Showing posts with label KADUVA - கடுவா- 2022 (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( பட்டி டிங்கரிங் மசாலா). Show all posts
Showing posts with label KADUVA - கடுவா- 2022 (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( பட்டி டிங்கரிங் மசாலா). Show all posts

Friday, July 08, 2022

KADUVA - கடுவா- 2022 (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( பட்டி டிங்கரிங் மசாலா)


 இயக்குநர்  ஷாஜி  கைலாஷ்  பற்றித்தெரியாதவங்க  இருக்க  முடியாது. சுரேஷ்  கோபியை  வெச்சு  கமிஷ்னர்னு  ஒரு  ஹிட்  படமும்  அஜித் குமாரை  வெச்சு ஜனா  எனும்  சுமார்  படமும் , விஜயகாந்த்தை  வெச்சு  வாஞ்சி  நாதன்  எனும்  மசாலா  படமும்   தந்தவர் . ஐந்து  வருடங்களுக்கு  முன்  ஆர்  கே  ஹீரோவா  நடிக்க  வைகை  எக்ஸ்பிர்ஸ்  எனும்  ஓடாத  படம்  தந்தவர்.மோகன்லால் , மம்முட்டி  படங்களை  இயக்கியவர் , இவரது  ஃபேவரைட்  ஹீரோ  சுரேஷ்  கோபிதான்  டெம்ப்ளேட்டாக  ஒரே  மாதிரி  ஆக்சன்  படங்களா  இருக்கும் 

பிரித்விராஜ்  சுகுமாரன்  மலையாளத்தில்  2002ல்  நந்தனம்   படத்தில்  அறிமுகம்  ஆகி என்னு  நிண்டே  மொய்தீன், அமர் அக்பர் ஆண்டனி ,அனார்கலி , ரணம் , 9  போன்ற  வெற்றிப்படங்களில்  நடித்தவர் தமிழில்  ஹீரோவாக 2009ல்  கனா  கண்டேன்  படத்தில்  ஆண்ட்டி  வில்லனாக  கலக்கியவர்  அதற்கு  திரைக்கதை  வசனம்  சுபா , இயக்கம்  அமரர்  கே  வி  ஆனந்த். தமிழ்  சினிமா  அது  வரை  பார்த்திராத  ஒரு  வில்லன் ( பெண்  மேல்  ஆசைப்படாமல்  பணத்தின் மேல்  ஆசைப்படும்  கேரக்டர் ) 


பிருத்விராஜின் சமீபத்திய  ஹிட்  படங்கள்னு  பார்த்தா  அய்யப்பனும்  கோஷியும் , படமும்   டிரைவிங்  லைசென்ஸ்  ப்டமும் இர்ண்டுமே  ஹீரோ  வில்லன்  இருவருக்ஜ்கும்  இடையே  ஏற்படும்  ஈகோ  கிளாஸ்  எனும்  அடிப்படையில்  உருவாக்கப்பட்ட  திரைகக்தை.  ஏ  செண்ட்டர்  ஆடியன்சைக்கவர்ந்த  மெகா  ஹிட்  படங்களான  அவை  மேல் ஒரு  பிடிப்பு  வந்து  அதே  மாதிரி  கதை  ரெடி  பண்ணச்சொல்லி  இருப்பார்  போல 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் நெம்பர் 1 -பாதிரியார்


ஹீரோ தோப்பு  துரவு  நிலம்  உள்ள  பெரிய  வசதியான  ஆள்  கொஞ்சம்  முன்  கோபி .அந்த  ஊர்ல  இருக்கற  சர்ச்  ல  பாதிரியார்   சர்ச்க்கு  கிஃப்டா  வந்த  பியானோவை  தனக்கு  வந்த   பர்சனல்  கிஃப்டா  நினைச்சு  ஆட்டயைப்போடப்பார்க்க  ஹீரோ    எல்லார்  முன்னிலையிலும்  தட்டிக்கேட்கிறார்அதைக்கண்டு  பாதிரியார்  காண்ட்  ஆகிடறார்


