Showing posts with label KUMKI. Show all posts
Showing posts with label KUMKI. Show all posts

Tuesday, December 18, 2012

நான் திரைக்கதை அமைத்திருந்தால்? -கும்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-NHNLIgHCEPz_CJEn1lMPVJkFGfPvddamXO3iHdF1B5Zu1XQpRh5SLhrISMFjnaAPQ5E1k7aVgA_K7wmDL42SqGMF3b6iCNyaVSMDnP_7q5TAweaYld_PuDkbp9u63RZHxHJnAqjD9-90/s1600/kumki1.jpg

மைனா படத்தின் பிரம்மாண்டமான வெற்றி ,டி இமானின் இசையில் பாடல்களின் அதிரி புதிரி வெற்றி , ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவு  இந்த மூன்று பிரமாதமான பிளஸ் இருந்தும்  கும்கி படம் அட்டகாசமான படமாக அமையாமல் ஏதோ ஓக்கே என்ற அளவில்தான் பேர் வாங்க முடிந்தது .பிரபு சாலமன் எங்கே சறுக்கினார்? இந்தப்படத்துக்கு எப்படி திரைக்கதை அமைத்திருந்தால் படம் இன்னும் ஹிட் ஆகி இருக்கும் ? ஒரு அலசல்



1. படத்தோட டைட்டில் கும்கி-ன்னு வெச்சாச்சு . முதல் வேலையா  முதுமலை 10 நாட்கள் கேம்ப் அடிச்சு அங்கே கூட்டம் கூட்டமா யானைகள் சுற்றுவதை  வீடியோ எடுத்துட்டு வந்து தேவையான இடத்துல அட்டாச் பண்ணி இருப்பேன்.கும்கி யானைக்கு எப்படி பயிற்சி தர்றாங்க? அதனோட ந்டவடிக்கைகள் என்ன? என்பதை படம் பிடிச்சுட்டு வரலாம்.ஏன்னா படத்துல மொத்தமே ஒரே ஒரு யானை தான் வருது . வில்லன் கம் கொம்பன் யானை கிராஃபிக்ஸ் , குட்டி யானை கிராஃபிக்ஸ்.இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்துட்டு  பிரம்மாண்டமா யானைக்கூட்டத்தை காட்ட வேணாமா? 




2. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல யானை ஒரு பெண்ணை கொல்றது மாதிரி சீன் எடுத்தது க்ளோசப் ஷாட்ல நல்லாவே செட்டப் மாதிரி தெரியுது .3 வருடங்களுக்கு முன் யானைப்பாகனையே தூக்கி அடிச்ச மதம் பிடிச்ச யானையோட செய்லகளை சன் டி வி ல காட்டினாங்க . அதை எடுத்து டச்சப் பண்ணி இதுல அட்டாச் பண்ணி இருக்கலாம்.பொதுவா இந்த மாதிரி காட்சி எல்லாம் லாங்க் ஷாட்ல காட்டினாத்தான் நம்பகத்தன்மை வரும் . சும்மா யானையோட பாதம் மட்டும் காட்டி ஒப்பேத்த இது ராமநாராயனன் படம் அல்ல 



3. படத்தோட திரைக்கதை டிஸ்கஷனுக்கு படத்தில் பணிஆற்றும்   அதாவ்து படத்தில் நடிக்கும் ஆட்களை உட்கார விடக்கூடாது. இந்தப்படத்துல மைனா ஹிட்டின் காரணமா தம்பி ராமையாவை ஸ்டோரி டிஸ்கஷன்ல டைரக்டர் உட்கார வெச்சாராம். அதுதான் தப்பு . இந்தபப்டத்துல தம்பி ராமையாவின் காட்சிகள் நீளம் அதிகம் . மொக்கை காமெடி நிறைய இருக்கு,. அரதப்பழசான ஜோக், சென்சார் கட் பண்ற அளவு வச்னங்கள் பேசி இருக்காரு . அவர் சமப்ந்தப்பட்ட காட்சிகளை குறைக்கனும்



