Showing posts with label LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, March 18, 2023

LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ அமேசான் பிரைம்


1996ல்  பி  வாசு  இயக்கத்தில்  பிரபு தேவா , நக்மா  நடிப்பில்  வெளியான  லவ்பேர்ட்ஸ்  தமிழ்  படத்துக்கும் , 2020 ல்   ஆக்சன்  அட்வென்ச்சர்  அமெரிக்கன்  படமாக  ரிலீஸ்  ஆன  த  லவ் பேர்ட்ஸ்  படத்துக்கும்  இந்த  கன்னடப்படத்துக்கும்  எந்த  சம்பந்தமும்  இல்லை , மூன்றும்  வேறு  வேறு  கதைக்களம் 

2023  ஃபிப்ரவரி 14  காதலர்  தினத்தை  முன்னிட்டு     திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆகி  ஹிட்  ஆன இந்த  கன்னடப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓ டி டி  யில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  ஃபேஷன்  டிசைன்ர். நாயகன்  ஒரு  சாஃப்ட் வேர்  எஞ்சினியர். ஆன் லைன் திருமண  தகவல்  மையம்  மூலம்  இருவருக்கும்  அறிமுகம்  ஆகிறது . பெற்றோர்  சம்மதத்துடன்  இருவரும்  ஒரு  நாள்  நேரில்  சந்திக்கிறார்கள் 


ஹோட்டலில்  சந்தித்த  அவர்கள்  முதல்  சந்திப்பிலேயே  இருவருக்கும்  செட்  ஆகாது  என  முடிவெடுக்கிறார்கள் ., ஏன்  எனில்  நாயகன்  சிக்கனமாக  செலவு  செய்ய  நினைத்து  குறைவான  விலை  உள்ள  உணவை  ஆர்டர்  செய்ய  நாயகி  10,000  ரூபாய்  பில்  வரும்படி பிரம்மாண்டமாய்  ஆர்டர்  செய்கிறாள்


 இந்தப்பெண்ணைக்கட்டிக்கிட்டா நாம  போண்டி  ஆகிடுவோம்  என  நாயகனும், இந்த  மாப்ளையைக்கட்டிக்கிட்டா கஞ்சன்  ஜங்கா  ல  குடி  ஏறீயது  போல  ஆகிடும்  என  நாயகியும்  முடிவு  எடுக்கிறார்கள் 


அதற்குப்பின்  நாயகி  பல  மாப்பிள்ளைகளை  சந்திக்கிறார். ஆனால்  யாரும்   சரி  வரவில்லை . தெரியாத  பேயை விட  தெரிஞ்ச  பிசாசே  மேல்  என்ற  பழமொழிக்கு  ஏற்ப    நாயகனையே  திரும்ணம்  செய்ய  முடிவெடுக்கிறார்


 வேற  எந்தப்பெண்ணும்  சிக்காததால்  நாயகனும்  வேறு  வழி  இல்லாமல் திருமணத்துக்கு  ஓக்கே  சொல்கிறான்


 இருவருக்கும்  திருமணம்  ஆகிறது .    மோகம்  முப்ப்து  நாள்  ஆசை  அறுபது  நாள் ( அஜித்  நடித்த  ஆசை  100  நாள்  படம் , பிரமீளா  நடித்த  மோகம்  மலையாளப்படம் 175  நாட்கள்  ஓடியதே? என  யாரும்  குறுக்குக்கேள்வி  கெட்க  வேண்டாம் )    என்ற   பழமொழிக்கு  ஏற்ப  திருமணம் ஆன  சில  நாட்களில்  இருவருக்கும்  சின்னச்  சின்ன சண்டைகள்  வருகின்றன


எல்லாவற்றிற்கும்  சிகரம்  வைத்தாற்போல  நாயகன்  - நாயகி  இருவரின்  பெற்றோர் அவர்கள்  வீட்டுக்கு வரும்போது  நாயகி  நாயகனின்  பெற்றோரை  கவனிக்கவில்லை . 


