படவெட்டு , காப்பா போன்ற அதிரடிப்படங்களை எடுத்த தயாரிப்பாளரின் மூன்றாவது படம் இது . இயக்குநர் மிருதுள் நாயர் + அசீஃப் அலி காம்போவில் பி டெக் (2018) படத்துக்குப்பின் வரும் இரண்டாம் படம் இது . தள்ளுமாலா படத்தின் பாதிப்பில் படம் முழுக்க சேசிங் ஆக்சன் சீக்வன்ஸ் நிரம்பிய இப்படம் 2023 செப்டம்பர் 15ல் தியேட்டர்க்ளில் ரிலீஸ் ஆகி இப்போது அக்டோபர் 13 முதல் ஓ டி டி நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் ஆகி உள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பா ஃபாரீனில் இருந்து இந்தியா வரும்போது ஒரு கடத்தல் கும்பல் அவரிடம் ஒரு பேக்கைக்கொடுத்து இந்தியாவில் குறிப்பிட்ட ஆளிடம் இதை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவர் இந்தியா வந்ததும் அந்த கும்பலில் ஒரு ஆள் டபுள் கிராஸ் பண்ணி பேக்கை அபேஸ் பண்ண இப்போது நாயகனின் அப்பா அந்த 80 லட்ச ரூபாய்க்கு பதில் சொல்ல வேண்டியவர் ஆகிறார். இதனால் மனம் வெறூத்த அவர் தற்கொலை செய்து கொள்கிறார்
அந்த கடத்தல் கும்பலில் இருக்கும் ஒரு ஆள் நாயகன் மீது பரிதாபபட்டு அவனை நண்பன் ஆக்கிக்கொண்டு தன் திட்டத்தைக்கூறுகின்றான், அதன்படி அதே கும்பல் கடத்தும் இன்னொரு சரக்கை நாடகம் போட்டு நாம் அபேஸ் செய்து விடலாம் என்கிறான். அதன்படி விமான நிலையத்தில் இருந்து கடத்திய சரக்கை நாயகனின் நண்பன் தன் காதலியுடன் காரில் வர அப்போது நாயகன் அந்த கார் மீது மோதி இருவருக்கும் ஃபைட் நடப்பது போல் செட்ட்ப டிராமா போட்டு சரக்கைக் கைமாற்றி எஸ் ஆகின்றனர்
சரக்கைப்பறி கொடுத்த அரசியல்வாதி வில்லனான போலீஸ் ஆஃபீசர் உதவியுடன் அந்த சரக்கைக்கைப்பற்ற முயற்சிக்கின்றனர் .இதற்குப்பின் நடக்கும் அதிரடி ஆக்சன்கள் தான் மீதிக்கதை
நாயகன் ஆக சன்னி வெய்ன் சிறந்த குணச்சித்திர நடிப்பை வ்ழங்கி உள்ளார் . எங்கே எப்போது ஒரு சின்னக்குழந்தையைக்கண்டாலும் உடனே தன் குழந்தை நினைவு வ்ந்து ஃபோன் போட்டுப்பேசுவது உருக்கம், அப்பாவின் அநியாய மரணத்துக்குக்கலங்குவது , நண்பனுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்வ்து என கச்சிதமாக நடித்துள்ளார்
இன்னொரு நாயகன் ஆக ஆசிஃப் அலி ஸ்டைலிஷான நடிப்பை வழங்கி உள்ளார் . அதிரடி ஆக்சன் காட்சிகளில் துடிப்பான நடிப்பை கொடுத்துள்ளார்
வில்லன் ஆக வினாயக் கொடூரமான நடிப்பை வழங்கி உள்ளார், அவர்து தெனாவெட்டான உடல்மொழி அருமை
அரசியல்வாதியாக சித்திக் அலட்டல் இல்லாத நடிப்பு
இரு நாயகர்களுக்கும் ஜோடியாக ஸ்ரீரஞ்சனி நாயர் , மாளவிகா ஸ்ரீநாத் இருவரும் நடித்துள்ளனர் , ரேஸ் குதிரை மாதிரி இருவருமே அசாத்தியமான உயரம்
137 நிமிடங்கள் படம் ஓடும்படி ட்ரிம் செய்திருக்கிறார் எடிட்டர் மனோஜ் கன்னோத் . விஷ்ணு விஜய்நிரஞ்ச் சுரேஷ் இருவரும் இசை . பாடல் ஓக்கே , பிஜிஎம் ப்ரபரப்பான காட்சிகளில் இன்னும் வேகம் தேவை
ஜெபின் ஜேக்கப் ஒளிப்பதிவில் லாங்க் ஷாட் , ஏரியல் ஷாட் , ஆக்சன் சீக்வன்ஸ் அனைத்தையும் திறம்பட படம் படித்திருக்கிறார்.
