பொதுவாக திகில் படங்கள் , பேய்ப்படங்கள் நான் அதிகம் பார்ப்பதில்லை . காரணம் வழக்கமான டெம்ப்ளேட்டில் அவை எடுக்கப்படுவதும் ஒரு பங்களா அதில் குடியேற வருபவர்களை பேய் தடுப்பது அதுக்கு ஒரு ஃபிளாஸ்பேக் என்பதாய் போர் அடிக்கும் என்பதால்.. பலரும் மாறுபட்ட கதை என பரிந்துரைத்ததால் இதைப்பார்த்தேன்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோ ஒரு ஐ டி கம்பெனில சாஃப்ட்வேர் எஞ்சினியர். ஹீரோயின் அந்த கம்பெனில ஹெச் ஆர். இவங்களுக்குள்ளே ஏற்கனவே ஒரு வாய்க்கா தகறாரு இருக்கு. ஒரு கேப்க்குப்பின் இந்த கம்பெனில மீட் பண்ணிக்கறாங்க, ஹீரோயினுக்கு ஹீரோ மேல ஒரு கிரஷ். ஹீரோவுக்கும் லைட்டா அப்டி ஒரு எண்ணம் உண்டு. முதல் 25 நிமிடங்கள் ஜாலியான ரொமாண்டிக் ஸ்டோரியா படம் போகுது
ஒரு நாள் இரவு வேலை முடிஞ்சு வீட்டுக்குத்திரும்பும் போது இருவரும் லிஃப்ட்டில் மாட்டிக்கறாங்க . அப்போதான் சில அமானுஷ்யமானவிஷயங்கள் நடப்பதா உணர்றாங்க . அவங்க கண் எதிரே செக்யூரிட்டிங்க இருவர் சாவு நடக்குது . அவங்க பார்க்கும் டி வி நியூஸ்ல இவங்க தீ விபத்தில் இறந்துட்டதா வர்ற நியூசை இவங்களே பார்க்கறாங்க
அதாவது 3 மணி நேரம் கழிச்சு அவங்க இறக்கப்போறாங்க என்பது தெரிய வருது. லிஃப்ட் ல இருந்தா தானே பிரச்சனைனு மாடிப்படி இறங்கலாம்னு போனா எத்தனை டைம் படி இறங்குனாலும் திரும்பத்திரும்ப அவங்க இருந்த ஃப்ளோர்ல தான் மீண்டும் வர்றாங்க
இவங்க தப்பிச்சாங்களா? இல்லையா? ஆவிகளின் ஃபிளாஸ்பேக் என்ன? என்பதுதான் பின் பாதி திரைக்கதை
ஹீரோவா புதுமுகம் கவின் , ஹீரோயினா அம்ரிதா அழகான முகங்கள் நல்ல நடிப்பு , எப்போ எந்தப்படம் பார்த்தாலும் நான் பொதுவா ஆம்பளைங்களை பெருசா சிலாகிக்க மாட்டேன், ஆனா இந்தப்படத்துல ஹீரோ ஹீரோயினை விட செம அழகு , ஹீரோவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு . திகில் காட்சிகளை விட ரொமான்ஸ் காட்சிகளில் ஹீரோ நடிப்பு பக்கா
ஹீரோயின் அதுக்கு நேர் எதிர் ரொமான்ஸ் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்கி திகில் காட்சிகளில் நல்லா ஸ்கோர் பண்றார், ஆனாலும் திகில் படங்களில் அதுவும் தமிழில் என் ஆல் டைம் ஃபேவரைட் திகில் பய முகங்கள் யார்? நளினி & ஹலோ யார் பேசறது ? ஜீவிதா . இவர்கள் இருவரின் கண்களும் முக வியர்வையுமே போதுமானது நம்மை பயப்படுத்த
காமெடிக்கு அப்துல். கைதட்டல் போட வைக்கும் நடிப்பு இவர் இரும்புத்திரைல நடிச்சவர் என நினைக்கிறேன்
இசை பிரிட்டோ மைக்கேல் 2 பாட்டு நல்லாருக்கு பிஜிஎம் ஓக்கே ரகம்
சபாஷ் டைரக்டர் ( வினித் வரபிரசாத் )