4. படம் போட்டு 2 மணி நேரம் கழிச்சு ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொல்றாரு. அதுக்குப்பின் 40 நிமிஷம் தான் படம் , அதனால ஆடியன்ஸுக்கு ஹீரோ - ஹீரோயின் லவ் ல ஒரு பிடிப்பு வர்லை. அவங்க சேருவாங்களா? சேர மாட்டாங்களா? அப்டினு ஒரு துடிப்பு வர்லை. காதலுக்கு மரியாதை பட்த்துல  ஆடியன்சோட பரிதவிப்பு  நல்லாவே தெரியும் . அதுக்கு இருவரும் காதலிக்கும் காட்சிகள் , காதலின் ஆழம் , இதெல்லாம் படத்தோட 4 வது ரீலில் இருந்து காடிடனும் 



5. அந்த 2 போலீஸ் கேரக்டர்களும் என்ன பண்றாங்க? க்ளைமாக்ஸ்ல ஏதோ டர்னிங்க் பாயிண்ட் இருக்கு. அவங்க தான் வில்லன்களா வரப்போறாங்க என்பது மாதிரி பில்டப் எதுக்கு? அட்லீஸ்ட் அவங்க ஹீரோயினை அட்டெம்ப்ட் ரேப் கூட பண்ணலை. இந்த மாதிரி வெட்டி வில்லன்க இருந்து என்ன யூஸ் ? ஏமாற்றம்தான் மிச்சம் . அதனால அந்த 2 கேரக்டர்ஸ்க்கும் பை பை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjea0jWxXOycMDTrSGrwAOtK_ovUimAb5bjZ4XC-6E-wspDStTZRgwRZDNCF1Cmsuh44FJjzsqrnMryDyRy-JJ7OJ8jodeMVip60TxNK_S10LKjmy-d_saAMbpRKlDGZBOtO1aGrHefn00/s320/1.jpg



6. ஹீரோயினோட அப்பா ஹீரோ கிட்டே உங்களூக்கு எங்களால வாழ்க்கையே போச்சு , உங்க யானையும் போச்சு அதனால நீங்க இங்கேயே இருந்துடுங்க. என் பொண்ணை உங்களூக்கே கட்டி வைக்கிறேன். உங்க லவ் எனக்குத்தெரியும். அப்பாவை மதிச்சு காதலை கை விட்ட பொண்ணுக்கு இது என் அன்புப்பரிசு அப்டிங்கற மாதிரி ஒரு டயலாக் அடிச்சு க்ளைமாசை காதலுக்கு மரியாதை மாதிரி சுபமா முடிச்சுடனும்



7. பருத்தி வீரன் ஹிட்டுக்குப்பின் எல்லாப்படங்களிலும் ஹீரோ கிராமத்தான் என்றால் அவன் ஷேவிங்க் செய்யாம  காட்டான் மாதிரிதான் தாடியோட காட்டறாங்க. ஹீரோவுக்கு எதுக்கு தாடி? நீட்டா காட்டலாமே? 



8. ஹீரோயினுக்கு படத்துல ஓப்பனிங்க் ஷாங்க் இல்லை. இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை வெச்சுக்கிட்டு ஹீரோயின் அறிமுகக்காட்சி வைக்கலைன்னா எபடி? அந்த சொய்ங்க் சொய்ங்க் பாட்டை ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட்டா வெச்சா குதூகலமான ஓப்பனிங்க் வரும்



9. ஹீரோ ஹீரோயின் கிட்டே  தன் லவ்வை சொன்னதும் ஹீரோயின் ஓடிடறார். நோ ரிப்ளை. அவர் லவ்வறாரா? இல்லையா?ன்னே தெரியலை ,. ஆனா அடுத்த சீன்லயே  ஹீரோ கிட்டே “ நீங்க போய்ட்டா நானும் உயிரை விட்டுடுவேன்கறார். ஒப்பிக்கற மாதிரி இருக்கு . ஆல்ரெடி சொன்ன மாதிரி 4 வது ரீல்லயே லவ் ஓப்பனிங்க் சீனை வெச்சு 12 வது ரீல்ல குடும்பத்துக்கு மேட்டர் தெரிய வர்ற மாதிரி எடுக்கனும்