  வில்லன்  நெ 2  போலீஸ்  ஆஃபீசர் 


வில்லனோட  அம்மா  கூட  ஒரு  வாக்குவாதத்தில்  ஹீரோ  வில்லன்  ஃபேமிலியை  தப்பா  பேசிடறார்.  வீட்டுக்குப்போனபின்  ஹீரோவோட  அப்பா  நீ  பண்ணது  தப்பு  மன்னிப்புக்கேட்டுடுங்கறார். காசா?  பணமா? மன்னிப்பு தானே?   கேரளா  பாலா  வில்  ஒரு  ரூபாய்க்கு  5  மன்னிப்பு  ஃப்ரி  கணக்கா  ஹீரோ  மன்னிப்புக்கேட்கப்போறார் ஆனா  அங்கே  வில்லன்  வில்லனோட  அம்மா  இருவரும்  அவரை  அவமானப்படுத்தி  அனுப்பறாங்க  வில்லன்  ஹீரோ  கிட்டே  சவால்  வேற  விடறான் . உன்  நிம்மதியைக்குலைச்சு  என்ன  எல்லாம்  பண்றேன்  பாரு  அப்டிங்கறான்


  வில்லன்  நெ 3  போலீஸ்  இன்ஸ்பெக்டர்


இந்த  வில்லனுக்கும்  ஹீரோவுக்கும்  அறிமுகமே  இல்லை  சம்பந்தமே  இல்லை  எந்தப்பகையும்  இல்லை  ஹீரோவோட  அப்பா  வில்லனோட  அப்பாவை  எதுக்கோ  குமுறு குமுறுனு  குமுறி  இருப்பார் (  ஒரு  படத்துல  கவுண்டமணியோட  அப்பா  கவுண்டமணி  செந்திலோட  அப்பாவை ( அவரும்  செந்தில்தான்) அடிச்சிருப்பார்.அது  மாதிரி  வரும்  ரெய்டு  விடறேன்னு  வீட்டையே  அதகளம்  பண்ணி  அவமானப்படுத்திடறார்


இதுவரை  ஓக்கே  ஹீரோ  தன்னை  அவமானப்படுத்திய  3  வில்லன்களை  பழி   வாங்கறதா  சபதம்  போடறார்  இடைவேளை


இண்ட்டர்வெல்  பிளாக்  விட்டதும்  கேரளாவில்  ஆளாளுக்கு  ட்விட்டரில்  ஃபேஸ் புக் ல்;அ  படம்  முதல்  பாதி  கலக்கல்  அப்டினு  அப்டேட்  பண்ணிட்டு  இருந்தாங்க


  செகண்ட்  ஆஃப்ல  ஹீரோ  வில்லன்களைப்பழி  வாங்கறதைப்பார்த்தா  டைரக்டர்  தான்  ஆடியன்சை  பழி  வாங்குன  மாதிரி  இருக்கு . அந்தக்காமெடியை  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  ல  போட்டு  துவக்கலாம்  வெய்ட் 


சபாஷ்  டைரக்டர் 


1  மலையாளப்படங்கள்  எல்லாம்  உலகத்தரம்  ஒளிப்பதிவு  திரைக்கதைல  வெற  லெவல்னு  ஆளாளுக்கு  பேசிட்டு  இருக்காங்க. நான்  கூட  பயந்துட்டு  இருந்தேன்  தமிழ்ப்படங்களை  கார்னர்  பண்ணிடுவாங்களோ  அப்டினு . அப்ப  வந்தார்யா  சிங்கம்  மாதிரி  நம்மாளு   தெலுங்கு  டப்பிங்  படங்கள்  தோற்கனும்  அகண்டா  எல்லாம்  அசால்ட்  இவருக்கு  பக்கா  குப்பை  மசாலா 


2  ஹீரோ  போலீசை  அடிச்சா  ந,மக்கு  ஒரு  சந்தோஷம்  ஏன்னா  நம்மால  போலீசை  அடிக்க  முடியாது  லாடம்  கட்டிடுவாங்க . கேப்டன்  பிரபாகரன்ல  போலீஸ்  ஸ்டேஷன்  ஃபைட்  செம  ஹிட் ஆனதுக்கு  காரணம்  அந்த  சைக்காலஜி தான்  இந்தப்ப்டத்துல  ஹீரோ  65  போலீசை  அடிக்கறாரு  இது கின்னஸ்  ரெக்கார்டு 


