டோலிவுட்டில் ரவிதேஜா நம்ம ஊர் சரத்குமார் 89 டைம் நடிச்ச கேரக்டர்ல முதல் முறையா நடிச்சிருக்கார்.. 12பி புகழ் ஷாம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிச்சிருக்கார்.. போன வருஷமே ஆந்திராவுல ரிலீஸ் ஆகி சில இடங்கள்ல சுமாரா ஓடி, பல இடங்கள்ல அடி வாங்குன மாமூல் மசாலா குப்பை தான்..
வில்லனோட பையனை ஷூட் பண்ணின போலீஸ் ஆஃபீசர் ஷாமோட பையனை பழிக்குப்பழி வாங்கும் விதமா கொலை பண்றாரு வில்லன், மிச்சம் மீதி இருக்கும் மனைவி, மகளை காப்பாற்ற ஷாம் லீவ்ல போறாரு.. விட மாட்டேன், துரத்தி துரத்தி அடிப்பேன்னு சபதம் போடறாரு வில்லன்.
கேட்பாரே இல்லாம தனியா இருக்கும் பங்களாவுல குடி இருக்கும் ஷாமின் ஃபேமிலியை 10 நிமிஷத்துல பாம் வெச்சு முடிச்சிருக்கலாம், படமும் சீக்கிரம் முடிஞ்சிருக்கும்.. ஆனா வில்லன் அதுக்கு ஜவ் இழுப்பு இழுக்கறார்.. ,
போலீஸ் ஆஃபீசர் ஷாமுக்கு ஒரு செக்யூரிட்டி ஆஃபீசர் நியமிக்கப்படறார்.. அந்த ஆஃபீசர்க்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கறார் வில்லன்.. அந்த ஆஃபீசரை அடிச்சுப்போட்டுட்டு போலீஸ் செக்யூரிட்டி ஆஃபீசர் மாதிரி அந்த பங்களாவுக்குள்ளே நுழையறார் நம்ம ஹீரோ ரவி தேஜா..
இந்த மாதிரி மசாலா படத்துல ஹீரோயின் அரை லூஸ் மாதிரி இருக்கனும், மாதிரி என்ன மாதிரி , அப்படியே அச்சு அசலா வாழ்ந்து காட்றேன்னு டாப்ஸி லூஸா வருது சாரி ஹீரோயினா வருது.. முற்றலான முகம், கேடி மாதிரி பார்வை உள்ள 50 வயசு ஹீரோவை 21 வயசான ஃபிரெஸ் பீஸ் ( ஒரு நம்பிக்கை தான் ) டாப்ஸி பார்த்த உடனே காதல்.. சமப்ந்தமே இல்லாம 2 கனவு டூயட் வேற.. ரொம்ப கேவலமா இருக்கு.. ஆனாலும் ரசிக்கிறோம், ஏன்னா லோ கட் , லோ ஹிப்ல வர்றது டாப் ஸி ஆச்சே?
இடைவேளை ட்விஸ்ட் வேணுமே, வில்லன் ஹீரோவை சதுரம் வரையறதுக்கு முன்னே 4 புள்ளி வரையற மாதிரி நெஞ்சம், மார்பு, வயிறு, குடல் என 4 ஸ்பாட்டுக்கு குறி வெச்சு சுடறார்.. எமதர்மரே இப்படி சுடப்பட்டாலும் ஸ்பாட் டெத் தான்.. ஆனா தெலுங்கு ஹீரோ ஆச்சே.. சாகலை..
ஷாமின் மனைவி அண்ணே அப்டினு ஓடி வர்றார்.. இதான் ட்விஸ்ட்.. அண்ணன் தங்கை 2 பேரும்
இடைவேளைக்குப்பிறகு பயங்கர டிராமா.. ஹீரோ ஷாமின் மனைவி ஸ்ரீதேவி, அவர் அண்ணன் ஹீரோ ரவி தேஜா ஒரு கிராமம்.. அவங்கப்பா ஒரு பெரிய மனுஷன், வில்லன், ஏழை மக்கள், நில புலன்கள் அபகரிப்பு, அடி தடி வெட்டு குத்து அப்படினு ஒரு பக்கம் கொலையா கொல்றாங்க..
இன்னொரு பக்கம் கா”ஜில்” அகர்வால் 3 டூயட்.. துள்ளும் முயல் குட்டி மாதிரி இருக்கும் காஜில் துள்ளி துள்ளி குதிக்கிறார்.. சம்பந்தமே இல்லாம இப்படி குதிக்கறதுக்கு பேசாம ஸ்கிப்பிங்க் ஆட விட்டிருக்கலாம்.. நான் டைரக்டரா இருந்தா ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட்ல ஸ்கிப்பிங்க் ஆட விட்டிருப்பேன்;.. தேவை இல்லாம குதிக்கறது, குனியறது எல்லாம் எதுக்கு?
