Showing posts with label KAMAL. Show all posts
Showing posts with label KAMAL. Show all posts

Saturday, August 11, 2018

விஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்

Image result for vishwaroopam 2 posterவில்லன்கள் ஹீரோ கிட்டெ இருந்து தப்பிப்போனாங்க இல்லையா? முதல் பாகத்துல ? அவங்களை ஹீரோ எப்டி துரத்திப்பிடிக்கறார் என்பதுதான் இரண்டாம் பாகக்கதை. இதுக்காகவா சேர் , டேபிளெல்லாம் உடைச்சிங்க என்று யாரும் கேள்வி கேட்டுடக்கூடாதுன்னு ஒரு கிளைக்கதை கடலுக்கடில  செயற்கையா சுனாமி ஏற்படுத்த வில்லன்கள் போடும் திட்டத்தை ஹீரோ & கோ எப்படி முறியடிக்கறாங்க? இதுதான் திரைக்கதை


ஹீரோவா கமல் , சும்மா சொல்லக்கூடாது 60+ வயசுலயும் ஆள் 35 + போலவே யங்கா இருக்காரு, எனக்குத்தெரிஞ்சு தமிழ் சினிமால வயசானாலும் யங்கா தெரியற 3 பேர் 1 கமல் 2 விஜய் 3 த்ரிஷா 


ஆக்சன் காட்சிகளில் கமல் அதகளம் பண்றார், இந்தப்படத்தில் இது வரை காட்டாத சில நுட்பங்களை ஃபைட் சீன்களில் காட்றார் ,  குறிப்பா எம் ஜி ஆர் பாடி லேங்க்வேஜ் , விஜயகாந்த் லெக் ஃபைட் பாணி களை தன் பாணியில் ட்ரை பண்ணி இருக்கார் , சபாஷ்

லிப் கிஸ் சீனும் உண்டு.ஆனால் காதல் காட்சிகள்,  டூயட் காட்சிகள் அதிகம் இல்லாதது பெரும் குறையே, கமல் ஸ்பெஷல் ஆச்சே? 


ஹீரோயின்கள் 2 பேர், அதுல முதலில் மனம் கவர்வது ஆண்ட்ரியா தான் , கமல் மனைவியை கடுப்பேற்ற அவர் பேசும் வசனங்கள்  கல கல. பிரமாதமான் ஃபைட் காட்சியும் 1 இவருக்கு உண்டு. கலக்கல்.



இன்னொருவர் பூஜா குமார். இவர் போட்டிருக்கற மாடர்ன் டிரஸ்க்கும் , பேசும் பாஷைக்கும் சம்பந்தமே இல்லை.( கமலின் வருங்கால புது காஸ்ட்யூம் டிசைனர் இவர் தான் என நம்பத்தகாத வட்டத்தில் இருந்து நம்பத்தக்க புரளி 1  உலா வருது)

சேகர் கபூர் வழக்கம் போல் வந்த பணியை செவ்வனே நிறைவேற்றுகிறார், வில்லனுக்கு முதல் பாகம் அளவு வாய்ப்பு இல்லை.

வசனகர்த்தாவாக கமல் பின் தங்கி இருக்கார், போன முதல் பாகத்தில் நச் வசனங்கள் 23 இருந்தது , இந்த 2 ம் பாகத்தில் பாதி கூட தேறலை

திரைக்கதை , இயக்கத்தில் கமல் அசால்ட்டாக கையாள்கிற லாவகம் பெற்று விட்டார்

ஆன் லைன் விமர்சகர்கள் சொல்வது போல் படம் ரொம்ப மொக்கையும் இல்லை, பிரமாதமாகவும் இல்லை, ஓக்கே ரகம் என்ற அளவில் இருக்கு. டைம் பாஸ் படம், ஒன் டைம் வாட்சபிள் தான்


Image result for vishwaroopam 2 heroine

நச் டயலாக்ஸ்


எம்ஜியாரின் மார்க்கெட்டிங்க் டெக்னிக்கை கமலும் பின்பற்றுகிறார்.மக்கள் நீதி மய்யம் ப்ரமோ


2 எதிரியை நேருக்கு நேர் பார்க்கனும் ,சாகும்போது கூட எதிரியைப்பாத்துட்டே தான் சாகனும்


3 நான் பேச முடியாததை நீங்க பேசறீங்க,அசரீரி மாதிரி


4 என்னை ஆர்மி ல தேர்ந்தெடுத்ததுக்கு எங்க அப்பாவோட பூர்விகம் தான் காரணம்


5 யார் Lead பண்ணா என்ன?நமக்கு சாதகமா எல்லாம் நடந்தா சரி


6 இது எனக்கு நீ விரித்த வலை அல்ல,உனக்கு நான் விரித்த வலை


7 சண்டைன்னா சாவு வரத்தான் செய்யும்",ரத்தக்காயம் படத்தான் செய்யும்


8 அரசியல்வாதிங்க நேர்மையா சமரசம் பேசுனாலே தீவிரவாதம் ஒழிஞ்சிடும்


9 ரா ஏஜெண்ட்ஸ்ங்க,ஜேம்ஸ்பாண்டுங்க இவங்களுக்கு மனைவி இருக்கக்கூடாது னு சட்டமா என்ன?

10 ஆர்டர் பண்ணா கேட்டுக்குவார்,புத்தி சொன்னா கேட்க மாட்டார்


11 உன் அளவு இல்லைன்னாலும் நானும் 4 எழுத்து படிச்சிருக்கேன்

phd 3 எழுத்து தானே ? (கிரேசி மோகன் ,Sv சேகர் டைப் வசனங்கள்)


12 எதிரியை எப்பவும் முட்டாளா நான் நினைக்கறதில்ல

13 கவலைப்படாத,எனக்கு தரப்பட்ட வேலையை முடிக்காம சாக மாட்டேன் (வில்லன் பஞ்ச்)

14 ஆம்பளைங்களை விட பொண்ணுங்களுக்கு அன்பு ஜாஸ்தி

15 சாக பயப்படறவன் எந்தப்பொய்யும் சொல்வான்


Image result for vishwaroopam 2 heroine


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

கேரளா திருவல்லா" சிலங்கா தியேட்டர் ,வாட்ச்மேன் வந்துட்டாரு,இனிமேதான்"டிக்கெட்"தர்றவர்,ஆபரேட்டர் ,மேனேஜர் வருவாங்களாம்,ஆடியன்ஸ் அதுக்கப்புறாம...ரொம்ப அவசரப்பட்டு வந்துட்டமோ? fdfs 10.30 am




2  கடும் மழையின் காரணமா கூட்டம் வர்ல போல,வந்த 12 பேர்ல 7 பேரு"தமிழர்கள் ,கேரளா ,திருவல்லா ,சிலங்கா தியேட்டர் பால்கனி டிக்கெட் 110 ருபா,
முதல் வகுப்பு 80 ரூபா ;பிரமாதமான் சீட் வசதி,குறிப்பா கேண்ட்டின் கொள்ளை இல்லை,பைக் ,கார் பார்க்கிங்க் இலவசம்







ஹீரோ ஓப்பனிங்க் சீன் ரொம்ப சாதா ,கமலின் பிரமாதமான ஓப்பனிங்க் சீன் வெற்றிவிழா ,பேசும் படம் ,சத்யா,சாணக்யன் ,அபூர்வ சகோதரர்கள் ,விக்ரம் ,காக்கிசட்டை


தன்னை தானே பெருமையா பேசிக்கறதை,நாயகி தன்னை பிரமிப்பா பார்க்கற சீன் வைப்பதை கமல் 30 வருசமா பண்ணிண்டுதான் இருக்கார்,இதிலும்

சமீபத்தில் ரிலீஸ் ஆன மோகன்லாலின் நீராளி பட கார் விபத்து காட்சி மாதிரியே ஒரு கார் விபத்து காட்சி


6  முதல் பாகத்தின் முதல் பாதியை முந்தவும் இல்லை,பிந்தவும் இல்லை ,இடைவேளை

ஊழல் நடக்காத கழகமும் இல்லை ,நாயகனுக்குப்பின் லிப்கிஸ் இல்லாத கமல் படமும் இல்லை


8  அடிபட்ட உதட்டருகே முத்தம் இடும் வேளையில் கமல் பஞ்ச் "no pain no gain "


9  அம்மா செண்ட்டிமெண்ட் சீன்கள் மறக்கமுடியாதது ரஜினிக்கு தளபதி,மன்னன்,கமலுக்கு பேர் சொல்லும் பிள்ளை ,குணா (நீண்ட இடைவெளிக்குப்பின் கமல் படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் சீன்)


10 ஒரு சண்டைக்காட்சியில் கமல் பாடிலேங்க்வேஜ் பாக்தாத் திருடன் நாயகன் போல்


11 விஸ்வரூபம் முதல் பாகம் பார்க்காதவங்களுக்கு இரண்டாம் பாகம் புரியாது( முதல் பாகம் பார்த்தவங்களுக்கு மட்டும் புரிஞ்சிடுமா?னு கேடக்க்கூடாது)


12 நல்ல வேள,கோலமாவு கோகிலா அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுது.


