Showing posts with label KALAIGAR TV. Show all posts
Showing posts with label KALAIGAR TV. Show all posts

Monday, October 17, 2011

நாளைய இயக்குநர் - காமெடி ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..

1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)

ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..

ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி  )

இல்லை...

அப்புறம் எதுக்கு எனக்கு சாக்லெட் தர்றே?

எங்காயா சொன்னாங்க.. நல்ல காரியம் பண்றப்போ ஸ்வீட் சாப்பிடனும்னு..

அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப்போறே?

உன்னை பிக்கப் பண்ணி உங்க வீட்ல டிராப் பண்ணலாம்னு இருக்கேன்..

தேவை இல்லை.. வேற ஆள் எனக்கு இருக்கான்.. நீ உன் வேலையை பாரு..

ஹீரோவுக்கு நோஸ்கட் குடுத்துட்டு அந்த ஃபிகர் லவ்வரோட கிளம்பிடுது..

ஹீரோ அடுத்து வேற ஒரு ஃபிகர் கரெக்ட் பண்றார்.. அதுக்கு தன் ரூம் மேட்ஸ்கிட்டே ஒருத்தன் கிட்டே இருந்து பைக் ஓசி வாங்கறார்..(2 மணி நேரத்துல திருப்பி தந்துடறேன்கற கண்டிஷன்ல.. )இன்னொருத்தன் கிட்டே டி சர்ட் ஓசி வாங்கறார்..ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறார்.. ஒரே இளநில 2 ஸ்ட்ரா போட்டு குடிக்கறார்.. திடீர்னு 3 பேர் அவரை வழி மறிக்கறாங்க.. ரூம் மேட்ஸ்தான்..

பைக் குடுத்தவன் பைக்கை பிடுங்கிக்கறான்,  டி சர்ட் குடுத்தவன் டி சர்ட்டை பிடுங்கிக்கறான் (அட பறக்கா வெட்டி).. 3 வது ஆள்..? அதுதான் சஸ்பென்ஸ் காமெடி..

“ஏண்டா.. என் ஃபிகரையே தள்ளிட்டு வந்துட்டியா.?ன்னு சொல்லி அவன் ஃபிகரை ஓட்டிட்டு சார்.. கூட்டிட்டு போயிடறான்.. விஷுவலா பார்க்க செம காமெடியாத்தான் இருந்தது..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. கதைல வர்ற 2 ஃபிகர்ங்களுமே அழகு ஃபிகர்தான்.. நடிப்பும் ஓக்கே..

2. ஆடியன்ஸை யோசிக்கவே விடாம திரைக்கதை செம ஸ்பீடு.. 

2. பின்னணி இசை கதையின் மூடை அப்படியே காமெடியாக்குது..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. என்னதான் காமெடின்னாலும் ஃபிகரையே தள்ளிட்டு போறது ஓவர்.. காதலையே கேலி பண்ற மாதிரி இருக்கு.. 

2. ஹீரோ ஃபிகரோட பைக்ல போற ரூட் அவங்க 3 பேருக்கும் எப்படி தெரியும்? கரெக்ட்டா எதிர்ல வர்றாங்களே எப்படி?

3. பைக்கை திருப்பி வாங்கறது ஓக்கே, யாராவது டி சர்ட்டைக்கூட அப்படி நடு ரோட்ல பிடுங்குவாங்களா?

4. ஓப்பனிங்க் ஷாட்ல பஸ் ஸ்டாப் ஃபிகர் ஹீரோவைப்பார்த்து கோபமா பேச வேண்டிய டயலாக்கை காமெடியால லைட்டா சிரிக்குது.. அதை அவாய்டு பண்ணி இருந்திருக்கலாம்


படம் முடிஞ்சதும் படத்தோட இயக்குநர் கே பாக்யராஜ் கிட்டே

என் முயற்சி எப்படி சார்?

என் வேலையையே மாத்திடுவீங்க போல.. நாங்க ஜட்ஜா? மாமாவா?

சுந்தர் சி - படம் ஓக்கே.. ஒரு குறும்படத்துக்குக்கூட சாங்க் கம்போஸ் பண்ணி நல்லா பண்ணி இருக்கீங்க ஹார்டு ஒர்க்.. 


