Showing posts with label LUST STORIES 2 - ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts
Showing posts with label LUST STORIES 2 - ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts

Friday, July 14, 2023

LUST STORIES 2 - ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( லவ் ஆந்தாலஜி ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

 


2018 ஆம்  ஆண்டு  லஸ்ட்  ஸ்டோரீஸ்  பாகம் 1   வெளி  வந்தது , அதற்குக்கிடைத்த  ஏகோபித்த  வரவேற்பைப்பார்த்து  அதே  போல்  இன்னொரு  பாகம்  ரிலீஸ்  செய்து  இருக்கிறார்கள் . நான்கு  வெவ்வேறு  இயக்குநர்கள்  இயக்கிய  நான்கு  தனித்தனி  குறும்ப்டங்கள் , ஒன்றுகொன்று  சம்பந்தம்  இல்லாதவை . முதல்  பாகம் பார்க்காதவர்களும்  இதைப்பார்க்கலாம்


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஆர் பல்கி - மேட்  ஃபார்  ஈச்  அதர் - நாயகன், நாயகி  இருவரும்  பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட  வருங்கால  தம்பதிகள் . திருமணத்துக்கு  முன்பே  இருவரும்  பேசிப்பழகி  சேட்டிங்  எல்லாம்  செய்து  விடுகிறார்கள் . நாயகியின்  பாட்டி  ஒரு  குண்டைத்தூக்கிப்போடுகிறார். பேசிப்பழகினால்  மட்டும்  போதாது , திருமணத்துக்கு  ,முன்பே  தம்பதிகள்  உறவும்  வைத்துக்கொள்ள  வேண்டும், அப்போதுதான்  இருவரும்  திருமண  வாழ்க்கைக்கு  ஏற்றவர்க்ளா? இல்லையா? என்பது  தெரியும்  என்கிறார். இதைக்கேட்டு  மொத்தக்குடும்பமும்  ஆடிப்போகிறது.இதற்குப்பின்  நடந்த  திருப்பங்கள்தான்  மீதிக்கதை 


 இதில்  நாயகனுக்கு  அதிக  வேலை  இல்லை . நாயகி , பாட்டி  இருவருக்கும் தான்  முக்கிய  ரோல். புரட்சிப்பாட்டியின்  வசனங்கள்  எல்லாம்  கேட்பதற்கு   ஜாலியாக , சிரிப்பாக  இருக்கிறது , நடைமுறைக்கு  ஒத்து  வராது . பாட்டியாக  நீனா  குப்தா  தடாலடி  கேரக்டரில்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்


திருமணத்துக்கு  முன்  மணப்பெண் சராசரியாக  10  மாப்பிள்ளைகளை  சந்திக்கிறாள், அவர்கள்  அனைவருமே உறவு  கொள்வதில்  சுமாரானவர்கள்  கேட்டகிரியில்  இருந்தால் பத்தோட  பதினொண்ணு, அத்தோடு  இன்னும்  ஒண்ணு  என  அடுத்த  மாப்பிள்ளையைப்பார்ப்பாரா? சும்மா  பர பரப்புக்காக  அட்டென்ஷன்  சீக்கிங்க்காக  சொல்லப்படும்  கருத்து 


2 கொன் கொனா சென்  ஷர்மா -  நாயகி  ஒரு  டிசைனர். தனிமையில்  வசிப்பவர் , மணம்  ஆகாதவர். இவரது  அபார்ட்மெண்ட்டில்  ஒரு  பணிப்பெண் இருக்கிறார். அவரிடம்  வீட்டுச்சாவி  ஒரு  காப்பி  இருக்கும், தினசரி  வந்து  சமையல்  வேலை, க்ளீனிங்  ஒர்க்  முடித்து  விட்டு செல்வார். ஒரு  நாள்  நாயகி  ரெகுலராக  வரும்  டைமை  விட  முன்னதாக  அதாவது  மதியம்  3  மணிக்கே  வந்து  விடுகிறார்.,


 தன்னிடம்  உள்ள  இன்னொரு  சாவியைக்கொண்டு  திறந்து  நுழைந்தவருக்கு  அதிர்ச்சி ., அங்கே  நாயகியின்  பெட்  ரூமில்   பணிப்பெண்  தன்  கணவனுடன்  அந்தரங்கமாக  நெருக்கமாக  இருக்கிறார்