10. க்ளைமாக்ஸ்ல ஹீரோவின் யானையும் , கொம்பன் காட்டு யானையும் மோதற சீனை நல்லா பிரம்மாணடமா ஃபாரஸ்ட்ல போய் நிஜ யானைங்க மோதும்போது காத்திருந்து ஷூட் பண்ணி அப்புறம் அங்கங்கே மானே தே பொன் மானே கும்கி யானே அட்டாச் பண்ணி சி ஜி ஒர்க்  பண்ணி பக்காவா ரெடி பண்ணி இருப்பேன். சும்மா நைட் இருட்டுல  ஏதோ சண்டை நடப்பது போல் பாவ்லா காட்டி இருக்க மாட்டேன்


11. தம்பி ராமையா உட்பட படத்தின் முக்கிய கேரக்டர்களை சாகடிக்கத்தேவை இல்லை . படம் பார்த்த பலரது கருத்து “ படத்துல எல்லாரும் செத்துடறாங்க , ஒரே சோகம் “ என்ற புலம்பல் தான்.



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/11/director-PRABHU_SOLOMON1.jpg



Monday, December 17, 2012

Thursday, December 13, 2012

கும்கி

http://tamilasia.com/wp-content/uploads/2012/07/kumki-movie-songs-download.jpg

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'கும்கி'. பிரபு சாலமன் இயக்க, இமான் இசையமைத்து இருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

'கும்கி' படம் துவங்கப்பட்டதில் இருந்து எதிர்ப்பார்ப்பு தான். பிரபு சாலமன் இயக்கம் மட்டுமன்றி, நடிகர் திலகத்தின் பேரனும் பிரபுவின்  மகனுமான விக்ரம் பிரபு நடிக்கும் முதல் படம் என்பதாலும் கூடுதல் கவனத்தைப் பெற்றது.

காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வரும் யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் யானைக்கு 'கும்கி' என்று பெயர். அதனையே படத்திற்கு பெயராக வைத்து இருக்கிறார்கள். யானைகள் ஏன் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வருகின்றன? அதனை தீர்க்க என்ன வழி என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி சொல்லி இருக்கிறார்கள்.

'கும்கி' படம் குறித்து பிரபு சாலமன் " 'காட்டுக்குள் இருந்து ஊர்ப் பக்கம் வர்ற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கினு பேரு. எதாவது ஒரு பகுதியில், 'யானைகள் புகுந்து அட்டகாசம்’, 'ரேஷன் கடையை உடைத்து நொறுக்கியது’, 'மனிதர்களைத் தாக்கியது’னு தினமும் யானைகளைப்பத்தி ஃப்ளாஷ் நியூஸ் வருது. ஏதோ யானைகளை வில்லன் ரேஞ்சுக்குக் கொண்டுவந்துட்டோம்.

ஆனா, நிஜத்தில் யானை ரொம்பப் பாசமான ஜீவன். நேசிக்கத்தக்க மிருகம். ஆசாபாசம், கோபம், காதல், பழிவாங்கும் உணர்ச்சி, ஞாபகசக்தினு 40-50 டன் எடை கொண்ட மனிதன் அது... அவ்வளவுதான். யானையைச் சும்மா மிருகம்னு சொல்ல கூச்சமா இருக்கு. அந்த யானைகளின் வாழ்வியல் சூழலின் பின்னணியில் ஒரு காதல் சொல்லி இருக்கேன்.

இப்போ வரை யானைகள் பத்தி தனியா ஒரு புத்தகம் எழுதுற அளவுக்குப் படிச்சாச்சு. யானைப் பாகன்களோடு பேசினால் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் சுவாரஸ்யம். யானைக்குச் சின்ன சத்தம்கூடப் பிடிக்காது. வனத்தில் இயல்பா யானைகள் திரியும்போது, அவ்வளவு அழகா இருக்கும். யானைகள் மனிதர்களின் வாசத்தைப் பதிவுபண்ணி வைக்கும். பாகனோட வார்த்தைக்குத்தான் கீழ்ப்படியும். எங்கே நெல் இருக்கு, சோளம் இருக்குனு அதுங்களுக்குத் தெரியும்.

பரம்பரை பரம்பரையாக யானைகளின் ஜீன்லயே மேப் ரூட் இருக்கு. பேச்சிலர் ஆண் யானைகள் மட்டுமே தனியாத் திரியும். பெண் யானைகள் மகள், அத்தை, அம்மானு உறவுகளோடுதான் திரியும். யானைகளைக் காதலிக்கிற ஹீரோ - ஹீரோயினுக்கு இடையிலான காதல்தான் படம்.