2.  பாக்யராஜ் - ஆந்தை (த்ரில்லர் ஆக்‌ஷன்)

சட்டமும், சமூகமும் இல்லை என்றால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்வான் அப்டினு ஒரு சப் டைட்டிலோட படம் ஓப்பன் ஆகுது..

போலீஸ் வேலைக்கு எல்லா டெஸ்ட்லயும் பாஸ் ஆகற ஒருத்தன் ரிட்டர்ன் டெஸ்ட்ல ஃபெயில் ஆகிடறான்.. தன் ஃபிரண்ட் கிட்டே புலம்பறான்.. போலீஸ் வேலைல செலக்ட் ஆகனும்னா தனக்கு 4 லட்சம் பணம் வேணும்கறான்.. அவனோட ஃபிரண்ட் இல்லீகல் வேலை செய்பவன்.. அவன் இவனுக்கு அட்வைஸ் பண்றான்.. நேர்மையான வழில போனா பணம் கிடைக்காது.. குறுக்கு வழிலதான் சம்பாதிக்கனும்.. 

ஒரு ஆட்டோவை வழி மறிச்சு ஒரு கொள்ளை அடிக்கறான்.. அந்த பணத்தை அவன் கிட்டே கொடுக்கறான்..

அப்போ 2 பேருக்கும் வாக்குவாதம் வருது.. 

இல்லீகலா சம்பாதிச்சது எனக்கு வேணாம்கறான், இல்ல பரவால்ல எடுத்துக்கோ..சான்ஸ் கிடைக்கறப்ப யூஸ் பண்ணிக்கனும், தான் முன்னேறனும்னா  ஒருத்தனை கவுக்கறதுல தப்பில்லைங்கறான்.

இப்போதான் ஒரு ட்விஸ்ட்.. இது வரை நேர்மைன்னு பேசிட்டு இருந்தவன் இல்லீகலா நடக்க அட்வைஸ் பண்ண ஃபிரண்டையே போட்டுத்தள்ளிடறான்..

இந்தப்படம் ராம்கோபால் வர்மா படம் பொல் எஃப்ஃபக்ட்டா இருக்குன்னு சுந்தர் சி பாராட்னாரு..

ஆனா எனக்கு படத்தோட கான்செப்ட்டும் சரி,, அதை கொண்டு போன விதமும் சரி.. க்ளைமாக்ஸூம் சரி பிடிக்கலை.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தானே வலியனா ஓசில 4 லட்சம் தர்ற ஃபிரண்டை எதுக்கு மெனக்கெட்டு கொலை செய்யனும்? அவன் ஒண்ணும் பணத்தை திருப்பி கேட்கலையே?

2. 4 லட்சத்துக்காக கொள்ளை அடிச்சது ஓக்கே.. தேவை இல்லாம கொலை எதுக்கு?

3. இந்தக்கதை மூலம் சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க/?
Pancake Floor Pillows


3. அஸ்வத் - கார்த்திக்  ஒரிஜினாலிட்டி ( காமெடி)

என்ன கான்செப்ட்னா சினிமால கார்த்திக் அப்டிங்கற பேர்ல வர்றவங்க எல்லாம் ஈசியா ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணிடறாங்க.. அதனால ஹீரோ நாராயனன் தன் பேரை கார்த்திக்னு மாத்திக்கலாமா?ன்னு ஃபிரண்ட்ஸ் கிட்டே ஐடியா கேக்கறான்.. அவங்க வேணாம், உன் ஒரிஜினாலிட்டி போயிடும்கறாங்க

காலேஜ்ல ஜூனியர் ஃபிகரை ஹீரோ ராகிங்க் பண்றார்.. பேரு ,ஊரு எல்லாம் விசாரிக்கறார். அதே சமயம் இன்னொரு பையனை கூப்பிட்டு அந்த ஃபிகர் பக்கத்துல நிக்க வெச்சு அவனுக்கு ஐ லவ் யூ சொல்லுன்னு ராக் பண்றார்..