ரவிதேஜா படம் பூரா சுறுசுறுப்பா வர்றது ஓக்கே.. ஆனா டான்ஸ் காட்சிகளீல் அவர் தொடர்ந்து விஜய் ஸ்டைலை ஃபாலோ பண்றது ஓவர்.. அழகிய தமிழ்மகன் ஸ்டெப்பை விடவே மாட்டார் போல.. விஜயே அதை விட்டுட்டார்..
ஹீரோயின் டாப்ஸிக்கு அதிக வேலை இல்லை.. 2 டூயட், 17 இடங்கள்ல தலையை காட்டிட்டுப்போறார் ( தலையை மட்டும் தானா? என யாரும் அங்கலாய்க்க வேண்டாம் )
அடுத்த ஹீரோயின் காஜில் அகர்வால்.. இவரை பார்க்கும்போது சாத்துக்குடி ஜூஸ் தான் நினைவு வருது,., மயக்கம் வர்ற மாதிரி இருக்கறவன், கிறு கிறுனு தலை சுத்தறவன் ஒரு ஆரஞ்ச் ஜூஸ் சாப்பிட்டா எப்படி ரெஃப்ரெஸ் ஆவானோ அது மாதிரி இவரை பார்க்க எவ்ளவ் குப்பை படத்தையும் பார்க்கப்போலாம் போல..
ஷாம் மீசை வெச்ச குயந்தைப்பையன்.. போலீஸ் கம்பீரத்துக்கு மெனெக்கெட்டிருக்கார்.. ஓக்கே ரகம்..
ஸ்ரீதேவி விஜய குமார் ஓவர் மேக்கப், படு செயற்கையான சிரிப்பு , நாசர், கஜினி வில்லன், என வி ஐபிகள் வந்து போறாங்க..
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. வில்லனால் கொல்லப்பட்டதா நம்பப்படும் ஷாமின் மகன் உயிரோட தான் இருக்கான் அப்டிங்கறதை கமுக்கமா வைக்காம இப்படித்தான் லூஸ் மாதிரி வில்லன் கிட்டேயே கண் முன்னால காட்டுவாங்களா? அதுவும் அவன் பாடுக்கு பேஷண்ட்டா சிகிச்சை எடுத்துட்டு இருக்கான்.. அவனை ஸ்ட்ரெக்சர்ல கஷ்டப்பட்டு உக்கார வெச்சு வேன்ல ஏத்தி தண்டமா 2 டாக்டர், 3 நர்ஸ்ங்க எல்லாம் எதுக்கு? வில்லன் கிட்டே காட்டி மறுபடி பறி கொடுக்கவா>
2. ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு செக்யூரிட்டியா வர்றவர் கிட்டே ஐ டி கார்டு கூட கேட்க மாட்டாரா கேனம் ஷாம்..?அட்லீஸ்ட் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து ஏதும் ஃபைல் கூட வராதா? இவர் தான் உங்களுக்காக நாங்க அப்பாயிண்ட் பண்ணி இருக்கும் ஆள்னு..
3. சாதாரணமா 10 வயசுப்பொண்ணை ஈசியா வீட்டு காம்பவுண்ட்ல விளையாடும்போது ஈசியா கொலை பண்ணாம அந்த கேன வில்லன் 2000 பேர் படிக்கும் ஸ்கூல்ல போய் கொல்ல ட்ரை பண்ணுவானா?
4. ஹீரோ குழந்தையை காப்பாத்த தரும் ஐடியா மகா கேவலம்.. யோசிக்க எல்லாம் டைம் இல்லை, நான் சொல்ற மாதிரி செய்னு சொல்லி 2000 சச்சின் மாஸ்க் ரெடி பண்ணீ அதை எல்லா ஸ்கூல் ஸ்டூடண்ட்சுக்கும் குடுங்கறார்.. 5 நிமிஷத்துல எங்கே இருந்து அத்தனை மாஸ்க் கிடைக்கும்? அதை எப்படி ஒரே ஆள் 2000 பேர்க்கும் குடுத்து போடச்சொல்ல முடியும்?படு கேவலமான சீன் இது..