3  ஹீரோ யார்  தெரியுமா?  அவர்  பராக்கிரம்  என்ன  தெரியுமா?னு படத்துல  எல்லாகேரக்டர்களும்  ஓவரா  பில்டப்  கொடுத்துட்டே  இருக்காங்க , ஆனா  அ  கடைசி  வரை  ஹீரோ  எதுவுமே    செய்யலை  நம்மை  வெச்சு  செஞ்சுட்டாரு


4  ஆக்சன்  சீக்வன்ஸ்  இசை  பிஜிஎம்  ஒளிப்பதிவு  எல்லாம்  பட்டாசு  மாஸ்  மசாலா  ரசிகர்களுக்கு  அல்வா  


  லாஜிக்  மிஸ்டேக்ஸ், மனசாட்சியே  இல்லாத  திரைக்கதை  நெருடல்கள்’


1   போலீஸ்  ஆஃபீசரைப்பழி  வாங்க

  1000  வழி  இருக்கு  ஆனா  ஹீரோ  போலீஸ்  இலாகாவை  வைத்திருக்கும்  முதல்வரையே  மாத்திடறாரு  என்ன  கொடுமை  சார்  இது 


2   ஹீரோ  மேல  22  கிரிமினல்  கேஸ்  இருக்குனு  ஹீரோவே  சொல்லிக்கறாரு  அவர்  போலீஸ்  ஆஃபிசர்ங்களைப்பொளந்ததைப்பார்த்தா  65  கொலை  முயற்சிக்கேஸ்  போட்டிருக்கனும்


3    முதல்  வில்லன்  பாதிரியாரைப்பார்க்க  நமக்கே  பாவமா  இருக்கு  அவருக்கு  ஹீரோவை  எதிர்த்து  ஒரு  வசனம்  கூட  பேசத்தெரியலை  ஆனா  ஹீரோ  அவரைப்போட்டு  கும்மு  கும்முனு  கும்மறாரு


4   ஹீரோ  ஜெயிலுக்குப்போனதும்  தத்தி  வில்லனான  பாதிரியார்  தைரியமா  ஹீரோ  வீட்டுக்கே  வந்து  ஹீரோ  மனைவியை  கிண்டல்  பண்றார். 40  கிலோ  எடை  இருக்கும்  பஞ்சு  மூட்டை  ஹீரோயின்  ஓங்கி  அடிச்சா  10  டன்  வெயிட்டுடா  கணக்கா  பளார்  வைக்கறார் வில்லன்  ஓடியே  போய்டறான்  அப்றம்  எதுக்கு  வீராப்பா  வந்தான்னு  தெரியலை 

5  மெயின்  வில்லனான  விவேக்  ஓபராய்  தனக்கு  ஹீரோவால  ஆபத்து  இருக்குனு  தெரிஞ்சும்  லூஸ்  மாதிரி  கார்ல  அவ்ளோ  பிளாக்  மணியை  வெச்சுட்டு  பெப்பரப்பேனு  மெய்ன்  ரோட்ல  போய்  மாட்டுவாரா? 


6 எல்லா  குப்பை  மேட்டர்களையும்  சகிச்சுக்கலாம்  இதனோட ரெண்டாம்  பாகம்  வரும்ல்கற  லீடு  தர்ற  மாதிரி  வில்லன்  ஹீரோ  கிட்டே  இதோட  முடிஞ்சுடுச்சுனு  நினைச்சுடாத  இன்னும்  இருக்குங்கறான்  ஹீரோவும்  ஆமா  எனக்கும்  தெரியும்  ஐ  ஆம்  வெய்ட்டிங்  அப்டிங்கறாரு  அய்யோ  ராமா 


  சி  பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   வசூல்  ரீதியா   இது  ஹிட்  தான்  நல்ல  படம்  பார்க்கும் எண்ணம்  உள்ளவர்கள்  இந்த  படம்  ஓடும்  தியேட்டர்  பக்கம்  தலை  வெச்சுக்கூட  படுத்துடாதீங்க  . சிரஞ்சீவி  பட  ரசிகர்கள்  அக்ண்டா  , பாலகிருஷ்ணா  ரசிகர்கள்  ஆந்திராக்காரர்கள்  பார்க்கலாம்  தமிழர்கள்  தப்பி  ஓடவும்  . ரேட்டிங்  மைன்ஸ்  2 / 5   கடுவா  =  கடுப்பைக்கிளப்பும்  அல்வா