கிராஃபிக்ஸ் கப்பல்ல நடந்தாலும் 'டைட்டானிக்’தான் உலகின் பிரமாண்டமான காதல் படம் இல்லையா? அப்படிப் பார்க்கும்போது, நிஜமான யானைகள் வளர்த்தெடுக்கும் 'கும்கி’ பிரமாண்டமான காதல் படமா இருக்கும். வனத்தையும் மனத்தையும் ஒருசேரத் தூண்டில்  போட்டுத் தூக்கும். அதுதான் படத்தின் விசேஷம்!'' என்று தெரிவித்தார்.

'கும்கி' படத்தின் இசையை ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, சத்யராஜ் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே ஒன்றிணைந்து வெளியிட்டார்கள். அவர்கள் அனைவருமே இணைந்து வெளியிட்டதாலோ என்னவோ பாடல்கள் அனைத்துமே ஹிட். இமான் இசையில் 'ஒண்ணும் புரியல', 'நீ எப்போ புள்ள' ஆகிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம்.

யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். ஆந்திராவில் உள்ள நீர்வீழ்ச்சியில் வருடத்திற்கு ஒரு முறை தான் தண்ணீர் வரும். அந்த நேரம் வரை காத்திருந்து ஒரு பாடலை அங்கு சென்று படமாக்கி இருக்கிறார்கள். அது போலவே பயிர் நட்டு அது வளர்த்து அறுவடை செய்யும் வரை காத்திருந்து பல காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தினை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடும் உரிமையை வாங்கி இருக்கிறது. டிசம்பர் 14ம் தேதி முதல் தியேட்டர்களில் வலம்வர இருக்கிறது 'கும்கி'.


இளைஞர்களின் ரிங் டோனாக மாறிய கும்கி பாடல்கள்
[
கொலிவுட்டில் மைனா பட வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் திரைக்கு வரவுள்ள 'கும்கி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
கும்கி படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அப்போது படத்தின் பாடல்கள், ட்ரைலரை பார்த்தவர்கள் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும் விநியோகஸ்தர்கள் அனைவருமே தயாரிப்பாளர் லிங்குசாமி அலுவலகத்தினை முற்றுகையிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கும்கி பாடல்கள் இளைஞர்களின் காதுகளுக்கு இசை விருந்தாக அமைந்துள்ளது.
'ஒண்ணும் புரியல', 'அய்யய்யோ ஆனந்தமே', 'சொல்லிட்டாளே அவ காதல' ஆகிய பாடல்கள் காதலர்களின் ரிங் டோனாக மாறியிருக்கிறது. இப்படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.
மைனா பட குழு அப்படியே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
அனைத்து படங்களிலுமே க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகனை சுற்றி தான் இருக்கும். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் பிரபு சாலமன், கும்கி க்ளைமாக்ஸ் காட்சியினை யானையை மையப்படுத்தி வைத்து இருக்கிறார் என்று தகவல்

 
 

1.படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர்கள் : ரஞ்சித் & ஸ்ரேயா கோஷல்
வரிகள் : யுகபாரதி

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தையே பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்




2.படம் : கும்கி
இசை : D. இமான்
பாடியவர் : அதிதி பால்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
இல்லை இல்லை துணிச்சல்
நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
ரொம்ப ரொம்ப குறைச்சல்

ஒரு கேணி போல ஆச ஊறுதே
மருதாணி போல தேகம் மாறுதே
பக்கத்தில் வந்தது பாசம்
இனி வெட்கங்கள் என்பது வேஷம்
உயிரே உறவே உனதே

ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ
ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ

ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
தங்கி கொள்ள வரவா
உன்னை விட ஒரு நல்ல மனிதனை
கண்டதில்லை தலைவா
கடிவாளம் ஏது காதல் ஓடவே
கிடையாது தோல்வி நாமும் சேரவே
முன்னுக்கு வந்தது மோகம்
சில முத்தங்கள் தந்திடு போதும்
உடனே வருவேன் சுகமே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