13  விஸ்வரூபம் 2 ல மய்யம் கட்சி விளம்பரம் 5 நிமிடங்கள் ஓடுது. இது படத்தைப் பார்க்க வந்தவர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இது சரியா?தவறா?

சரிதான்.எம்ஜிஆர் ,கலைஞர் ,விகாந்த் ஏற்கனவே பல படங்களில் நேரிடையாக ,மறைமுகமாக இப்டி மார்க்கெட்டிங் பண்ணி இருக்காங்க
expect the unexpected

14 ரைசா பிக்பாஸ்ல கமல் கிட்ட குட்டு வாங்குனார்.விஸ்வரூபம் 2 ரைசாவின் ப்யார்பிரேமா ்காதல் படம் முந்திடுச்சாம்,கமலுக்கு வந்த சோதனை,அடப்பாவமே"



Image result for pooja kumar hot
சபாஷ் டைரக்டர்


1  மக்கள் நீதி மய்யம் கட்சி விளம்பரத்தை முதல் ரீலில் சேர்த்தது , இது தவறுனு சில ரஜினி ரசிகர்கள் சொல்றாங்க, ஆல்ரெடி எம்ஜி ஆர் , கலைஞர் , டி ஆர் , கே பக்யராஜ் கள் செஞ்சது தான் , இது ஒரு மார்க்கெட்டிங்க் டெக்னிக், நாளை ரஜினி கட்சி ஆரம்பிச்சாலோ , அதிமுக தலைமைப்பொறுப்பு ( ஒருவேளை) ஏற்றாலோ அதற்குப்பின் வரும் படத்தில் இதே மார்க்கெட்டிங் வேலையை செய்யத்தான் போகிறார், அப்போ ரஜினி ரசிகர்கள் அதுக்கு என்ன சால்ஜாப் சொல்லப்போறாங்க?


2 வசனகர்த்தாவாக கமல் கச்சிதமா பணி ஆற்றி இருக்கிறார்.முதல் பாக அளவு இல்லைன்னாலும்...



3 கார் விபத்துக்காட்சியில் ஸ்டண்ட் டைரக்டரின் பங்கு இயக்குநரின் பங்கு அருமை ( நீராளி யின்  சாயல் இருந்தாலும்)


4  கன்னத்தில் ஏற்பட்ட காயத்துக்கு போடப்பட்ட பேண்டேஜ் கண்ட்டினியூட்டி பக்கா 


5 தனது ஹையர் ஆஃபீசரை நக்கல் அடிக்கும் காட்சி அருமை. வசனமும் கனகச்சிதம், ( ஆனா கொஞ்சம் செயற்கை, நிஜ வாழ்வில் ஹையர் ஆஃபீசரை முகத்துக்கு நேரா இப்டி கவுண்ட்டர் கொடுக்க முடியாது)


6 ஜிப்ரானின் பிஜிஎம் சிறப்பு, ஆனால் முதல் பாகத்தில் 2 சூப்பர் ஹிட் பாடல்கள் இருந்தது படத்துக்கு பெரிய பிளஸ்


7 ஆண்ட்ரியாவின்  நடிப்பு, குறும்,பு , துள்ளல் ( ஒரு ஸ்கிப்பிங் /ஜாகிங் சீனும் வெச்சிருக்கலாம்)



Image result for andriya hot in aranmanai

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன தம்பதி ஹோட்டல் ரூமில் தங்கும்போது மனைவி குளிக்கற சீனில் கணவர் ஆர்வமா எட்டிப்பார்ப்பாரா? பல டைம் பார்த்த படம் தானே?என்னமோ FDFS பார்க்கற மாதிரி பார்க்கறாரு?


2 எந்த மடையனாவது மனைவியை பக்கத்தில் வெச்சுக்கிட்டே இன்னொரு லேடியை அந்த அளவு நெருக்கமா இருக்க அனுமதிப்பானா?பொதுவா ஆம்பளைங்க பாடி லேங்குவேஜ் தனியா இருக்கும்போது ஒரு மாதிரி, தாலி கட்டின சொந்த சம்சாரம் அருகே இருக்கும்போது  இன்னொரு மாதிரி 


3 ஹீரோ ஆண்ட்ரியா கூட ஒரே ரூமில் உள்ளே போவதை பலரும் பார்க்கும்படி டிராமா போட்டு அட்டெம்ப்ட் ரேப் பண்ணதா புரளி கிளப்பிவிடற சீன். இதுல லாஜிக் பயங்கரமா இடிக்குதே? ஒரு ஆணுடன் கட்டி அணைத்த வாக்கில் ரூமுக்குள் செல்லும் ஒரு பெண் ரூம் உள்ளே வந்து ஆண் அவளுக்கு கீதோபதேச கலாட்சேபம் நடத்துவார் என்றா எதிர்பார்ப்பார்?


4  மனைவி கண் எதிரே கமல் ஆண்ட்ரியாவுடன் ஒரே பெட்டில் அசதியில் படுத்து தூங்கும் காட்சியும் செயற்கை


5 அந்த சீனில் கமல் கோட் சூட் போட்டு இண்ட்டர்வ்யூக்குப்போற மாதிரி ஜம்முனு இருக்கார். பொதுவா ஆண் என்ன டயர்டா இர்நுதாலும் லுங்கி / கைலி/ பர்முடா என ஏதாவது உடை மாற்றிட்டுதான் உறங்கச்செல்வாங்க ?


6  படத்துக்கு ப்ரமோசன் பத்தலை, பலருக்கு படம் ரிலீஸ் ஆனதெ தெரில . கலைஞர் மரணத்தால் படத்தை அளவுக்கு மீறி ப்ரமோ பண்ணவும் முடியாத சூழல், ஆல்ரெடி பட ரிலீஸ் தேதியை முன் குட்டியே அறிவித்ததால் அதை மாற்ற முடியாத இக்கட்டான சூழல் இவையும், ஒரு நெகடிவ் தான்

7 பாண்டெஜ் போட்டபடி படம் முழுதும் வரும் ஹீரோ க்ளீன் சேவில் வருவது எப்படி? பொதுவா இந்த மாதிரி சூழலில் தாடியோட தான் காயம் சரியாகும் வரை இருப்பாங்க 


Image result for andriya hot in aranmanai


சி.பி கமெண்ட்   விஸ்வரூபம் 2− ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான ஆக்சன் மசாலா.முதல் பாகம் அளவு வர்லைன்னாலும் ஓகே ரகம்.பாடல்கள் இல்லாதது ஒரு வகையில்"+ ,ஒரு வகையில் −. தப்பிச்சிடும் ,விகடன் 42 ,ரேட்டிங்க் 3 / 5


Thursday, January 31, 2013

தன்னிகரற்ற தானைத்தலைவியின் தன்னிலை விளக்கம்

வன்முறை வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை: ஜெயலலிதா 
 
 
 
Posted Date : 12:32 (31/01/2013)Last updated : 13:47 (31/01/2013)
சென்னை: வன்முறை 
வெடிக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையால்தான் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.