உலகில் 99%  பெண்கள்  தங்கள்  கணவன்  வீட்டு  சொந்த்த்தை  மதிக்க  மாட்டார்கள்  எனற  உண்மை  அறியாத  நாயகன்  அந்த  விஷயத்தை  முன்னெடுத்து  சண்டை  போடுகிறான் . இரு  தரப்பு  பெற்றோருக்கும்  சண்டை  வர  இருவரும்  பிரிகிறார்கள் 



டைவர்ஸ்  கேட்டு  இருவரும்  ஒரு  லேடி  லாயரை  சந்திக்கிறார்கள் . யாருமே  எதிர்பாராத  ஒரு  திருப்பமாக  அந்த  லேடி  லாயர்  மூலம்  ஒரு  சம்பவம்  நடக்கிறது . இதற்குப்பின்  தம்பதிகள் இணைந்தார்களா? பிரிந்தார்களா? என்பது  மீதிக்கதை 


நாயகனாக  டார்லிங்  கிருஷ்ணா  இயல்பான  நடிப்பு  , முக  சாயலில்  நடிகர்  விஷால்  போல  இருக்கிறார். ஆக்சன்  காட்சிகளில்  கோபம்  காட்டும்  அளவு  ரொமான்ஸ்  காட்சிகளில்  சோபிக்க  முடியவில்லை , சோகக்காட்சிகளில்  ஸ்கோர்  செய்கிறார்


 நாயகியாக மிலனா  நாக்ராஜ். மாடர்ன்  கேர்ள்  ஆக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ்க்கு  30  நிமிடங்கள்  முன்பிருந்து  மாறுபட்ட  நடிப்பை  வழங்குகிறார் 


லேடி  லாயராக  வரும்  சம்யுக்தா  துடிப்பான  நடிப்பை  வழங்கி  உள்ளார் , ஒரு  கட்டத்தில்  நாயகனுடன்  ஜோடி  சேரப்போகிறார்  என்ற  எதிர்பார்ப்பை  ஏற்படுத்துகிறார்


நாயகனின்  அம்மாவாக  அல்டாப் அண்ட்  ஆல்  அப்டேட்ஸ்  அலமேலு  கேரக்டரில்  அதகளம்  செய்திருக்கிறார்  வீணா  சுந்தர் 


நாயகியின்  அப்பாவாக  வரும் சாது  கோகிலா ( ஆண்) ஒரு  காமெடி  நடிகருக்கான  உடல்  மொழியுடன்  கலக்குகிறார்


அர்ஜூன்  ஜன்யா  வின்  இசையில்  பாடல்கள்  சுமார்  ரகம், பிஜிஎம்  குட் 


கதை திரைக்கதை  இயக்கம்  எடிட்டிங்  எல்லாமே  பி சி  சேகர்  தான் . இந்தபப்ட  வெற்றிக்குப்பின்  பிசி  சேகர்  ஆக  வாழ்த்துகள் . 2  மணி  நேரம்  9  நிமிடங்கள்  ஓடுகிற  மாதிரி  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்  ( பி  சி  சேகர்  ) 

1    நாயகிக்கு  மீள  முடியாத  வியாதி  இருக்கிறது என  தெரிந்ததும்  அனைவரும்  நாயகி  மீது  காட்டும்  அக்கறை , அது  சம்பந்தமான  இரு  வீட்டு  பெற்றோர்  வரும்  காட்சிகள் 


2  கலகலப்பான  முதல்  பாதி 


3  க்ளைமாக்சில்  நல்லதொரு  கருத்தை  பிரச்சார  தொனி  இல்லாமல்  படைத்த  விதம் 

  ரசித்த  வசனங்கள்  ( பிரசாந்த்  ராஜப்பா)


1   நீ  வக்கீலா  இருப்பதை  விட  ஆசிரமம்  ஆரம்பிச்சு சாமியாராப்போனா  எங்கேயோ  போய்டுவே


2 இது  ரிமோட்  வோர்ல்டு .,ஆனானப்பட்ட  ஐ  ஃபோன் கூட  வருசா  வருசம்  அப்டேட்  ஆகிட்டே  இருக்கு , ஆனா  நீ இன்னும்  நோக்கியா  பேசிக்  மாடல்  போல  இருந்தா  எப்படி ??


3   ஏன்  ஒரு  மணி  நேரம்  லேட்டா  வர்றீங்க? இதுதான்  நம்ம  ஃபர்ஸ்ட்  மீட்


 நம்ம  இந்தியன்  கல்ச்சர்  அப்படி., கரெக்ட்  டைம்க்கு  வந்தா  வேலை  வெட்டி  இல்லாதவன்னு  நினைப்பாங்க 


4   சரக்கு  மட்டும்  தான்  அடிப்பியா? தம்  பழக்கமும்  உண்டா?


