Showing posts with label KRANTI (2023)=கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label KRANTI (2023)=கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, March 24, 2023

KRANTI (2023)=கன்னடம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா) @ அமேசான் பிரைம்

 


க்ராந்தி  என்றால் புரட்சி  என்று  அர்த்தம், ஆனா  இந்தப்படத்துல  அது பெயர்ச்சொல் . நாயகனின்    பெயரே க்ராந்தி  தான். நாயகி  பேரு  அவருக்கு  மேட்சுக்கு  மேட்ச்சா   சாந்தினு  வெச்சிருக்கலாம். எதுகை  மோனை  ரசனை  இல்லாதவங்க  போல   , உஷானு  வெச்சிருக்காங்க 

படத்தின  நாயகன்  தர்ஷன்  23  ஆண்டுகளாக  நடித்து  வருகிறார். இதுவரை 50 படங்களுக்குமேல்  நடித்து  முடித்து  விட்டார். இவர்  மீடியாக்கள்  மீது  கோபமாக  இருப்பவர். பர்சனல்  லைஃப்  பற்றி கமென்ட்  செய்யும்  மீடியாக்களை  கண்டபடி  திட்டுபவர். இந்தப்படத்துக்கான் ப்ரமோ  நிகழ்வு  ஒன்றில் இவர்  பேசிய  பேச்சு  சர்ச்சை  ஆனது. அதிர்ஷ்ட  தேவதை  எப்போதும் உங்கள்  வீட்டுக்கதவை  தட்ட  மாட்டாள். அவள்  வ்ரும்போது  அவ்ளை  வீட்டுக்குள்  இழுத்து  உடைகளைக்களைந்து  நிர்வாணம்  ஆக்கி  விடுஙகள், அப்போதுதான்  உங்களுடனேயே  இருப்பாள், உடைகளைத்தந்தால் அவள்  வெளியே  போய்  விடுவாள்  என  பேசியது  பெரும்  கண்டனத்துக்கு  உள்ளானது. மேடையிலேயே ஒருவர்  செருப்பை  வீசி  தன்  எதிர்ப்பை  பதிவு  செய்தார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்னப்பையனா  இருந்தப்போ ஸ்கூல்  படிக்கும்போதே அநியாயத்தைக்கண்டு  ஓவரா  பொங்கி  வ்ழிந்து  வன்முறைல  ஈடுபடும்  ஆளாக  இருப்பதைப்பார்த்து  அப்பா  கடுப்பாகி  அவனை  வீட்டை  விட்டு , இந்த  ஊரை  விட்டு , இந்த  நாட்டை  விட்டே  அனுப்பிடறாரு. சொந்தகாரர்  வீட்ல  தங்கிப் படிச்சு  திடீர் சாம்பார் ,  திடீர் பிரியாணி  மாதிரி  நாயகன்  திடீர்  பிரபல  தொழில்  அதிபர்  ஆகிடறார்.  எப்படி  ஆனார்?னு  யாரும்  கேட்கக்கூடாது .எப்படியோ  ஆகிடறார்


உலகப்புகழ்  பெற்ற  தொழில்  அதிபரா  ஆன  அவருக்கு  அவரோட  ஸ்கூல்  வாத்தியார்  ஃபோன்  பண்ணி  ஸ்கூலோட  100 வது  ஆண்டு  விழா  நடக்குது  , அவசியம்  வரனும்னு  அழைப்பிதழ்  வாய்  மூலமா  அனுப்பறார்


 உடனே நாயகன் ஃபிளைட்ல தாய்  நாடு  வந்து  ஹெலிகாப்டர்ல  அந்த  ஏரியா  வந்து  ரயில்ல  பிரயாணம்  பண்றாரு. ஏன்னா  அப்போதான்  படத்தை  இழுக்க  முடியும், நாயகி  கூட மொக்கை  காமெடி , டூயட்  எல்லாம்  பாட  முடியும் 


நாயகன்  எருமைக்கடா  மாதிரி  இருக்கார் , நாயகி  மல்லிகைப்பூச்சரம்  மாதிரி  இருக்காங்க. நாயகிக்கு    பெரியப்பா  மாதிரி  தான்  நாயகன்  இருக்கார் , ஆனா  மனசாட்சியே  இல்லாம  இருவரும்  க்ளாஸ்  மேட்  அப்டினு  அடிச்சு  விடறாங்க 


இருவரும்  டூயட்  பாடி  முடிச்சு  ஊர்  வந்து  சேர்றாங்க. இப்போதான்  நமக்கு  கதை  புரியுது . அதாவது  தனுஷ்  நடிச்ச  வாத்தி   ப்டமும் இதுவும்  ஒரே  பட  டிவிடியைப்பார்த்துதான்  அட்லீ  ஒர்க்  பண்ணி  இருக்காங்கனு  புரியுது