 விஸ்வரூபம் பிரச்னை தொடர்பாக  செய்தியாளர்கள் கூட்டத்தில் தற்போது விளக்கம் அளித்து பேசிய  ஜெயலலிதா, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பல்வேறு விஸ்வரூபம் தொட்பாக பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுக்கள், பல்வேறு விவாதங்கள், நடந்துகொண்டே இருக்கிறது. முறையாக புரிந்துகொள்ளாமல், நிலைமையை புரிந்துகொள்ளாமல். அதனால் இதுபற்றி விளக்க வேண்டி விரும்புகிறேன்

படம் தடை செய்யப்படக்கூடாது, திரையரங்குக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். உண்மையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது பற்றி புரிந்துகொள்வதில்லை. முதல் கடமை முதலமைச்சராக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி மக்கள் மத்தியில் அமைதி நிலைநாட்டுவது, தினசரி வாழ்க்கையை கடைபிடிக்க நடவடிக்கை எடுப்பது முக்கிய கடமை.

எப்படி சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுகிறது. காவல் துறையைக் கொண்டு இதை செய்கிறோம். போராட்டத்தை பொருட்படுத்தாமல், ஒருவேளை இந்த படத்தை நாங்கள் அனுமதித்தோம் என்றால், இந்த படம் 524 திரையரங்களில் வெளியிடுவதாக இருந்தது. ஏரளாமான முஸ்லிம் அமைப்புகள் 24 அமைப்புகள் மற்றும் இதுதவிர சில அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். மாநில உள்துறை அமைச்சரை சந்தித்து படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். இவர்கள் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு, பல்வேறு பேராட்டங்களை அறிவித்துள்ளன இந்த அமைப்புகள்.

இத்தனை திரையரங்குக்கு பாதுகாப்பு அளிப்பது சாத்தியமா? 1 லட்சத்து 30 ஆயிரம் 780 போலீசார் உள்ளனர். 21 ஆயிரம் காலியிடம் உள்ளது. 91,807 போலீசார்தான் உள்ளனர். இதுதவிர பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இந்த சிறப்பு பிரிவுகளைக் கழித்தால் 87, 226 போலீசார்தான் உள்ளனர். 7 கோடி 8 லட்சம் பேருக்கு இவ்வளவு போலீசார் உள்ளனர்- சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும்.  திரையரங்க பாதுகாப்புக்கு 31440 பேர் பாதுகாப்புக்கு தேவை

படம் வெளியானமல் பாதுகாப்புக்கு மட்டும் 50, 440 போலீசார் தேவைப்படுவார்கள். ஆனால் வெறும் 9 ஆயிரம் பேர்தான் உள்ளனர். எப்படி ஒரு மாநில அரசால் இப்படி பாதுகாப்பு அளிக்க முடியும். எங்களிடம் போதுமான காவல்துறை இல்லாதநிலையில் எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும்? சட்டம் ஒழுங்கை காப்பது என்றால் என்ன?

உளவுத் துறை பல இடங்களில் வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது? அரசு என்ன செய்யும்? அந்த வன்முறை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.


விஸ்வரூபம் படம் தமிழகத்தில் 524 திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. இப்படத்திற்கு 24 இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படம் வெளியிடப்பட்டால், வன்முறை வெடிக்கலாம் என்றும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என உளவுத் துறை தகவல் அனுப்பி இருந்தது.

இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் படத்தை திரையிட அனுமதித்தால் அப்படம் திரையிடப்படும் 524 திரையரங்குகளிலும் 56,446 காவலர்கள் தேவை.அந்த அளவுக்கு போதுமான காவலர்கள் படை இல்லை.



கமல்ஹாசன் மீது  தனிப்பட்ட விரோதம் இல்லை.


சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அரசுக்கு உண்டு. இதில் அரசியல் பழிவாங்கும் எண்ணம் எதுவும் இல்லை. கமல்ஹாசன் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை.


இப்படம வெளியாகமல் போனால் தனது வீடு, சொத்தை இழக்க வேண்டியது வரும் என்று கமலஹாசன் கூறியுள்ளார்.கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகு என்னைப் பார்க்க கமல் நேரம் கேட்டிருந்தார். வழக்கு தொடர்ந்தபிறகு பார்ப்பதில் என்ன இருக்கிறது...



கமலஹாசனுக்கு 58 வயதாகிறது..அவர் சில கணக்குகளை போட்டு,  100 கோடி ரூபாய் செலவில் தனது ரிஸ்க்கில் படம் எடுத்து, இழப்பை சந்தித்தால் அதற்கு அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும்?


மேலும் விஸ்வரூபம் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா தொலைக்காட்சிக்கு விற்காததாலும்,.ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு வேட்டி கட்டிய தமிழன் பிரதமர் ஆக வேண்டும் என்றும் கமலஹான கூறியதாலும்தான் அப்படத்திற்கு நான் தடை விதித்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களிலும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.



ஜெயா தொலைக்காட்சிக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும், இல்லை. அது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு ஆதரவாக செயலபடுகிறது அவ்வளவுதான்.அதேப்போன்று அரசியலில் நான் பல ஆண்டு காலம் உள்ளேன். அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்களே தவிர, கமலஹாசன் சொல்லி அல்ல என்பது எனக்கு தெரியும். என்று அவர் மேலும் கூறினார்.


திமுக தலைவர் கருணாநிதி என்ன பிரச்னை எழுந்தாலும் அதில் அரசியல் செய்யத்தான் பார்ப்பார்.


சுமூக தீர்வு:


சில பகுதிகளை அகற்றுவதாக கமல் உறுதி அளித்துள்ளதாக கூறிய்ளள்ளார் அதை முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கௌர்வதாக தெரிவித்துள்ளர். சுமூக தீர்வு ஏற்பட முஸ்லிம் தலைவர்கள், கமல் அமர்ந்து முடிவெத்தால் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காவல்துறை டிஜிபி ராமானுஜம்,அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

 விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான்: சோ 

சென்னை: விஸ்வரூபம் படத்தை தமிழக அரசு தடை செய்தது சரிதான் என்று அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு சோ அளித்த பேட்டியில்," தமிழக அரசு ‘விஸ்வரூபம்’ படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒருதிரைப்படத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

பொதுமக்கள் நலன் உள்ள திசையிலேயே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு படம் சிலரது நம்பிக்கைகளை தகர்க்கும் என்றால், அந்தப் படம் தடை செய்யப்படத்தான் வேண்டும்" என்று கூறியுள்ளார்.



'விஸ்வரூபம்' தடைக்கு அரசியல் காரணமில்லை: சந்திரஹாசன்  

'விஸ்வரூபம்' தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை என்று நடிகர்  கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரஹாசன் இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஸ்வரூபம்' படம் வெளியான எல்லா இடங்களிலும்  நன்றாக ஓடுகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றார்


விஸ்வரூபம்' தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணமில்லை என்று நடிகர்  கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் கூறியுள்ளார்.

ராஜ்கமல் நிறுவனத்தின் பங்குதாரரான சந்திரஹாசன் இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களிடம் பேசுகையில், 'விஸ்வரூபம்' படம் வெளியான எல்லா இடங்களிலும்  நன்றாக ஓடுகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றார்.



தமிழ்நாட்டில் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் இருப்பதாக  கூறுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “விஸ்வரூபம் படம் தடை  செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் அல்ல. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே தமிழக  அரசு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக கூறுகிறார்கள்” என்று பதிலளித்தார் அவர்.



நன்றி - விகடன்

கமல் அரசியலுக்கு வந்தா நீங்க தாங்க மாட்டீங்க - பாரதிராஜா சவால் பேட்டி @ விகடன்

கடந்த வாரம்தான் மதுரையில் வைத்து அவருக்குப் பாராட்டு விழா நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தப் பூரிப்பின் சுவடுகளே இல்லாமல் படீரென வெடிக்கத் துடிக்கும் கொதிகலன்போலக் காத்திருந்தார் பாரதிராஜா. கேள்விகளுக்குச் சுடுசுடு... கடுகடுவென அவர் கூறிய நேரடி பதில்கள் தணிக்கைக்குப் பிறகு இங்கே...


 '' 'விஸ்வரூபம்’ பட வெளியீடு தொடர்பாக கமலுக்கு...''


''வேண்டாம்யா... வேண்டாம்! ஆத்தாத்துப் போயிருக்கேன். நெஞ்சு கொதிக்குது. கமல் ஒரு மகா கலைஞன்யா. எங்கே அவனுக்காகக் குரல் கொடுத்தா, நம்மளுக்கு எதுவும் சிக்கல் வந்துருமோனு பயந்து நடுங்கி ஒதுங்கிக் கிடக்குது சினிமா உலகம். எங்கேயோ வடக்குல இருக்குற அமீர் கான் குரல் கொடுக்குறான்.