5. இடைவேளை முடியறப்ப ஹீரோவை ஒரு வில்லன் கொல்லப்போறான், விட்டிருந்தா கொன்னிருப்பான்.. இந்த கேன மெயின் வில்லன் நான் தான் என் கையால கொல்வேன்னு ஹீரோவை கொலை பண்ணப்போனவனை மெனகெட்டு கொன்னுட்டு இருக்கான், அப்புறம் ஹீரோ எஸ் ஆகாம என்ன பண்ணுவார்? ஆந்திரா வில்லன்களுக்கு எல்லாம் அறிவே இருக்காதா?இயக்குநர் அப்படி ஆக்கிடறாரா? அட்லீஸ்ட் வில்லன்க ளாவது சார், இந்த சீன் மகா மட்டமா இருக்கு அப்டினு சொல்ல மாட்டாங்களா?
6. ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோயின் கிராமத்துல 10 பொண்ணுங்களோட கபடி மேட்ச் ஆடறார்,, தாவணி போட்டுட்டு.. சும்மா விளையாட்டுன்னு ஓக்கே.. ஆனா மேட்ச், டோர்னமெண்ட் என வந்துட்டா கபடி வீராங்கனைகள் ஷார்ட்ஸ் தான் போடனும் ( ரூல்ஸ்க்கு ரூல்ஸ் கிளாமருக்கு கிளாமர் ) காட்சிக்கு அவசியம் என்பதால் தான் அண்டர் டிராரயருடன் நடிச்ச்சேன்னு அவங்க பேட்டி குடுத்திருப்பாங்க, ஜஸ்ட் மிஸ்..
7. விழாக்காலத்துல, கோயில்ல விசேஷம் நடக்கும்போது அவ்லவ் பப்ளிக்கா ஏன் கொலை பண்ணனும்? கமுக்கமா வீட்ல போய் கொன்னிருக்கலாமே?
8. எல்லாத்தை விட படு கேவலம் ஹீரோ தன் பேருக்கு சொல்ற அர்த்தம்.. வீரா - என் பேருல வீ = விடா முயற்சி, ரா = ராட்சசன் அப்டிங்கறார், குறில் வி நெடில் வீ க்கு அர்த்தம் தெரியாத ஆள் போல.. ( டப்பிங்க் வசனகர்த்தா தவறு?)
இந்த குப்பை படத்துல பொறுக்கி எடுத்த மாணிக்க வசனங்கள்
1. மக்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா போலீஸ் காப்பாத்தும், அந்த போலீஸ்க்கே ஆபத்துன்னா யார் சார் காப்பாத்துவாங்க?
2. இந்த உலகத்துக்கே சுப்பீரியர் போலீஸ் கடவுள் தான்
3. ஹீரோயின் ஹீரோவிடம் -லிஃப்ட் கேட்டேன் தர்லை.. நீ ஏத்தலைன்னா என்னை யாரும் ஏத்த மாட்டாங்கன்னு நினைச்சீயா?
காமெடியன் - மேடம் மட்டும் ஓக்கே சொன்னா இவரை ஏத்திட்டு போக யூத்துங்க பலர் தயாரா இருக்காங்க.. ( நோ டபுள் மினிங்க், ஸ்ட்ரைட்டா ஒரே மீனிங்க் )
4. நான் ஹார்ஸ் ரைடிங்க் போகனும், ஆசையா இருக்கு
ஒரு குதிரையே குதிரை சவாரி போக ஆசைப்படுதே அடடே//
5. ஹீரோவின் கேவலமான ஆனால் எதுகை மோனை உள்ள பஞ்ச் டயலாக் - கடல்ல அலை அடிச்சா சுனாமி இந்த வீரா அடிச்சா பொணம் நீ
சி.பி கமென்ட் - டி வி ல போட்டாக்கூட பார்த்துடாதீங்க.. கிளாமர் காட்சிகளை பாட்டு சீன்லயே பார்த்துக்க்லாம், யூ டியூப் இருக்க பயம் ஏன்?இந்த கேவலமான மொக்கையை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்.போன வருஷம் ரிலீஸான இந்த டப்பாவை வீரய்யான்னு தமிழ்ல டப் பண்ணி விட்டிருக்காங்க
Directed by | Ramesh Varma |
---|---|
Produced by | Ganesh Indukuri |
Written by | Parachuri Brothers |
Starring | |
Music by | Thaman |
Cinematography | Chota K. Naidu |
Editing by | Marthand K. Venkatesh |
Studio | Sanvi Productions |
Release date(s) |
|
Country | India |
Language | Telugu |
Cast
- Ravi Teja as Deva/Veera
- Shaam as Shyam prasad
- Kajal Aggarwal as Chitti (Veera's Wife)
- Taapsee Pannu as Aiki
- Sridevi Vijayakumar as Sathya (Veera's Stepsister)
- Pradeep Rawat as Pedda Rayudu
- Roja as Veera's Stepmother
- Brahmanandam as Tiger
- Rahul Dev as Dhanraj
- Ali
- Venu Madhav
- Krishnudu
- Srinivasa Reddy