 சரக்கும், தம்மும்  ட்வின்  பிரதர்ஸ் மாதிரி 


5  கடவுள்  சில  சமயம்  நமக்கு  வார்னிங்  குடுப்பார், நாம  அதை  கவனிக்கலைன்னா  மாட்டிக்குவோம்


4  செக்  பண்ணி  மாப்ளை  தேர்ந்தெடுக்க  முடிவு  பண்ணினா  ஒர்க்  அவுட்  ஆகாது , இங்கே  100%  பர்ஃபெக்ட் ஆண்  எங்குமே  இல்லை 


5   நீங்க  எதிர்பார்க்கற  தகுதில  50%  தகுதி  இருந்தா  போதும்  , மீதி  50%  காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்


6  யார்  நம்ம  பக்கத்தில்  இல்லாத போதும்  அவங்க  நினைப்பு  நமக்கு  வருதோ  அவங்க  தான்  நம்ம  லைஃப்  பார்ட்னர் , யார்  கூட  பேசும்போது  நமக்கு ரொம்ப  கம்ஃபர்ட்ட[பிளா  இருக்கோ  அவங்க  தான்  நமக்கு  உற்ற  துணை 


7 வாழ்க்கைல  நல்ல  நல்ல  மொமெண்ட்ஸ்  எல்லாம்  சீக்கிரமா  நம்மை   கடந்து  போயிடும், ஆனால்  மோசமான  மொமெண்ட்ஸ்  அப்ப்டியே  தங்கி  இருப்பது போல  தோணும்


8 சார்  அர்ஜெண்ட்டா  இந்த  பார்சல்  அனுப்பனும்


‘ அர்ஜெண்ட்னா  வாட்சப்ல தான்  அனுப்பனும்


9 கடந்த  காலம்  முடிந்தது  முடிந்ததுதான்  , வருங்காலம்  மட்டும்  தான்  நம்ம  கைல  இருக்கு 


10  உங்க  கார்  என்ன  விலை  சொல்றீங்க ?


 10  லட்சம்


 விஜய்  ,மல்லய்யா  வெளிநாட்டுக்கு  ஓடிபோனப்ப  அந்த  ஃபிளைட்டையே  6  லட்சத்துக்குதான்  வித்தாரு


11   அவ  ஏன்  கார்ல  வாந்துக்கறேன்னு  சொல்றா?


 அது  வந்து  பைக்ல  வந்தா  அவளுக்கு  வியர்க்கும், சேராது


 என்னது ?


12  அந்த  மேடம்  குடுத்த  ஆர்டர்  அவுட்  ஆஃப்  ஆர்டர்  ஆகிடுச்சே?


13  குரங்கில்  இருந்து  மனுசன்  ஆக  நூற்றுக்கணக்கான  வருடங்கள்  ஆனது , ஆனா  மனுசன்  குரங்காக  மாற  ஒரே  ஒரு  மேரேஜ்  போதும்


14  உன்  டேட்  ஆஃப்  பர்த்  பிரம்மன்  எழுதுனது , உன்  டேட்  ஆஃப்  டெத்  நான்  எழுதப்போறேன்


12   பார்க்க  நல்ல  ஜோடியா  தெரியுது  ஏன்  டைவர்ஸ்  அப்ளை  பண்ணி  இருக்கீங்க >


  புலியும்  ஆடும்  பக்கத்து  பக்கத்துல  இருந்தா   ஃபோட்டோல  பார்க்க  வேணா  நல்லா  இருக்கும்,


13  இரு  நாடுகளுக்கு  இடையே  நடக்கும்  போரில்  கூட  பிரேக்  விடுவாங்க , இவங்க  ரெண்டு  பேரோட  சண்டைக்கும்  பிரேக்கே  கிடையாது  போல, எப்போப்பாரு  ஃபைட்  தான் 


14   இறப்பு  வரும்போதுதான்  வாழ்வின்  அருமை  தெரியும் 


15  இப்போ   நான்  உங்களுக்கு  ஹாய்  சொல்றதா? பை  சொல்றதா? தெரியல, ஆபரேஷன்  முடிஞ்சு  நான்  உயிரோட  வருவேனா? இல்லையா?  தெரியாது 