அந்த ஃபிகர் அந்தப்பையனை பார்த்து ஐ லவ் அப்டின்னு சொல்லி ஹீரோ நாராயணைப்பார்த்து யூ அப்டின்னு முடிக்கறா..

உடனே ஹீரோ டூயட் பாடறாரு.. ஃபிகர் பிக்கப் ஆகிடுச்சுன்னு..

அடுத்த ஷாட்ல அவ ஃபோன் பண்ணி நாராயணனை வரச்சொல்றா..

சார்.. உங்க கிட்டே ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை..

ஆஹா.. சொல்லுங்க சொல்லுங்க

அன்னைக்கு ஒரு பையனை ராக் பண்ணி என்னை அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வெச்சீங்களே அவனை நான் லவ் பண்றேன்.. முதல்ல உங்க கிட்டே தான் இந்த மேட்டரை சொல்லலாம்னு.. 

அடங்கோ..

அடேய்.. உன் பேரு கார்த்திக்கா?

எப்படி சார் கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?

எத்தனை படம் பார்க்கறோம்?

நல்ல காமெடி பேக்கேஜ். காலேஜ்ல நடக்கறதை நேர்ல பார்க்கற மாதிரி இருந்துச்சு...இயக்குநரே ஹீரோவாநடிச்சிருந்தார்..

இதுக்கு ஜட்ஜூங்க கமெண்ட் பண்றப்ப ஹீரோயின் வெவ்வேற கால கட்டத்துல வர்ற 3 சீன்லயும் ஒரே காஸ்ட்யூம் தான் போட்டிருக்காரு.. அதை கவனிக்கலையா?ன்னாங்க.. 

பட் சின்ன சின்ன மைனஸ் தாண்டி இது நல்ல காமெடி.. இதுக்குத்தான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வரும்னு நான் நினைச்சேன்.. ஆனா .....


4. கிஷோர் - ஃபோன் கால் (PHONE CALL)

ஒரு வீட்ல 4 ஃபிரண்ட்ஸ்.. ஏதோ பார்ட்டி கொண்டாட்டம்.. மாடிப்படி ஏறி வரும் ஒரு நண்பனுக்கு ஒரு ஃபோன் வருது.. அவனோட பழைய ஃபிரண்ட் பிரவீன்..

மேலே வந்ததும் டேய் பிரவீன் ஃபோன் பண்ணுனான்ன்னு சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆகறாங்க// டேய்.. உனக்கு விஷயமே தெரியாதா?அவன் இறந்துட்டான்.. எப்படி ஃபோன் வரும்?


இவன் உடனே ஷாக் ஆகிடறான்..

இப்போ மறுபடி பிரவீன்கிட்டே இருந்து கால்...

அவன் திகில் ஆகி பார்க்கறப்ப ரூம்ப இருந்து இன்னொரு ஃபிரண்ட்  பிரவீன் ஃபோனோட வர்றான்.. சும்மா கலாட்டா பண்ண..
இப்போதான் சஸ்பென்ஸ் உடையுது.. கேமரா அப்படியே  டேபிள்ல இருக்கற நியூஸ் பேப்பர்ட்ட போகுது.. இப்போ நாம பார்த்த எல்லாருமே ஆல்ரெடி இறந்துட்டாங்க என காட்டுது..

யூகிக்க முடியாத திருப்பம்...

ஓப்பனிங்க் ஷாட்ல கதைக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பேப்பர் போடற ஆளை காட்னது எதுக்குன்னு இப்போ புரியுது.. வெல் மேக்கிங்க்..
இதுக்கு கமெண்ட் பண்ணுன ஜட்ஜூங்க ஒரே ஒரு குறை சொன்னாங்க.. நைட் எஃபக்ட படம் பண்ணி இருந்தா இன்னும் டெரரா இருந்திருக்கும்னு..
சின்ன குறைகள் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க  படமே..

இந்த வாரம் வந்த 4 படங்கள்ல 3 படம் குட்..

Monday, October 10, 2011

நாளைய இயக்குநர் - காதல், காமெடி கதைகள் - விமர்சனம்

கீர்த்தி - சார்.. குறும்படம் எடுக்கறதுல எந்த மாதிரி படங்கள் மேக்கிங்க்ல கஷ்டம்?