 அரசுப்பள்ளிகளை  ஒழிச்சுட்டா  தனியார்  பள்ளி  மூலம்  சம்பாதிக்கலாம்னு  கார்ப்பரேட்  வில்லன்  சதி  பண்றான், அதுக்கு  கல்வி  அமைச்சர்  உடந்தை . இவங்க  திட்டத்தை  நாயகன்  எப்படி  முறியடிக்கிறார்  என்பதுதான்  கதை ‘

‘  நாயகனாக  தர்ஷன். முற்றிப்போன  கத்திரிக்கா  மாதிரி  முகம் , ஜிம்  போய்  டெவலப்  பண்ணி அடியாள்  மாதிரி  உடம்பு . டூயட்  சீன்ல  நாயகியைக்காதலா  லுக்  விடத்தெரியாம  டாப்லெஸ்  போஸ்ல  வர்றாரு 


 தமிழ்  சினிமா ல கமல் , சரத்குமார் , அர்ஜூன்  எல்லாம் இந்த  கேட்டகிரிதான்  , அவசியம்  இருக்கோ  இல்லையோ  சட்டையைக்கழட்டி  ஜிம்  பாடியைக்காட்டலைன்னா  தூக்கம்  வராது 


இவர்  போடற  ஃபைட்  சீன்கள் , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  பார்த்தா  தெலுங்குப்பட  ஹீரோக்கள்  எல்லாரும்  சூசையிட்  பண்ணிக்குவாங்க 


நாயகியாக ரச்சிதா  ராம், நம்ம ஊர்  அனுஷ்கா  மாதிரி  கொழுக் மொழுக்  அழகு . பானுப்ரியா  மாதிரி  அழகிய  கண்கள் 


டம்மி  வில்லனாக தருன்  அரோரா..காமெடிக்கு  சாது  கோகிலா  ( இவர்  ஒரு  ஆண்  ) நம்ம  ஊர்  வடிவேலு  மாதிரி  முக  பாவனை    உடல்  மொழி  மூலம்  காமெடியில்  கலக்குபவர் 


இயக்கி  இருப்பவர்  ஹரி கிருஷ்ணாR



சபாஷ்  டைரக்டர்


1 ஹீரோ  தான்  படம்  முழுக்க  ஒன் மேன்  ஷோ    மாதிரி  நடக்கறார் நடக்கறார் நடந்துட்டே  இருக்கார்


2 திரைக்கதை  அப்படினு  ஒரு  டிபார்ட்மெண்ட்  இருப்பதையே  மறந்தது  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  ஒவ்வொரு  ரிஸ்க்  ஃபேக்டருக்கும்  ஒரு  விலை  உண்டு 


2  சோறு  போடும்  விவசாயி  தலை  குனிந்து  வணங்க  வேண்டியது  பூமித்தாய்க்கு  மட்டும் தான்


3   20  வருச்மா  நீ  மாறவே  இல்லை  அப்படியே  இருக்கே


வாழ்றதுக்கு கத்துக்குடுத்தீங்க ,   மாறுவதற்கு  கத்துத்தர்லையே?


4 மதர்ஸ் டே . ஃபாதர்ஸ்  டே , டீச்சர்ஸ்  டே   வி  இந்தியன்  செலிபிரேட்ஸ்  எவரி டே


5  கல்வி  இல்லாதவனுக்கு  எந்த ஆளுமையும்  இருக்காது


6  கத்தி  வெச்சவங்க  எல்லாம்  மன்னன்  ஆகிட  மாட்டாங்க 

 கிரீடம்  வெச்சவங்க  எல்லாம்  ராணி  ஆகிட  மாட்டாங்க 


7 உஷா  உஷா  உஷா  நீ  ஓக்கே  சொன்னா  எடுப்பேன் விசா  விசா  விசா


8   இவ்ளோ  பெரிய  ஆளா  வளர்ந்த  பிறகு  சொந்த  ஊர்லயே  இருக்கனும்னு  அவன்  நினைக்க  மாட்டான்


மரம்  வானத்தை  நோக்கி  வளர்ந்தாலும்  அதன்  வேர்கள்  பூமிக்க்க்கீழேதானே  போகும் ?