3.
படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்
வரிகள் : யுகபாரதி

நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற



4. படம் : கும்கி
இசை : D இமான்
பாடியவர் : D இமான்
வரிகள் : யுகபாரதி

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஒருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல





5.படம் : கும்கி
இசை: D இமான்
பாடியவர்கள் : பென்னி தயால் & D இமான்
வரிகள் : யுகபாரதி

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேர்ந்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முழிச்சதும் வேலை
கைய விரிச்சதும் கூலி
அள்ளி கொடுப்பது நீங்க மதிப்போமே

வீதியெல்லாம் சுத்தி வித்தை காட்டுவோங்க
வேலியில்லா காட்ட போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க
முங்கி குளிச்சுட ஆறு முட்ட நடந்திட ரோடு
லுங்கி மடிப்புல பீடி ஒளிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொழப்போமே



6.படம் : கும்கி
பாடியவர் : மகிழினி மணிமாறன்
வரிகள் : யுகபாரதி
இசை : இமான்

சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்


7. படம் : கும்கி
இசை : இமான்
பாடியவர் : ஹரிச்சரண்
வரிகள் : யுகபாரதி

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ
ஹய்யய்யய்யோ
ஒ ஹய்யய்யய்யோ

உன்னை முதல் முறை கண்ட நொடியினில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்துவாய்
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே சுடுதே மனதே

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே

ஏ ஏ ஏ புள்ளே ஏ புள்ளே

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்
கைகள் இருப்பது தொட்டு அணைத்திட
அள்ளிக் கொள்ள துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்
நெற்றியில் குங்குமம் சூட
இளநெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா வரவா தரவா

அய்யய்யய்யோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே
காதல் போடும் தூறலில் தேகம் மூழ்கி போகுதே
ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
அய்யய்யய்யோ

நன்றி -தமிழ் பாடல் வரிகள் , விகடன் , லங்காஸ்ரீ

diSki -

நீதானே என் பொன்வசந்தம்

http://www.adrasaka.com/2012/12/blog-post_7091.html

 
 
 

கவுதம் அதிர்ச்சி! நெட்டில் வந்த முதல் 2 விமர்சனங்களும் நெகடிவ் ரிசல்ட்!

 

 http://www.adrasaka.com/2012/12/2_13.html

 




 அ








Monday, October 01, 2012

கும்கி லட்சுமி மேனன் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWOEN3lN6WISkNlbwNFxqPy-8utXwLS0sxfAseKJKqun7vgrIYUowEALOC5eR__J7_Nxio5h7_MEZpeVkDeci8_DiQM7dUX4op65t7jXf7y66QZgS0fTQZu79vW2FG21LSAlCOph_aiPM/
  "சுந்தரபாண்டியன்', "கும்கி' என அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ்த்திரை வானத்தில் உலா வரக் காத்திருக்கும் இளங்கிளி.""இப்போதுதான் எனக்கு 15 வயதாகிறது. அதற்குள்ளாகவே தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தொடக்கமே "கும்கி', "சுந்தர பாண்டியன்' என பெரிய படங்கள். ஒரு விதத்தில் நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு பிடிக்கும். தமிழும் பிடிக்கும். பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்'' படபடக்க பேசுகிறார் லட்சுமி மேனன்.



தமிழ் சினிமாவுக்கு வந்தாகி விட்டது சரி, இதற்கு முன்....?




கேரளத்திலுள்ள திருவனந்தபுரம்தான் சொந்த ஊர். என் அப்பா ராமகிருஷ்ணன். வேலை நிமித்தமாக துபாயில் இருக்கிறார். அம்மா உஷா, டான்ஸ் பள்ளி நடத்தி வருகிறார். முன்பு அம்மா சென்னையில்தான் இருந்தார். இருந்தாலும் சின்ன வயதிலேயே குடும்பத்துடன் கேரளத்துக்கு வந்து விட்டார்கள். சென்னை கலாசேத்ராவில் டான்ஸ் கற்றுக் கொண்டார். இரண்டு பாட்டிகளும் டான்ஸ் டீச்சர்ஸ். இவர்களுக்கெல்லாம் ஒரே செல்லம் நான்தான்.எனக்கும் டான்ஸ் மீது அலாதி ஈடுபாடு. பரதம், கதகளி இரண்டுமே தெரியும். இப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் நடந்த டான்ஸ் போட்டியை பார்க்க வந்த மலையாள இயக்குநர் விநயன் சார் "ரகுவின்டே சொந்தம் ரசியா' படத்தில் ஒரு சின்ன வேடம் தந்தார். இதுதான் நான் சினிமாவுக்கு வந்த கதை. அந்தப் படத்தை பார்த்த பிரபு சாலமன் சார் என்னை "கும்கி' மூலம் இங்கே கொண்டு வந்து விட்டார். இப்போது "சுந்தரபாண்டியன்' படத்தையும் முடித்து விட்டேன். அடுத்த படத்துக்கு காத்திருக்கிறேன்.