முதலில்  அதிர்ச்சி  அடைந்த  நாயகி  பின்  தொடர்ந்து  ரெகுலராகவே  அதே  டைமில் ரகசியமாக  வந்து  அவர்கள்  கூடலை  ரசிக்கிறார். ஒரு  நாள்  இது  பணிப்பெண்ணுக்கும்  தெரிந்து  விடுகிறது . அவர்  பெரிதாக  அலட்டிக்கொள்ளவில்லை . நாயகி  ரசிப்பதை  அவரும்  ரசிக்கிறார்


 இது   தொடர்கதையாகப்போகும்போது  பணிப்பெண்ணின்  கணவனுக்கு  இது  தெரிய  வரும்போது  நாயகி  தன்  இமெஜைக்காப்பாற்றிக்கொள்ள  பணிப்பெண்  மீது  புகார்  பத்திரம்  வாசிக்கிறார்.பணிப்பெண்  நாயகியின்  தவறை  சுட்டிக்காட்டுகிறார்.


இப்போது  பணிப்பெண்  டிஸ்மிஸ்டு. நாயகி  வேறு  பணிப்பெண்ணை  வேலைக்கு  அமர்த்திக்கொள்கிறார். முன்னாள்  பணிப்பெண்ணுக்கும்  வேறு  இடத்தில்  பணி  கிடைக்கிறது 


சில  நாட்கள் இடைவெளிக்குப்பின்  நாயகி , பணிப்பெண்  இருவரும்  எதேச்சையாக  சந்திக்கிறார்கள் ., இதற்குப்பின்  நிகழும்  திருப்பமே  க்ளைமாக்ஸ் 


நாயகியாக  திலோத்தமா  ஷோம் கச்சிதமாக  நடித்திருக்கிறார்பணிப்பெண்ணாக  வரும்  அம்ரிதா  இயல்பாக  நடித்தாலும்  நாயகியுடன்  வாக்குவாதம்  செய்யும்  காட்சியில்  மட்டும்  ஓவ்ர்  ஆக்டிங்.க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  கச்சிதம் 


பொதுவாக  இந்த  மாதிரி  காட்சி  இன்பத்தில்  ஈடுபாடு  உள்ளவர்கள்  ஆண்களே. ஒரு  மாறுதலுக்காக  பெண்ணுக்கு  இப்படிப்பட்ட குணம்  இருப்பதாக  சித்தரித்து  இருக்கிறார்கள் . இந்த  சீரிசில்  உள்ள  நான்கு  கதைகளில்  கொஞ்சம்  வித்தியாசமான  கதைக்கரு  என  இதைச்சொல்லலாம் 



3  சுஜோய்  கோஷ் - நாயகன்  காலேஜ்    படிக்கும்போது  இரு  பெண்களுடன்  பழகுகிறான். அதில்  ஒரு  பெண்ணைக்காதல்  திருமணம்  செய்து  கொள்கிறான். இன்னொரு  பெண்  மிகப்பெரிய  கோடீஸ்வரி . . நாயகன்  தன்னைத்திருமணம்  செய்து கொண்டால்  அப்பாவின்  கம்பெனிக்கு  எம் டி  ஆக்குகிறேன்  என  ஆசை  காட்டுகிறாள், இதனால் நாயகன்  திட்டம்  இட்டு  மனைவியைக்கொலை  செய்து  விட்டு  பணக்காரபெண்ணை  திருமணம்  செய்து  கொள்கிறான் 


 இதுவரை  சொன்னது  ஃபிளாஸ்பேக் . கதை . இப்போது  நாயகன் காரில்  வரும்போது  ரிப்பேர்  ஆகி  ஒரு  இடத்தில்  நிற்கிறது .அந்த  ஏரியாவில்  மெக்கானிக்  இருக்கிறாரா? என  தேடிச்செல்லும்போது  தான்  கொலை  செய்த  முன்னாள்  மனைவி  உயிருடன்  இருப்பதைப்பார்க்கிறான், அவளது  கணவன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் 