1 மெயின் கதையான திகில் கதையை விட , பேய் ஃபிளாஸ்பேக் கதையை விட ஓப்பனிங்கில் வரும் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் ஊடல் காட்சிகள் ரசிக்க வைக்குது
2 தமிழ் சினிமாவில் முதன் முதலாக லிஃப்ட்டை மையப்படுத்தி வந்த முதல் பேய்ப்படம் என்ற அந்தஸ்து இதுக்கு உண்டு
3 ஆர்ட் டைரக்சன் பக்கா .பெரும்பாலான காட்சிகள் லிஃப்ட்டிலும், சிறும்பாலான காட்சிகள் ஒரே ஆஃபீசிலும் நடந்தாலும் பெருசா சலிப்பு தட்டவில்லை
4 மாடியிலிருந்து ஜம்ப் பண்ணி செத்த நாயகி வேறொரு வழியில் வருவதைக்கண்டு அலறும் ஹீரோ முன் வந்தது பேய் என உணரும் தருணம் சபாஷ்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் நில நெருடல்கள்
1 ஐ டி டிபார்ட்மெண்ட்டில் ஒர்க் பண்றவங்களுக்கு எப்பவும் சம்பளம் அதிகம் ஒரு கம்பெனில வேலை இல்லைனு சொன்னா அவங்களை அள்ளி அணைச்சுக்க 1000 கம்பெனிகள் உண்டு . வேலை போய்டுச்சி என உடனே தற்கொலைக்கு முயல்வது நம்ப முடியல
2 நல்லா பிராஜெக்ட் செஞ்ச ஆளை , எந்தக்காரணமும் இல்லாம தூக்குவது எதுக்கு என்பதற்கான விளக்கம் இல்லை
3 ஒரு பேய் தன் சாவுக்குக்காரணமானவங்களைப்பழி வாங்குவது ஓக்கே ஆனா ஓனர் இட்ட பணியை செய்த செக்யூரிட்டிகளை போட்டுத்தள்ளுவது ஏன்? பாவம், அவங்க என்ன பாவம் செஞ்சாங்க ?
4 பொதுவா எல்லாப்படங்களிலும் வரும் குறை என்னான்னா பேய் தான் யாரைப்பழிவாங்கனுமோ அவங்களை விட்டுட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாம யார் யாரையோ பயமுறுத்துவது எதுக்கு ?
ரசித்த வசனங்கள்
1 இந்த உலகத்துல எல்லாத்துக்கும் ரீ ப்ளேஸ்மெண்ட் உண்டு
2 ஒரு குட் நியூஸ் இருந்தா அதுக்கு பேரலலா ஒரு பேடு நியூசும் இருக்கும்
3 இந்த கம்பெனியைப்பொறுத்தவரை யாரையாவது யாராவது லவ் பண்ணினா 3 மாசத்துக்கு முன்பே இன்ஃபார்ம் பண்ணனும், இன் கேஸ் லவ் பண்ற பொண்ணு இந்த கம்பெனி பொண்ணா இருந்தா 6 மாசத்துக்கு முன்பே இன்ஃபார்ம் பண்ணனும், அப்போதான் நாங்க ஆல்ட்டர்நேட்டிவா வேற ஆளை அரேஞ்ச் பண்ண முடியும்
4 தம் பிடிச்சு வேலை செஞ்சு மேல வந்தவங்களை விட கூட நின்னு தம் அடிச்சு மேலே வந்தவங்க தான் அதிகம்
5 வாழ்க்கைல நீ பெருசா யாரையாவது நம்புனா அவங்க உன்னைப்பெருசா மொக்கை பண்ணப்போறாங்கனு அர்த்தம்
6 அண்ணா-னு கூப்பிட்டா பசங்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா? அக்கானு கூப்பிட்டா பொண்ணுங்களுக்கும் கோபம் வரும்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தெளிவான ஒளிப்பதிவில் ஒரு நல்ல ஹாரர் ஃபிலிம் .. ரத்தம் தெறிக்கும் காட்சிகளோ கோரமான முகங்களோ காட்டப்படவில்லை என்பது ஆறுதல் . ரெண்டு மணி நேரப்படம் தான். பார்க்கலாம் ரேட்டிங் 2. 25 / 5 ,டிஸ்னி ஹாட் ஸ்டார் ரிலீஸ்