 ஏன்... அந்த உணர்வு இங்கே இருக்குற 'படைப்பாளி’களுக்கு வரலை? ஏன்யா... உங்க அத்தனை பேரோட உரிமைக்கும் சேர்த்துத்தானே ஒத்தை மனுஷனா கமல் கெடந்து போராடிக்கிட்டு இருக்கான். அறுபது வருஷத்துக்கு முன்னாடியே கடவுள் சிலையைப் பார்த்து 'இது கல்... பேசாது..!’னு கலைஞர் வசனத்தை 'பராசக்தி’யில் அனுமதிச்சு ரசிச்ச மண்ணுய்யா இது.



நான் எந்த அடையாளத்துக்குள்ளும் போக விரும்பலை. ஆனா,  கமல்ங்கிற கலைஞனுக்காக பாரதிராஜா என்கிற கலைஞன் குரல் கொடுக்கிறான். அவ்வளவுதான்!''


''ஆனால், 'கலைக்கு எல்லை இல்லை’ என்று சொல்லி சிறுபான்மையினர் உணர்வுகள் புண்பட அனுமதிக்க முடியுமா?''



''உண்மை என்னன்னு ஊர் உலகம் முழுசா புரிஞ்சுக்காமலே, 'புண்படுத்திட்டாங்க’னு சொல்றது நியாயமா? 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் க்ளைமாக்ஸில் பூணூலையும் சிலுவையையும் கார்த்திக், ராதா அறுத்து எறிவாங்க. அந்தக் காட்சி இந்து, கிறிஸ்துவர்களை எந்த வகையிலாவது புண்படுத்தியதா? 'வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கிட்ட ஒரு சின்னப் பையன், 'நான் கரையேறிட்டேன். 



நீங்க இன்னும் ஏறலையா?’னு கேட்பான். அந்தக் காட்சியைப் பார்த்துச் சம்பந்தப்பட்ட சாதியினர் புண்பட்டாங்களா?  ஒரே வார்த்தை - வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு களங்களில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும். அது எந்த இடத்தில், எந்தச் சூழலில் ஒலிக்குதுனு பார்க்கணும் இல்லையா?



சினிமா ஒரு அபூர்வ ஊடகம். அதில் படைப்பின் நேர்த்தியைப் பாராட்டுங்க. அதை விட்டுட்டு, 'இது நொள்ளை... அது நொட்டை’னு வம்படியா குத்தம் சொல்லாதீங்க.''  



''இது தொடர்பா கமல்ஹாசன்கிட்ட நீங்க எதுவும் பேசுனீங்களா? இந்த விவகாரத்தில் எதுவும் அரசியல் பின்னணி இருக்கா?''



''அவன்கிட்ட பேசலை. அவன் மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, இந்த விஷயத்தை உன்னிப்பா கவனிக்கிறப்போ எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது. பாக்யராஜ் கட்சி ஆரம்பிச்சப்போ, டி.ராஜேந்தர் கட்சி ஆரம்பிச்சப்போ, விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்போ எல்லாம் நான்தான் முதல் ஆளா அவங்களைத் திட்டித் தீர்த்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பார்த்தா, அவங்க மூணு பேரும் ஏதோ ஒரு விஷயத்தில் பலமா காயம்பட்டு, மனசு நொந்த பிறகே, அரசியலுக்கு வந்திருக்காங்க. இப்போ அந்த அரசியல் பாதையில் கமலையும் இறக்கிவிட்றாதீங்க.



கமல் மத்தவங்க மாதிரி இல்லை. எந்த விஷயத்தில் இறங்கினாலும் அதுக்கான முழுத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கிட்டுதான் இறங்குவான். அப்புறம் அவன் அரசியலை உங்க யாராலும் தாங்க முடியாது.''




''தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய சினிமா கலைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆனால், இப்போது டெசோ மாநாடு, கண்டனத் தீர்மானம்னு அதே இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. போராடுதே?''



''நான் எல்லாருக்கும் பொதுவானவன். அந்த வகையில்தான் அப்போது ஆட்சியில் இருந்த அய்யாவைப் பார்த்தேன். இப்போ ஆட்சி செய்யும் அம்மாவையும் பார்க்கிறேன். கல்யாண வீட்டுக்குப் போனா சிரிக்கணும்... இழவு வீட்டுக்குப் போனா அழணும். அதுதான் இயற்கை நியதி. அதைத்தான் நான் செஞ்சுட்டு இருக்கேன்!''



விஸ்வரூபம்





நன்றி - விகடன்

Wednesday, January 30, 2013

ஜெ VS கமல் - மோதல் - உண்மையான காரணம் என்ன?ஜு வி யின் அலசல்

விஸ்வரூப அரசியல்!

சேட்டிலைட் நிழல் யுத்தம்... சென்சார் சண்டை... கோலிவுட் மோதல்
 
'யார் என்று புரிகிறதா
 இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்

ஞாபகம் வருகிறதா’ - 'விஸ்வரூபம்’ படத்தில் வரும் பாடல் வரிகள் இவை. தடைகளைத் தாண்டி கமல் எப்படி வெல்லப்போகிறார் என்பதை தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. விஸ்வரூப விவ காரத்தில் திரைக்குப் பின்னால் நடக்கும் சில விஷ யங்கள் இங்கே..


பிரச்னைக்குக் காரணம், தி.மு.க. நெருக்கமா?


''சென்சார் போர்டில் அசன் முகம்மது ஜின்னா என்ற முஸ்லிம் ஒருவரே படத்தைப் பார்த்து ஓகே செய்து இருக்கிறார். அப்படி இருக்கும்போது படத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கமல் தரப்பில் கேட்கிறார்கள். இந்த ஜின்னா யார் தெரியுமா? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வளர்மதியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்.


மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா, ''முஸ்லிம்களுக்கு எதிரானகாட்சிகள் 'விஸ்வரூபம்’ படத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டோம். உடனே, கமல் சார்பில் என்னிடம் பேசியவர் ஜின்னாதான். 'படத்தின் டிரைலரைப் பார்த்து விட்டு எதிர்க்க வேண்டாம். கமல் பேசத் தயாராக இருக்கிறார்’ என்றார். படத்தை சென்சார் செய்வதோடு ஜின்னாவின் வேலை முடிந்து விட் டது. அவர் எதற்காக கமலுக்கு ஆதரவாகப் பேச வேண்டும்? அப்படிப்பட்டவர் எப்படி படத்தை சென்சார் செய்திருப்பார்?'' என்கிறார்.


தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''படத்தின் சேலம் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார். சென்சார் போர்டில் தி.மு.க-வைச் சேர்ந்த ஜின்னா, ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியோடு கமல் மேடை ஏறியது, இவற்றை எல்லாம் ஆளும் கட்சி ரசிக்கவில்லை. அதன்பிறகுதான், கமலுக்குப் பிரச்னைகளும் ஆரம் பம் ஆனது'' என்கிறார்கள்.



ஜின்னா என்ன சொல்கிறார்? ''எந்த மதத்தின் உணர்வும் புண்படுத்தப்படுவதை தணிக்கைத் துறை விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை. வழி காட்டும் முறைகளின்​படிதான் தணிக்கை நடக்கிறது. சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக்கூடிய வகை யிலோ, உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலோ, வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைந்த​தாகவோ காட்சிகள் இருப்பின், அவை நீக்கப்படுகின்றன. ஒரு படத்துக்கான தணிக்கை முறைகளில் அதில் பங்கு பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது. நான் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை, இஸ்லாத்துக்கு எதிராக மட்டுமல்ல, எந்த மதத்துக்கும் எதிரான தவறான உள்நோக்கம் கொண்ட சித்திரிப்புகளை பலமாகவே எதிர்த்து இருக்கிறேன்'' என்கிறார்.  


சேட்டிலைட் நிழல் யுத்தம்!


'விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு  டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று  டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. 



கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம். இந்த நடவடிக்கை அந்த டி.வி. தரப்பை கொந்தளிக்க வைத்து விட்டதாம். ''சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே, 'விஸ்வரூபம்’ படத்துக்கு எழுந்த தடை'' என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார்.



'விஸ்வரூபம்’ பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனதும் நீதிபதி வெங்கடராமன் படத்தைப் பார்க்க முடிவு செய்தார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் 'விஸ்வரூபம்’ ஸ்பெஷலாகத் திரையிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களும் நீதிபதிகளுடன் படம் பார்த்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகளுடன் கமலைப் பேசச் சொன்னது நீதிமன்றம். அநேகமாக, இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும்போது நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கும்.


''நாங்கள் தேசத் துரோகிகளா?''


'விஸ்வரூபம்’ படத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து கமல் வெளியிட்ட அறிக்கையில், ''நியாயமான தேசப்பற்றுமிக்க முஸ்லிம் யாரும் இந்தப் படத்தைப் பார்த்தால் பெருமைப்படுவார்கள்'' என்று சொல்லி இருக்கிறார். இதுவும் முஸ்லிம் கூட்டமைப்பினரை கொதிக்க வைத்திருக்கிறது. ''சிறு குழு எனச் சொல்லி எங்களை தேசப்பற்று இல்லாதவர்களைப்போல் சித்திரித்து இருக்கிறார். கூடங்குளம் தொடங்கி தர்மபுரி கலவரம், எல் லையில் இந்திய வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் வரை குரல் கொடுக்கும் நாங்கள் தேசத் துரோகிகளா?'' என கேள்வி எழுப்பும் அவர்கள், ''படத்தில் ஹெலிகாப்டரில் இருந்து அமெரிக்கப் படை தாலிபான்களை சுடும் காட்சி வரும்.



 அதில் அப்பாவியான பெண் ஒருவர் பலியாவார். இதற்காக அமெரிக்க வீரர்கள் பரிதாபப்படுவார்கள். தாலிபான்கள் அமெரிக்காவின் தாக்குதலுக்குத் தப்பி ஓடும் காட்சியில் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடுவார்கள். அப்போது ஒரு தாலிபான், 'குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு தப்பிச் செல்லலாம்’ என்பார். அதற்கு இன்னொரு தாலிபான், 'அமெரிக்கர்கள் பெண்களை குழந்தைகளை கொல்ல மாட்டார்கள்’ என டயலாக் பேசுவார். இப்படி படம் முழுவதும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதுபோல காட்சிகளை அமைத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்றனர்.


சினிமா மோதல்!
கமலுக்கு ஆதரவாக திரையுலகத்தினரும்அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்கின்றனர். ரஜினி, பாரதிராஜா, பார்த்திபன், அஜித் ஆகியோர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ம.க-வும் 'விஸ்வரூபம்’ படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் அமீர் ''யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கருத்து தெரிவிக்கலாம்'' என்று சொல்லி இருப்பதை கோலிவுட் ரசிக்கவில்லை.



'கமலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு திரையுலகம் மௌனமாக இருப்பது ஏன்?’ என்று பாரதிராஜா கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு இன்னொரு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. ''ஈழத் தமிழர்களின் வலியைச் சொல்லும் 'காற்றுக் கென்ன வேலி’ படத்துக்கும் இதேபோல் தடை வந்த போது அந்தப் படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜும் தயாரிப்பாளர் வெள்ளையனும் மட் டுமே போராடினர். அப்போது, இந்த பாரதிராஜா எல்லாம் எங்கே போனார். மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகர்களுக்கு மட்டுமே குரல் கொடுப்பது அநியாயம்'' என்று குமுறுகிறது கோலிவுட்டின் ஒரு பிரிவு.


''இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது!''


கமல் ரசிகர்களும் கருத்து சுதந்திரத்தை ஆதரிப் பவர்களும் சொல்லும் வாதம் இதுதான்...


''நடப்பு விஷயத்தை படமாக எடுக்கும்போது தாலிபான் தீவிரவாதிகளை வேறு மதத்தின் அடையாளமாக எப்படிக் காட்ட முடியும். ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரத்தை இங்கே இருக்கிற முஸ்லிம்கள் தங்களோடு ஏன் தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபான் தீவிரவாதம் பற்றி எத்தனையோ ஆங் கிலப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தக் காட்சிகள் எப்படி அனுமதிக்கப்பட்டதோ, அதே அடிப்படையில்தான் இந்தப் படத்துக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. 




படத்தை தடை செய்வதைவிட, அந்தப் படத்தைப் பார்க்காமல் புறக்கணிப்பது அதைவிட பெரிய தண்டனைதான். அந்த வழியில்தான்  முஸ்லிம்கள் படத்தை எதிர்த்து இருக்க வேண்டுமே தவிர, தடை செய்யச் சொல்வது சரி அல்ல. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஆங்கில அரசு பறித்ததால்தான், சுதந்திரப் போராட்டமே நடந்தது. அப்படிப்பட்ட தேசத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போர்க்​கொடி தூக்குவது ஜனநாயகம் அல்ல'' என்கிறார்கள்.



நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடக்கும் விஷயங்​கள் என்ன அதிர்வலைகளை உண்டாக்கப்​போகிறதோ?


- ஜூ.வி. டீம்





மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன்: கமலஹாசன் குமுறல் 
 
 
Posted Date : 11:45 (30/01/2013)Last updated : 18:08 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தமது சொத்துக்கள் அனைத்தையும் விற்று படமெடுத்துள்ளதாக கூறியுள்ள நடிகர் கமலஹாசன்,படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டிருந்தால், கடன் கொடுத்தவர் வசம் தமது சொத்துக்கள் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல என்று சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய கமல்,  " இந்த படத்திற்காக நான் மிகுந்த பொருட் செலவு செய்துள்ளேன். நான் நின்று கொண்டிருக்கும் இந்த வீடு உட்பட என்னுடைய அனைத்து சொத்துக்களையும் இந்த படத்திற்காக அடமானம் வைத்திருக்கிறேன்.
படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகப் போக நான் நிற்கும் இந்த கட்டடம் கூட எனக்கு சொந்தமில்லாமல் போகும். அநேகமாக இதுவே கூட நான் இங்கிருந்து அளிக்கும் கடைசி பேட்டியாக அமையலாம்.

நாட்டின் ஒற்றுமையா இல்லை என்னுடைய சொத்தா என்ற கேள்வி வரும் போது, நாட்டின் ஒற்றுமையே முக்கியம் என நான் கருதுகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காக சொத்துக்களை இழக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு பணம் முக்கியமல்ல. நாட்டின் ஒற்றுமையே முக்கியம்.


எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டதாக கருதுகிறேன்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.  இருப்பினும் எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.


எனது திரைப்படத்திற்கு தடை, தடைக்குதடை என தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நான் தமிழகத்தை விட்டு வெளியேறவும் தயாராக இருக்கிறேன். மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனாமல் வேற மதச்சார்பற்ற மாநிலத்தை தேடுவேன். தமிழகம் முதல் காஷ்மீர் வரை வேறு மதச்சார்பற்ற மாநிலம் இல்லை என்றால் மதச்சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன்.


விழுந்தாலும் விதையாக விழுவேன், எழுந்தால் மரமாக எழுவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைக்கலாம். இந்த மரத்தில் பல பல சுதந்திரப் பறவைகள் வந்து அமரும். சோலைகள் உருவாகும். மீண்டும் விதைகள் பல உருவாகும். ஆனால் அந்த முதல் விதை நான். எனக்கு மதம், அரசியல் சார்பு இல்லை. ஆனால் என் திறமை என்னுடன் இருக்கும்.


விஸ்வரூபம் படம் நடக்கும் களம் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான். இது இஸ்லாமியர்களை கேலி செய்யும் படமல்ல. எனக்கு மதம் இல்லை. மனிதம்தான் உண்டு" என்றார்.

விஸ்வரூபம்: குரான் காட்சியை நீக்க கமல் சம்மதம் 
 
 
 
Posted Date : 15:32 (30/01/2013)Last updated : 16:13 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தில் குரான் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க நடிகர் கமலஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் இன்று மதியம்  செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட தாம்  காரணமாக இருக்க விரும்பவில்லை என்றார்.