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் மிருதுள் நாயர் . விறுவிறுப்பான கதையை பர் பரப்பான திரைக்கதையால் காட்சிகளை வெகு வேகமாக நகர்த்திச்செல்கிறார்
சபாஷ் டைரக்டர் (மிருதுள் நாயர் )
1 ஓப்பனிங் ஷாட்டில் வரும் கார் ஆக்சிடெண்ட் சீன் டிராமா தான் செட்டப் தான் என்பதை ஓப்பன் செய்யும் விதம் செம ட்விஸ்ட்
2 நாயகர்கள் இருவருக்குமான நட்பு , அந்த பாண்டிங் உருவான விதம் குறித்த ஃபிளாஸ்பேக் காட்சி
3 நாயகர்கள் இருவருக்குமான ஃபேமிலி செண்ட்டிமெண்ட் காட்சிகள்
ரசித்த வசனங்கள்
1 நம்ம தொகுதிக்கு ஒரு பெண் எம் எல் ஏ வந்தா அது நமக்குப்பெருமை தானே?
அப்போ ஆம்பளை வந்தா பெருமைஇல்லையா?
2 மாணவர்கள் நல்ல பிள்ளைகளா இருந்தா பெற்றோர் சாகும் வரை ச்ந்தோஷமா இருப்பாங்க
3 என் பேரைக்கேட்டா ஒரு நாய் கூட குலைக்காது
இங்கே நரி தான் பிரச்சனை
புலி கூட ஒண்ணும் புடுங்க முடியாது
4 ரெண்டரைக்கோடி தங்கம் போனதைப்பற்றிக்கவலை இல்லை , அது ஒரு பெரிய மேட்டரும் இல்லை , ஆனா கூட இருக்கும் அடியாளுங்க எல்லாருக்கும் இதே ஐடியா தோணுச்சுன்னா நாம தொழில் பண்ண முடியாது
5 எந்த செட் ஃபிரண்ட்ஸ் கேங்கை எடுத்தாலும் ரெண்டு பக்கமும் கிண்டல் பண்ற ஒருத்தன் நிச்சயமா இருப்பான்
6 தங்கத்தோட ஒளி இருக்கே? அந்தக்கலர்ல தான் பொண்ணுங்க விழுந்துடறாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவாக கிரிமினல்கள் யூஸ்டு சிம் கார்டை டிஸ்போஸ் செய்யும்போது எரேஸ் பண்ணி அதாவது நசுக்கி , அழித்து பின் தான் தூக்கி எறிவார்கள்
2 தங்கக்கட்த்தல்காரர்களை தேடும் போலீஸ் சாலையில் போலிஸ் யூனிஃபார்மில் பைக்கில் வரும் இருவரிடம் ஐ டி கார்டு கேட்கவே இல்லையே? யூனிஃபார்மை பார்த்தா நம்பிடறதா?
3 ஆக்சன் மசாலா படங்களில் கேர்க்டர்கள் தம் அடிப்பது , தண்ணி அடிப்பது , மிக்சிங் பண்ணுவது இதை எல்லாம் கட் பண்ணாலே அரை மணி நேரம் டைம் மிச்சம் ஆகும் போல .
4 தங்க கடத்தல் காரனின் ஃபோட்டோ கிடைத்ததும் போலீஸ் ஆஃபீசர் வினாயக் அந்த ஃபோட்டோவை வாட்சப் மூலம் செக் போஸ்ட் ஆஃபீசர்சுக்கு அனுப்பி இருக்கலாமே? எதுக்கு லூஸ் மாதிரி காரில் செக் போஸ்ட் டைரக்டா போய் இவன் தான் அந்த கடத்தல்காரன், கிடைச்சானா?னு கேட்டுட்டு இருக்கார் ?