 இதற்குப்பின்  இந்தக்கதையில்  நிகழும்  திருப்பங்கள்  தான்  க்ளைமாக்ஸ் 

 நாயகனாக  விஜய்  வர்மா , நாயகியாக  தமனா . இருவரும்  நிஜ  வாழ்விலும்  ஜோடியாகப்போகிறார்கள்  என்று  கிசு  கிசு  ஓடுகிறது. உலக  சினிமா  வரலாற்றில்  முதன்  முறையாக  தமனா  இதில்  லிப்  லாக்  காட்சியில்  நடித்திருக்கிறார் . க்தைக்கு  தேவை  இருக்கிறதோ  இல்லையோ , கிளாமர்  டிரசில்  வருகிறார்


4 அமித்  ஷர்மா - நாயகி  முன்னாள்  சிவப்பு  விளக்கு  நாயகி . பெரும்  செல்வந்தனை  மணந்து  கொள்கிறாள் . அவன்  ஒரு  பெண்  பித்தன் . பார்க்கும் பெண்களை  எல்லாம்  அடைய  நினைப்பவன், இலவச  இணைப்பாக  நாயகியையும்  தொடர்ந்து  துன்புறுத்தி  வருகிறான். இந்த  ஜோடிக்கு  ஒரு  மகன்  திருமண  வயதில்  இருக்கிறான்


 கணவனைப்பழி  வாங்க  நாயகி  ஒரு  திட்டம்  தீட்டுகிறாள் . தான்  முன்னால்  இருந்த  சிவப்பு விளக்குப்பகுதியில்  எய்ட்ஸ்  பாதித்த  இளம்பெண்  ஒருத்தியை  தன்  விட்டுக்கு  பணிப்பெண்ணாக  அமர்த்துகிறாள் .


 கணவன்  அவளுடன்  கூடி  விட்டால்  எய்ட்ஸ்  வந்து  கணவன்  இறக்கட்டும்  என்பது  அவளது திட்டம் . அவளது  திட்டம் பலித்ததா? என்பது  க்ளைமாக்ஸ் 


 நாயகியாக  கஜோல். தில்வாலே  தில்ஹனியா  லே ஜாயெங்கே , மின்சார கனவு  போன்ற்  படங்களில்  நாயகியாக  நடித்தவரை  இந்த  மாதிரி  ரோலில்  பார்க்க  மனசுக்கு  கஷ்டமாக  இருக்கிறது . ஆனால்  நடிப்பில்  குறை  வைக்க வில்லை 



சபாஷ்  டைரக்டர்


1  முதல்  கதையில்  இயக்குநர்  புரட்சிப்பாட்டி  கேரக்டர்  டிசைனை  வைத்தே  ஒரு  முழு  குறும்படத்தையும்  முடித்து  விட்டார். கதையில்  ச்ரக்கு  இல்லை  என்றாலும்  அந்த  கேரக்டர்  சொல்லும்புரட்சிக்கருத்துகள்  பரபரப்பாக  பேசப்படும் 


2   இரண்டாவது  கதையில்  மூன்றே  கேரக்டர்களை வைத்து  சுவராஸ்யமான  கதைக்கருவைக்கையாண்டிருக்கிறார். அனைத்துப்பத்திரிக்கைகளின்  பாராட்டும்  இப்பட  இயக்குநருக்குத்தான். நாயகி , பணிப்பெண்  இருவர்  நடிப்பும்  குட் 


3  மூன்றாவது  கதை  ஆக்சுவலாக  ஒரு  க்ரைம்  த்ரில்லர் .  இந்த  சீரிசில் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  நாவலில்  வருவது  போல்  இருப்பது  சிறப்பு 


4  நான்காவது  கதையில் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதிர்ப்பார்த்தது  என்றாலும்  ரசிக்கத்தக்க  விதத்தில்  இருக்கிறது 



  ரசித்த  வசனங்கள் 


1 இயற்கையை  கணிக்கவே  முடியாது. யாருக்கு  யாரை  முடிச்சு  போட்டு  வைக்கும்னு  சொல்லவே  முடியாது , கணிக்கவும்  முடியாது