விஸ்வரூபம் பட தடை விவகாரத்திற்கு பிறகு கமல் இன்று காலை பேட்டி அளித்தார்.  அவருடைய பேட்டி தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது. கமலை  அடுத்தடுத்து வி.ஐ.பி.கள் சந்தித்து வருகின்றன.  காங்கிரஸ் எம்.பி. ஆரூண், தேசிய லீக்  கட்சி தலைவர் பஷீர் ஆகியோர் கமலை சந்தித்தார்.


 பின்னர் அவர்களுடன் சேர்ந்து மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது  'விஸ்வரூபம் படத்தில் குரான் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் தொடர்பான சில காட்சிகளை  நீக்க முடிவெடுத்துள்ளதாகவும்,  'ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  22 முஸ்லிம் கட்சிகள் அமைப்புகளின் கூட்டமைப்பு   நிர்வாகிகள் யாரும் கமலை சந்திக்காத நிலையில் ஆருணும் பஷீரும்  சந்தித்திருக்கிறார்கள்.

இதுபற்றி கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர்  ரீபாயி ''படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற எங்கள் கோரிகையில் உறுதியாக  இருக்கிறோம். தமிழக அரசின் முடிவை ஆதரிக்கிறோம். அரசு மேல் முறையீடு  செய்திருக்கிறது. அதனை வரவேற்கிறோம். ஆருணும், பஷீரும் கமலை பார்த்ததற்கும்  எங்கள் கூட்டமைப்புக்கும்  எந்த தொடர்பும் இல்லை" என்றார்.

ஆருண் பேசும் போது, காட்சிகள் நீக்கப்படும் என்கிற கமலின் முடிவை கூட்டமைப்பிடம்  தெரிவித்து அவர்களின் ஒப்புதலை பெறுவோம்" என்றார்.



விஸ்வரூபம் படத்திற்கு மீண்டும் தடை; உச்ச நீதிமன்றத்தை நாட கமல் முடிவு! 
 
 
Posted Date : 15:53 (30/01/2013)Last updated : 16:48 (30/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்தின் மீதான தமிழக அரசின் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் அறிவித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்துள்ளார்.


விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அரசு பிறப்பித்த தடையை நீதிபதி வெங்கடராமன் நேற்றிரவு நிறுத்தி வைத்ததார். 

இதனால் இன்று படம் வெளியாகும் என்கிற சுழ்நிலையில் விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று காலை மேல் முறையீடு செய்தது. அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், நீதிமன்றம் தொடங்கியதும்  முதல் வழக்காக ப‌திவு செய்தார். மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி

அருணா ஜெகதீஷன் அடங்கிய பெஞ்ச், பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கை விசாரிப்பதாகக் கூறியுது.

இதன்படி வழக்கு விசாரணைக்கு வந்ததும் தமிழக அரசின் கோரிகையை ஏற்று தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது.வருகிற திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.


இதனால் படம் வெளியாவது மேலும் தாமதம் ஆகியிருக்கிறது
இந்நிலையில் இந்த தடை உத்தரவை எதிர்த்து கமலஹான உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கமலஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்! 
 
 
Posted Date : 12:26 (30/01/2013)Last updated : 12:27 (30/01/2013)
சென்னை: நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டபோதிலும், காவல்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்  இன்று காலை திரையிடப்பட்ட விஸ்வரூபம், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தமிழகத்தில்  விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

விஸ்வரூபம் திரைப் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நேற்று சென்னை  உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று பல இடங்களில்  விஸ்வரூபம் காலையிலேயே திரையிடப்பட்டது. ஆனால், படம் ஓடத் தொடங்கிய சில  நிமிடங்களில் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்  படத்தை நிறுத்த சொல்லி தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும்  அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதால்,தியேட்டர் உரிமையாளர்கள்  படத்தை நிறுத்தினர்.

தூத்துக்குடி, கோவை, ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் பத்து நிமிடத்திலேயே  விஸ்வரூபம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள்  சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின்  பல இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

அதேபோல் திரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், சென்னை தேவி தியேட்டர் எதிரில்  வைக்கப்படிருந்த விஸ்வரூபம் பேனரை தீ வைத்து எரித்தனர்.

கோவையில் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  விஸ்வரூபம் திரையிட இருந்த தியேட்டர்களில் வீச பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற  கோணத்தில்; காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நன்றி - விகடன்


Kamal hasan's emotional speech - Ananda Vikatan 

 

 

 மக்கள் கருத்து



1.இங்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....ஜெயா செய்துள்ளது அப்பட்டமான மிரட்டல் வேலை. ஆனால், அதே சமயம் பாட்சா, ரஜினி .... விஸ்வரூபம், கமல் ........வாய்ஸ் வரும் அதை வைத்து ஏதாவது செய்யலாம் என்று கணக்கு போட வேண்டாம். ஏற்கனவே, இந்த மாதிரி வாய்ஸ் கொடுக்கப் போய்தான் தி.மு.க. திரும்ப ஆட்சிக்கு வந்து.........டில்லி வரைக்கும் கொடி கட்டி பறந்து, லட்சம் கோடிகளில் ஊழல் என்று புதிய பரிணாமத்தை அரசியல் வானில் புகுத்தினர்.........ஜெயா செய்த தவறுக்கு, இந்த லட்சம் கோடிகளில் புரளும் கேடிகளை திரும்பவும் வாழ வைக்க வேண்டாம். தவிர, கமல் என்ற கலைங்கனை பிடிக்கும் தமிழக மக்களுக்கு, கமல் என்ற தனிப்பட்ட மனிதனை, அவரின் குழப்பத்தனமான சிந்தனைகளை அறவே பிடிக்காது.

 

2. இந்த தீர்ப்பு விஸ்வரூபத்திற்கு கிடைத்த வெற்றி, கமலஹாசன் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த தோல்வி.

 

 3.உண்மையிலேயே ஜாதி மதம் மொழி என்று எதையாவது இழிவு படுத்தினால் தடை செய்யலாம் அமெரிக்கா விற்கு கமல் வக்காலத்து வாங்கினால் நம்ம ஊரு பாயுக்கு ஏன் வலிக்குது?

 

4. ஜெஜெ இந்த விஸ்வரூபம் படத்தால் தமிழ் சினிமாவை பகைத்துக்கொண்டார். தமிழ் இனிமாவை பகைதவர்களின் கதி ... கஸ்டம் தான். ஜெஜெவின் துவேசம் இதில் தெறிகிரது.இதுவே இவருக்கு தோல்வியை தரும். 

 

 

5. உயர்நீதிமன்றம் தேவையில்லாத தாமதத்துக்கு பிறகு தடையை நீக்கி இருக்கிறது. முதலில் தணிக்கைக்குழு சான்று வழங்கிய படத்தை ஏன் நீதிபதி பார்க்க வேண்டும் என்பதே புரியவில்லை. போகட்டும்.

முஸ்லிம்கள் மனம் புண்படுகிறது என போராடும் இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளா? ஏன் அனைத்து மசூதிக்கூட்டங்களிலும் இவர்களைப் போல யாரும் முடிவுகள் அறிவிக்கவில்லை? இவர்கள் மனம் எதனால் புண்பட்டது என்பதை படம் வெளியிட்ட பின் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து அதற்கு தடை வாங்க வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு மதத்தை அரசியலோடு கலந்து செயல்படுவது ஏன்?

எதிர்ப்பதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள்? "பேர்ள்" என்ற பத்திரிகை நிருபரை கட்டிவைத்து குரான் வாசகம் படிக்கும்போதே கழுத்தை அறுத்து அதை வீடியோ எடுத்து காட்டி தங்கள் வீரத்தை ஒளிபரப்பியது உண்மைதானே. அமெரிக்க இரட்டை கோபுரத்தை தகர்த்து 4000 பேரை கொலை செய்யும் முன் குரான் ஓதிவிட்டு சென்றது உண்மைதானே. பம்பாயில் வந்து இறங்கி துப்பாக்கி சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவரை கொன்றவர்கள் குரானை ஓதியபின் தானே அதை செய்தார்கள்? அவர்களை கொடூரர்களாக காட்டினால் இங்கே உள்ளவர்கள் ஏன் கவலை கொள்கிறார்கள், கொதிக்கிறார்கள்? இவர்களும் அவர்களோடு தொடர்பு உடையவர்களா?