5 கடத்தல் காரனை ஃபாலோ பண்ணி வந்த ஆட்கள் லாட்ஜூக்குள் போவதற்கு முன் அந்த பைக்கை பஞ்சர் பண்ணி விட்டுப்போய் இருந்தால் தப்பிச்சிருக்க மாட்டானே? அந்த ஐடியா கூடவா தெரியாது ?
6 கடத்தல் காரன் ஒரு பிஸ்கெட்டை மட்டும் விற்று விட்டு தன் இருப்பிடம் திரும்பும்போது யாராவது ஃபாலோ பண்றாங்களா?னு செக் பண்ண மாட்டானா? டைரக்டா லாட்ஜூக்கு யாராவது வருவாங்களா?
7 கடத்தல் காரனின் காதலி வீட்டுக்கு வரும் அடியாட்கள் அவளை மிரட்டுகிறார்கள் . அவள் அவங்க வீட்டு நாயை அவிழ்த்து விடுகிறாள் , அந்த நாயைக்கண்டதும் இந்த நாய்கள் எல்லாம் தெறிச்சு ஓடறானுங்க . இதுக்கெல்லாம் பிரிப்பேராக வர மாட்டானுங்களா?
8 க்ளைமாக்ஸ் ஃபைட்டில் நாயகன் ரெண்டு பேரை கோடாலியால் வெட்டிக்கொன்ற பின் ஒரு புது ஆள் டேய் வாடா என ஆக்ரோஷமாக அழைக்கிறான். நாயகன் அதே கோடாலியால் அவனைப்போட்டுத்தள்ளாம அந்தக்கோடாலியை தூக்கி வீசிட்டு அவன் கூட ஃபைட் பண்ணிட்டு இருக்காப்டி.
9 க்ளைமாக்சில் நாயகர்கள் இருவரும் அஞ்சு பேர் கூட அதகள ஃபைட் எல்லாம் போட்டு அஞ்சு கொலை செஞ்சு ஆறடி ஆழ குழி தோண்டி அந்த டெட் பாடிகளைப்புதைக்கும் வரை அக்கம், பக்கம் இருப்பவர்கள் யாரும் கண்டுக்கவே இல்லை
10 வில்லன் ஆன வினாயக் நாயகர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி விட்டுநான் நினைச்சா உங்களைப்போட்டுத்தள்ளலாம், ஆனா சின்னப்பசங்களா இருக்கீங்க , பொழைச்சுப்போங்க என உயிர்ப்பிச்சை கொடுப்பது எதற்கு? க்ளைமாக்ஸ்ல இன்னொரு ஃபைட் சீக்வன்ஸ் வைக்கவா?
11 க்ளைமாக்ஸில் நாயகர்கள் இருவரும் நிராயுதபாணிகளாக நிற்க எதிரே வில்லன் வினாயக் கையில் துப்பாக்கி. அவர் ஒரு நாயகனை மூன்று தடவை சுட்டு விட்டு அடுத்த நாயகனுக்குக்குறிபார்க்கும்போது அவன் வில்லன் மேல் பாய்கிறான்/ இருவருக்கும் தலா ஒரு குண்டு என மாறி மாறி சுட்டிருந்தால் எளிதில் வீழ்த்தி இருக்கலாமே?
12 சஸ்பென்சனில் இருக்கும் போலீஸ் ஆஃபீசர் வினாயக்கின் ஆர்டர்களை அஃபிஷியலாக மற்ற போலீஸ்காரர்கள் ஃபாலோ செய்வது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ/ஏ . காட்சிகளில் 18+ இல்லை , வன்முறை , வெட்டு , குத்து உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆக்சன் , சேசிங் பிரியர்கள் தாராளமாகப்பார்க்கலாம். விறுவிறுப்பான த்ரில்லர் படம் , ரேட்டிங் 3 . 5
Kasargold | |
---|---|
Directed by | Mridul Nair |
Written by |
|
Produced by |
|
Starring | |
Cinematography | Jebin Jacob |
Edited by | Manoj Kannoth |
Music by | Score: Vishnu Vijay |
Production companies |
|
Release date |
|
Running time | 137 minutes[2] |
Country | India |
Language | Malayalam |
Box office | est. ₹2.10 crore[3] |