2 ஒரு  கார்  வாங்கறதுன்னாக்கூட  டெஸ்ட்  டிரைவ்  பண்ணிட்டுதான்  வாங்கறோம், காலம்  பூரா  ஒண்ணா  வாழப்போற  தம்பதிகள்  மேரேஜ்க்கு  முன்பே  கூடலில்  ஈடுபட்டுப்பார்ப்பது  நல்லது


3  புது  உறவை  உண்டாக்குவதற்கு  முன்  பழைய  உறவுக்கு உயிர்  கொடுங்க 


4  பந்தம்  உங்களுக்குள்ளே  பலமா  இருந்தா   உங்க  வாழ்க்கை  சுமூகமா  போகும் 


==============


5  மீட்டிங்க்கு  லேட்டா  போகப்போறியா? நீஎப்பவும்  எங்கேயும் ; லேட்டா  போக  மாட்டியே?


 எல்லாத்துக்கும்  முதல்  முறைனு ஒண்ணு  இருக்கு 


============


6  நாங்க  எல்லாம்  யார்  கிட்டேயும்  கேட்க  எல்லாம்  மாட்டோம், உத்தரவுதான்  போடுவோம்


7  அவன்  ராஜாவோட  பையன்,  யார்  கிட்டெயும்  வேலை  செய்ய  மாட்டான்



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன், நாயகி  இருவருமே  தனித்தனி  பங்களா வாசிகள் . இருவர்  வீட்டிலும்  சம்மதம், ஆறு  மாதங்களாக  இரு  குடும்பத்திலும் வரவு  செலவு  உண்டு . ரிகர்சலை  அவர்கள்  பங்களாவிலேயே  வைத்துக்கொள்ளலாமே? அரண்மனை  மாதிரி  இருக்கிறதே? எதற்காக  ஒவ்வொரு  முறை   ரிகர்சலுக்கும்  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டலுக்குப்போக  வேண்டும் ? 


2   பணிப்பெண்ணுக்கு  திருமணம்  ஆகி  டீன்  ஏஜ்  வயதில்  மகள்  இருக்கிறாள். இருந்தும்  கணவன் , மனைவி  இருவரும்   தினசரி  உறவில்  ஈடுபடுவதில்  ஆர்வம்  உள்ளவர்களாக இருப்பது  நம்ப  முடியவில்லை .அதுவும்  தின்சரி  டைம்  டேபிள்  போட்டது  போல  மதியம்  3  மணிக்கு  முகூர்த்தம்  என்பது  ஓவர் 


3  ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  மனைவி  என்பது  தெரிந்தும் நாயகன்  தைரியமாக  வாசல்  கதவு  பெட்ரூம்  கதவு  தாழ்  இடாமல்  அசால்ட்டாக  நாயகியை  அணைப்பது  எப்படி ? அதே  போல்  போலீஸ்  ஆஃபீசர்   மனைவியுடன்  வேறு  ஆணைப்பார்த்த  பின்பும்  சந்தேகப்படாமல்  செல்வது  எப்படி ? கிராஸ்  செக்  செய்ய  வரவே  இல்லையே?


4   எய்ட்ஸ்  வந்தால்  நிச்சயம் மரணம்  என்பதெல்லாம் 1990 களில் சரி , இப்போது  ஏகப்பட்ட  தடுப்பு  மருந்துகள்  வந்து  விட்டன. நாயகி  அதை  ஒரு  ஆயுதமாக  ஏன்  எடுத்தாள் ? கணவன்  குடிகாரன் , எப்போதும்  மப்பில்தான் இருக்கிறான் , மாடியில்  இருந்து  தள்ளி  விட்டால்  மேட்டர்  ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  18+  காட்சிகள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முதல்  பாகம்  அளவு இரண்டாம் பாகம்  இல்லை . நான்கு  படங்களில்  கடைசி  இரண்டு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  மட்டுமே  நம்பி  இருக்கிறது . இரண்டாம்  கதை கான்செப்ட்டை  நம்பி  இருக்கிறது . முதல்  கதை  புரட்சிகரமான  கருத்தை  நம்பி  இருக்கிறது ., ஓவர்  ஆல்  சுமார்  ரகம்  தான் . ரேட்டிங்  2.25  /5