கே பாக்யராஜ் - என்னைப்பொறுத்தவரை ஆக்‌ஷன் ஃபிலிம் தான் கஷ்டம்.. ஏன்னா கொஞ்சம் மிஸ் ஆனாக்கூட காமெடி ஆகிடும்.. கரெக்ட் பேக்கேஜ்ல கொண்டு வரனும்.. 

சுந்தர் சி - அன்பே சிவம் மாதிரி படங்கள் எடுக்கறது கஷ்டம்.. ஆக்‌ஷன் எனக்கு ஈசியா அமைஞ்சிடுது ( அண்ணே, உங்களுக்கு ஈஸி தான் ஆடியன்ஸூக்குத்தான் கஷ்டம்) காமெடி பண்றதுதான் சிரமம் என்னை கேட்டா.. 



1. கார்த்திக் - காதல் பீஸ்சா

லவ்வர்ஸ் ஜாலியா பைக் ரைடு போறாங்க.. அப்போ ஃபிகர் சொல்லுது.. நாளை வீட்டுக்கு வா..  என் தங்கை , அப்பா வீட்லதான் இருப்பாங்க.. பேசி சம்மதம் வாங்குன்னு.. 

இவரு போனா அங்கே வருங்கால  மச்சினி மட்டும்  தனியே தன்னந்தனியே.. 

இவருக்கு சிரமம் வைக்காம அதுவே பிட்டை போடுது.. வீட்ல வேற யாரும் இல்லை..  உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் அப்டினு சொல்லிட்டே பெட்ரூம்க்குள்ள போகுது.. இது குறும்படமா? குறும்புப்படமா? அப்டினு நாம யோசிக்கறப்ப.....

ஹீரோ பைக் சாவியை மறந்து பைக்லயே வெச்சுட்டு வந்துடறார்.. அதை எடுத்துட்டு வரலாம்னு போறப்ப ஹீரோயின், மாமா வந்து மச்சினி கிட்டே சிலாகிக்கறாங்க.. மாப்ளை கேரக்டர் அருமை.. ரொம்ப நல்லவர் போல.. ஃபிகர் வாலண்ட்ரியா கூப்பிட்டாலும் ஓடிப்போய்ட்டார்..

சாவியை எடுத்துக்கிட்டு திரும்பி வர்ற ஹீரோ நமுட்டுச்சிரிப்போட நிக்கறார்..

இந்தப்படத்துல பாராட்ட வேண்டிய ஒரே அம்சம் மச்சினியா வர்ற ஃபிகர் தான் நல்ல முக வெட்டு ( எத்தனை வெட்டுன்னு கேட்கப்படாது) குறும்புத்தனமான அக்னி நட்சத்திரம் அமலா (அஞ்சலி) நடிப்பு.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. மாப்ளையோட கேரக்டரை செக் பண்ண சொந்த தங்கையையே மோசமா நடந்துக்கற மாதிரி நடிக்க சொல்வாங்களா? யாராவது? நாளை மேரேஜ் ஆன பின் நிஜமாவே ட்ரை பண்ணலாம்னு மாப்ளைக்கு தோணாதா?

2. இப்போதான் முதல் டைம் பார்க்கறா ஹீரோயினோட தங்கை. பார்த்ததும் காதல் ஓக்கே, பார்த்ததும் காமம்? நாட் ஓக்கே.. 

3. இது ஒரு விளம்பர படத்தோட KNOT . அதுல ஹீரோ காண்டம் எடுத்துட்டு வரப்போவாரு.. இதுல பைக் சாவி.. 

4.  மோசமான நடத்தை உள்ள மாப்ளை ஏன் மச்சினி சோபால  பக்கத்துல உக்காரும்போது விலகி விலகி செல்கிறார்?

5. மாப்ளையை பற்றி விசாரிக்கனும்னா பொதுவா ஆஃபீஸ்ல , அக்கம் பக்கம், அல்லது நண்பர்களிடம்தான் விசாரிப்பாங்க.. யாரும் இப்படி சொந்த மகளை நடிக்க சொல்லி பார்க்க மாட்டாங்க.. 




