Showing posts with label KOVAI SARALA. Show all posts
Showing posts with label KOVAI SARALA. Show all posts

Wednesday, July 25, 2012

கலைஞர் டி.வி. யில் ஓவர் கிளாமர் ஏன்?கோவை சரளா பேட்டி

 http://www.koodal.com/cinema/gallery/events/2009/1/actor-ganeshkar-actress-aarthi-marriage-reception_7_912232123.jpg

கோவை சரளா - சந்தேகமே வேண்டாம், இவர் பொம்பளை நாகேஷ். எழுநூறு படங்களைத் தாண்டிவிட்டாலும், தனித்துவத்தை இழக்காத நகைச்சுவை ராணி. கோவைக் குசும்பும், கொஞ்சும் சிரிப்புமாக அவர் அளித்த பேட்டி இது!
சரளாகுமரி, எப்படி கோவை சரளா ஆனார்?

கோவை காந்திபுரம்தான் நான் வளர்ந்த மண். அப்பா எனக்கு நிறைய தன்னம்பிக்கைக் கதைகளைச் சொல்லி வளர்த்தார். எந்தக் காலத்திலும் தைரியத்தை மட்டும் விட்டு விடாதே என்பார். நல்ல அப்பாவும் அவர் தான்; நல்ல நண்பரும் அவர்தான். நான் இன்று பார்க்கிற ஆண்களில் என் அப்பாவைப் போல நேர்மறையான சிந்தனை உள்ள ஆட்கள் மிகவும் குறைவு. பல சோதனைகளைக் கடந்து தைரியமாக சினிமா உலகத்தில் நான் இருப்பதற்கு அப்பா கொடுத்த தைரியம்தான் காரணம்."
உங்களுக்குக் காதல் தோல்வி, போதாததற்கு தெலுங்குப் படம் தயாரித்து நிறைய நஷ்டம், அதனால் மனவருத்தத்தில் இருப்பதாகப் பேசுகிறார்களே?
அடக் கடவுளே இப்படியெல்லாமா பேசுவார்கள். பேசறவங்களுக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கான்னு தெரியலை. சரி அதை விடுங்க. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன். இனிமேல் நான் காதலிச்சு அதுல தோத்து என்னவாகப் போகுது சாமி. நடிப்பு நடிப்புன்னு ஓடிக்கிட்டே இருந்துட்டேன். திரும்பிப் பார்த்தா காலம் கடந்து போச்சு. கல்யாணம் வேண்டாம்னு பேசாம இருந்துட்டேன். அதுக்காக, காதல் தோல்வின்னு கதை கட்டறதா? நடந்து போகிற குதிரையைப் பார்த்து ஓடிக்கிட்டு இருக்கற எறும்பு சொன்னுச்சாம், குதிரைக்கு ஓடத் தெரியாது. அதான் நடந்து போகுதுன்னு. அந்தக் கதையால இருக்கு. சொந்தப் படம் தயாரிக்க என்கிட்டே பணம் ஏது? என்னை சினிமாவை விட்டே ஓரம்கட்ட நினைத்தவர்கள்தான் இப்படியெல்லாம் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டிருப்பார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்து விட்டேன். இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன்!"
கலைஞர் டி.வி. ‘பாசப் பறவைகள்நிகழ்ச்சியில் ஓவர் கிளாமர் ஏன்?