"கும்கி'யில் மலை வாழ் பெண்ணாக நடித்த அனுபவம் எப்படி?




இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என எதிர்பாக்கவில்லை. மலைவாசி பெண். பேச்சு முதல் நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றி நடிக்க வேண்டும். தலைமுடியில் இருந்து நகம் வரைக்கும் எல்லாமே மாற வேண்டிய ரோல். செருப்புக் கூட போடாமல் கொதிக்கிற பாதை மேல் நிற்க வேண்டும். பாதை இல்லாத வனப்பகுதிகளில் பயம் இல்லாமல் கால் வைக்க வேண்டும். முக்கியமான காட்சிகளில் முகத்தில் உணர்ச்சி காட்டி நடிக்க வேண்டும். சினிமா என்றால் ஜாலியாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். இப்படியும் ஒரு சினிமா இருக்கிறதென பிரபு சாலமன் சார் காட்டினார். இந்த வயதில் இது மாதிரியான ஒரு சினிமா கிடைத்ததில் மகிழ்ச்சி. இது அதிர்ஷ்டம். இனி சினிமாவில் நடிக்க முடியாது என்ற நிலை வந்தால் கூட எனக்கு வருத்தம் இல்லை. "கும்கி' அவ்வளவு நன்றாக வந்திருக்கிறது. எனக்காக டப்பிங் பேசும் போது கொஞ்சம் படம் பார்த்தேன். சான்úஸ இல்லை. படம் வந்த பிறகு அல்லி.. அல்லி.. என என்னை கொண்டாடுவீங்க.



நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஹீரோ விக்ரம் பிரபுவை விட உங்களுக்குத்தான் கதையில் ஸ்கோப் அதிகம் இருக்கும் போல?




அட எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் வந்திருக்கிறோம். அதுவும் ஹீரோ விக்ரம் பிரபு. சான்úஸ இல்லை. அவருக்கும் இது முதல் படம். சிவாஜி சார் பேரன், பிரபு சார் மகன் என எந்த பந்தாவும் இல்லை. பாறைகள் மீது சறுக்கணும். சட்டை போடாமல் வனப்பகுதியில் திரியணும். யானை மீது சவாரி செய்யணும். தந்தம் பிடித்து முத்தம் கொடுக்கணும். கூடவே இருந்து பார்த்தால் உங்களுக்கெல்லாம் பயம் வந்திருக்கும். நான் தைரியமாக இருந்தேன். சில நேரங்களில் எனக்கே பதறும். ஆனால் விக்ரம் பிரபு முகத்தில் துளியும் பயம் இருக்காது. பதற்றம் இல்லாமல் படத்தில் மிரட்டி எடுப்பார். அதோடு அவரிடம் வேலை வாங்குகிற பிரபுசாலமன் சார். நிஜமாகவே அவர் சூப்பர் டைரக்டதான்


http://filmreviews.bizhat.com/wp-content/gallery/kumki/kumki_movie_stills-1.jpg
.முதல் படத்திலேயே இவ்வளவு கண்ணியமாக நடித்தால், தமிழ் சினிமா உங்களை ஏற்றுக் கொள்ளுமா?