பல டி.வி.சேனல்களில் விலை கொடுத்து வாங்கி மதப்பிரச்சாரம் செய்யும் இவர்கள் அந்த நேரங்களில் ஒரு முறையாவது தாலிபான் செயல்பாடுகள் தவறானவை என சொல்லி இருப்பார்களா? எங்கோ இருந்த ஒரு பாழ்மண்டபத்தை இடித்ததற்காக அது இருக்கும் இடம் கூட தெரியாத இவர்கள் நாடு முழுதும் வன்முறையில் இறங்கவில்லையா? இவை எதையேனும் இவர்கள் கண்டித்ததுண்டா?


மொத்தத்தில் தங்களுக்குள்ள 15 சதவீத ஓட்டு வங்கியை வைத்து இந்திய அரசையே பணியவைக்க முடியும் என நம்புவதாலேயே இவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

இதில் "வெளியிட்டால் விபரீதமாகும்" என அரசுக்கே எச்சரிக்கை வேறு. வன்முறையை கையாள வக்கில்லாத ஒரு அரசு இவர்களுக்கு ஆதரவு. காரணம் பண வெறி.

முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும் எனவும் கமல்ஹாசன் படத்தை வாங்கிய மற்றையோர் நஷ்டமடைய வேண்டும் எனவும் கணக்கு போடும் ஜெயலலிதா தனக்கு இந்து வோட்டுக்கள் கணிசமாக குறைந்தால் என்ன நடக்கும் என சீக்கிரமே தெரிந்துகொள்வார். 

 

 6.காற்றில்லாமல் புகையாது. முஸ்லீம தப்ப சித்தரிக்கிக்கராங்க அப்படின்ர காரனாத்துக்காக இவ்வளவு முஸ்லீம் பிரமுகர்கள் போராட்டம் பண்ரபோது அரசு சும்மா இருக்க முடியாது. முன்பு சண்டியர்ன்னு ஒரு படத்துக்கு பேர் வைச்சதுனால தலித் பிரச்சனை பண்னங்க அது மாதிரி தான் இதுவும். டிவிக்கு படம் தரலை அது இதுன்னு வெட்டியான காரணம். அது இலவசமா டிவில் காட்டரதுக்கான உரிமை விளம்பரங்கள் மட்டும்தான் வருமானம். ட்டிஎச்ல 1000 ரூபா குடுத்து எவ்வளவு பேர் பாப்பாங்க. இது அந்த டிவிக்கு தெரியாத என்ன (நமக்கே தெரியும்போது)

7. இந்தப் படத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்கள், உண்மையான இஸ்லாமியர்கள் யாரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, படத்தையே தடை செய்ய சொல்வது அறமல்ல.. 

 

 

8
விஸ்வரூபம்’ சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு டி.வி-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகுதான், டி.டி.ஹெச்-ல் 'விஸ்வரூபம்’ வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார். 'இதை நீங்கள் முன்பே சொல்லி இருந்தால், நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம்’ என்று டி.வி. தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். விலையைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது. கமல் தரப்பிலோ, 'இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விடுங்கள்’ என்று சொன்னதோடு, வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டாராம்

படத்தை வீடு, வாசல் விற்று செலவிட்டு எடுத்தவன் எங்கு அதிக விலைக்கு விற்கலாம் என்று தானே பார்ப்பான். காய்கறி விவசாயி ஒரு கடையை விட அடுத்த கடை கூட விலை தருகிறேன் என்றால் அங்கு தான் விற்பான், 90 கோடி செலவழித்தவர்க்கு அந்த உரிமை இல்லையா? அர்சாங்கம் தன் கையிலிருக்கு என்பதால் அடி மாட்டு விலைக்கு கொடுக்கனும்னு சட்டமா?

 

 

9. தி.மு.க-வுடன் கமல் காட்டிய நெருக்கம்தான் விவ காரம் விஸ்வரூபம் எடுக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

ஆக பாட்டியே லெட்டர்பேடு ஆட்களை கூப்பிட்டு தூண்டியுள்ளது அப்பட்டமாக தெரிகிறது, இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தெரியும், இதிலே பாட்டி பிரதமர் கனவு வேறே

 10.தலைமை நீதிபதியிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கியிருக்கிறார்கள், காலை 10.30 வரை திரையிடக் கூடாதென்று... தற்போது உண்மை வெளி வந்து விட்டது.

இது ஜெயலலிதாவின் பழிவாங்கல் நடவடிக்கை, பகடைக்காயாக்கப்பட்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்.

அப்பாவிகளிடையே பிளவைத்தூண்டி அரசியல் குளிர் காய்வது கட்சிகளின் வழக்கம் என்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

Tuesday, January 29, 2013

படத்தின் தடைக்கு கமல் மீது ஜெ வின் பகை காரணமா? மக்கள் அலசல்

Posted Date : 16:32 (29/01/2013)Last updated : 16:42 (29/01/2013)
பெங்களூரு: விஸ்வரூபம் படத்தைத் திரையிட, கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.முழுப் பாதுகாப்புக்கு அம்மாநிலக் காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக திரைப்பட வினியோகஸ்தர் ஹெச்.டி. கங்காரஜூ அளித்த பேட்டியில், "பெங்களூருவில் உள்ள 17 தியேட்டர்கள் உள்பட கர்நாடகாவில் 40 திரையரங்குகளில் விஸ்வரூபம் இன்று மேட்னி ஷோ முதல் வெளியாகியுள்ளது. அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக உள்ளது.

கர்நாடகாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்டுள்ள அனைத்துத் திரையரங்கிலும் முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது" என்றார் அவர்.


 மக்கள் கருத்து

1. கடைசியாக செய்தது கமலின் படத்தை பார்க்க விரும்பாதவர்களையும் பார்க்க வைத்த ஒன்று மட்டுமே! படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டப் போகிறது.




2. இந்த படத்தைற்கு ஏ.ஆர்.ரஹமான் இசை அமைத்திருந்தால் முஸ்லிம்கள் போராடுவார்களா???????????





3. அருமை..... இப்போது புரியுதா??? தப்பு படத்துல இல்ல. கேடுகெட்ட மதவாத அரசியலில் உள்ளது...



----------


விஸ்வரூபம் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு
Posted Date : 13:56 (29/01/2013)Last updated : 18:13 (29/01/2013)
சென்னை: விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது.



அரசு புதிய வாதம்...


அப்போது, கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.



இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.



 மக்கள் கருத்து


1. சகிப்பு தனமை தெவை. ஓரு படத்தால் ஒரு மதம் பாதீக்க படும் என்றால் அது அந்த மதம் சார்ந்த பிரஷனை. நான் என்ன படம் பார்க்க வேண்டும் என்பதை அடுதவர் முடிவு செய்வது கூடது. இது ஒரு தவறான முன்னுதாரனம் .எந்த மதமும் அவர் அவர் வீடு மட்றும் வழிபாடு செய்யும் இடத்தோடு இறப்பது நலம்.




2. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. தலிபான், அல் கொய்தா, லஷ்கர் எ தொய்பா போன்றவை தீவிரவாத கூட்டம் இல்லை என்று வாதிடுகிறார்கள? அவை தீவிர வாத கூட்டம் என்று ஒத்து கொள்ளும் பட்ச்சத்தில், அவர்களுக்காக வக்காலத்து வாங்குவது ஏன்? விடுதலை புலி பற்றி இம்மாதிரி படம் எடுத்தால், இங்குள்ளோர் ஏற்று கொள்வார்களா என்று ஒரு ஜீவி கேட்டுள்ளார்.




அதை பற்றி எடுத்தால், எதிர்பவர்கள் விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று ஒத்து கொள்வதே இல்லை - அதை போல் இவர்களையும் மேற் கூறிய கூட்டம் தீவிரவாத கூட்டம் இல்லை என்று வாதிட சொல்லுங்கள். இதில் தேவை இல்லை ஜாதியை நுழைத்து கொண்டு... இவர்கள் ஆட்சேபிக்கும் அத்தனை விஷயமும் அந்த தீவிரவாதிகள் செய்வது தான் - செய்வதை செய்வதாக சொன்னால், என்ன தவறு?