கிளாமரா... நல்லா சொன்னீங்க போங்க. மாடர்ன் டிரஸ்லேதானுங்க வர்றேன். அந்த டிரஸ் செலக்ட் பண்றது நானில்லைங்க; கலா மாஸ்டர். அவர், ‘பாசப் பறவைகள்நிகழ்ச்சிக்கு என்னை அணுகியபோது, நான் கேம்-ஷோ நடத்தினா நல்லாயிருக்காதுன்னு சொன்னேன். கலா மாஸ்டர்தான் வற்புறுத்தி நடத்த வெச்சாங்க. இப்ப நல்ல பெயர். அதனால நல்ல டிரஸ்தான் போடறேன்."
.தி.மு.. ஆட்சியில் இல்லாதபோது கட்சியில் இருந்தீர்கள். இப்போது?
நம்ப நடிப்பை எல்லோரும் ரசிக்கிறாங்க. கலைஞர்கள் பொதுவானவங்களா இருந்தா நல்லது. ஒரு சார்பா போனா இன்னொருவருக்கு வருத்தம். அதுதான் அரசியலே வேணாம்னு ஒதுங்கிட்டேன். ஏனுங்க நான் சொல்றது சரி தானுங்களே?"
ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு நீங்கதான்னு சொல்றாங்களே?
அப்படியா ரொம்ப சந்தோஷம். இதைக் கேட்கவே மனசு ரொம்பப் பூரிப்பா இருக்கு. கடவுளுக்கு நன்றி."
காஞ்சனா, ரகளைபுரம் என்று மீண்டும் பிஸியாயிட்டீங்க போல?

ஆமா. ‘காஞ்சனாபடத்துக்குப் பிறகு தெலுங்குரெபல்லே நல்ல வேடம் தந்திருக்கார் லாரன்ஸ். நான் சோர்ந்திருந்தபோது நல்லா பேசப்பட்டதுகாஞ்சனா’. அதுபோல்ரகளைபுரம்படம் பேசப்படும். "
வடிவேலு, கோவை சரளா, வி.சேகர்... கூட்டணி மீண்டும் வருமா?
வி.சேகர் நல்ல இயக்குனர். எனக்கு ஏற்ற கேரக்டர் இருந்திருந்தால் நிச்சயம் வாய்ப்பு வழங்கியிருப்பாரே. பிறகு இதென்ன அரசியல் கூட்டணியா என்ன வராம போறது. வருவோம். காத்திருங்க."
நடித்ததில் ரசித்த காமெடி?
சிநேகிதனே, ரகசிய சிநேகிதனேரசித்துச் செய்தேன். விவேக் பின்னியெடுத்துட்டார்."
திருமணம் எப்போது?
இனி அப்படி ஒரு எண்ணமில்லை. இப்படியே சினிமாவோடு வாழ்ந்து விட முடிவு செய்து விட்டேன்."
படப்பிடிப்பு இல்லாத நாட்களில்?

நிறைய எம்.ஜி.ஆர். படங்கள் பார்ப்பேன். டி.வி.யில் காமெடி பார்ப்பேன். வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை."
கே.பாக்யராஜ்?
என் திரையுலகத் திறவுகோல் அவர். ‘முந்தானை முடிச்சுபடத்தில் என்னை நடிக்க வைத்து திரையுலகோடு முடிச்சுப் போட்டார். அந்த முடிச்சு அவ்வளவு சீக்கிரத்தில் அவிழாது. என்னை எங்க பார்த்தாலும் நல்லா இருக்கிறியாம்மா! என்று சிரிப்பார். அவரைப் பார்த்ததும் கை தானா வணக்கம் சொல்லும். பழசை மறக்காத சரளா என்று என்னைப் பற்றி அருகில் இருப்பவரிடம் பெருமையாகப் பேசுவார்."
மறக்க முடியாதது?
உலகநாயகன் கமலுடன்சதிலீலாவதிபடத்தில் ஜோடியாக நடித்ததுதான். அவர் ஒரு பல்கலைக்கழகம். அவருடன் நடித்தது என் வாழ்வின் பெரிய பொக்கிஷ நிமிடங்கள். பல ஆண்டுகளுக்குப் பேசப்படும் படம் அது" - என்கிற கோவை சரளாவை, தனிமை ஒன்றும் செய்துவிடாது!

 
நன்றி - கல்கி, அமிர்தம் சூர்யா ,கதிர் பாரதி, புலவர் தருமி