சமீபத்தில் தோல்வி முகமாக இருந்த விஜய்தேவரகொண்டாவின் மார்க்கெட்டைத்தூக்கி நிறுத்திய அவரது 11 வது படம் இது ,முக்கியக்காரணம் சமந்தா வுடன் இவருக்கு காதல் என கிசு கிசு எழுந்த சமயத்தில் ரிலீஸ் ஆனதால்.. விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் பாக்ஸ் ஆஃபீசில் ஹிட். 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடி வசூலித்தது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் பிஎஸ் என் எல் ஆஃபீசில் ஒரு ஊழியர். காஷ்மீரில் இவருக்கு பணி . அங்கே நாயகியை சந்திக்கிறார். உயிரே படத்தில் வருவது போல் நாயகி ஒரு தீவிரவாதி போல் முதலில் காட்டுகிறார்கள். காதலி;ல் தீவிரவாதி ஆக இருக்கும் நாயகன் அவரை விரட்டி விரட்டி காதலித்து காதலிக்க வைக்கிறார். அவர் எப்படி காதலில் விழுந்தார் என்பதை முதல் ஒரு மணி நேரம் ரொமாண்டிக்காக காட்டுகிறார்கள்
இடைவேளை ட்விஸ்ட் என்னான்னா நாயகியின் அப்பா ஆன்மீகவாதி . நாயகனின் அப்பா நாத்திகவாதி. ஆனாலும் திருமணம் நடக்கிறது . இதற்குப்பின் இருவர் வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தது ?> சேர்ந்தார்களா? இல்லையா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக இளமைத்துள்ளலுடன் விஜய்தேவரகொண்டா. ரசிகைகளை ஈர்க்கும் புன்னகை . சிரித்த முகம் . நல்ல நடிப்பு
நீதானே என் ;பொன் வசந்தம் படம் தான் சமந்தா அழகி ஆக இருந்த படம் ., இதில் டல் தான், ஆனாலும் சமாளிக்கிறார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி குட்
சரண்யா பொன்வண்னன் நாயகனின் அம்மாவாக கலக்குகிறார். லட்சுமி நாயகியின் பாட்டியாக வருகிறார்
ஜெயராம் - ரோகினி இருவருக்கும் கெஸ்ட் ரோல். முரளி ச்ர்மா , மற்றும் சச்சின் இருவரும் சம்பந்திகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
165 நிமிடங்கள் ஓடும்படி கட் செய்து இருக்கிறார் எடிட்டர் . இன்னும் ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கலாம் ., ஏசம் அப்துல் இசை குட் பிஜிஎம் அருமை
ஜி முர்ளியின் ஒளிப்பதிவில் காஷ்மீரின் அழகை அள்ளிக்கொள்கிறார்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் சிவா நிர்வானா
சபாஷ் டைரக்டர் (சிவா நிர்வானா )
1 ஆத்திகரான நாயகியின் அப்பா மணப்பெண் வீட்டுக்குள் வரும்போது வலது காலை எடுத்து வைத்து வராம இடது காலை எடுத்து வைத்து வந்தா ஃபீல் பண்ணுவார்.. நாத்திக்ரான நாயகனின் அப்பா நாயகி வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தா ஃபீல் பண்ணுவார், இப்போ நான் என்ன செய்ய என புதுமணப்பெண்ணான நாயகி கேட்கும்போது நாயக்ன் உன்னை கால் எடுத்து வர விட்டாத்தானே என அலேக்காக அவரைத்தூக்கிக்கொண்டு உள்ளே வரும் காட்சி கவிதை
2 பொண்ணுங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கனும் என நாயகனும் , அவன் நண்பனும் வெவ்வேறு தருணங்களில் ஆண் ஆதிக்க மனோபாவம் காட்டும்போது அவர்களுக்கு கிடைக்கும் பதிலடி சபாஷ்
3 ஆத்திகமா? நாத்திகமா? எது சரி ? என க்ளைமாக்சில் நெத்தி அடியாக சொல்லாமல் சமாளித்த விதம்
ரசித்த வசனங்கள்
1 ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும்
2 நாங்க யாரு? எங்கே இருந்து வந்திருக்கோம்னு தெரியுமா?
