
அவருக்கு சின்ன வயசுலயே சினிமால ஹீரோ ஆகனும்னு ஆசை,. ஆனா அது நிறைவேறலை. சரி தான் தான் ஹீரோ ஆக முடியல , நம்ம பையனாவது ஹீரோ ஆகட்டும்னு நினைக்கறார்
ஆனா ஹீரோ சுமார் மூஞ்சி குமாரா இருப்பதால் ஹீரோ சான்ஸ் கிடைக்கலை. எட்டாக்கனியா இருக்கு. சின்ன சின்ன துண்டு துக்கடா ரோல் தான் கிடைக்குது.
இவர் வீட்டுப்பக்கத்துலயே ஒரு ஃபிகரு இவர் மேல ஆசை வெச்சிருக்கு. ஆனா இவர் வேற ஒரு பெரிய இடத்துப்பொண்ணை லவ்வறார், பொதுவா பெரிய இடத்துப்பொண்ணுங்க எல்லாம் அவங்களை விட பெரிய இடமா பார்க்கும் , அல்லது ஒரு மொள்ளமாரியை லவ் பண்ணி ஏமாறும் , இது பெண்கள் தலையில் எழுதி வைக்கப்பட்ட தலைவிதி.
அது வேற ஒருத்தனை லவ்வுது.
ஹீரோ யாரை கல்யாணம் பண்ணினாரு? அவரோட ஹீரோ ஆசை நிறைவேறுச்சா? எனப்து திரைக்கதை
ஹீரோவா விஷ்ணு உன்னி கிருஷ்ணன். இவர் ஒரு கதாசிரியர். பிருத்விராஜ் நடிச்ச சூப்பர் ஹிட் படமான அமர் அக்பர் அந்தோணி படத்தின் கதாசிரியர்களில் ஒருவர் இந்தப்படத்துக்கும் இவர் தான் கதாசிரியர்
இவர் நம்ம ஊரு லிவிங்க்ஸ்டன் போல் காமெடி குணச்சித்திரம் எல்லாம் ட்ரை பண்ணி இருக்கார். ஆவரேஜ். ஆனா ஆடியன்ஸ் நல்லா ரசிக்கறாங்க

ஹீரோயினா சுவாசிகா ஹை க்ளாஸ் ஃபிகரா வர்றார். லோ கிளாஸ் மார்க் தான்
இன்னொரு ஹீரோயினா ஹீரோவோட பக் வீட் ஃபிகரா விஜி மோல் அமையான அழகு. குட் ஆக்டிங்
பாடல்களில் 2 பாட்டு சூப்பர் ஹிட் , அழகே செம மெலொடி, மின்னா மின்னி செம டப்பாங்குத்து
திரைக்கதைக்கு பெருசா யாரும் அலட்டிக்கலை
சுந்தர புருஷன் , நீங்களும் ஹீரோ தான் , தாவணிக்கனவுகள் , அழகர் சாமியின் குதிரை எல்லாவற்றிலிருந்தும் தலா 3 சீன்கள் எடுத்து கலவை போட்டா ரெடி
6533.jpg)
தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 காமெடி கலக்கல் என சொல்லப்பட்ட KATTAPPANAYILE RITHWIK ROSHAN (malaiyalam) @ தொடுபுழா ஆசீர்வாத் காம்ப்ளெக்ஸ் விஸ்மயா 7 30 pm ஷோ
நச் டயலாக்ஸ்
1 நீ மோசமானவன் னு உன்னை ஒதுக்கலை.எனக்கு வந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்த நினைச்சேன்.பி பிரேக்டிகல் .வேற பொண்ணு பாரு #K R R (m)
2 உங்க பையனுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுமா?
ம்
ம்ஹூம்
வாட் ? நீங்க ம் சொல்றீங்க , உங்க பையன் ம்ஹூம் சொல்றான்?
3 மாணWON =ஸார்.அடிஷனல் பேப்பர்.வேணும்
4 டேய்.மேத்ஸ் எக்சாம்ல கிட்னி யின் படம் வரைந்து பாகங்களைக்குறிச்சுட்டு இருக்கே?உனக்கு கிட்னி வேலை செய்யாதா? #KTT(M)
5 வாழ்க்கைல கிடைச்ச முதல் பாராட்டு இது.என்னைக்கும் மறக்க மாட்டேன் #KATTAPPANAILE RITHIK ROSHAN (malaiyalam)
6 டைரக்டர் பேமிலியோட இருக்கார்.இப்போ வாய்ப்புக்கேட்டா கிடைக்குமா?
யாரும் தன் குடும்பத்தோட இருக்கும்போது மறுக்கத்தோணாது.ட்ரை #KRR
7 LOVE @ FIRST NIGHT
WHAT?
8 காதலிக்காக ஒரு தாஜ்மஹால் கட்டப்போறேன்
9 என் அப்பாவுக்குப்பின் உன் அருகாமையில் தான் மகிழ்ச்சியா இருக்கேன்
அய்யய்யோ.அப்போ நான் உன் அப்பா மாதிரியா?
10 விலையைப்பத்திக்கவலைப்படாத.பிராண்டட் சர்ட் போட்டுக்கிட்டா ஒரு தன்னம்பிக்கை வரும்.அது விலை மதிப்பே இல்லாதது #KRR(M)

11 பெரிய பெரிய கனவுகளை நோக்கி பயணிப்பவர்கள் அருகாமையில் இருக்கும் சின்னச்சின்ன சந்தோஷங்களை உணர்வதில்லை.மனித இனத்தின் சாபம் இது #KRR(M)
12 ஷல் ஐ டேக் திஸ்?
சாஸ் தானே? எடுத்துக்கோ
இல்ல, இந்த சமோசா.ஹிஹி
13 நீ ஒரு மகான்
யா, ஏறக்குறைய
14 ஒரு நிமிஷத்தில் எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்கக்கூடாது. ஆறப்போட்டா நம் முடிவில் மாற்றமும் தெளிவும் இருக்கும் #KATTAPPANAYILE RITHWIK ROSHAN (malaiyalam)

சி.பி கமெண்ட் - KATTAPPANAYILE RITHWIK ROSHAN (malaiyalam) - ஹீரோ ஆக நினைக்கும் ஒரு ஜீரோ வின் காமெடி கதை. பி சி செண்ட்டர்களில் சுமாரா போகும் , ரேட்டிங் = 2.5 / 5