2. குணாளன் - தொடரும்

ஒரு மாடர்ன் ஆசாமி தன் லவ்வரோட பைக்ல போறான், காதுல வாக்மேன் மாட்டி பாட்டு கேட்டுட்டே... ரொம்ப தூரம் போறான் போறான் போய்ட்டே இருக்கான்.. பார்க்கற ஆடியன்ஸ்  டென்ஷன் ஆகற வரை போய்ட்டே இருக்கான்.. 


வழில ஒரு ஆளை பார்த்து அந்த ஃபிகரு அந்தாள் செமயா இருக்காரு அப்டின்னு சொல்ல அப்போ நானும் நாளைல இருந்து ஜிம் போறேன்னு இவன் சொல்றான்..

அடுத்த நாள் காலைல 6 மணிக்கு இவன் ஜிம்முக்கு போறப்ப பாலத்துல  2 ரோடு பிரியுது.. எந்த ரோடுல போலாம்கற அறிவுப்புப்பலகை மேல் யாரோ ஏதோ போஸ்டர் ஒட்டி இருக்காங்க.. அதனால இவன் தவறுதலா ராங்க் ரூட்ல போறான்.. ஆக்சிடெண்ட்.. ஸ்பாட் அவுட்.. அவன் இறந்த ஃபோட்டோவை போட்டு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்படுது.. 

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. அண்ணே, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லவும்.. ஏன் சுத்தி வளைக்கறீங்க?

2. ஹீரோ படம் பூரா வாக்மேன் கேட்டுட்டே வர்றது எதுக்கு? ஆடியன்ஸை டைவர்ட் பண்ணவா? ம்ஹூம்..

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  லவ் பண்ற பொண்ணை யாராவது 2 மணி நேரம் காக்க வைப்பாங்களா?

2. நீ மட்டும் இல்ல... அவனை துவம்சம் பண்ணி இருப்பேன்..

சரி விடு.. அவன் உடம்பை பார்த்தியா? அம்சமா இல்ல?



3. குகன் சென்னியப்பன் - உயிர் வாசம் 

கோயில், திருவிழாக்களில் ஆடு , கோழிகளை பலியிடும் வேலையில் இருக்கும் ஒருவர் நேரில் ஒரு விபத்து கம் கொலை யை பார்க்கும்போது நெஞ்சில் ஈரம் பொங்க , மனித நேயத்தை வெளிப்படுத்துகிறார்.. கல்லுக்குள் ஈரம் உண்டு என்ற KNOT..  நீட் 

படத்துல முக்கியமான மேட்டர் டயலாக்ஸே கிடையாது. ஒரே ஒரு சீன்ல செல்ஃபோன்ல குழந்தை வாய்ஸ் மட்டும் கேட்கும்.. ஒருத்தனை நடு ரோட்ல ஒரு கும்பல் வெட்டி போட்டிருக்கும்.. அந்த பாடில இருக்கற ஃபோன் ஒலிக்கறப்ப ஹீரோ எடுத்து அட்டெண்ட் பண்றார்.. அந்த குழந்தை அப்பா சீக்கிரம் வாங்க.. நான் கேட்டதெல்லாம் வாங்கி வந்தீங்கதானே? அப்டினு கேக்கும்

ரோட்ல பேக் சிதறி கிடக்கும், அதுல ஹார்லிக்ஸ், பொம்மை பொன்ற குழந்தைகள் அயிட்டமா இருக்கும்.. எங்கேயும்  எப்போதும் படத்துல இதே மாதிரி சீன் வந்துட்டதால எஃப்க்ட் கம்மி, ஆனாலும் மனதை தொட்டது..

 படத்துக்கு பின்னணி இசை அழகு.. உடுக்கை அடிக்கும் ஒலி.. கோயில் திருவிழாவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி

1. கேரக்டர்கள் ரவுடிகள், கெட்டவர்கள் என்பதை காட்ட சரக்கு அடிப்பது போல், தம் அடிப்பது போல் அவ்வளவு விலா வாரியாக காட்ட வேண்டுமா?