நீங்க எப்டினு தெரியல, அவங்க வேணா நேரா சொர்க்கத்துல இருந்து வந்திருக்காங்கனு தெரியும்
3 தோஷமுள்ள ஜாதகம் பரிகாரம் பண்ணாம சந்தோஷமா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
4 சிருஷ்டில இருந்து தான் சயின்ஸ் வரும், சயின்ஸ்ல இருந்து சிருஷ்டி வ்ராது
5 லவ் பண்ணும்போதே நீ என் கிட்டே பொய் தான் சொன்னே
நான் உன்னை லவ் பண்ணலைங்கற பொய்யை சொல்லி இருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது
6 நீங்களே பேபி மாதிரி இருக்கீங்க, உங்களுக்கு பேபி வேணுமா?
7 லைஃப்ல எது நடந்தாலும் நடக்கலைன்னாலும் பார்ட்டி கொண்டாடுவதை மட்டும் விட்டுடக்கூடாது
8 இந்தப்பொண்ட்டாட்டிங்க வாய்ல ஒரு ரகசியம் கூட தங்காதா?
9 இனிமே ச்ண்டை வராம பார்த்துக்கறேன்
சண்டை வரும், சண்டை வரும்போதும் ஸ்ட்ராங்கா இருந்தா தான் காதல்
10 பொண்ணுங்க நாங்க எல்லாம் அப்பா கிட்டேயும், கடவுள் கிட்டேயும் சொல்ல முடியாத விஷய்ங்க்ளை புருசன் கிட்டே தான் சொல்வோம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 திருமணம் ஆகி ஒரு வருடத்தில் முதல் முறையாக கர்ப்பம் தரித்த நாயகிக்கு அது கலைந்து விடுகிறது. இது ஒன்றும் கடைசி வாய்ப்பு இல்லையே? ரொம்ப ஓவர் டோஸ் ஆக கவலைப்படுவது போல் காட்டி இருக்க வேண்டாம்
2 கரு உருவாகாமல் இருப்பவர்கள் தான் ஏதாவது குறை இருக்கிறதா ? என தம்பதியினர் இருவரும் செக் செய்வார்கள். ஒரு முறை உருவாகி கலைந்தாலும் டெஸ்ட் பண்ணுவார்களா?அப்படியே செக் செய்தாலும் பெண் மட்டும் செய்தால் போதுமே? எதுக்கு ஆணும்?
3 திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகி இருக்கு. ஆனால் அதற்குள் குழந்தை இல்லையே? என நாயகனின் ஸ்கூல் மேட் கிண்டல் செய்வது ஓவர், அட்லீஸ்ட் அஞ்சு வருசம்னாக்கூட பரவாயில்லை
4 தம்பதிக்குள் கருத்து வேற்றுமை உருவாக இயக்குநர் ரொம்பவே சிரம்பட்டிருக்கிறார். எதுவும் ஒட்டவில்லை . படு செயற்கை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காதலர்கள் மட்டும் ;பார்க்கலாம். பழக்கப்பட்ட திரைக்கதை . சுமார் ரகம் ரேட்டிங் 2.25 / 5
Kushi | |
---|---|
Directed by | Shiva Nirvana |
Written by | Shiva Nirvana |
Produced by |
|
Starring | |
Cinematography | Murali G. |
Edited by | Prawin Pudi |
Music by | Hesham Abdul Wahab |
Production company | |
Release date |
|
Running time | 165 minutes[1] |
Country | India |
Language | Telugu |
Budget | ₹50–70 crore[2][3] |
Box office | est. ₹71.95 crore[4] |