3,. . அமைப்பினரிடம் பேசியும் பயனில்லை, அரசிடம் பேசியும் பயனில்லை என்றுதான் நீதிமன்றத்திடம் கமல் வந்தார். தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதிகளோ மறுபடியும் அரசிடமும், அமைப்பினரிடமும் பேச சொல்வது புரிந்த புதிர்...




அய்யா கமல் அவர்களே! உங்களால் முடியும் என்றால் விஜய் டீவியிடம் இருந்து ஜெயா டீவிக்கு கொடுத்துவிட்டு வழக்கை முடித்து விடுங்கள்... அவங்கள மறுபடியும் பழைய மாதிரி ஆக்கிடாதிங்க... இதை சொல்வதற்க்கு கேவலமாதான் இருக்கு..



4. எம்.ஜி.ஆர் சமாதியில் வைத்தது குதிரை இரக்கை என்பது உன்மை எனில் முறைகேடுகள் நடந்துள்ளது என நம்பலாம். இதில் இருந்தே தெரிகிறது போகாத ஊருக்கு வழி சொல்லுகிற பாடம், அம்மாவின் கன்னசைவில் நடக்கும் வேலை. பாவம் இஸ்லாமியர்கள்





5. இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி,




6. ஜெயலலிதா இதற்குக் காரணம் என்றால், வெட்கித் தலை குனிய வேண்டும்.. அவரல்ல.. அவருக்கு ஓட்டுப் போட்டு அரியணையில் அமர்த்திய நாம் தான்... ஜெயலலிதா மக்கள் ஓட்டுப் போட்டுத்தான் நாம் பூனைப்படை புடை சூழ வலம் வந்து கொண்டிருக்கிறோம் என்று உணர வேண்டும்... முதலமைச்சருக்கு எத்தனையோ பணிகள் இருக்கையில், ஓர் நடிகனின் படத்தைத் தடை செய்து ரசிக்கும் குரூர மனப்பான்மை மிகுந்த அதிர்ச்சியை விளைவிக்கிறது...




7. இந்தியாவை அவமானப்படுத்திய எத்தனை ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் சக்கை போடு போட்டிருக்கிறது! இது ஆப்கானை பற்றிய படம். இதை பற்றி இந்தியர்கள் ஏன் கவலைபட வேண்டும்? மதவாதம் தேசவாதத்தால் தோற்கடிக்கபட வேண்டும்.( இனவாதம் தேசவாதத்தால் தோற்கடிக்கபட்டது போல்).சினிமாவில் கொலை செய்வதற்கு முன் குரான் படிப்பதை கேள்வி கேட்பவர்கள் ஆப்கானிலும் சென்று கேள்வி கேட்க வேண்டும்.




8. சென்சார் போர்ட் அனுமதித்த பிறகு ஏதவது அமைப்புக்கள் தடை உத்தரவு கோரினால்.. அந்த படம் தடை செய்யப்படும் நாட்களுக்குரிய வருமானத்தை அவ் அமைப்புக்கள் கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிடவேண்டும்.




9. இதுல ஜெயலலிதாவ ஏன் குற்றம் சொல்ராங்க? இவ்வளவு முஸ்லீம்கள் வந்து முறையிடும்போது நடவடிக்கை எடுத்துத்தான் ஆகணும். ஆனா ஆப்கானிஸ்தான்ல உள்ள் தாலிபன், அல் கைடா கும்பல பத்தி படம் எடுத்தா இங்க ஆம்பூர், காயல் பட்டினத்தில் உள்ல் முஸ்லீம்களுக்கு ஏன் கோவம் வருதிங்கரதுதான் புரியாம இருக்கு. சதாம் உசேன துக்கில போட்டதுக்கும் போராட்டம் இங்க லெப்பைகுடிகாடு, வாணியம்பாடில பண்ணினாங. ஏன்னு கேட்டா சதாம் ஒரு முசுலீமாம் ஒரு முசுலீம கொன்னது தப்பாம். சதாம் உசேன் எத்தனை முஸ்லீம்களா வீஷ வாயு போட்டு கொன்னிருக்கான்னு தெரியுமா இவிகளுக்கு? அட இந்த தாலிபன் கும்பல் எத்தனை முஸ்லீம்களை கொன்னிருக்காங்கன்னு தெரியுமா?



10. நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதா. என்ன அபாண்டமா பொய் சொல்கிறார். நிருபிக்க முடியுமா இவரால்.


11. படம் அருமை! ஒவ்வொரு சீனும் உலகத்தரம்! இந்திய முஸ்லிமின் நாட்டுபற்று யாருக்கும் குறைந்தது அல்ல என எடுத்துகாட்டும் தரமான படம்!



12. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம்.<< இந்த படத்தினால் நாட்டின் ஒற்றுமைக்கு ஒன்றும் ஆகிவிட போவதில்லை. தமிழகத்தை தவிர அனைத்து இடங்களிலும் படம் வெளியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கே படம் பார்த்த அனைத்து இந்து, முஸ்லீம் சகோதரர்களும் எந்த தவறையும் செய்யவில்லை, அமைதிக்கு எந்த குந்தகமும் விளைவிக்க வில்லை. பரபரப்புக்காகவும், பஞ்சம் பிழைக்கவும் இந்த அமைப்புகள் தண்டால் எடுத்துள்ளன.



நன்றி - விகடன்



டிஸ்கி - கடைசியாக வந்த தகவல் படி தீர்ப்பு @ 10 PM

விஸ்வரூபம் வழக்கின் தீர்ப்பு இன்று இரவு 10 மணிக்கு தள்ளிவைப்பு


சென்னை: விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 10 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.


இந்த வழக்கில் இன்று காலை 11 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நீண்ட நேரம் வாதங்கள் நடைபெற்றதால், இருதரப்பு வாதங்களையும் அலசி ஆராய்வதற்காகவே தீர்ப்பை 10 மணிக்குத் தள்ளிவைத்திருக்கிறார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி.


முன்னதாக, விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது சட்டப்படியாக நடைபெறவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கியது நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது என்றும் சென்சார் போர்டு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஸ்வரூபம் படம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, ராஜ் கமல் ஃபிலிம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழகத்தில் 31 கலெக்டரும் ஒரே நாளில் தடை உத்தரவு போட்டனர். இதற்கு யாராவது புகார் அளித்தார்களா?" என்று வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "இத்தகைய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு" என்றார்.

பின்னர் பேசிய ராமன், "கேரளாவில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் விஸ்வரூபம் வெளியாகியது. அங்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அமைதியானச் சூழல் அங்கு நிலவுகிறது" என்று வாதிட்டார். அதற்கு, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புண்டு" என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

மேலும், "விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளது. சினிமாட்டோகிராஃபி சட்ட விதிகளுக்கு உட்பட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விசாரணை உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரும் என்று அறிவித்தார். இந்த விசாரணை 2.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது.



அரசு புதிய வாதம்...


அப்போது, கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டதால், அவருக்கு வழக்குத் தொடரும் உரிமை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். பின்னர், தீர்ப்பு இரவு 10 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) திரையிடப்படுவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் பல காட்சிகள் உள்ளதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் அடிப்படையில் 2 வார காலத்துக்கு இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ். சந்திரஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த வியாழக்கிழமை விசாரணை நடத்திய நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) ஒத்திவைத்தார். இதற்கிடையில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி ஆராய்வதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் விஸ்வரூபம் படத்தை கடந்த சனிக்கிழமை நீதிபதி பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை நீதிமன்றம் கூடியதும், சந்திரஹாசன் தரப்பைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் பி.எஸ். ராமன் நீதிபதி வெங்கட்ராமனிடம் ஒரு முறையீட்டை முன் வைத்தார். விஸ்வரூபம் படத்துக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்தும், தடை உத்தரவு பிறப்பித்த எல்லா மாவட்ட ஆட்சியர்களையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தும் கூடுதலாக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார்.

இந்தப் பிரச்னையில் மனுதாரர் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பினரோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பதாக ஆகி விடக் கூடாது. தனி மனித உரிமையை விட நாட்டின் ஒற்றுமைதான் மிகவும் முக்கியம். கவே, இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண்பதற்கான எல்லாவித வாய்ப்புகள் குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.