4. சந்த்ரு - ஆதாயம்

2 ஃபிரண்ட்ஸ்.. 2 பேருமே எழுத்தாளர்கள்... ஒருத்தன் சொல்றான்.. ரவுடி மேட்டர் கேட்டு பத்திரிக்கைல  ஃபோன் வந்திருக்கு.. எப்படி ரெடி பண்ண?
கவலைப்படாத, எனக்கு தெரிஞ்ச ரவுடி இருக்கான். அவனை பிடிப்போம்னு ஃபிரண்ட் சொல்றான்...மனசுக்குள்ள ஃபிரண்டுக்கு பொறாமை, தனக்கு கிடைக்காத பேரும் , புகழும் அவனுக்கு மட்டும் கிடைச்சிருச்சேன்னு.. 

ரவுடியை மீட் பண்ணி தகவல் சேகரிச்சு ஆர்ட்டிகிள் ரெடி பண்ணிடறாங்க.. பப்ளிஷ் ஆகுது.. 

இப்போ ரவுடியோட இடத்துல பார்ட்டி.. சரக்கு அடிக்கறாங்க எல்லோரும்.. திடீர்னு ரவுடி தன்னை பற்றி ஆர்டிகிள் எழுதுன ரைட்டரை கொலை பண்ணிடறான்,,. கொல்றப்ப என்னைப்பற்றியாடா எழுதுனே? அப்டி ஒரு பஞ்ச் டயலாக் வேற.. அப்புறம் பார்த்தா அவனை கொலை பண்ணச்சொன்னதே ரைட்டரோட நண்பன் தான் , பொறாமையின் காரணமா அப்டி பண்ண வெச்சுட்டானாம்.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ராஜேஷ்குமார் மாதிரி பிரபலமான ஒரு எழுத்தாளரை கூடவே இருக்கும் நண்பர் கம் ரைட்டர்  பொறாமையின் காரணமாய் கொலை செஞ்சா ஏத்துக்கலாம்... ஊரில் உள்ள 1000க்கணக்கான ஃபிரீ லான்ஸ் ரைட்டரில் இவரும் ஒருவர், இவரைக்கொல்வதால்  அவருக்கு சான்ஸ் கிடைச்சுடுமா? என்ன? இதுக்காக ஒரு கொலையா? அவ்வ்வ்

2. பணம் வாங்கிட்டு கொலை பண்ணும் ரவுடி எதுக்காக கொலை செய்யறப்ப என்னை பற்றியாடா எழுதுனே? அப்டினு டயலாக் பேசறாரு?

பெஸ்ட் ஃபிலிம் உயிர் வாசம்

பெஸ்ட் டெக்னீஷியன் -ஆதாயம் கேமரா மேன்

பெஸ்ட் ஆக்ட்ரஸ் - காதல் பீஸ்சாவில் கில்மா மச்சினியா வந்ததே ஒரு 70 மார்க் ஃபிகரு அதுக்கு

டிஸ்கி - கே பாக்யராஜ் சொன்ன ஒரு மலரும் நினைவு.. வளர்ந்து வரும் எல்லா இயக்குநர்களூம் மனசுல வெச்சுக்கனும்.. வீட்ல விஷேசங்க படத்துல அவரோட மனைவி இறந்ததும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்கப்போறார்..

சார்.. என்னோட முதல் மனைவி இறந்துட்டாங்க....

அந்த சீனை பார்த்துட்டு ஒரு ரசிகர் கேட்டாராம்.. சார்.. நீங்க இப்போ மனைவியை இழந்திருக்கீங்க, முறைப்படி மனைவி இறந்துட்டாங்கன்னுதானே கேஸ் தரனும், முதல் மனைவி இறந்துட்டாங்கன்னா அப்போ 2 வது மனைவிக்கு ஆல்ரெடி பிளானா?ன்னு கேட்டாராம்.. 

டைரக்டர்கள், அசிஸ்டென் டைரக்டர்கள்க்கு தோணாத பல லாஜிக் அத்து மீறல்கள் சாதாரண ரசிகனுக்கு தோணலாம்.. அதனால ஜாக்கிரதை என்றார்..