 ஏற்றுக் கொண்டார்களே. "கும்கி' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. போஸ்டர் பார்த்து விட்டு ""எங்கள் படத்தில் நடிக்கிறீங்களா?''ன்னு கேட்டது இயக்குநர் சசிகுமார் சார்தான். "சுந்தர பாண்டியன்' என பேர் வைத்து, கதை சொல்லி, ஷூட்டிங் போய் இதோ படம் ரிலீஸ் ஆகி விட்டது. படம் பார்த்தவர்களிடம் கேளுங்கள். ""இந்த பொண்ணு எப்படி?''ன்னு. அந்தளவுக்கு பெர்மான்ஸ் காட்டியிருக்கிறேன். நானே எதிர்பார்க்காத கேரக்டர். நிஜத்தில் நான் ரொம்பவே சாப்ட். பத்து வார்த்தைகளில் கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில்தான் பதில் சொல்லுவேன். எனக்கு போய் கலகலவென்று சீனுக்கு சீன் வசனம் வைத்து என்னை மாற்றி விட்டார்கள். ""பத்து நிமிஷத்து பத்து எக்ஸ்பிரஷன் கொடுக்கிறேயே''ன்னு சொல்லி ஆச்சரியப்பட்டார் சசிகுமார். தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த இடம் தேனி. அங்கேதான் ஷூட்டிங். சொல்லவே வேண்டாம். படம் நல்லாவே வந்திருக்கிறது. பாருங்கள். அப்படியே என்னையும் ஆதரியுங்கள்.



எல்லோருக்கும் ரோல் மாடல் இருப்பார்கள். சினிமாவை பொறுத்தவரையில் யார் உங்கள் ரோல் மாடல்? எது உங்களுக்கு கனவு படம்?




எனக்கு தமிழ் படங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அம்மாவுக்கு தமிழ் படங்கள் பிடிக்கும் என்பதால் நானும் அப்படியே ஆகி விட்டேன். "மௌன ராகம்', "பூவே பூச்சூடவா', "சிந்து பைரவி' இந்த படங்களுக்கெல்லாம் அம்மா அடிமை. ஆனால் அதற்கு நான் எதிர்மறை. "சேது', "பிதாமகன்', "வாரணம் ஆயிரம்', "மைனா' இது மாதிரியான படங்களை பார்த்து ரசித்தவள் நான். அதே மாதிரியான படங்கள் வந்தால் நிச்சயம் இழக்க மாட்டேன். அதே சமயத்தில் நல்ல ரோல் என்றால் கிளாமருக்கும் பிரச்னை இல்லை. ரேவதி மேடம்தான் ரோல் மாடல்.




அப்படியென்றால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா?




இல்லை. எனக்கு தமிழ் சினிமா பிடிக்கும். இரண்டு படங்களை முடித்து விட்டேன். ""படிப்புதான் முக்கியம்'' என அம்மா சொல்லி விட்டார். அதனால் இப்போதைக்கு படிப்பு. "சுந்தர பாண்டியன்' பார்த்தவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். அடுத்து "கும்கி'யும் இரண்டு படங்களும் வெளிவந்து எனக்கு என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கிறதென பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும். விநயன் சார் கொடுத்த ஒரு சின்ன வாய்ப்பு மூலமாக மலையாளத்தில் நல்ல பேர் வாங்கி விட்டேன். தமிழும் நிச்சயம் கை கொடுக்கும்.



 நீங்கள் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிந்தால், நல்லாயிருக்குமே?



நான்தான் சொன்னனே. ரொம்பவே சாப்ட் டைப். ஆனால் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறேன். "கும்கி'யும், "சுந்தர பாண்டிய'னும் என்னை மாற்றியிருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த சிலர் ""உன்னை மாதிரி துறு துறு பொண்ணை பார்த்ததே இல்லை''ன்னு சொன்னாங்க. அதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வரும். எனக்கு இது பிடித்திருக்கிறது. நல்ல பெயர் வாங்கணும். நல்ல பொண்ணுன்னு எல்லோரும் பேசிக்கணும். மீடியா ஆள்களோடு எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும் என அப்பா சொன்னார். அதை நான் சரியாக செய்து வருகிறேன் என்று நினைக்கிறேன். நல்லா படிக்கணும். நல்ல படங்களாக நடிக்கணும். அது போதும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG2e_qBi54_iPw9OVTxyk4cFO48ZfctMWbFsVuW1rHA-m5V5_oa1evTbXxsy56kxynEFpXn3bTsPOGjeKz4ghN7pZBEaVHOQg-XCarcyTCdZaSUZ4TA0igm1zfutGq6IAajnF0O5NGUamX/