 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகனின் அம்மா  பாரம்பரியமான  பழக்க  வழக்கம்  உள்ளவர்  என  தெரிந்தும்  நாயகி  முதன்  முதலாக  மாப்பிள்ளையான  நாயகனை  ச்ந்திக்க  வரும்போது  ஸ்லீவ் லெஸ்  பனியன்  ,  லோ  ஹிப்  நைட் பேண்ட் காஸ்ட்யூம்ல  வர்றார். என்னதான்  மாடர்ன்  கேர்ள்  என்றாலும்  திருமண  முதல்  ச்ந்திப்பில்  புடவை  அல்லது  சுடிதார்  தானே  கண்ணிய  உடை ? 

2      என்  பிளாட்டை  விட  உன்  பிளாட்  வசதியா  பெருசா  இருக்கே, அதனால  நாம  அங்கேயே  குடி  போய்க்கலாம்னு  என்  பிளாட்டை  வித்துட்டேன்னு  ஹீரோ  சொல்வது  நம்பும்படி  இல்லை . கிட்டத்தட்ட  அது  வீட்டோட  மாப்பிள்ளை  ,மாதிரிதானே? ஹீரோ  கேரக்டர்  டிசைன்  தன்மானம்  உள்ளவன்  மாதிரி  காட்டிட்டு  இப்படி  காட்டலாமா?  ( அதுல்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கு , ஆனா  ஹீரோயின்  மனசுல  அப்படி  தோண வேணாமா?)

3   ஹீரோ  ஹீரோயின்  சின்ன்ச்சின்ன  சண்டைகள்  எல்லாம்   பெரிய  பாதிப்பை ஏற்படுத்தவில்லை , ஏதோ  பிரிவு  வர  வலுக்கட்டாயமா  காட்சிப்படுத்துன  மாதிரிதான்  இருக்கு , குறிப்பா  இரு  தரப்பு  பெற்றோரும்  வீட்டுக்கு  வந்து  சமாதானப்படுத்த  வரும்  தருணத்தில்  நாயகனின்  அப்பா, நாயகியின்  அப்பா  இருவரும்  அடித்துக்கொள்வது  அசல்  அக்மார்க்  டிராமா 


4 க்ளைமாக்ஸ்க்கு  கொஞ்சம்  முன்னால  நாயகியை ஸ்கேன்  மிஷின்ல  வெச்சுக்கிட்டே  டாக்டர்  நாயகன்  கிட்டே  நாயகி  பிழைபது  கஷ்டம்,  கேன்சரை  விட  மோசமான  வியாதி  தாக்கி  இருக்குனு  சொல்றாரே?  எந்த  டாக்டராவ்து  பேஷண்ட்டை  பக்கத்துல  வெச்சுக்கிட்டே  அப்படி  சொல்வாரா? ( இதுல  ஒரு  ட்விஸ்ட்  பின்னால  இருக்கு , இருந்தாலும்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை ) 


5  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வலியப்புகுத்தியது  போல  இருக்கு . பொதுவாக  மெடிக்கல்  கம்ப்ளைண்ட்  வரும்போது  செகண்ட்  ஒப்பீனியன் வெற  டாக்டர்  கிட்டே  கேட்பாங்க , அப்படி  கேட்கவில்லை  ஏன் ? 

6  ஒப்பனிங்  சீனில்  மிக  சிக்கனவாதியாக  காட்டப்படும்  ஹீரோ  பின்னர்  ஆடம்பரனான  பிளாட்  வாங்குவதும் , காஸ்ட்லி  கார்  வாங்குவதும்  எப்படி ? ஹோட்டலில்  ஆர்டர்  பண்ணும்போது  100  ரூபாய்க்குள்  ஆர்டர்  செய்யும்  சிக்கனவாதி  ஆயிற்றே? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  க்ளீன்  யூ    சர்ட்டிஃபிகேட்  ஃபிலிம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   முதல்  பாதி  கலகலப்பாகவும்  கடைசி  30    நிமிடங்கள்  கனமான  சோகமாகவு,ம், க்ளைமாக்சில்  ஒரு  ட்விஸ்ட்டோடும்  படம்  முடிகிறது . பார்க்கலாம்  ரேட்டிங்  2. 5 / 5