ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவருக்கு உதவியாக போலீஸ் ஏட்டு ஒருவர் இருக்கிறார். இருவரும் சேர்ந்து செய்யும் ஊழல்களில் இருவரும் பங்கிட்டு பணத்தைப்பிரித்துக்கொள்வார்கள் . ஒர் போதை மருந்து கடத்தல் கேசில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்கை இவர்கள் அபேஸ் செய்கிறார்கள் , ஆனால் செக்கிங்கில் மாட்டி சஸ்பெண்ட் ஆகிறார்கள்
மீண்டும் உடனடியாக பணிக்குத்திரும்ப அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் ஒருவரை சந்திக்கிறார்கள் . இருவரையும் உடனடியாக பணிக்கு சேர்த்துக்கொள்ள வைத்தால் 2 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக சொல்கிறார்கள்
அந்த அசிஸ்டெண்ட் கமிஷனரின் முன்னாள் கொலீக் ஒருவரை சந்திக்கிறார். முதலில் போலீஸ் ஆஃபீசராக இருந்து இப்போது ஏ டி எம் களில் பணம் வைக்கும் ஆளாக பணி புரிகிறார். அவரது வேனில் இப்போது 3 கோடி ரூபாய் பணம் இருக்கிறது
அந்தப்பணத்தை ஆட்டையைப்போட நாயகன் திட்டம் இடுகிறான்.
போதை மருந்து கேங்க் லீடரின் மகள் அவரது கார் டிரைவரைக்காதலிக்கிறாள் . இருவரும் ஓடிப்போக முடிவு செய்கிறார்கள் . அதற்கு பணம் தேவை . இந்த வேனில் இருக்கும் 3 கோடி ரூபாய் பணம் இவர்கள் கவனத்துக்கு வருகிறது
முக்கோணக்காதல் கதை மாதிரி இது முக்கோண த்ரில்லர் கதை . ஒரே ஒரு வேனில் இருக்கும் 3 கோடி ரூபாய் பணத்துக்காக மூன்று வெவ்வேறு குழுக்கள் அடித்துக்கொள்வதுதான் கதை , இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக அர்ஜூன் கபூர் கயமைத்தனம் கலந்த வில்லத்தன்ம், இவரை நாயகன் என சொல்வதை விட் ஆண்ட்டி ஹீரோ என சொல்லலாம், நெகடிவ் ஷேடு நிறைந்த கதாபாத்திர்ம் , மங்காத்தா படத்தில் அஜித் ஏற்று நடித்தது போல ஒரு கேரக்டர்
அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆக தபு . முகத்தி ல் முதுமை தெரிகிறது. இவ்ருக்கும் வில்லித்தனம் மிக்க கதாபாத்திரம் தான்
முன்னாள் போலீஸ் மற்றும் இந்நாள் எ எடி எம் சர்வீஸ் ஆளாக ஆசிஸ் வித்யார்த்தி , கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலப்பு
ட்ரக் டீலராக நஸ்ருதீன் ஷா அதிக வேலை இல்லை , அவரது மகளாக ராதிகா மாடன் அழகிய முகம் . கச்சிதமான நடிப்பு
விஷால் பரத்வாஜின் இசையில் எட்டு குட்டி குட்டி பாடல்கள் . 2 பாட்டு ஹிட்டு
ஒளிப்பதிவு ப்ர்ஹத் அஹமத் த்விவேதி இருட்டான காட்சிகளில் காமரா புகுந்து விளையாடுகிறது
ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் கனகச்சிதமாக 108 நிமிடங்களில் ட்ரிம் செய்து விறுவிறுப்பாக தந்திருக்கிறார்
திரைக்கதை, இயக்கம் ஆஷ்மான் பரத்வாஜ். த்ரில்லிங்கான கதையை விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார்’’
நெட் ஃபிளிக்சில் வெளியாகி உள்ளது
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங் போலீஸ் ஸ்டேஷன் லாக்கப் ரூமில் தீவிரவாது லேடி சொல்லும் காடு , சிங்கம் ,, நாய் , ஆடு கதையில் நாடு ,அரசாங்கம், போலீஸ் , மக்கள் என கனெக்ட் பண்ணிய விதம் டச்சிங்
