதும் பின் அதே இடங்களில் சிக்சர் அடிப்பதும்

2 தோனிக்கு அவர் ஃபிர்ண்ட்ஸ் உதவும் காட்சிகள். அவரது கோச் எப்போதும் மேட்ச் பற்றியே எண்ணுவது அருமை


3 தோனியின் 2 காதல்களையும் சுவராஸ்யமாக சொன்னது.

4  விஜய் , அஜித்  படங்களுக்கான ஹீரோ ஓப்பனிங்  காட்சிகள் போல் ஹீரோ ஓப்பனிங் சீன்க்கு கை தட்டல் கிடைக்கும்படி காட்சி அமைப்பு

5  டிடிஆர்  பணியில் அதிருப்தி அடையும் காட்சி


 டைரக்டரிடம் சில கேள்விகள்


1 படத்தில்  தோனி போல் லாங் ஹேர் ஸ்டைல் வைப்பது அவ்ளோ சிரமமா?எதுக்கு விக்?இப்பவெல்லாம் விக் வெச்சு ஆக்டிங் பண்ணா ரசிகர்கள் விரும்ப மாட்டாங்களே? ( யார் ஆக்டிங்கா இருந்தாலும்)

2  தோனியின் 2 வது காதல் எபிசோடில்  காதலி தோனியை அவரது புகழுக்காகவே லவ்வினார் என காட்சி அமைப்பில் காட்டப்படுதே, தவிர்த்திருக்கலாம்

3  இந்தியா கிரிக்கெட் டீமின் கேப்டன் ஆன தருணம் பற்றிய்  டீட்டெய்ல் மிஸ்டு

4  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லட்சுமிராய் போர்சன் வரவே இல்ல


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


கேரளா-கோட்டயம் -செங்கனாச்சேரி -தன்யா - தி


2 ஒரு கமலோ ஒரு விக்ரமோ தோனி யில் நடித்திருந்தால் கேரக்டருக்காக அவரைப்போன்றே ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்கள்.இதில் விக் வைத்திருப்பது பின்னடைவு





நச் டயலாக்ஸ்

1 நம்ம மக்களுக்கு கிரிக்கெட்டைவிட அரசியல்தான் அதிகம் பிடிக்குது .S

DHONI

2 சில%மார்க்குக்காக உங்க பையனோட ஸ்போர்ட்ஸ் லைபை கெடுத்துக்காதீங்க#M.S.DHONI(HINDI)

3 இவ்ளோ சின்ன வயசுல ஸ்போர்ட்ஸ் கோட்டா ரயில்வே ல எப்டி வேலை கிடைச்சுது?

ஒரு டைம் அவர் கூட விளையாடிப்பாருங்க,தெரியும் # M.S.DHONI

4 உன் கிட்டெ இருக்கும்+ நீ இயற்கையாய் இருப்பதே.மனசில் என்ன தோணுதோ அதை சொல்லிடறே .S.DHONI(HINDI)


5 உன் லட்சியம் நிறைவேறனும்னா நீ உன் வீட்டுக்கு இவ்ளோ பொறுப்பானவனா இருக்கக்கூடாது .S.DHONI(HINDI)


6 எனக்கு கிரிக்கெட் ஆட ஆர்வம்.ஆனா திறமை இல்லை.ஆனா அவன் கிட்டே திறமை இருக்கு.அதனால அவன் ஜெயிக்கனும்னு நினைக்கேன்#M.S.DHONI(HINDI)

7 காதலர் தினத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை



ஓ.காதல்ல?.S.DHONI (HINDI)

8 நாட்டுக்காக விளையாடப்போறவன் கிட்ட பர்சனல்செண்ட்டிமென்ட்ஸ் இருக்கக்கூடாது .S.DHONI

9 முதல் ரிங் லயே போனை எடுத்திட்டெ? போன் பக்கத்துலயே இருந்தியா?