9 நீங்களா  முன்  வந்து  கொடுப்பது  தானம், அது  வேணாம்,, அரசாங்கத்தைகொடுக்க  வைப்பதுதான்  தர்மம் 


10  மரத்தை வெட்டுனவனையே  செடியை  நட  வைக்கனும் 


11  ஒரு  கிமீ  தூரத்துக்கு  அஞ்சு  டாஸ்மாக்  வைக்க  அனுமதி  கொடுக்கும்  அரசாங்கம்,  அஞ்சு  கிமீ  தூரத்துக்கு  ஒரு  ஸ்கூல்  வைக்க  அனுமதி  தர  யோசிக்குது 


12  பணக்கார்க்குழந்தைங்க  முன்னேற  ஏகப்பட்ட  வழிகள்  இருக்கு , ஆனா  ஏழைக்குழந்தைகள்  முன்னேற  கல்வி  மட்டும்  தான்  இருக்கு 


13  கெடுக்க்றதுக்கு  100  பேர்  இருந்தா  காப்பாத்தறதுக்கு  கண்டிப்பா  ஒருத்தனாவது  இருப்பான்


14  பொய்  கோட்  சூட்  போட்டு  ஓடிக்கிட்டிருந்தா  உண்மை ஒட்டுத்துணி  கூட  இல்லாம  திண்ணைல  படுத்திருக்கும் 


15  நான்  இருக்கற  இடத்துல என்னை  நிம்மதியா  இருக்க  விடு , உன்  இடத்துக்கு  நான்  வந்துட்டா  நீ  அங்கே  இருக்க  மாட்டே 


16   இந்த  உலகத்துல  கரெக்சன்  பண்ண  முடியாதது  எது?னு  கேட்டா  அது  கரப்ஷன்  தான் 


17  எல்லாரும்  சரஸ்வதி  பூஜை  கொண்டடுனப்ப  என்  மகன்  அதே  ஸ்கூலில்  ஆயுத  பூஜை  கொண்டாடுனான்


18  எமனோடசேர்ந்து   எருமைக்கால்  சூப்  சாப்பிடற  கெட்ட  பையன்  நான் 


19  இதுதான்  உங்க  ஃபைனல்  முடிவா?


 என்  கிட்டே  ஃபர்ஸ்ட்  1  ஃபைனல் 1  கிடையாது, ஃபர்ஸ்ட் தான்  ஃபைனல் 1 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நூற்றாண்டு  விழா  அன்னைக்கு  முந்தின  நாள்  ஸ்கூல்  பூரா  பாம்  வெச்சிருக்கேன், அப்டினு  வில்லன்  நாயகனிடம்  மிரட்றான்/ நாயகன்  பேக்கு   மாதிரி  பார்த்துட்டு  இருக்காரு. அப்பவே  வில்லனை  அதே  இடத்துல  கட்டிப்போட்டு  நீ  வினை  வைத்தாய்  நீயே  அதன்  பலனை  அறூவடை  செய்னு  சொல்லி  இருக்கலாமே? தனியா  வந்த  வில்லனை  அம்போனு  அனுப்பிட்டு  வேடிக்கை பார்க்கறாரு


2   ஸ்கூல்  பில்டிங்க்  எல்லாம்  இடிஞ்சு  மாணவர்கள் , ஆசிரியர்கள்  காயம்  பட்டு  விழுந்துட்டு  இருக்காங்க ., நாயகன்  பேக்கு  மாதிரி  ஸ்போர்ட்ஸ்  கொடிக்கம்பம்  கீழே  விழாம  இருக்க  அதை  தாங்கிப்பிடிச்சுட்டு   இருக்காரு . தேசியக்கொடி  மாதிரி  காட்டி இருந்தாக்கூட  ஏத்துக்கலாம் 


3 இடிபாடுகளுக்கு  இடையே  மாட்டிக்கொண்டு  மயக்கம்  ஆகிக்கிடக்கும்  டீச்சர்  ஜனனியை  காப்பாற்றும்  நாயகன்  டக்னு  ஹாஸ்பிடலில்  அவரை  சேர்க்காம  ஜனனி ஜனனி  எந்திரி  அப்டினு  அஞ்சலி  பட  க்ளைமாக்ஸ்  ல  வர்ற  மாதிரி  கூப்டுட்டே  இருக்காரு


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் =- படத்துல்  கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம் , இதுல  எங்கே  அடல்ட்  கண்டெண்ட்?



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பொழுது  போகலைன்னா , தூக்கம்  வர்லைன்னா  பார்க்கலாம், நல்லா  தூக்கம்  வரும், ரேட்டிங் 2 / 5 



Kranti
Kranti film poster.jpg
Theatrical release poster
Directed byV. Harikrishna
Produced byB. Suresha
Shylaja Nag
StarringDarshan
Rachita Ram
Ravichandran
CinematographyA. Karunakar
Edited byPasha
Music byV. Harikrishna
Production
company
Distributed byMedia house
Release date
26 January 2023
Running time
163 minutes
CountryIndia
LanguageKannada
Box office 33 crores[1]