2 டைரக்டர் அல்லது வசனகர்த்தா எட்டாவது , 12 வது ல படிச்ச பல சின்ன சின்ன கதைகளை ஊடால திரைக்கதைல சேர்த்துடறார், குறிப்பா 1 தவ்ளை , ஆறு , தேள் கதை ,
3 நக்சல் போராளியாக வரும் நடிகையின் நடிப்பும் அவர் பேசும் வசனமும் நச் ரகம்
ரசித்த வசனங்கள்
1 காட்டில் வசித்தால் இரண்டே ஆப்சன் தான் . வேட்டையாடு அல்லது வெட்டையாடப்படுவாய்
2 ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்யனும்னு நினைச்சா அது ஆபத்தில் தான் முடியும்
3 சிங்கத்துக்கு தாகம் எடுத்தா அது விஷத்தை குடிக்காது
4 எல்லாரும் என்னை ராணி மாதிரி ட்ரீட் பண்றாங்க , அவங்க கண்ல ஒரு பயம் தெரியுது . எனக்கு சாதாரண வாழ்க்கை வாழ ஆசை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 காதல் ஜோடி வழக்கமா சந்திப்பது போல ஒரு மீட்டப் நடத்தறாங்க ,எதேச்சையா போலீஸ் வேனை ஃபாலோ பண்றப்ப அந்தப்பொண்ணு பைனாகுலர் எடுத்து நோட்டம் பார்க்குது . எப்படி பைனாகுலர் அவங்க கைக்கு கிடைச்சுது ? அவங்க புரொஃபஷன்ல் ஸ்மெக்லர்னா ஓக்கே...
2 பொதுவா ஒரு போலீஸ்காரன் கிரிமினல் மாதிரி யோசிப்பான், ஆனா போலீஸ் ஆஃபீசர் ஜீப்பை ஒருத்தன் ஃபாலோ பண்ணீட்டு வர்றதையே அவனால கண்டு பிடிக்க முடியாம இருக்குமா?
3 போலீஸ் ஆஃபீசரான தபு 3 திருட்டுப்பசங்களோட கூட்டணி வெச்சு ஒரு கொள்ளை அடிக்கும் திட்டம் போடறப்ப ஒரு வாட்சப் க்ரூப் அஞ்சு பெருக்கும் சேர்த்து ஆரம்பிக்கறாங்க . 2 போலீஸ் 3 திருடன்க. சைபர் க்ரைம் போலீஸ்க்கு இது பின்னாளில் தெரிஞ்சிடுமே? என்ன தைரியத்துல அதுக்கு ஒத்துக்கறாங்க ?
4 கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக அப்பா இருக்கும்போது மகள் ஜஸ்ட் 3 கோடி ரூபாய்க்காக அல்லல்படுவது , துப்பாக்கி தூக்குவது எல்லாம் நம்ப முடியாத காரணம்
5 பஞ்சும் , நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளும் என்ற பழமொழி தெரியாதா? அந்த ட்ரக் மாஃபியாவுக்கு? தன் மகளுக்கு கார் டிரைவராக ஒரு இளைஞரை ஏன் நியமிக்கனும் ? லேடி டிரைவர் அல்லது வயதான நப்ரை நியமிக்கலாமே?
6 நாயகன் தனி ஒரு நபராக க்ளைமாக்சில் அந்த போராளிகள் கேங் 100 பேரை வெல்வது எல்லாம் வேற லெவல் சினிமாத்தனம்
டல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - இது 16+ வகை படம் தான். ஒரு லிப் லாக் சீன் இருக்கிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விறுவிறுப்பான ஆனால் நம்ப முடியாத திரைக்கதை அம்சம் கொண்ட ஆக்சன் த்ரில்லர் படம்,பார்க்கலாம் , ரேட்டிங் 2.25 / 5
Kuttey | |
---|---|
Directed by | Aasmaan Bhardwaj |
Written by |
|
Produced by | |
Starring | |
Cinematography | Farhad Ahmed Dehlvi |
Edited by | A. Sreekar Prasad |
Music by | Vishal Bhardwaj |
Production companies |
|
Distributed by | Yash Raj Films |
Release date |
|
Running time | 108 minutes[1] |
Country | India |
Language | Hindi |
Box office | est. ₹4.65 crore[2] |