ம்.அந்த போனாவே ஆக முடியாதில்ல?# M.S.DHONI (HINDI)


10 நாட்டுக்காக விளையாடுபவர் ஜெயிக்கும்போது அவரை தலைமேல் தூக்கிக்கொண்டாடும் உலகம் அவர் தோற்கையில் தூற்றித்தள்ளும்


11 ஒரு பவுலரோ ஒரு பேட்ஸ்மேனோ ஒவ்வொருமேட்ச்ல யும் ஒவ்வொரு மாதிரிவிளையாடலாம்.ஆனா ஒரு நல்ல பீல்டர் எல்லா மேட்ச்லயும் கலக்குவான்#M.S.D

12 வில் யூ மேரி மீ?



நிஜமாவா?
நாளை ஆடப்போகும் மேட்ச் ல நான் செஞ்சுரிஅடிப்பதுஎந்த அளவு நிஜமோ அந்த அளவு நிஜம்#M.s.dhoni



13 டாக்டர், நர்ஸ் என் கிட்டே எனக்குப்பிறந்தது ஆண் குழந்
தைன்னாரு,ஆண்னு சொல்றீங்க?

ஓ சாரி

சுத்தம்.. உங்களை எல்லாம் டாக்டரா போட்டு,,,,,


14 கிரிக்கெட் வி:ளையாட வர்றியா?

சார், ஆல்ரெடி ஃபுட்பால் பிளேயர் , அவ்ளோ பெரிய பந்
துல விளையாடிட்டு இவ்ளோ சின்ன பந்
துல எப்டி விளையாட? #MSD,


15 கிரிக்கெட்ல பந்
தை கேட்ச் தான் பண்ணனும், பஞ்ச் பண்ணாத , பயிற்சியின் முதல் படி #MSD


16 கிரிக்கெட் ஃபீவர் உனக்கு எப்போ வந்
தது?

இப்ப தான் டாடி


17 ஒரு  ஸ்போர்ட்ஸ் மேன்   லைஃப் எப்டி இருக்குமோன்னு ஒரு அப்பாவா  எனக்கு பயமா இருக்கு #MSD



18  சின்னச்சின்ன மைல்ஸ்டோன்களை கடந்
து விட்டதில் திருப்தி கொள்ள  அவன் சாதா ஆள் இல்லை #MSD


19   கிரவுண்ட்ல எவ்ளோ கூட்டம் இப்போ இருக்குன்னு பார்த்து வெச்சுக்கோ

ஏன்?

 இவன் இப்டி இன்னும் கொஞ்ச  டைம் ஆடினா போதும் , ஃபுல் ஆகிடும் #MSD


20  

சச்சின் என்ன பேட் யூஸ்  பண்ணாரு?

 எம் ஆர் எஃப் கம்பெனிது

 எனக்கும் அதே பேட் வேணும் #MSD


21    3 மணி  எக்சாமை 2 1/2  மணிக்குள் முடிச்சிடுவியா? ஏன்?

 அரை மணி க்குள் ட்ரெய்னை பிடிச்சு  மேட்ச் பிராக்டீஸ்க்கு போகனும் #MSD


22 we can not support non-estoblished  player #MSD


2 3  யார்யா அந்
த தோனி?  பெரிய சச்சினா?

 சார், அப்டி சொல்லலை, ஆனா  தோனி என்னைக்கும் தோனி தான் # MSD



24   ஒரு மொத்த டீம் எடுத்த ஸ்கோரை ( 357)  ஒரு ஒத்தை ஆள் தாண்டினார். 358, யுவராஜ்சிங் #MSD


25 தோல்வியக்கண்டு  வருத்தப்படலை, அது எனக்குக்கத்துக்கொடுத்தது என்ன தெரியுமா? இன்னும் வெற்றிக்குத்தயார் ஆகலை என்பதை #MSD


படம் பார்க்கும்போது இது ஏ  செண்ட்டரில் மட்டும் ஹிட் ஆகும் என் எண்ணினேன். இப்போ ஆல் செண்ட்டர் ஹிட் என தகவல், மகிழ்ச்சி.