ஹீரோ ஒரு வக்கீல்.அவர் கிட்டே ஒரு வினோதமான கேஸ் வருது. அதாவது ஒரு பொண்ணு வந்து புகார் தருது. ஒரு அரசியல்வாதியை சந்திக்கப்போனப்ப அவரு பாலியல் ரீதியா துன்புறுத்துனாரு,அவர் கிட்டே ஒரு கோடி ரூபா மானநட்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பனும்னு. ஹீரோ ஒத்துக்கறாரு, நோட்டீஸ் போகுது
போலீஸ் விசாரணைல ஒரு பொண்ணைக்கூட்டிட்டு வ்ந்து இந்தப்பொண்ணுதான் புகார் தந்த அந்தப்பொண்ணா?னு கேட்கறாங்க. 2ம் வேற வேற , ஏதோ ஆள் மாறாட்டம், ஆனா சந்தர்ப்ப சூழலால ஹீரோ ஆமாங்கறாரு
இப்ப அந்தப்பொண்ணு மாட்டிக்கிச்சு. இந்தக்கேசோட பின் புலம் என்ன>? என்பதே மிச்ச மீதித்திரைக்கதை
ஹீரோவா திலீப், இவரு பெரும்பாலும் காமெடி கேரக்டர்தான் பண்ணுவாரு, நம்ம அரசியல் தளபதி மாதிரி. இந்தப்படம் அவருக்கு ஒரு கம் பேக் படம்.ஆல் செண்ட்டர் மீடியம் ஹிட் அடிச்சிடுச்சு.இவரோட ஸ்க்ரீன் பிரசன்ஸ் , டயலாக் டெலிவரி எல்லாமே கன கச்சிதம்
ஹீரோயினா மம்தா மோகன் தாஸ். ரொம்ப பிரமாதமும் இல்லை, ரொம்ப மோசமும் இல்லை
இன்னொரு நாயகியா ப்ரியா ஆனந்த் , ஏதோ பேலியோ டயட்ல இருப்பார் போல , கோபிகா மாதிரியே இவரும் முகமெல்லாம் நீள் வட்டம் ஆகி ஒல்லியா லேடி தனுஷ் மாதிரி இருக்காரு
திரைக்கதைல ஹீரோ க்கு திக்குவாய் என்பது வலிந்து திணிக்கப்பட்டிருக்கு, அது தேவையே இல்லை, அதை வெச்சு செய்யப்பட்டகாமெடி டிராக் செம கடுப்பு
ஒளிப்பதிவு , எடிட்டிங், இசை , பின்னணி இசை எல்லாமே சராசரி தரம், ஃபிளாஸ்பேக் காட்சிகள் ஹீரோவை இளமையா காட்டுது, மேக்கப் குட்
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 நடிகை,பாவனா பாலியல் பலாத்கார வழக்கில் கைது ஆகி சிறையில் இருக்கும் தண்டனைக்கைதி திலீப் நடித்த #KodathiSamakshamBalanVakeel (மலையாளம்) ஏ சென்ட்டர் ஹிட் என தகவல் ( இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம் ,ஹீரோ வக்கீல்)
2 மாற்றுத்திறனாளி களை கிண்டல் செய்வது போல் காமெடி டிராக் அமைப்பது மிகத்தவறானது.காதலா காதலா வில் கமல் செய்த அதே தவறை திலீப் இதில் செய்திருக்கிறார் #KodathiSamakshamBalanVakeel ( malayalam)
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 லாஜிக் மிஸ்டேக் 1− பிரவம் ரோடு எனும் ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் என்கொயரி நடப்பது போல் சீன்,அப்போ அங்கே போர்ட்டர்கள் பார்சலை இறக்கி ஏத்தறாங்க.ஆனா நிஜத்தில் கேரளாவில் பாலக்காடு ,திருச்சூர்,எர்ணாகுளம்,கோட்டயம்,கொல்லம்,திருவனந்தபுரம் மட்டுமே பார்சல் புக்கிங் உண்டு,பிரவம் ரோடு பேசஞ்சர் ரயில்,memo மட்டுமே நிற்கும்.எக்ஸ்பிரஸ்க்கு ஸ்டாப்பிங்க் கிடையாது #KodathiSamakshamBalanVakeel ( malayalam)
2 லாஜிக் மிஸ்டேக் 2 − போலீஸ் கமிஷனர் ஆபீஸ் மீட்டிங் ஹாலில் பேசிமுடித்து வெளியே வந்த உடனேயே வாசலிலேயே ஒரு போலீஸ் ஆபீசரும் ,லாயரும் (ஹீரோ)சட்டத்துக்குப்புறம்பான சதி ஆலோசனை செய்யறாங்க,சிசிடிவி இருக்குதே? தள்ளிப்போய் சதி செய்ய மாட்டாகளா? #KodathiSamakshamBalanVakeel ( malayalam)
3 ஹீரோ , அவரோட காலேஜ் மேட் இருவரும் ஒரே வயசு, அவ்ளோ சின்ன வயசுல ஒருவர் ஜட்ஜ் ஆக முடியுமா?வக்கீலா கொஞ்ச வ் அருசம் சர்வீஸ் பண்ணி ஒருவர் ஜட்ஜ் ஆக எப்படியும் 40 வயசு ஆகிடும், இதுல 26 வயசுலயே ஜட்ஜ் ஆகறாரு
நச் டயலாக்ஸ்
1 இந்த உலகத்துல பணத்தால எதை/யாரை வேணா விலைக்கு வாங்க முடியும்னு நினைக்கறாங்க,ஆனா பணத்தை விட வலிமையான ஆயுதம் பெண்தான் #KodathiSamakshamBalanVakeel ( malayalam)
2 எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு வாழ்க்கைல அடுத்து என்ன செய்யறது?னு தெரியாம திண்டாடறப்பக்கூட நேர்மையான வழியைத்தேர்ந்தெடுப்பவனே மனோபலம் மிக்கவன் #KodathiSamakshamBalanVakeel ( malayalam)
3 மோசக்காரனா ,குடிகாரனா இருந்தாலும் கடைசி வரை ஒரு மகளுக்கு நம்பிக்கையானவனா,நேர்மையானவனா இருக்க அவளோட அப்பாவாலதான் முடியும் #KodathiSamakshamBalanVakeel ( malayalam)
திலீப் நடித்த KodathiSamakshamBalanVakeel (மலையாளம்) க்ரைம் த்ரில்லர் @ kerala kottayam abhilash 2 pm show 60% full #A Kodathisamakshambalanvakeel
=
=
KodathiSamakshamBalanVakeel ( malayalam)− முதல் பாதி காமெடி,பின் பாதி க்ரைம் த்ரில்லர்,திலீப்க்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் (மூன்றாம் கலைஞர் ரீமேக் பண்ண சரியான சப்ஜெக்ட்), ரேட்டிங் 2.75 / 5 பி சென்ட்டர் ஹிட் #KodathiSamakshamBalanVakeel ( malayalam)